Monday, July 11, 2011

ஆண்களை கடத்தும் ஓரினச் சேர்க்கையாளர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட்

   வழக்கமாக பெண்களுக்குத்தான் நாட்டில் பாதுகாப்பில்லை.தனியாக செல்வது ஆபத்து என்ற நிலை இருந்து வந்தது.ஆனால் திருத்தணியில் நடந்த ஒரு சம்பவம் ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதை உணர்த்துகிறது.திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான தணிகை இல்லத்தில் நடைபெற்ற சம்பவம் இது.

                                                                                                 24 வயதான சந்துரு என்பவரை கடத்தி வந்து பாலியல் தொல்லை தந்திருக்கிறார்கள்ஒரு சிலர்  .அவ்வாலிபருக்கு கட்டாயமாக மதுவையும் வழங்கியிருக்கிறார்கள்.அடிக்கடி நடந்துவந்த இந்த விஷயம் வாலிபரை கட்டாயமாக காரில் ஏற்றும்போது சிலர் பார்த்துவிட்டார்கள். விசாரித்து , காப்பாற்றி காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்கள்.காவல் துறை கடத்தியவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.                                                                                                   எனது முந்தய  ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய பதிவில் தொண்டு நிறுவனத்தை சார்ந்த ஒருவர் குறிப்பிட்ட விஷயத்தை பகிர்ந்திருக்கிறேன்.ஆண் பிள்ளைகளை வெளியே விடுவதும் ஆபத்துதான் என்று சொல்லியிருந்தார்.அது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.சி
றைச்சாலைகளும்,மாணவர் விடுதிகளும் தான் இதன் தோற்றுவாய்.வெகுநாட்கள் சிறையில் கழிக்கும் குற்றவாளிகள் மற்ற கைதிகளுடன் பழகி இந்த பழக்கத்துக்கு ஆளாகிறார்கள்.அடுத்து மாணவர் விடுதிகள்.

                                                                                                   கல்லூரியில் சேரும் மாணவர்கள் அந்த வயதில் போதைக்கு அறிமுகப்படுத்தப் படுவதோடு  ஓரினச் சேர்க்கை பழக்கங்களுக்கும் தள்ளப்படுகிறார்கள்.இது விரும்பி மேற்கொள்ளப்படும் செயலோ ,வியாதியோ அல்ல.பழக்கப்படுத்தப்படும் ஒன்றுதான்.புகை பிடித்தல்,மது,போதை மருந்துகள் போன்றவை கல்லூரி விடுதிகள்தான் அறிமுகப்படுத்துகின்றன .மிக நெருக்கமாக ஒரு அறையில் ஏராளமான மாணவர்கள் தங்குவது இந்த ஆபத்தை அதிகப்படுத்துகின்றன.பழகிவிட்டா
ல் விடுவது மிக கஷ்டம் என்கிறார் மருத்துவர் ஒருவர்.


                                                                                                        முதன் முதலில் உலகில் எய்ட்ஸ் கண்டறியப்பட்டதும் ஓரினச் சேர்க்கை யாளர்களிடம்தான்.இதில் பால்வினை நோய் தொற்றும் இவர்களால்அதிகம்  பரவுகிறது.வீட்டில் சொல்ல முடியாமல் திருமணம் செய்துகொண்டு மனைவிக்கு நோய்களை கொடுத்து விடுகிறார்கள்.இந்தியாவைப் பொறுத்துவரை இதைப்பற்றிய புரிதல் இல்லாததே மேலும் மேலும் பிரச்சினைகளை கொண்டு வருகிறது.

                                                                                                         ஓரினச்சேர்க்கை பாவமாகவும்,குற்றச்செயலாகவும் கருதப்பட்டது.ஆனால் உலகம் முழுக்க 5 சதவீதம் பேர் இத்தகைய நடத்தை உள்ளவர்கள் என்கிறது ஆய்வுகள்.சட்டப்படி குற்றம் என்றானதால் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளாமல் விடுதிகளில் மற்றவர்களை கட்டாயப்படுத்தி அல்லது போதை தந்து தூண்டுவது போன்ற செயல்களை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.                                                                                                              இவர்களையும் சமூகம் ஏற்றுக்கொண்டால் குற்றங்கள் நடப்பது குறையும் என்ற விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.சில பொதுச் சேவை நிறுவனங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களை கண்டறிந்து அவர்களுக்குள் சங்கத்தை ஏற்படுத்தி நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன .இது எய்ட்ஸ் வந்த பிறகு ஏற்பட்ட மாற்றம்.மேலும் சட்டப்பூர்வமாக மாற்றங்கள் தேவைப்படுகிறது.


                                                                             டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது நினைவிருக்கலாம்கவனிக்கவும்.ஓரினச் சேர்க்கைதான்.கடத்துவது அல்ல!.ஆனால் இன்னும் மக்களிடம் இத்தகைய மாற்றம் ஏற்படவில்லை.சட்டத்தை விட சமூக அங்கீகாரம் இவ்விஷயத்தில் அவசியமானது.
-

13 comments:

வலையகம் said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

ராஜன் said...

good post

Sankar Gurusamy said...

எல்லோருக்கும் ஆபத்துதான்... கொஞ்சம் உஷாரா இருக்கரது நல்லதுன்னு நினைக்கிறேன். சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது??? வருத்தமாக இருக்கிறது..

பகிர்வுக்கு நன்றி

http://anubhudhi.blogspot.com/

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அவசியம் தேவையான பதிவு தலைவரே..

எண்ணங்கள் 13189034291840215795 said...

வன்புணர்ச்சி என்பது எவ்வகையிலுமே கண்டிக்கத்தக்கதே..

ஆணுக்கே இந்த நிலை என்றால்?..

இன்னும் சிறுவர் சிறுமியரின் நிலை..?

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஆனால் சிலர் ஒருபக்கம் ஆபாசத்தை வளர்த்தெடுத்துக்கொண்டே இருக்கின்றனர்...:(

அவர்களுக்கு இந்நிலைமை வரணும்..:(

மைந்தன் சிவா said...

தேவையான பதிவு..நீங்க சொன்ன இரண்டு தோற்றுவாய்களும் உண்மை தான் பாஸ்!!

மதுரை சரவணன் said...

athirchchiyaanathu...aanaal unmaiyaanathu enpathaal varuththamalikkirathu... samuka poruppulla pathivu vaalththukkal

shanmugavel said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி

தேவையற்றவனின் அடிமை said...

நண்பா உங்க ஒபனிங் நல்லா இருக்கு.....ஆனா பினிஷிங்ல கொஞ்சம் குழப்பிட்டீங்களே.............என்ன சொல்ல வர்ரீங்க......ஓரினச்சேர்க்கையை அங்கீகரிக்க சொல்ரீங்களா.......இல்ல தப்புனு சொல்ரீங்களா.........விளக்கவும்

shanmugavel said...

@தேவையற்றவனின் அடிமைsaid...

நண்பா,தப்புன்னு சொல்ல முடியாது.உலகில் 5 சதவீதம் பேர் ஓரினச்சேர்க்கையாளர்கள்.நாம் நினைத்தால் மாற்ற முடியாது.கடத்தல்தான் குற்றம்.தண்டிக்கவேண்டிய செயல்.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

ஓரினச் சேர்க்கை பற்றிய விரிவான அலசலினைத் தந்திருக்கிறீங்க. எமது சமூகத்தில் ஓரினச் சேர்கையாளர்களை அங்கீகரிக்காது, கிண்டலடித்துப் பேசி மகிழ்வது தான் இத்தகைய போதை கொடுத்து மயக்கும் ஓரினச் சேர்கை நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்து கொள்கிறது என நினைக்கிறேன்.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

ஓரினச் சேர்க்கை பற்றிய விரிவான அலசலினைத் தந்திருக்கிறீங்க. எமது சமூகத்தில் ஓரினச் சேர்கையாளர்களை அங்கீகரிக்காது, கிண்டலடித்துப் பேசி மகிழ்வது தான் இத்தகைய போதை கொடுத்து மயக்கும் ஓரினச் சேர்கை நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்து கொள்கிறது என நினைக்கிறேன்.