Sunday, May 22, 2011

மத்தவங்க மாதிரி நாம இல்லையேன்னு நினைக்கிறீங்களா?

  மற்றவர்களோடு ஒப்பிட்டே நம்மை மதிப்பிடுகிறோம்.பக்கத்து வீட்டுக்காரர்கள் ,நண்பர்கள் ,உறவினர்கள் இவர்கள் தான் நம்முடைய அளவுகோல் .நானும் அவனும் ஒண்ணா படிச்சோம் ,ஆனா அவன் சொந்தமா வீடு வாங்கிட்டான்.அவனுக்கு நேரம் நன்றாக இருக்கிறது.மனைவி வீட்டில் பக்கபலமாக இருக்கிறார்கள்.எனக்கு அப்படி இல்லையே! .இப்படி புலம்புபவர்கள் ஏராளம்.இவை பலருக்கும் இயல்பாக இருக்கும் ஒன்று.மிகச்சிலருக்கு பெரிய பிரச்சினையாகவும் இருக்கும்.

                                                                                  தொடர்ந்து வீட்டில் இருப்பவர்களும்( குறிப்பாக மனைவி) குத்திக்காட்ட ஆரம்பிக்க வளர்ந்தவர்கள் மீது பொறாமையும்,தன் மீது கோபமும் ,எரிச்சலும் உருவாகி பலர் தன்னை தாழ்த்தி மதிப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.நான் எதற்கும் உபயோகமில்லாதவன்,திறமையில்லாதவன் என்ற எண்ணங்கள் அதிகமாகி தன்னைத்தானே வெறுக்கத் துவங்குவார்கள்.எதிலும் நம்பிக்கையில்லாமல் போய் தாழ்வு மனப்பான்மையால் குறுகிப்போவார்கள்.


                                                         தொடர்ந்து ஏதேனும் தோல்வியை சந்திப்பவர்கள்,எதிர்பாராத துயரம் ,நோய்,அவமானம்  போன்றவற்றிற்கு ஆளானால் தன்னை தாழ்த்தி மதிப்பிடுவதும் அதைத் தொடர்ந்து அறிவுக்குப் பொருந்தாத எண்ணங்களும் உருவாகும்.சுய மதிப்பு குறைவு என்பது மேலும் மன நிலையை சிக்கலாக்கும்.

                                                         முதுகலை பட்டதாரி இளைஞர் அவர்.பையன் படித்திருக்கிறான்,நல்ல வேலைக்கு போய்விடுவான் என்று உறவினர் ஒருவர் பெண் கொடுக்க, திருமணமாகி ஒரு குழந்தையும் ஆகிவிட்டது.அரசாங்க வேலை அவரது கனவாக இருந்தது.தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார்.ஆனால் அது லேசில் ஆகிற காரியம் இல்லை.

                                                         சம்பாதிக்காத வேலையில்லாத கணவன் மீது அவ்வளவாக மனைவிக்கு பிடிப்பில்லாமல் போய்விட்டது.தன் வயதைவிட இரண்டு வயது குறைவான இளைஞரை காதலித்து அந்த பையனுடன் ஒரு நாள் கிளம்பிப்போய் விட்டார்.மனைவி இன்னொருவருடன் ஓடிப்போனபின்னால் குழந்தையை வைத்துக்கொண்டு ! அவரது சூழ்நிலையை நினைத்துப்பாருங்கள்.


                                                         இம்மாதிரி நேரங்களில் நம்பிக்கை தருபவர்களை விட கேலி செய்பவர்களே அதிகம்.அவனுக்கு என்ன குறையோ? என்னவோ ? என்பவர்கள்தான் அதிகம்.அவமானம்,வேதனை.!என்னவெல்லாம் உணர்ந்திருப்பார்? தன்னைப்பற்றியே அவருக்கு வெறுப்பும்,கோபமும் ,குறைந்த சுய மதிப்பும் ஏற்படத்தான் செய்யும்.

                                                        மோசமான மனநிலையில் இருந்திருந்தால் அவரது வாழ்க்கையும் மோசமாகவே முடிந்திருக்கும்.ஆனால் முன்னேற்றத்தில் இன்னும் தீவிரமாக அக்கறை காட்டி அவர் அடுத்த அரசுத்தேர்வில் அரசு அதிகாரியானார்.ஓடிப்போன மனைவி அந்த இளைஞன் வீட்டாரால் அடித்து துரத்தப்பட்டார்.அரசு அதிகாரி விவாகரத்து வாங்கிக் கொண்டு வேறு திருமணமும் செய்து கொண்டுவிட்டார்.


                                                            எத்தனையோ சூழ்நிலைகளில் நம்மைப்பற்றி நாமே குறைத்து நினைக்கும் சூழ்நிலைகள் அமைந்து விடுகின்றன.மனம் தளராமல் அதை தாண்டவேண்டும்.உபயோகமற்றவராக நினைக்கும்போது ,உங்களையே தாழ்வாக நினைக்கும்போது கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்.உங்களை யாராவது எப்போதாவது பாராட்டியிருப்பார்கள்.எதற்காகவாவது புகழ்ந்திருப்பார்கள்.பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் அவற்றை நினைவுக்கு கொண்டுவாருங்கள்.உங்கள் மனம் மீண்டு வரும்.

                                                             ஓய்வான நிலையில் உங்களுக்கு நீங்களே சில நல்ல கருத்துக்களை உங்கள் மனதிற்கு கொடுப்பது (auto suggestion) நல்ல விளைவுகளை தரும்.உங்களை நீங்கள் பெருமையாகவே நினையுங்கள்.நீங்களே நினைக்காவிட்டால் மற்றவர்கள் எப்படி நினைப்பார்கள்.ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களே! யாருடனும் ஒப்பிடத்தேவையில்லை.
-

19 comments:

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு ...

இராஜராஜேஸ்வரி said...

ஓய்வான நிலையில் உங்களுக்கு நீங்களே சில நல்ல கருத்துக்களை உங்கள் மனதிற்கு கொடுப்பது (auto suggestion) நல்ல விளைவுகளை தரும்.//
nice..

Jana said...

சரியாகச்சொல்லியிருக்கின்றீர்கள். குழந்தைகளை மற்றய குழந்தைகளுடன் ஒப்பிடும் ஆரம்ப கெட்ட விடையத்தை பெற்றோர்கள் அறவே இல்லாமல் செய்யவேண்டும். இதுவே இவ்வாறான தோற்றப்பாடுகளை வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதனுக்கு உருவாக்கிவிடும். நான் தனித்துவமானவன், என்னைப்போல உலகத்தில் வேறு யாரும் இருக்கமுடியாது என்ற அளவான எண்ணப்பாடே அதனை மெருகூட்டலே (ஆணவமாக மாறாமல்) சிறப்பு.
நல்ல பதிவு

நிரூபன் said...

தாழ்வு மன்ப்பாங்கு எவ்வாறு உருவாகிறது என்பதனை உங்கள் பதிவின் மூலம் விளக்கமாக அலசியுள்ளீர்கள் நன்றிகள் சகோ.

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ரைட்டு ...

thanks karun

shanmugavel said...

இராஜராஜேஸ்வரி said...

ஓய்வான நிலையில் உங்களுக்கு நீங்களே சில நல்ல கருத்துக்களை உங்கள் மனதிற்கு கொடுப்பது (auto suggestion) நல்ல விளைவுகளை தரும்.//
nice..

ஆம்.நல்ல விளைவைத்தரக்கூடிய ஒன்றுதான் .நன்றி

shanmugavel said...

@Jana said...

சரியாகச்சொல்லியிருக்கின்றீர்கள். குழந்தைகளை மற்றய குழந்தைகளுடன் ஒப்பிடும் ஆரம்ப கெட்ட விடையத்தை பெற்றோர்கள் அறவே இல்லாமல் செய்யவேண்டும். இதுவே இவ்வாறான தோற்றப்பாடுகளை வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதனுக்கு உருவாக்கிவிடும். நான் தனித்துவமானவன், என்னைப்போல உலகத்தில் வேறு யாரும் இருக்கமுடியாது என்ற அளவான எண்ணப்பாடே அதனை மெருகூட்டலே (ஆணவமாக மாறாமல்) சிறப்பு.
நல்ல பதிவு

நான் சொல்லாமல் விட்டதை சொல்லிவிட்டீர்கள் ஜனா! குழந்தைகளிடமிருந்தே துவங்கவேண்டும்.நன்றி

shanmugavel said...

@நிரூபன் said...

தாழ்வு மன்ப்பாங்கு எவ்வாறு உருவாகிறது என்பதனை உங்கள் பதிவின் மூலம் விளக்கமாக அலசியுள்ளீர்கள் நன்றிகள் சகோ

நன்றி சகோதரம்.

Jayadev Das said...

எனக்கு மிக உபயோகமான பதிவு, மிக்க நன்றி நண்பரே.

Anonymous said...

சண்முகவேல் உங்கள் பதிவுகளில் பல நாள் கருத்திட முடியாமல் போனமைக்கு வருத்தங்கள். எப்படி இப்படி அருமையாக எழுதுகிறீர்கள் என நினைக்கத் தூண்டும் வாழ்வியல் பதிவுகள் ... நல்ல சேவை சகோ.

பதிவுக் குறித்து :

மற்றவரோடு நாம் ஒருபோதும் ஒப்பிடவும் கூடாது. ஒப்பிடாமல் இருக்கவும் கூடாது. என்ன குழம்புகின்றதா?

நிச்சயம் நாம் நம்மை மற்றவரிடம் ஒப்பிடக் கூடாது, அதே போல நமது மனைவி, மக்கள், என எதையும் ஒப்பிடுதல் கூடாத ஒரு காரியம். அது தாழ்வு மனப்பான்மையையும், ஏமாற்றத்தையும், சண்டையையும் ஏற்படுத்தும்.

எப்போது ஒப்பிடலாம் என்றால் தொழில் ரீதியாக ஒரே அலகில் இருக்கும் போது ஒப்பிடலாம். நீங்கள் ஒரு மீன் கடை வைத்திருக்கின்றீர்கள், உங்களது தோழர் ஒரு மீன் கடை வைத்திருக்கின்றார். இரண்டும் ஒரே அளவு, ஒரே தொழில் லாபம் என ஒரே மாதிரி இருக்கும் போது அவரது லாபம் மட்டும் அதிகமாகின்றது எனில் ஒப்பிடலாம். லாபத்தின் சூட்சுமத்தை அறிந்து நாமும் முன்னேறலாம். இது தான் ஒப்பிடுதல்.

எனது மனைவிக்கு ஆங்கிலப் பாடல் கேட்கத் தெரியாது ஆனால் நண்பரின் மனைவிக்கு ஆங்கிலப் பாடல் ரசனை இருக்கு என நீங்கள் ஒப்பிட்டால் அவ்வளவு தான் முடிஞ்சிப் போச்சு...

Anonymous said...

அடுத்தது முதுக்கலைப் பட்டதாரியின் கதை - இன்று பல குடும்பங்களில் இது தான் பிரச்சனையே. நினைத்து கிடைக்கவில்லை எனில் கிடைத்தைத் தக்க வைத்துக் கொள்வதும், ஒரு safe side-க்கு சென்ற பின் நினைத்தது நோக்கி நகர்வதே வெற்றியின் இரகசியம்.

கனடியர் பலரிடம் பேசும் போது அடிக்கடி சொல்லும் வார்த்தை இது surviving, still alive இது தாழ்வு மனப்பான்மையோ என நினைத்ததுண்டு, ஆனால் இதில் ஒரு சூட்சுமம் உண்டு, வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலையில் வாழ முற்பட வேண்டும். கடலில் தவறி விழுந்தால் நீந்தத் தெரிய வேண்டும் அல்லது கிடைத்ததைப் பற்றிக் கொண்டு தப்பிக்க முனைய வேண்டும்.

இளைஞர்கள் இன்று கிடைத்தைப் பெற்றுக் கற்று அதில் முன்னேற முனைவதே நலமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். எனது அனுபவமும் அதே அதே !!!

Anonymous said...

@ தாழ்வு மனப்பான்மை, ஒப்பிடுதல், விடாமுயற்சி மற்றும் நமது எண்ணத்தை தமது துணையிடம் எடுத்துரைத்தல, துணையின் எண்ணத்தைப் புரிந்துக் கொள்ளல் - அருமையான ஒரு பதிவு சகோ.

முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்ற வள்ளுவரின் வாக்கினை நினைக்கத் தூண்டுகின்றது.

Anonymous said...

@ சண்முகவேல்

பதிவுத் தளம் குறித்து - இது என்னுடைய வேண்டுகோள், உடன்பாடு இல்லாமல் கூட இருக்கலாம். தயையுடன் வலைத்தளத்தின் வெளிப்புறத்தில் வெண்மை நிறம் கொடுக்கவும். என்னவோ எனது கண்களுக்கு இப்போதுள்ள நிறம் மேலும் அழுத்தம் தருவதாக இருக்கின்றது. சிலர் கறுமை நிறத்தில் பதிவு தளம் வைத்திருப்பார்கள், அது இன்னமும் கொடுமை ...


நன்றிகள்

பாலா said...

நம்மை நம்மோடு ஒப்பிடுவதே சிறந்தது.

சத்ரியன் said...

பலருக்கும் பயனுள்ள பதிவு நண்பா.

shanmugavel said...

@Jayadev Das said...

எனக்கு மிக உபயோகமான பதிவு, மிக்க நன்றி நண்பரே.

நன்றி நண்பரே!

shanmugavel said...

@இக்பால் செல்வன் said...

தங்கள் கருத்துக்கள் மனதைக்கவர்கின்றன சகோ ,விரைவில் வெண்மை நிறத்திற்கு மாற்ற எண்ணியிருக்கிறேன்.விரிவாக பேச முடியவில்லை. மன்னிக்கவும்.

shanmugavel said...

@பாலா said...

நம்மை நம்மோடு ஒப்பிடுவதே சிறந்தது.

நன்றிகள் பாலா

shanmugavel said...

@சத்ரியன் said...

பலருக்கும் பயனுள்ள பதிவு நண்பா.

நன்றி நண்பா!