Saturday, July 9, 2011

ஆபாச இணையதள மோசடி-சாஃப்ட்வேர் இளைஞர் காவல்துறையில் புகார்.



இன்றுகாலை சுமார் எட்டு மணிக்கு சேலத்திலிருந்து நண்பர் ஒருவர் போன் செய்தார்.தினத்தந்தியில் பனிரெண்டாம் பக்கம் பார் என்றார்.அழகிஎன்று நினைத்து அரவாணியை அழைத்துச்சென்ற சாஃப்ட்வேர் எஞ்சினியர் என்ற தலைப்பில் ஒரு செய்தி.ஏற்கனவே ஒரு இளைஞர் பாதிக்கப்பட்டு பரிசோதனைக்கு வந்த விஷயம் ஒன்றை பதிவாக எழுதியிருக்கிறேன்.அதனால் நண்பர் அதே போல மீண்டும் ஒரு சம்பவத்தை படிக்க கூறியிருக்கிறார்.

                                தினத்தந்தி செய்தியின் சுருக்கம்: நாளுக்கு நாள் இணையதள மோசடி குற்றங்கள் பெருகிக்கொண்டே வருகின்றன.மோகத்தில் சிக்கித்தவிக்கும் இளைஞர்கள் பலர்,மோசடி கும்பல்கள் நட்த்தும் இணையதளத்தில் சிக்கி பணத்தையும் மானத்தையும் இழக்கின்ற செயல்கள் தினம் தினம் நடக்கும் செய்தியாக உள்ளது.

                                பாஸ்கரன் என்ற சோழிங்கநல்லூரைச்சார்ந்த இளைஞர் ஆபாச இணையதளம் மூலம் காண்பிக்கப்பட்ட போட்டோவை பார்த்து கிளிக் செய்து செல்போன் எண்ணை பெற்றிருக்கிறார்.போனில் மறு முனையில் பேசியவர் ஆண்.இளைஞர் குறிப்பிட்ட பெண் தான் வேண்டும் என்றும் கீழ்பாக்கம் கார்டன் பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

                                 காருடன் காத்திருந்தவருக்கு அப்பெண் வந்து அறிமுகப்படுத்திக்கொண்ட்தும் அவசரமாக காறில் ஏற்றி பரந்திருக்கிறார்.கொஞ்ச தூரம் சென்று முகத்தைப் பார்த்த்தும் அதிர்ச்சியடைந்து விட்டார்.அவர் அரவாணி.ஏமாந்த்து தெரிந்தவுடன் காரிலிருந்து வெளியேறுமாறு கூறியிருக்கிறார்.பணம் கொடுத்தால்தான் போக முடியும் என்று அரவாணி மிரட்ட ஆரம்பித்துவிட்டார்.

                                   வேறு வழியில்லாமல் 7500 ரூபாயை கொடுத்திருக்கிறார்.இதெல்லாம் போதாது கூடுதலாகப்பணம் கொடுஇல்லையென்றால் ஆட்களை கூட்டி வந்து அடித்துவிடுவேன் என்று மிரட்ட ஆரம்பிக்க மேலும் 5000 பணம் ஏ.டி.எம்மிலிருந்து அரவாணி சென்றுவிட்டார்.

                                   மோசமாக ஏமாற்றப்பட்ட்து அறிந்து பிறகு விபசார தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்து விட்டார்.அரவாணி சாபுபேகம் கைது செய்யப்பட்டுள்ளார்.தொடர்பான புரோக்கர்களையும் தேடி வருகிறார்கள்.பலரும் இமேஜுக்கு பயந்து புகார் கொடுக்க தயங்கும்போது பாஸ்கரன் காவல்துறைவரை போனது மற்றவர்களுக்கும் ஒரு படிப்பினையாக ஆகியிருக்கிறது.

                                    நான் சில மாதங்களுக்கு முன்பு பகிர்ந்துகொண்ட பதிவில் நடந்த்தும்,இதுவும் கிட்ட்த்தட்ட ஒரே மாதிரிதான்.இரண்டிலும் புரோக்கர்கள் ஆண்கள்,இறுதியில் வேறு யாரோ வந்து ஏமாற்றியிருக்கிறார்கள். நிறைய கும்பல்கள் இதுபோல இருக்க வாய்ப்பிருக்கிறது.சாஃப்ட்வேர் இளைஞர்கள்,பணம் படைத்த ஆண்களும் தான் இவர்களது நோக்கம்.

                                  எத்தனையோ விழிப்புணர்வு செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் யாராவது ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.பணமும்,உணர்வும் மூளையை மழுங்கடித்து விடுகிறது.ஆனால் பாஸ்கரனை ஒரு விஷயத்துக்காக பாராட்டலாம்.காவல்துறையில் புகார் செய்த்தற்காக! அவரது ஒழுக்க மதிப்பீடுகளைத் தாண்டி பார்த்தால் மோசடி பேர்வழிகளை கைது செய்ய வைத்த்து மூலம் இணையதள மோசடிகள் கொஞ்சம் மட்டுப்படும்.

சமூகம்,ஆபாச இணையதள மோசடிகள்,அரவாணி,cyber crime,porn site -

9 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு விழிப்புணர்வு பதிவு..

shanmugavel said...

THANKS KARUN.

ஜீ... said...

சில விஷயங்களை சட்டவிரோதமாக வைத்திருப்பது ஏமாற்றுப் பேர்வழிகளுக்கே சாதகமாக அமைந்துவிடுகிறது!

shanmugavel said...

@ஜீ... said...

சில விஷயங்களை சட்டவிரோதமாக வைத்திருப்பது ஏமாற்றுப் பேர்வழிகளுக்கே சாதகமாக அமைந்துவிடுகிறது!

புரிகிறது ஜீ.நன்றி

நிரூபன் said...

பாஸ்கரன் எனும் சகோதரனின் துணிச்சலுக்கும்,

தான் பாதிக்கபட்டாலும் பரவாயில்லை,

ஏனையோர் விழிப்பாக இருக்க வேண்டும் எனும் நோக்கில் போலிசில் கம்ப்ளைன் கொடுத்த முயற்சிக்கும் முதலில் ஒரு சல்யூட்.

இக் காலத்தில் இளைஞர்கள் திசை மாறிச் செல்லாதிருக்க, ஓர் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வண்ணம் தங்களின் பதிவு அமைந்திருக்கிறது.

தமிழானவன் said...

தவறு செய்து அதற்கு பதிலாக ஒரு நல்ல செயலையும் செய்துவிட்டார். நல்லது!!

A.K.RASAN said...

மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை.

Sankar Gurusamy said...

இவ்வாறு ஏமாறுபவர்கள் புகார் கொடுக்க வருவதில்லை. அப்படியே புகார் கொடுத்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனையும் பெரிதாக இருப்பதில்லை.. எனவே இவர்கள் குளிர் விட்டுப் போய் மேலும் பலரை ஏமாற்ற கிளம்பிவிடுகிறார்கள். நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நல்ல பதிவு..பகிர்வுக்கு நன்றி

http://anubhudhi.blogspot.com/

மைந்தன் சிவா said...

ஐயோ இவங்கட மோசடி பெரிய மோசடி சார்,,,
நேத்து கூட ஒரு வெப்சைட்ல பாத்தன்...ஆதாரத்தோட போட்டிருக்காங்க!