Monday, May 9, 2011

பாலியல்- தவறான கருத்துக்களும் மூட நம்பிக்கைகளும்


காம்ம் மனிதனின் இயல்பான ஒரு உணர்வு.இனப்பெருக்கத்திற்காக இயற்கையால் வழங்கப்பட்டிருந்தாலும் பின்னர் அது சந்தோஷத்திற்காகவும் என்று ஆகிவிட்ட்து.காம்ம் மன நலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.திருமணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று சட்டப்பூர்வமாக பாலியல் தேவையை நிறைவேற்றிக்கொள்வது.

                                 கடந்த ஆபாச இணைய தளமும் ஒரு சாஃப்ட்வேர் இளைஞரும் என்ற பதிவுக்கு இக்பால் செல்வன் வழங்கிய கருத்துரை என்னை ரொம்பவே யோசிக்க வைத்து விட்ட்து.அவர் வழங்கிய கருத்துரையிலிருந்து சில வரிகள்.


    ஒரு படித்த ஐடி வாலிபர் சொன்னார் குழந்தை ஆசன்வாய் வழியாகப் பிறக்கின்றதாம் -- எவ்வளவோ விளக்கியும் அவருக்கு கடைசி வரை சந்தேகம் தான். பிறகு அதற்கான மருத்துவ வீடியோவைக் காண்பித்தப் பின் தான் விசயமே புரிந்தது அவருக்கு .......... இப்படியான லட்சணங்களில் நமது இளைய ஆண் பெண் இருக்கின்றார்கள்.

இன்னொருவரு சொன்னார் மணமான பெண்களோடு உறவாடினால் எய்ட்ஸ் வராதாம், இன்னொருவர் சொன்னார் எத்தனை பெண்ணோடும் புணரலா எய்ட்ஸ் வராது என்றார். பலருக்குத் தெரிவதில்லை பாலியல் தொழிலாளி மட்டுமில்லை பலரோடு உறவாடும் ஆண் பெண் மூலமாகவும் எய்ட்ஸ் தொற்றும் என்று.


இன்னும் சிலர் ஓரினச் சேர்க்கையில் மட்டும் எய்ட்ஸ் வரும் என நம்புகின்றார்கள். எந்த இனச் சேர்க்கையில் ஒன்றுக்கு மேலான உறவுகள் வைத்தால் எய்ட்ச் தொற்றும் அபாயம் உள்ளது.



                            ஏற்கனவே பாலியல் மூடநம்பிக்கைகள் 18+ என்று ஒரு பதிவை எழுதியிருக்கிறேன்.ஆனால் அவை அதிகம் படிக்காத பாமர மக்களிடம் நிலவும் நம்பிக்கைகள் என்றே நினைத்திருந்தேன்.இரண்டு,மூன்று பட்டங்கள் பெற்றவர்களிடம் கூட தவறான கருத்துக்களும்,மூட நம்பிக்கைகளும் உலவுவது ஆபத்தானது.அதுவும் உலகில் இரண்டாவது அதிகம் எய்ட்ஸ் நோயாளிகளை கொண்ட இந்தியாவில் இதன் போக்குகளை நாம் உணர வேண்டும்.

                              சில மாதங்களுக்கு முன்பு கூட ஒருவர் விந்து ரத்த்த்தில்தான் உற்பத்தியாகிறது.குருதியின் வேறு வடிவமே அது என்று வாதாடினார்.எனக்கு தெரிந்த மருத்துவரிடம் அழைத்துச்சென்று புரியவைத்தேன்.சோடா கொண்டு கழுவி விட்டால் பால்வினை நோய்கள் வராது என்று ஒருவர் கூறினார்.


                               கல்லூரிகளில் செஞ்சுருள் சங்கம் மூலம் இப்படிப்பட்ட தவறான எண்ணங்களை களைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இன்னும் அறிவியல் அல்லாத பழமைகளையும் தனது மதிப்பீடாக தாங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவில் பாலியல் தொடர்பான அறிவை பெறுவது கேள்விக்குறியாகவே உள்ளது.

                               எவ்வளவு படித்தவர்கள் ஆனாலும்,வாய்ப்பு இருந்தும் உரிய நிபுணர்களை நாடி தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்வதில்லை.பயமும்,தயக்கமும் அவர்களை தடுத்து விடுகின்றன.ஆகவே,நான் ஒரு முடிவு செய்திருக்கிறேன்.பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு இ-மெயில் மூலம் பதில் தர விரும்புகிறேன்.வேலைப்பளுவில் எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.எனக்கு தெரியாத்தை நிபுணர்களிடம் கேட்டாவது தாமதமாகவேனும் பதில் வந்துவிடும்.

                                நிஜ முகவரி இல்லாமல் private என்று சில மெயிலகள் வந்திருக்கின்றன.அதை வாசகர்கள் பின்பற்றலாம்.வாசகர்களின் சந்தேகங்கள் எதுவும் பதிவாக வெளியிடப்படமாட்டாது.மேலும் பாலியல் மூடநம்பிக்கைகள் என்ற பதிவை கீழே கிளிக் செய்து படிக்கலாம்.

            பாலியல் மூடநம்பிக்கைகள் 18+

இ மெயில் முகவரி-ksvel2010@gmail.com
-

5 comments:

Sankar Gurusamy said...

உண்மை.. நமது நாட்டில் இன்னும் பாலியல் விழிப்புணர்வு மிகவும் கம்மி. எவ்வளவோ நம் சமூகம் முன்னேறினாலும் இதில் நாம் 50 ஆண்டுகள் பின்னோக்கிதான் இருக்கிறோம்.

தங்களின் மேலான ஆலோசனை சேவைக்கு எனது வாழ்த்துகள்.

http://anubhudhi.blogspot.com/

சக்தி கல்வி மையம் said...

அதிகம் படிக்காத பாமர மக்களிடம் நிலவும் நம்பிக்கைகள் என்றே நினைத்திருந்தேன்.இரண்டு,மூன்று பட்டங்கள் பெற்றவர்களிடம் கூட தவறான கருத்துக்களும்,மூட நம்பிக்கைகளும் உலவுவது ஆபத்தானது.// அப்படியா ?

shanmugavel said...

@Sankar Gurusamy said...

உண்மை.. நமது நாட்டில் இன்னும் பாலியல் விழிப்புணர்வு மிகவும் கம்மி. எவ்வளவோ நம் சமூகம் முன்னேறினாலும் இதில் நாம் 50 ஆண்டுகள் பின்னோக்கிதான் இருக்கிறோம்.

தங்களின் மேலான ஆலோசனை சேவைக்கு எனது வாழ்த்துகள்.

நன்றி சங்கர் குருசாமி

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அதிகம் படிக்காத பாமர மக்களிடம் நிலவும் நம்பிக்கைகள் என்றே நினைத்திருந்தேன்.இரண்டு,மூன்று பட்டங்கள் பெற்றவர்களிடம் கூட தவறான கருத்துக்களும்,மூட நம்பிக்கைகளும் உலவுவது ஆபத்தானது.// அப்படியா ?

Thanks karun

shanmugavel said...

என்னுடைய செல் நம்பர் கேட்டு இரண்டு பேர் மெயில் அனுப்பியிருக்கிறார்கள்.என் பணி காரணமாக அது சாத்தியமில்லை.நன்றி