Friday, May 6, 2011

ஆபாச இணையதளமும் ஒரு சாப்ட்வேர் இளைஞரும்


                                உறவினர் ஒருவரை பார்க்கவேண்டும்.செஞ்சிலுவை சங்கத்திற்கு வரச்சொல்லியிருந்தார்.உறுப்பினர்கள் கூட்ட்த்தில் இருந்த்தால் உடனே பார்க்கமுடியவில்லை.அறைக்கு வெளியே அமர்ந்திருந்தேன்.அருகில் ஒரு இளைஞன்.சுமார் இருபத்தைந்து வயது இருக்கும்.

                                 பார்ப்பத்ற்கே கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தான்.ஏதோ கஷ்ட்த்தில் இருப்பது போல எனக்கு தோன்றியது.கைகளில் நடுக்கம்.அடிக்கடி அவனை பார்த்துக்கொண்டிருந்தேன்.எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டேன்.சும்மா ஒரு ஃப்ரண்ட பார்க்க வந்தேன்என்று சொல்லி விட்டு வெளியே சென்றுவிட்டான்.


                                 சிறிது நேரத்தில் மீண்டும் வந்தவன் எனக்கு மூன்று இருக்கைகள் தள்ளி அமர்ந்தான்.நான் அந்த இளைஞனையே அடிக்கடி பார்க்க ஆரம்பித்தேன்.அங்கே பணியாற்றும் யாரோ ஒருவர் அவனை அழைத்துக்கொண்டு போனார்கள்.சற்று நேரத்தில் வெளியே வந்தவன் கிளம்பிச்சென்று விட்டான்.

                                 எனக்கு ஆர்வம் குறையாத்தால் அந்த அறைக்குள் விசாரிக்கலாம் என்று சென்றேன்.உள்ளே எய்ட்ஸ் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த்து.இது எய்ட்ஸ் நோய்க்கான ஆலோசனை மையம் சார்! என்ன வேண்டும்’’? என்றார்கள்.இல்லை,இப்போது ஒரு பையன் வந்து போனானே....


                               அதெல்லாம் உங்களுக்கு எதற்கு சார்? இப்படி வருபவர்களின் தகவல்களை வெளியிடுவதில்லை என்றார்கள்.நான் இன்னாருக்கு உறவு என்று அறிமுகப்படுத்திக்கொண்ட பின் அந்த இளைஞரின் விவரங்களை சொல்லாமல் பிரச்சினையை மட்டும் சொன்னார்கள்.

                               அவர் சாப்ட்வேரில் பணிபுரியும் இளைஞர்.ஆபாச இணைய தளங்களை அடிக்கடி பார்த்து வந்திருக்கிறார்.விளம்பரம் மூலமோ,எப்படியோ ஒரு பெண்ணுடன் சாட்டிங் செய்திருக்கிறார்.தொடர்ந்து அப்பெண் நகரில் ஒரு பெரிய ஹோட்டலை சொல்லி வரச்சொல்லியிருக்கிறார்.


                                பையன் சென்று காத்திருந்தால் அங்கே வந்து சந்தித்த்து ஒரு ஆண்.எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க இவன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை சொல்லியிருக்கிறார்.இதெல்லாம் மிக்க் குறைவு தம்பி!இதற்கு வேறொரு இடம்தான் சரிப்படும் என்று அழைத்துச் சென்ற இடம் வேறு.

                                அந்த இளைஞனுக்கு பயம் தொற்றிக்கொண்ட்து.பால்வினை நோய்,எச்.அய்.வி.உள்ளிட்ட கிருமித்தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற பயத்தில்தான் அங்கே ஆலோசனைக்கு வந்திருக்கிறான்.மூன்று மாதம் கழித்து பரிசோதித்தால் தான் தெரியும் என்று சில ஆலோசனைகளை கூறி அனுப்பியிருந்தார்கள்.கிருமித்தொற்று ஏற்பட்டால் மூன்று மாதம் கழித்தே பரிசோதனையில் தெரியும் என்றார்கள்.அதுவரை அந்த இளைஞன் மன நிலை எப்படி இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
-

18 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
நல்லொழுக்கம் வாழ்க்கையை வசந்தமாக்கும்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்லதொரு எச்சரிக்கையான பதிவு அண்ணே!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ம்..பயனுள்ள பதிவு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விழிப்புணர்வு பதிவு

kama said...

தப்பான தகவல்.. முன்று மாதங்கள் ஆகாது.. ஒரே நாளில் தெரிந்துவிடும்...

டி.சாய் said...

சில நிமிட கொந்தளிப்புக்கள்; வாழ்வினையே புரட்டிப்போட்டு விடும் :)))
கொஞ்சம் கனவமாக இருத்தல் நலம் :)
செஞ்சிலுவை யின் சேவை பாராட்டத்தக்கது.. தனிமனித உரிமைகளை பாதுகாக்கவே வேண்டும்.. நீங்கள் கேட்டும் அந் நபரின் விபரங்களை சொல்லதது அவர்களின் மீதன நம்பிக்கைக்கு ஒரு சான்று :)

shanmugavel said...

@kama said...

தப்பான தகவல்.. முன்று மாதங்கள் ஆகாது.. ஒரே நாளில் தெரிந்துவிடும்...

மூன்று மாதம் ஆகும் என்பதே உண்மை(HIV).மீண்டும் விசாரித்தேன்.உடலில் அக்கிருமிக்கெதிரான ஆண்டிபாடி உருவாக மூன்று மாதம் ஆகும் என்கிறார்கள்.நிகழ்வுக்குக்கு பின் மூன்று மாதத்திற்கு மேல் ஆகியிருந்தால் அரை மணி நேரத்தில் முடிவு சொல்வோம் என்றார்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

உபயோகமான பதிவு....

palane said...

மிகவும் பயனுள்ள தகவல்

palane said...

மிகவும் பயனுள்ள தகவல்

karurkirukkan said...

நல்ல செய்தி

இரவு வானம் said...

ம்ம்ம் வேதனைதான், ஆபாச இணையதளங்களால் மன உளைச்சல் ஏற்படுகிறது என்பதும் உண்மைதான்

Tamilan said...

மிகவும் நல்ல பதிவு, சமுதாய விழிப்புணர்வுக்கான பதிவு , பதிவருக்கு வாழ்த்துக்கள் !

shanmugavel said...

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி .

Anonymous said...

நல்ல பதிவு. சாப்ட்வே கம்பெனியில வேலை செஞ்சு என்ன பிரயோசனம் - பகுத்தறிவும் இல்லை, பண்பாடும் இல்லை. முதலில் நம் தமிழக இளைஞர்கள் பலருக்கு குழந்தை எப்படி பிறக்குது, சரியான புணர்ச்சி எது, ஆணுறையின் அவசியம் என்று ஒரு கருமாந்திரமும் தெரிய மாட்டேங்குது.

ஒரு படித்த ஐடி வாலிபர் சொன்னார் குழந்தை ஆசன்வாய் வழியாகப் பிறக்கின்றதாம் -- எவ்வளவோ விளக்கியும் அவருக்கு கடைசி வரை சந்தேகம் தான். பிறகு அதற்கான மருத்துவ வீடியோவைக் காண்பித்தப் பின் தான் விசயமே புரிந்தது அவருக்கு .......... இப்படியான லட்சணங்களில் நமது இளைய ஆண் பெண் இருக்கின்றார்கள்.

இன்னொருவரு சொன்னார் மணமான பெண்களோடு உறவாடினால் எய்ட்ஸ் வராதாம், இன்னொருவர் சொன்னார் எத்தனை பெண்ணோடும் புணரலா எய்ட்ஸ் வராது என்றார். பலருக்குத் தெரிவதில்லை பாலியல் தொழிலாளி மட்டுமில்லை பலரோடு உறவாடும் ஆண் பெண் மூலமாகவும் எய்ட்ஸ் தொற்றும் என்று.

மூன்று மாதத்தில் கூட முதல் உறவாடியத் தினத்தில் இருந்து எய்ட்ஸ் இருக்கா இல்லையா எனக் கண்டுப் பிடிப்பது கடினம். சிலருக்கு HIV incubation period சில ஆண்டுகள் கூட ஆகும். கல்லூரிப் படிக்கும் போது தில்லியில் உறவாடிய ஒரு நபருக்கு, 15 ஆண்டுகள் கழித்தே எய்ட்ஸ் நோய் அறிகுறி தெரிந்தது. கல்லூரிக் காலத்தில் பாலியல் தொழிலாளியிடம் போனது அப்போது தான் அவருக்குத் தெரிந்தது.

இன்னும் சிலர் ஓரினச் சேர்க்கையில் மட்டும் எய்ட்ஸ் வரும் என நம்புகின்றார்கள். எந்த இனச் சேர்க்கையில் ஒன்றுக்கு மேலான உறவுகள் வைத்தால் எய்ட்ச் தொற்றும் அபாயம் உள்ளது.

நமது இளைஞர்களுக்குத் தேவை பாலியல் கல்வி. போர்னோ சைட்களில் இருப்பதை எல்லாம் உண்மை என நம்பும் பலரும் இருக்கின்றார்கள். சில பள்ளி வயதுப் பெண்கள் கூட பாலியல் உறவில் சிக்கி மாட்டிக் கொள்கின்றார்கள் -- போதிய பாலியல் அறிவு, சுயக் கட்டுப்பாடு, தனி மனித ஒழுக்கம், இவை இருந்தால் மட்டுமே வாழ்வு செழிக்கும்.

பாலியல் தேவையை அடக்க முடியாதவர்கள் விரைவில் மணம் முடிப்பது நல்லது ......

shanmugavel said...

நான் பதிவெழுதும் அளவுக்கு கருத்துரையே வழங்கி விட்டீர்கள் இக்பால் செல்வன்.உங்கள் வார்த்தைகள் நிஜம்.நன்றி

நிரூபன் said...

சகோ, பாலியல் தளங்களை நம்பி ஏமாறுவோரின் வாழ்க்கையினை ஒரு விழிப்புணர்வாகத் தந்திருக்கிறீர்கள்.

Sankar Gurusamy said...

அருமையான விழிப்புணர்வு பதிவு.

பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/