Sunday, July 17, 2011

கல்லூரி மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய பெண்புரோக்கர்

சேலத்தில் விபச்சார பெண் புரோக்கரை காவல்துறையினர் கைது செய்தனர்.வாடிக்கையாளர்போல நடித்து திட்டமிட்டு பிடித்துவிட்டார்கள்.கைது செய்யப்பட்ட பெண் புரோக்கர் கொடுத்த வாக்குமூலத்தில் உள்ள ஒரு விஷயம்,கல்லூரி மாணவிகளின் வறுமையை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது.ஒரு மாணவிக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்த்தாக கூறியிருக்கிறார்.தொழிலதிபர்கள்,அரசியல்வாதிகள் என்று பெரும்புள்ளிகள்தான் வாடிக்கையாளர்கள்.

                               விபச்சாரம் என்ற சொல் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.மரியாதைக்குறைவாக இருப்பதால் பாலியல் தொழிலாளர்கள் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.இந்தியா-பாலியலும் பரிதவிப்பும் என்ற இடுகையில் பகிர்ந்து கொண்ட்துபோல இம்மாற்றம் எய்ட்ஸ் வந்த பிறகு ஏற்பட்ட ஒன்று.அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் மிரட்டிக்கொண்டிருக்கும் இந்த நோயை கட்டுப்படுத்துவது கஷ்டம்.

                               பெண் புரோக்கர் கார்ப்பரேட் லெவலில் தொழில் நட்த்தியிருக்கிறார்.ஆந்திரா சென்று ஒரு வாரத்திற்கு 45000 ரூபாய் பேரம் பேசி இரண்டு பெண்களை அழைத்து வந்த்தாக வாக்குமூலத்தில் பெண்புரோக்கர் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் தொழிலில் இருக்கிறார்கள்.சேலத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.ஏன் ஆந்திரா போக வேண்டும்? கல்லூரி மாணவிகளுக்கு ஏன் வறுமையை பயன்படுத்தி வலை விரிக்க வேண்டும்?

                               வாடிக்கையாளர்கள் அப்படி தேர்ந்தெடுத்து கேட்பதுதான் காரணம் என்கிறார்கள்.விவஸ்தை கெட்ட பணம் படைத்தவர்களும்,அரசியல்வாதிகளும்தான் இந்தியாவின் மிகப்பெரிய நோய்.நாற்பது சதவீத மக்களை வறுமையில் வைத்திருக்கும் நாட்டில் இதெல்லாம் ஆச்சரியமான விஷயம் இல்லை.வறுமை மட்டுமல்ல கருப்புப்பணம்,ஊழல்,வரதட்சணை,மது,பெண்ணடிமை எல்லாவற்றுக்கும் இதில் தொடர்பிருக்கிறது.

                                 மேலே சொல்லப்பட்ட சமூகப்பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளவையே! பெற்ற குழந்தைகள் மீது அக்கறையின்றி குடித்துவிட்டு திரிபவன் பிள்ளைகளை பாலியல் தொழிலில் தள்ளுகிறான்.எத்தனை சவரன் போடுவார்கள் என்று கேட்கும் இளைஞன் இவர்களை விபச்சாரத்தில் தள்ளுகிறான்.காதிலோ,கழுத்திலோ தங்கம் இல்லாத பெண் விலை போவது கஷ்டமாக இருக்கிறது.

                                  அரசியல்வாதிகள் ஊழல் மூலம் கருப்புப்பணமாக வெளிநாட்டில் தேக்கி வைத்துக்கொண்டு வறுமையை குறைக்க விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.அப்போதுதான் கிழவனுக்கு கல்லூரிப்பெண் கிடைப்பாள்.தவிர இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில் தேவைகளும் அதிகமாகிவிட்ட்து.விலைவாசியும் ஏறிப்போய்விட்ட்து.

                                  ஒரே துணியை எத்தனை நாளுக்கு துவைத்து போட்டுக்கொண்டிருப்பது? வீட்டில் ஒரு பொருளும் இல்லை.மாப்பிள்ளை வருவார்களா? இப்படி எத்தனையோ கஷ்டங்கள் ஏழைகளுக்கு! ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் வருகிறது என்று ஆசை காட்டி பலியாக்குகிறார்கள்.இவர்களை பிரைன்வாஷ் செய்யும் புரோக்கர்களுக்கு இருப்பதில் அதிக பட்ச தண்டனை வழங்கவேண்டும்.
-

21 comments:

ராஜன் said...

//.வறுமை மட்டுமல்ல கருப்புப்பணம்,ஊழல்,வரதட்சணை,மது,பெண்ணடிமை எல்லாவற்றுக்கும் இதில் தொடர்பிருக்கிறது.//

உண்மை.

ராஜன் said...

good post

மைந்தன் சிவா said...

என்ன கொடுமை பாஸ் இது???மாமா பயலுகளை தூக்கணும்...அப்புறம் வாடிக்கையாளர்கள்,,,
வறுமையை என்ன பண்ண??

மைந்தன் சிவா said...

என்ன கொடுமை பாஸ் இது???மாமா பயலுகளை தூக்கணும்...அப்புறம் வாடிக்கையாளர்கள்,,,
வறுமையை என்ன பண்ண??

அம்பாளடியாள் said...

தீப்பத்தி எரிகிறது நெஞ்சம் பெண்களைத் தீயிலிட்டாலும் தீராது பெருகும் இந்தத் துன்பம்.
பெண் படைத்த ஆணே பலி எடுக்கும்போது
இனிப் பெண்ணாய்ப் பிறப்பதே பாவம்,பாவம்
பாவம்.....உறவுகளே பெண்ணினத்தை வாழ
விடுங்கள்!!!!!!!....................................................

அம்பாளடியாள் said...

என் வலைத்தளத்தில் இதுவரை பெண்ணடிமைத்
தனத்துக்கு எதிரான கவிதைகள்தான் இருந்தன.
நேற்றைய தினத்தில் இருந்து பாடல்களைத்
தயாரித்து வெளியிடுவதற்கு அத்திவாரம் இட்டுள்ளேன்
நேரம்கிடைக்கும்போது உங்கள் கருத்தினை அளித்து
எனக்கு உறுதுணையாய் வாருங்கள் உறவுகளே.
மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு.

நிரூபன் said...

தரகர்கள் தான், எல்லா இடங்களிலும் ஏமாற்றிப் பலரின் வாழ்வினைச் சிதைப்பதில் முன்னோடியாக இருக்கிறார்கள். உண்மையில் அரசாங்கம் பொது மக்களின் நன்மை கருதி, ஏழைகளை ஏமாற்றி, ஆசை வார்த்தை பேசி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வண்ணம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும், அப்போது தான் பல ஏழைகளின் வாழ்வு சீரழியாதிருக்கும்.

Robin said...

விபச்சாரிகளை பாலியல் தொழிலாளர்கள் என்று அழைக்கவேண்டும் என்று கூக்குரலிடும் முற்போக்காளர்களுக்கும் இதில் தொடர்பிருக்கலாம்!

Sankar Gurusamy said...

சும்மா சவுக்கடி கொடுத்து இருக்கிறீர்கள்.

//விவஸ்தை கெட்ட பணம் படைத்தவர்களும்,அரசியல்வாதிகளும்தான் இந்தியாவின் மிகப்பெரிய நோய்.நாற்பது சதவீத மக்களை வறுமையில் வைத்திருக்கும் நாட்டில் இதெல்லாம் ஆச்சரியமான விஷயம் இல்லை.வறுமை மட்டுமல்ல கருப்புப்பணம்,ஊழல்,வரதட்சணை,மது,பெண்ணடிமை எல்லாவற்றுக்கும் இதில் தொடர்பிருக்கிறது.
//

முற்றிலும் உண்மை... இந்த சாபம் தீர்வது எப்போது??? யாரால்??? பதிலில்லை...

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

Jayadev Das said...

\\அரசியல்வாதிகள் ஊழல் மூலம் கருப்புப்பணமாக வெளிநாட்டில் தேக்கி வைத்துக்கொண்டு வறுமையை குறைக்க விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.\\100% உண்மை. ஆனா, இதனால்தால் கஷ்டப் படுகிறோம் என்று தெரியாமலேயே துன்பத்தில் அல்லாடுகிறோம். நன்றி.

ரா. ராஜ்குமார் said...

"காதிலோ,கழுத்திலோ தங்கம் இல்லாத பெண் விலை போவது கஷ்டமாக இருக்கிறது"

வருந்தக்கூடிய விஷயம்

வரதன்ட்சனையை முதலில் ஒழிக்க வேண்டும்

பெண்ணியம் - ஒரு சிறு விளக்கம்
http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_6020.html

சத்ரியன் said...

//விவஸ்தை கெட்ட பணம்படைத்தவர்களும்,அரசியல்வாதிகளும்தான் இந்தியாவின் மிகப்பெரிய நோய்.//

நிஜம்!

shanmugavel said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.

மாய உலகம் said...

தூண்டுகோலாக இருப்பவர்களே தண்டிக்கபடவேண்டியவர்கள்

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், ”முத்தான மூன்று” என்ற தலைப்பில் தொடர் சங்கிலி பதிவு எழுத தங்களை அழைத்துள்ளேன்.. தொடருங்கள்...

http://anubhudhi.blogspot.com/2011/07/blog-post_19.html

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நான் வந்தது ரொம்ப லேட்டு..
இருந்தாலும்.. நன்பேண்டா ..
எத்தனை நாள் கழிச்சு பாத்தாலும் வந்து கமென்ட் போடுவோமில்ல..

G VARADHARAJAN said...

good article.think everybody and do something better for change this culture.

pudukkottai g v r

Anonymous said...

கருத்தை சொல்லும் முன் கண்ணீர் மறைக்கிறது..

// அரசியல்வாதிகள் ஊழல் மூலம் கருப்புப்பணமாக வெளிநாட்டில் தேக்கி வைத்துக்கொண்டு வறுமையை குறைக்க விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.//

உண்மை இந்த பணமுதலைகளையும் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளையும் ஒழித்தால் வறுமை என்ற வார்த்தை ஒழியும்...

ESWARAN.A said...

இன்றைய உலகமயமாக்கல் நுகர்வு கலாச்சாரம் பெண்களை படாத பாடு படுத்துகிறது.தொலைக்காடிசி தொடர்களும், சினிமா பாடல்களும் பெண்களை கண்ணகிளாக மாற்றுவதற்குப்பதிலாக மாதவிகளாக மாற்றிக்கொண்டுள்ளது. பள்ளி மாணவிகள் கூட காதல் என்ற பெயரில் கண்ணியத்தை இழந்து பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாகத்தள்ளப்படுகிறார்கள்.
என்ன கொடுமையடா சாமி...

ஆ.ஈசுவரன்/திருப்பூர்.

நண்பன் said...

பிரைன்வாஷ்

உண்மைதான் .இப்போது அரசியலில் இருப்பவர்கள் கூட மக்களை பிரைன்வாஷ்சேது தான் காரியத்தை சாதித்து கொள்கிறார்கள் .சினிமா நடிகர்கள் மக்களை பிரைன்வாஷ் செய்ய சினிமாவை பயன் படுத்து கிறார்கள் .

kadhar ali said...

எபபடி இவ்வளவு விளம்பரம் பிடித்திர்கள்.கொஞ்சம் எங்களுக்கு சொல்லுங்கள்.