Thursday, May 19, 2011

சரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி?-இரண்டு.

முந்தைய பதிவு படிக்காதவர்கள் கீழே கிளிக் செய்து படிக்கவும்.
                           சரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி?-1
                                                                            உங்கள் உடல் பருமனை கணக்கிடுங்கள்.உங்கள் எடையை உயரத்தின் மீட்ட்ர் ஸ்கொயரால் வகுத்தால் பருமன் (body mass index) கிடைக்கும்.உதாரணமாக உங்கள் எடை 50 கிலோ,உயரம் 1.5மீ என்று வைத்துக்கொள்வோம்.50/1.5*1.5.என்று கணக்கிட்டால் BMI-22.


                                                       .22  முதல் 26 வரை இருந்தால் சரி.அதிகமாக இருந்தால் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள்.தேவைப்படும் கலோரியை விட குறைவாக உண்ண வேண்டும்.அதே சமயம் உடலுக்கு அன்றாட தேவையான உயிர்ச்ச்த்துக்கள் மற்றும் தாதுக்கள் (vitamins and Minerals) கிடைக்கவேண்டும்.


                      சாதம் ,சப்பாத்தி,தோசை,இட்லி போன்ற உணவு வகைகளை குறைத்துக்கொண்டு பழங்கள் ,கீரை,காய்கறிகள் அதிகம் சேர்க்கவேண்டும்.இவற்றில் மேற்குறிப்பிட்ட சத்துக்கள் கிடைக்கும்.உடற் பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டும்.ஒவ்வொருவருக்கும் தேவையான அளவு தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

                              22க்கும் கீழ் இருப்பவர்கள் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் மிதமான வகையில் இவை அதிகரிக்க வேண்டும்.அதிகம் உண்பதே பழக்கமாகி சாப்பிடாமல் இருக்க முடியாத நிலை ஏற்படக்கூடாது.அதிக கலோரி உள்ள உணவுகளை சேர்க்க வேண்டும்.


                              குழந்தைகளுக்கு சிறுவயது முதலே எதை சொல்லித்தருகிறோமோ இல்லையோ உடல் நலம் பேணுவது குறித்து கற்பிப்பது நல்லது.சிறு வயது பழக்கம் என்பது நீடித்து இருக்க கூடியது.வாழ்நாள் முழுக்க அவர்களூக்கு உதவும்.

                              சில ஆண்டுகளுக்கு முன்பு யுனிசெஃப் நிறுவனம் மூலமாக அயோடின் உப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தினார்கள்.பள்ளிக் குழந்தைகளை வீட்டிலிருந்து உப்பு எடுத்துவரச்செய்து ஸ்டார்ச் விட்டு யாருடைய வீட்டு உப்பில் அயோடின் இருக்கிறது ,யாருடையதில் இல்லை என்று காட்டினார்கள்.கூடவே அதன் அவசியமும் தெரிவிக்கப்பட்ட்து.


                                குழந்தைகள் அன்றிலிருந்து கடையில் அவர்களாகவே போய் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.பெற்றோருக்கு குழந்தைகள் விவரித்தார்கள்.சில தின்ங்களிலேயே சாதாரண உப்புக்கு பதிலாக அயோடின் கலந்த உப்பு அனைத்து கிராமங்களிலும் விற்பனைக்கு வந்து விட்ட்து.குழந்தைகளிடம் ஏற்படுத்தும் விழிப்புணர்விற்கும்,பழக்கத்திற்கும் பலன் அதிகம்.
-

9 comments:

மதுரை சரவணன் said...

நல்ல கருத்துள்ள இடுகை.. வாழ்த்துக்கள்

வலிப்போக்கன் said...

சாப்பாடு கிடைப்பதே எனக்கு பெரிய விசயம் அப்படி, இப்படி சாப்பிடு என்றால் எப்படித் தல.

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி

shanmugavel said...

@ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி

சரிதான் சார் பாஸா? ஃபெயிலான்னு சொல்லலியே? நன்றி

நிரூபன் said...

சகோ, பயனுள்ள பதிவு சகோ.
அதுவும் குறிப்பெடுத்து, உணவுப் பழக்கத்தை மெயிண்டெயின்ஸ் பண்ண வேண்டிய பல விடயங்களை உங்கல் பதிவில் தந்துள்ளீர்கள்.

நன்றிகள் நண்பா.

shanmugavel said...

@மதுரை சரவணன் said...

நல்ல கருத்துள்ள இடுகை.. வாழ்த்துக்கள்

நன்றி சரவணன்.

Sankar Gurusamy said...

இன்றைக்கு நிச்சயம் தேவையான ஒரு விழிப்புணர்வு பதிவு. அதுவும் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டிய ஒரு விழிப்புணர்வு பற்றி தாங்கள் கூறிய கருத்து மிக வரவேற்கத்தக்க ஒன்று. இதில் பள்ளிகளின் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. செய்தால் மிக நன்றாக இருக்கும்.


பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

Jana said...

சரியான உயரத்திற்கேற்ற உடல் எடையினை பேணுவது அவ்வளவு லேசான காரியமாக எனக்கு இல்லை. சிலருக்கு கன கச்சிதமாக அந்த அமைப்பு இயற்கையாகவே அமைந்துவிட்டது.
ஒரு முக்கிய மெடிக்கல் ஒன்றுக்காக ஒரு நண்பரின் அலோசனையில் உடல் எடையினை தேவையான அளவு அதிக சிரமம் இல்லாமல் குறைத்துக்கொண்டேன்.

இப்போ பழையபடி கூடிவிட்டது என்பது வேறு கதை.
அது என்னவென்றால், நீற்றுப்பூசனிக்காய் இருக்கின்றது அல்லவா...அதை அதிகாலையில் நன்றாக நறுக்கி ஜூஸாக அடித்து வெறும் வயிற்றில் (2 டம்லர்) குடித்து விட்டு, குறைந்தது ஒரு 2 கிலோ மீற்றர் நடைப்பயிற்சி 2 வாரங்களுக்கு செய்தால் குறிப்பட்ட காலத்தில் உடல் எடையினை குறைக்க ஏதுவாக இருக்கும் (என் அனுபவம்) அந்தவேளைகளில் இறச்சி, முட்டை, எண்ணெய் உணவுகளை தவிர்த்தால் சிறப்பு.

shanmugavel said...

@Jana said...

உங்கள் அனுபவத்துடன் கூடிய கருத்துக்கள் அருமை.நன்றி ஜனா!