Sunday, May 8, 2011

சுற்றுலா -ஒகேனக்கல்லும்,அனுமாருக்கு கோபம் வந்த இடமும்

  ஒகேனக்கல் அநேகமாக கேள்விப்படாதவர்கள் யாருமில்லை..நிறைய சினிமாக்களிலும் பார்த்து விட்டோம்.தர்மபுரியில் இருந்து 46 கிலோ மீட்டர் தூரம்.போக்குவரத்து வசதிகளுக்கு பிரச்சினை இல்லை.ஒகே என்றால் கன்னடத்தில் புகை என்று அர்த்தம் ஒகேனக்கல் என்றால் புகையும் கல் என்று பொருள்.பாறைகளின் நடுவே தண்ணீர் புகை போல கொட்டுவதை நேரில் பார்க்கலாம்.

                                                                கோடை விடுமுறை என்பதால் கூட்டம் அதிகம்.ஆயில் மசாஜ் போனால் உடம்பை மொத்தமாக பிசைந்து விடுவார்கள்.அப்புறம் அருவியில் குளிக்கலாம்.மீன் சாப்பிடலாம்.படகு சவாரி ஒரு நல்ல அனுபவம்.விளையாட்டும் ,போதையும் அதிகமிருந்தால் கெட்ட அனுபவமாகவும் போய் விடும்.                                                                   பெரிய குடும்பம் உள்ளவர்கள் போனால் பாத்திரங்களை வாடகைக்கு எடுத்து நாமே சமைத்து சாப்பிடலாம்.அதற்கான இடமும் வாடகையில் கிடைக்கும்.இறுதி சடங்குக்காக வரும் சுற்றுப்புற மக்கள் அதிகம்.கோடைக்கு குதூகலமான குளியல் போட நல்ல இடம்.

                                                                                          
சென்னை,பெங்களூருவிலிருந்துஒகேனக்கல்லுக்கு  வருபவர்கள் கிருஷ்ணகிரி வழியாக வந்து தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டை பார்வையிட்டு செல்லலாம்.செல்லும் வழியில் எழு கிலோமீட்டர்தான்.இரண்டு நகரங்களில் இருந்தும் வேறு சாலைகள் இருந்தாலும் கிருஷ்ணகிரியை தொட்டுச்செல்லும் பாதை தேசிய நெடுஞ்சாலை என்பதால் இந்த சாலையை தேர்ந்தெடுப்பதே நல்லது.                                                     கிருஷ்ணகிரி (KRP DAM)அணையைத் தாண்டி கொஞ்சம் உள்ளே போனால் பிரெஷ் மற்றும் சுவையான மீன்களை ருசிக்கலாம்.ஒகேனக்கல்லுடன் ஒப்பிடும்போது விலையும் குறைவு.கிருஷ்ணகிரி பகுதி நெடுஞ்சாலை ஓரங்களில் அனைத்து வகை தரமான மாம்பழங்களும் கிடைக்கும்.வாங்கி செல்லலாம்.

                                                             திருவண்ணாமலை பக்கம் இருந்து வருபவர்கள் அரூர் அருகே உள்ள தீர்த்தமலை பார்க்கலாம்.மற்றவர்கள் தர்மபுரியிலிருந்து அரூர் சென்று அங்கிருந்து  செல்ல வேண்டும்.சில மீட்டர்கள் படியேற வேண்டியிருக்கும்.இத்தலத்திற்கு ராமாயணம் தொடர்பான கதை ஒன்று உள்ளது.                                                               ராமர் இலங்கைக்கு செல்லும்போது பூஜைக்கான நேரம் வந்து விட்டது.பார்த்தால் சுத்தமாக தண்ணீர் இல்லை.புனித நீர் வேண்டும்.ராமர் அனுமனைப்பார்க்க அனுமன் உடனே கங்கைக்கு புறப்பட்டு விட்டார்.பூஜைக்கான நல்ல நேரம் கடப்பதை உணர்ந்து மலையில் அம்பை எய்து நீரை உற்பத்தி செய்துவிட்டார்.பூஜையும் முடித்தாகி விட்டது.

                                                               குளிக்கப்போனால் மலைமீதிருந்து நீர் கொட்டும் .பெரும்பாலான நேரங்களில் வானரங்கள் தண்ணீர் கொட்டும் குழாய் அருகே அமர்ந்திருக்கும்.பாவம் செய்துவிட்டு அங்கே வருபவர்களை குளிக்கவிடாமல் வானரங்கள் குழாயை மூடிக்கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது.                                                             அனுமன் புனித நீர் எடுத்து வந்து பார்த்தால் பூஜை முடிந்து போய் விட்டது.அவருக்கு மட்டும் கோபம் வராதா? நீரை தூக்கி எறிந்துவிட்டார்.சில கிலோமீட்டர் தூரத்தில் "அனுமன் தீர்த்தம்"என்ற கிராமம் இருக்கிறது.ஒரு ஓடையும் இருக்கிறது.தீர்த்தமலை செல்பவர்கள் அதன் முன்பாக ஊத்தங்கரை ,அரூர் சாலையில் உள்ள அனுமன் தீர்த்தம் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

                                                சேலம் வழியாக ஒகேனக்கல் வருபவர்கள் அதியமான்கோட்டை பார்க்கலாம்.அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமானுக்கு அரசு சார்பில் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.பழமையான பெருமாள் கோயில் உள்ளது.விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட சென்றாய பெருமாள் கோயில்.சிற்பங்களையும்,கடவுளையும் சென்று தரிசிக்கலாம்.
-

8 comments:

மைந்தன் சிவா said...

அருமையான புதுத் தகவல்கள்..நன்றிகள் பாஸ்..படங்கள் பதிவை மெருகேற்றுகிறன!!

MANO நாஞ்சில் மனோ said...

பேசாம விகடன் குரூப்ல போயி சேர்ந்துருங்க பாஸ். அம்புட்டு சரக்கு இருக்கு உங்ககிட்டே....

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

அருமையான புதுத் தகவல்கள்..நன்றிகள் பாஸ்..படங்கள் பதிவை மெருகேற்றுகிறன!!

நன்றி சிவா

சிநேகிதி said...

பக்கத்துலே இருக்கேன்.... இன்னும் போய் பார்க்கவில்லை... தெளிவாக விளக்கி இருக்கிங்க...

ஜெட்லி... said...

கடந்த பொங்கல் விடுமுறைக்கு நங்கள் சென்றோம்...
மீண்டும் மீண்டும் போக தூண்டும் இடம்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

புதுமையான அனுபவம் அண்ணே! இருக்கு அங்க pokanum போல இருக்கு!

Sankar Gurusamy said...

பல புதிய தகவல்களுடன் தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

shanmugavel said...

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி