Monday, May 2, 2011

கலங்கும் பெண்களால் உடையும் உறவுகள்.

                           காதலிலோ,குடும்பத்திலோ ஆண்,பெண் இருவருமே நம்பிக்கையும் பாதுகாப்பும் உணர வேண்டும்.இவற்றில் தவறினால் அந்த உறவு அதோகதிதான்.தான் தொடர்ந்து மதிக்கப்படுவோமா? என்ற கேள்வி எழுந்தவுடன் சந்தேகமும் அதைத் தொடர்ந்து உறவுகளில் விரிசலும் ஆரம்பித்துவிடுகிறது.

                            வேலைக்கு போன இட்த்தில் ஒரு பெண்ணை பார்த்தவுடன் பிடித்துப்போய் விட்ட்து அவனுக்கு! அந்த பெண்ணுக்கும்தான்.பார்வையில் ஆரம்பித்து புன்சிரிப்பாய் மலர்ந்து பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.ஒரு நாள் அவன் திருமணம்செய்து கொள்ளலாம் என்று கூறினான்.                            அந்த பெண்ணுக்கு குழப்பம் அதிகமாகிவிட்ட்து.இம்மாதிரி நேரங்களில் தோழிகள்தான் பக்கபலம்.ஆண்களை எளிதில் நம்பி விடாதே! என்றார் தோழி.நல்ல வேலையில் இருக்கிறான்,இனிமையாக பழகுவான் என்பது தவிர வேறெதுவும் தெரியாது.தேர்வுகள் ஆரம்பமாகிவிட்ட்து.

                            அவனைத்தவிர்க்க ஆரம்பித்தாள்.வேறு எந்தெந்த ஆண்களுடனோ அதிகம் பேசிக்கொண்டிருந்தாள்.போன் செய்தால் வீட்டில் உள்ளவர்கள் எடுத்து என்ன வேண்டும் என்று முறைப்பாக கேட்டார்கள்.பாவம் இவன் அப்பாவி!கொஞ்ச நாள் கழித்து சொல்லியிருக்கலாமோ என்று நினைத்தான்.இவனுக்கும் குழப்பம் அதிகமாகி விட்ட்து.                                                                        சுருக்கமாக சொன்னால் பையனின் வீட்டில் திருமணத்திற்கு தீவிரமாக இருந்த்தால் பெற்றோர் பார்த்த பெண்ணை மண முடித்துவிட்டான்.நிச்சயமானவுடன் பெண்ணின் தோழி ஆத்திரமாக கேட்டார்என்ன இப்படி செஞ்சிட்டீங்க?’’ அவன் பதில் சொல்லவில்லை.கொஞ்சம் இழுத்திருந்தால் பரவாயில்லை.அதிகமாக இழுத்தால் எத்தகைய உறவும் அறுந்துதான் போகும்.

                                சமூகத்தில் பெண்களின் தகுதிநிலையே இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.திருமணமாகி மணவாழ்க்கையில் சந்தோஷம் இழந்த பெண்களை பார்த்துவிட்டு கலங்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.பார்த்தவையும் கேட்டவையும் அவர்களுக்கு அச்சத்தையும்,கலக்கத்தையும் தருகிறது.முடிவு எடுப்பதில்,நம்பிக்கை கொள்வதில் பெரும் குழப்பம்.

                                மேற்கண்ட பெண் திருமணமாகி போனால் கூட தான் எப்போதும் மதிக்கபடுவோமா என்ற சந்தேகத்திலேயே இருந்தால் சிக்கலான குடும்ப பிரச்சினைகளையே கொண்டுவரும்.கணவன் எப்போதும் தன்னை முக்கியமாக கருத வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் உத்திகள் விரும்பத்தகாத விளைவுகளையும் உருவாக்கலாம்.

                                கணவன் குடும்பம் தொடர்பான உறவுகள்,அவரது பெற்றோர்,சகோதரிகள் போன்றோரை அதிகம் கணவனுடன் நெருங்கமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.மாமியார் மருமகள் சண்டைக்கு வித்திடலாம்.(பெற்றோருக்கும் மகன் தங்களை மதிக்கமாட்டானோ என்ற எண்ணம் ஏற்படுவது வேறுவிஷயம்).பெண்ணின் தாய் வீட்டு உறவுகளுக்கு அதிகம் வரவேற்பு அளிக்கலாம்.                                 மிகச்சில சொந்தக்காலில் நிற்கும் பெண்களைத்தவிர இதெல்லாம் பொதுவானவை.பெண்ணுக்கு உரிய சமூக தகுதுநிலை கிடைத்தால் ஒழிய இவற்றை தவிர்ப்பது கஷ்டம்.
-

10 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அண்ணே உண்மையில் பெண்களுக்கு, மனதில் எத்தனையோ குழப்பங்கள்! நம்பிக்கையீனங்கள்! அச்சங்கள்!!மிக அருமையாக எல்லாத்தையும் எழுதி இருக்கீங்க!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அப்டீன்னா ஔ பொண்ணு நம்மளோட காதலை நிராகரிக்கிறாள் னு சொன்னா, அவளுக்கு நம்ம மேல விருப்பம் இல்லைன்னு அர்த்தம் கிடையாது! அவளைச்சுத்தி இருக்குற பயங்கள் பயங்கள் இல்ல! ச்சே இதுதெரியாம, அனிதாவ பிழையா நினைச்சுட்டனே! ஹி..........ஹி.......ஹி.............!!!

Sankar Gurusamy said...

இதில் சினிமாவும் டிவியும் பார்த்த பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை இன்மையே இதன் மூல காரணம். தன்னம்பிக்கை வளர்த்து சினிமா டிவியின் பாதிப்பு குறைந்தாலே இந்த மாதிரி சம்பவங்கள் குறையும்.

பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

சாகம்பரி said...

இதற்கெல்லாம் எழுத்தில் இல்லாத வரைவுகள் உண்டு. தாய் மகளுக்கு வழங்கும் மாயப் பரிசு. "அவள் விசயத்தில் நான் தலையிட முடியாது " என்று அன்னையர் நினைக்கும் இக்காலத்தில் இதெல்லாம் மறைந்துவிட்டது. அதனால்தான் இந்த தயக்கம் ...

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல பகிர்வு....

shanmugavel said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அண்ணே உண்மையில் பெண்களுக்கு, மனதில் எத்தனையோ குழப்பங்கள்! நம்பிக்கையீனங்கள்! அச்சங்கள்!!மிக அருமையாக எல்லாத்தையும் எழுதி இருக்கீங்க!

நன்றி தம்பி

shanmugavel said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அப்டீன்னா ஔ பொண்ணு நம்மளோட காதலை நிராகரிக்கிறாள் னு சொன்னா, அவளுக்கு நம்ம மேல விருப்பம் இல்லைன்னு அர்த்தம் கிடையாது! அவளைச்சுத்தி இருக்குற பயங்கள் பயங்கள் இல்ல! ச்சே இதுதெரியாம, அனிதாவ பிழையா நினைச்சுட்டனே! ஹி..........ஹி.......ஹி.............!!!

உடனே போய் அனிதாவ பாரு தம்பி.உனக்காக இருக்கா !

shanmugavel said...

@Sankar Gurusamy said...
இதில் சினிமாவும் டிவியும் பார்த்த பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை இன்மையே இதன் மூல காரணம். தன்னம்பிக்கை வளர்த்து சினிமா டிவியின் பாதிப்பு குறைந்தாலே இந்த மாதிரி சம்பவங்கள் குறையும்.

பகிர்வுக்கு நன்றி.

தன்னம்பிக்கை இல்லாததும் ஒரு காரணமே !நன்றி சங்கர்

shanmugavel said...

@சாகம்பரி said...
இதற்கெல்லாம் எழுத்தில் இல்லாத வரைவுகள் உண்டு. தாய் மகளுக்கு வழங்கும் மாயப் பரிசு. "அவள் விசயத்தில் நான் தலையிட முடியாது " என்று அன்னையர் நினைக்கும் இக்காலத்தில் இதெல்லாம் மறைந்துவிட்டது. அதனால்தான் இந்த தயக்கம் ...

மாயப் பரிசு பற்றியெல்லாம் நீங்கள் எழுதலாமே நன்றி சகோதரி

shanmugavel said...

@MANO நாஞ்சில் மனோ said...
நல்ல பகிர்வு....

Thanks sir