Friday, May 27, 2011

குடும்ப முன்னேற்றத்திற்கு தடையாக நிற்கும் பெண்கள்

இன்றைய சூழலில் படித்த அனைவருக்கும் பாதுகாப்பான அரசு வேலை கிடைப்பது சாத்தியமில்லை.தனியார் துறையும் மாத சம்பளத்திற்கு எல்லோருக்கும் வேலை கொடுத்துவிட முடியாது.ஏதேனும் சொந்தமாக தொழில் துவங்கி முன்னேறுவதே வழி.திருமணமான ஆண்கள் இத்தகைய முயற்சி எடுப்பதை பெண்கள் ஆதரிப்பதில்லை.

                            ’’இங்கு வரும் பெண்களில் பெரும்பாலானோர் எதிர்மறை சிந்தனை(Negative thinking) கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் சுய தொழில் துவங்க ஆலோசனை வழங்கும் நண்பர் ஒருவர்.பெண்கள் திரும்பத்திரும்ப நஷ்டம் ஆகி விட்டால் என்ன செய்வது?என்பதையே அதிகம் கேட்கிறார்கள். ஒரு உதாரணத்தையும் கூறினார்:


                                                                                              சாதாரண அரசுப்பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றவரின் மகன் அவர்.படிப்பு,தந்தை சொத்து இவ்ற்றை வைத்து திருமணமும் ஆகி விட்ட்து.ஒரு தனியார் கம்பெனியில் வேலையில் இருந்தார்.நாளாக நாளாக வருமானம் போதவில்லை.இப்போது தந்தையும் இல்லை.

                             சில லட்சங்கள் கையில் இருந்த்து.சொந்தமாக வீடு கட்டவேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான எதிர்பார்ப்புகள்.திறமையான ஆள்.எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் மனைவி தொழில் துவங்க மறுத்து விட்டார்.அவர் மனைவி சொன்ன காரணம் எதற்கு ரிஸ்க் என்பதுதான்.
                      இதை பாதுகாப்பு உணர்வு என்று சொல்ல முடியாது.எதையும் பாசிடிவ்வாக எண்ணாமல் இருப்பதுதான்.எத்தனையோ பேர் தொழில் துவங்கி இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.அவர்களில் பெண்களும் உண்டு.அவர்களை உதாரணமாக கொள்ளாமல் அவநம்பிக்கையுடன் சிந்திப்பது குடும்பத்திற்கு மட்டும் அல்ல,நாட்டிற்கும் இழப்புதான்.

                        சுயமாக தொழில் துவங்குவது போன்ற ரிஸ்க் எடுக்கும்போது உடனிருப்பவர்களின் உணர்வுப்பூர்வமான ஆதரவு தேவை.கூட்டுக்குடும்பங்கள் மறைந்து போனதன் கெடு பலன்களில் இது முக்கியமானது.தைரியம் சொல்லவும்,புரிந்து கொள்ளவும் இப்போது யாரும் இல்லை.மனைவி மட்டுமே உடன் இருக்கிறார்.அவரும் அவநம்பிக்கையுடன் இருக்கிறார்.

                            பொதுவாகவே பெண்கள் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் பாதுகாப்பான நிலையையே தேர்ந்தெடுப்பார்கள் என்கிறார்கள்.சுயமாக தொழில் துவங்கி முன்னேறிய பெண்களுக்கு பின்னணி நல்ல விதமாக இருக்கலாம். இதில் விதிவிலக்கு இருக்கவும் வாய்ப்புண்டு.பெண்களுக்கு தைரியத்தையும்,தன்னம்பிக்கையையும் கற்றுத்தராமல் ஜாக்கிரதை,ஜாக்கிரதை என்றே சமூகம் சொல்லிக்கொண்டிருக்கிறது.


                             பெண்களிடம் எதிர்மறை சிந்தனையை தொலைக்காட்சித்தொடர்கள்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.ஒரு தன்னம்பிக்கை தரும் நூல்  நல்ல முயற்சிகளை,எண்ணங்களை ஏற்படுத்துவது போல சீரியலகள் நஞ்சை மனதில் ஏற்றிக்கொண்டிருக்கின்றன.அவற்றில் மோசமான திருப்பங்களையும்,சோகங்களையுமே பார்க்கும் மனம் புதிதாக துவங்கும் எந்த முயற்சியையும் நெகடிவ்வாகவே பார்க்கும்.இது ஒரு மோசமான நிலை.பெரும் சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

-

17 comments:

மைந்தன் சிவா said...

வீட்டில் அமையும் பெண் சரி இல்லை எண்டால் வாழ்க்கை அம்போ தான்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் அண்ணே! மறுபடியும் ஒரு நல்ல பதிவு போட்டிருக்கீங்க!

பெண்களின் பயந்த சுபாவமே அவர்கள் எம்மை தடுப்பதற்கு காரணம்! ஆனா அவங்க தடுத்தா அப்புறம் நமக்கு, எதாச்சும் பண்ண மனசு வராது! அட வொய்ப் சொல்லீட்டாங்களே .... அப்டீங்கற எண்ணமே மனசுல ஒடிக்கிட்டு இருக்கும்!

அருமையா கவனிச்சு எழுதி இருக்கீங்க!அண்ணே

நிரூபன் said...

ஒரு சில வீடுகளைப் பார்க்கையில் பெண்கள் முற்போக்கு வாதிகளாகச் சிந்திக்கிறார்களோ என்று எண்ணவும் தோன்றும் சகோ.
பெண்களின் மனம் மென்மையானது என்பதாலோ அல்லது இக் காலத்தில் ஒரு சில பெண்களுக்கு துணிச்சல் குறைவு என்பதனாலோ,
தெரியவில்லை,
ஆண்கள் திட்டங்கள் போடுகையில்,
அவற்றினைப் புறக்கணிப்பதாகோ, அல்லது வேறு வழிகளைச் சொல்லி மனதை மாற்றுவோராகவோ இருக்கிறார்கள்.

பெண்களினை இவ் இடத்தில் குறை சொல்வதை விடுத்து,
ஆண்கள் தான் பெண்களிற்குத் தமது திட்டங்களின் பின்னெ உள்ள வெறிறிகரமான சிந்தனைகளை எடுத்து விளக்கிப் பெண்களின் மனதினை மாற்ற ஆவண செய்ய வேண்டும்.
இல்லையேல்.
பெண் சொல்லைத் தட்டக் கூடாது எனச் செயற்பாடுகளைத் தொடங்கினால்
இறுதியில் எல்லாம் இழந்து நட்டாற்றில் நிற்பது போன்ற நிலமை தான் உருவாகும்.

சாகம்பரி said...

சில குடும்பங்களின் வாழ்வியல் முறைகளும் காரணம். குடும்பத்தின் பொருளாதார வசதிகள் நன்றாக வைத்திருப்பவர் ரிஸ்க் எடுக்கத் தயங்குவார்கள். வாழ்க்கையில் up and down சூழ் நிலைகளை சந்தித்தவர்கள் ரிஸ்கை ஏற்பார்கள். இது குடும்ப சைக்காலஜி.

சாகம்பரி said...

சில குடும்பங்களின் வாழ்வியல் முறைகளும் காரணம். குடும்பத்தின் பொருளாதார வசதிகள் நன்றாக வைத்திருப்பவர் ரிஸ்க் எடுக்கத் தயங்குவார்கள். வாழ்க்கையில் up and down சூழ் நிலைகளை சந்தித்தவர்கள் ரிஸ்கை ஏற்பார்கள். இது குடும்ப சைக்காலஜி.

சத்ரியன் said...

நல்ல பதிவு சண்முகவேல்.

(ஆனாலும், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்கிறார்களே! அதற்கென ஒரு பதிவு போடுங்கள்.

குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடாமல், முயன்று வென்ற முன்மாதிரிகளைக் காட்டி, ஊக்கப்படுத்துவதும் நமது கடமை.)

எண்ணங்கள் 13189034291840215795 said...

கண்டிப்பா பெண்கள் தடையில்லை..

பெண்களுக்கு அடிப்படி தேவையான செக்யூரிட்டியை ஆண்கள் தந்துவிட்டாலோ , அல்லது பெண்களே சொந்தக்காலில் நின்று குடும்பம் நடத்த தெம்பு இருந்தாலோ இப்படி சொல்வதில்லை ( எம் குடும்பத்தில் பலர் பிஸினஸ் தான் )..

என்ன செய்யணூம்னா நன்றாக எடுத்து புரியும் படி சொல்லணும் . தொழில் நொடித்தாலும் மீண்டு வரக்கூடிய வாய்ப்புகள் பற்றி விளக்கணும்..

அம்போ னு குடும்பம் நடுத்தெருவுக்கு வரக்கூடாது , என்ற பயம் அனைவருக்குமே இருக்கும். இது ஆண் பெண் என்றல்ல..

செய்திகளில் படிக்கிறோமே , வட்டிக்கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை னு .. அந்த பயம் இருக்கணும்தான். தவறில்லை..

தொழில் துவங்குபவர் எல்லாரும் வெற்றியடைவதுமில்லை , தோல்வியடைவதுமில்லை..

Jana said...

சீரியலகள் நஞ்சை மனதில் ஏற்றிக்கொண்டிருக்கின்றன.அவற்றில் மோசமான திருப்பங்களையும்,சோகங்களையுமே பார்க்கும் மனம் புதிதாக துவங்கும் எந்த முயற்சியையும் நெகடிவ்வாகவே பார்க்கும்.இது ஒரு மோசமான நிலை.பெரும் சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை...

ஒருவனின் வெற்றியின் பின்னால் நிற்பவள் மனைவி என்பதில் பாரிய உண்மை உண்டு. ஏனென்றால் சாதிக்க துடிக்கும் ஒருவனுக்கு நேரிடையான மனைவி, சந்தேகப்படும் மனைவி, அமைந்தால் அவன் எப்படி சாதனையாளனாக வரமுடியும். சோ..கண்டிப்பாக ஒருவனின் வெற்றியில் மனைவியின் பங்கு பிரதானமானதே.
நான் நினைக்கின்றேன் அளவில்லாத அன்பினாலும், மனம் விட்டு நீண்டநேரம் பேசுவதாலும் எந்த ஒரு பேதமை மனைவியையும் வழிக்கு கொண்டுவரலாம்.
அனேகமான மனைவியர் தம்தரப்பு வாதமாக சொல்லிக்கொள்வது தமது கணவன்மார்கள் தமக்காக செலவு செய்யும் நேரம் குறைவு என்பதுதான். இதையும் கணவன்மார் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளதும் உண்மையே.

shanmugavel said...

@மைந்தன் சிவா

உண்மையே சிவா நன்றி

shanmugavel said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆம்,ரஜீவா செண்டிமெண்டாவே நெகடிவா பேசறாங்களேன்னு முயற்சியை விட்டுடறாங்க.

shanmugavel said...

@நிரூபன் said...

ஒரு சில வீடுகளைப் பார்க்கையில் பெண்கள் முற்போக்கு வாதிகளாகச் சிந்திக்கிறார்களோ என்று எண்ணவும் தோன்றும் சகோ.
பெண்களின் மனம் மென்மையானது என்பதாலோ அல்லது இக் காலத்தில் ஒரு சில பெண்களுக்கு துணிச்சல் குறைவு என்பதனாலோ,
தெரியவில்லை,
ஆண்கள் திட்டங்கள் போடுகையில்,
அவற்றினைப் புறக்கணிப்பதாகோ, அல்லது வேறு வழிகளைச் சொல்லி மனதை மாற்றுவோராகவோ இருக்கிறார்கள்.

எதிர்மறை எண்ணமே காரணம் சகோ அதை மாற்றி பாசிட்டிவ் சிந்தனையை உருவாக்க வேண்டும் அவ்வளவே.

shanmugavel said...

@சாகம்பரி said...

உண்மைதான் சகோதரி. நான் சொல்ல வந்தது எதிர்மறை சிந்தனை தற்காலத்தில் அதிகம் வளர்ந்திருக்கிறதா? என்பதுதான்

shanmugavel said...

@சத்ரியன் said...

உண்மைதான் சத்ரியன் இன்னொரு பதிவு போட்டா போச்சு.நன்றி

shanmugavel said...

@எண்ணங்கள் 13189034291840215795 said...
என்ன செய்யணூம்னா நன்றாக எடுத்து புரியும் படி சொல்லணும் . தொழில் நொடித்தாலும் மீண்டு வரக்கூடிய வாய்ப்புகள் பற்றி விளக்கணும்..

சரிதான்.இதைத்தான் கவுன்சலிங் என்கிறோம்.நல்ல ஆலோசனை இல்லாமலேயே பாசிட்டிவ் சிந்தனையை கொண்டிருக்கவேண்டும் என்பதும்,இன்றைய வாழ்க்கைமுறை (சீரியல் போன்றவை)எதிர்மறை சிந்தனையை வளர்த்திருக்கிறதா என்பதே விஷயம்.

shanmugavel said...

எண்ணங்கள் 13189034291840215795 said...

அம்போ னு குடும்பம் நடுத்தெருவுக்கு வரக்கூடாது , என்ற பயம் அனைவருக்குமே இருக்கும். இது ஆண் பெண் என்றல்ல..

ஆம்,பயமும்,கலக்கமுமே தயக்கத்தை தோற்றுவிக்கின்றன.நன்றி

shanmugavel said...

@Jana said...

ஆம்,ஜனா மனைவியின் பங்கு முக்கியமானதே! அதுவும் கூட்டுக்குடும்பங்கள் இல்லாத நிலையில் வேறு யாரும் இல்லை.நன்றி ஜனா

இராஜராஜேஸ்வரி said...

ரிஸ்க் எடுக்கும்போது உடனிருப்பவர்களின் உணர்வுப்பூர்வமான ஆதரவு தேவை.//
உண்மை.