Sunday, July 10, 2011

உணவில் உப்பு உடலுக்கு நன்மையா? தீமையா?

                               உப்பில்லாத ஒரு உணவை என்னவென்று சாப்பிடுவது? ஆனால் உப்பு உடலுக்கு நல்லதல்ல என்ற கருத்து பரவலாக கூறப்பட்டு வருகிறது.ரத்த அழுத்த நோயாளிகளால் சொல்லப்படுவதுதான்.இப்போது இந்நோய் அதிகரித்தும் வருகிறது.பாரம்பரியமாக உப்பு எப்போதிருந்து மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரியவில்லை.                                ’’உப்பில்லாத பண்டம் குப்பையிலேஎன்று சொன்னார்கள்.சுவை இல்லாத்தை எவன் சாப்பிடுவான் என்ற பொருளில் மட்டும் கூறப்பட்ட்தாக தெரியவில்லை.உப்பு உடலுக்கு நன்மை விளைவிக்க்க் கூடியது என்ற அர்த்த்திலும் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.நம் முன்னோர்களால் உணவில் சேர்க்கப்பட்ட எதுவும் பயனுள்ளவை என்பது என்னுடைய முடிவு. உப்பு இல்லாவிட்டால் சாப்பாட்டுக்கு மணம் இல்லை

                            அயோடின் உப்பு பிரச்சாரத்தில்நுகர்வோர் இயக்கத்தில் இருந்து பங்கு கொண்ட அனுபவம் எனக்கு உண்டு. அதிகம் சுத்திகரிக்கப்படாத இயற்கையாக கிடைக்கும் உப்பு நிறைய தாதுக்களை கொண்டுள்ளது என்று பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.நாம் ரொம்ப வெள்ளையாக இருந்தால் நல்ல உப்பு என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.அது உணமையல்ல.ஓரளவு கருமை நிறம் உடைய உப்பில்தான்மக்னீசியம் உள்ளீட்ட அவசியமான தாதுக்கள் உள்ளன.மேலும் உடலின் பல இயக்கங்களிலும் உப்புக்கு அவசியம் இருக்கிறது.

                                  உப்பில் உள்ள தாதுக்களில் அயோடின் இல்லை.உடலுக்கு தேவையான அயோடின் காலம்காலமாக மண்ணில் இருந்து உணவுப்பொருட்கள் வழியாக நமக்கு கிடைத்துக்கொண்டிருந்த்து.இப்போது மண்ணின் வளமும்,அதில் இருந்த தாதுக்களும் போதுமான அளவு கிடைப்பதில்லை.அதில் ஒன்று அயோடின்.பூச்சிக்கொல்லி உள்ளிட்ட விஷங்கள்தான் இப்போது கிடைக்கின்றன.

                                  அயோடினை எதன் வழியாக கலந்து தருவது என்று யோசித்து உப்பை தேர்ந்தெடுத்தார்கள்.இது அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படுவதால் அனைவருக்கும் தேவையான அயோடினை உடலுக்குள் சேர்த்துவிடலாம் என்பது எண்ணம்.மக்களிடமும் இப்போது ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது.பெரும்பான்மையாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு,குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி,தைராய்டு குறைவால் ஏற்படும் முன்கழுத்துக்கழலை போன்றவை அயோடின் பற்றாக்குறைவால் ஏற்படும் நோய்களில் குறிப்பிட்த்தகுந்தவை.

                                 திருவண்ணாமலை மாவட்ட்த்தில்  கம்யூனிஸ்ட் தோழர்களின் கலைஇரவுஒரு அற்புதமான அனுபவம்.எழுந்துவர மனசே வராது.அப்படி ஒரு கலை இரவில் தோழர் ஒருவர் அயோடின் உப்பு முதலாளித்துவ நாடுகளின் சதி என்பது போல பேசினார்.நாம் காலம் காலமாக உப்பை பயன்படுத்தி வருகிறோம்.இப்போது திடீரென்று எதற்கு அயோடின் சேர்க்கவேண்டும் என்றார்.எனக்கு கஷ்டமாக இருந்த்து.

                                  கடன் வாங்கிவிட்டு கடன் வாங்கி விட்டு திருப்பித்தராதவர்களை உப்பு போட்டுத்தான் சாப்பிடறயா? என்று கேட்பார்கள்.சுரணை இல்லாதவன் என்று அர்த்தம்.ஆக உப்பு போட்டு சாப்பிடுபவனுக்கே மானம் மரியாதை,சூடு சுரணை எல்லாம் இருக்கும் என்பது உலகோர்நோக்கு.உப்பு போல இருக்கலாம் என்பார்கள்.அளவாக இருக்கலாம் என்பதே இதன் பொருள்.உப்புக்கும் இது பொருந்தும்.அளவான உப்பு நன்மையைத்தரும் என்று வல்லுநர்கள் உறுதியளிக்கிறார்கள்.

                                 ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக்கோளாறு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரை கேட்டே இதில் முடிவெடுக்கவேண்டும்.மற்றவர்கள் தேவையின்றி தள்ளிவைக்க வேண்டாம் -

10 comments:

இராஜராஜேஸ்வரி said...

உப்பு பற்றி சுவையாய் அருமையாய் பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்.

A.K.RASAN said...

good post

A.K.RASAN said...

thanks for sharing

மைந்தன் சிவா said...

ஹிஹி உப்பை பற்றி நல்லா சொல்லி இருக்கீங்க!!
ஹிஹி உப்பு ...இதால தான் அடிக்கடி வீட்டில பிரச்சனை வாறது!

Jayadev Das said...

உப்பை முடிந்த அளவுக்கு குறைத்து உண்ணுவது நலம்.

சாகம்பரி said...

நான் அயோடின் ஆதரவு கட்சிதான். கரப்பிணிப்பெண்கள் அயொடின் சேர்த்துக் கொள்வதின் நன்மை நன்றாகவே தெரியும் .

thequickfox said...

உப்பு பற்றிய தகவலுக்கு நன்றி.
உடல்நலக்கோளாறுகள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மட்டுமல்ல எல்லோருமே உப்பை மிகவும் குறைத்து பாவிக்கும் படி உடல் நல தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

உப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் அருமையான பதிவினை, உடல் நலத்திற்கு அயோடின் எவ்வாறு உதவுகிறது எனும் விளக்கத்தினை சிறப்பாகப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி பாஸ்.

Sankar Gurusamy said...

அருமையான பதிவு.. உப்பு பற்றி தோழர்களின் கருத்தில் ஒரு உண்மையும் இருக்கிறது. இப்போது பாரம்பரிய கல் உப்பு கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது.. அதுவும் நகர்ப்புறங்களில் மிகவும் அரிதே.. அயோடினை அனைத்து உப்பு தயாரிப்பு நிலையங்களும் தேவையான அளவுக்கு பயன்படுத்த ஆவன செய்து பாரம்பரிய உப்பின் தரத்தை மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும்...யார் செய்ய???

மேலும் அதிக அயோடின் சேர்த்தாலும் ஆபத்து என்று ஒரு கருத்து நிலவுகிறது.. அதுபற்றிய விவரங்களை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்...

பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

kadhar ali said...

ரேசன் கடையில் வாங்கும்உப்பு சற்று நிறம் மங்கலாத்தான் இருக்கும்.ஆனால் அது தான் நல்ல தரமான உப்பு.அதை தெரியாமல் நிறம் அழுக்காக உள்ளது என்று போலி நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அவசியமான பதிவு.வாழ்த்துகள்.