Wednesday, May 11, 2011

சோதிடப்பலன்களின் உண்மை நிலை


                              குருப்பெயர்ச்சி,ராகு,கேது பெயர்ச்சி,சனிப்பெயர்ச்சி என்று ஏராளமான புத்த்கங்கள் பரபரப்பாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.என்னை ஒருவர் கேட்டார்,எனக்கும் என் மச்சானுக்கும் ஒரே ராசி.போன மாதம் அவனுக்கு காலில் அடிபட்ட்து.எனக்கு அடிபடவில்லை.ஒரே ராசி உள்ளவர்களுக்கு பொதுவாக சொல்லும் பலன்கள் பொருந்துமா?

                              மேற்கண்ட பெயர்ச்சிகள் கோச்சாரம் என்று சொல்வார்கள்.சந்திரன் இருக்கும் ராசியை வைத்து கணிக்கப்படுபவை.ஒவ்வொருவருக்கும் பிறந்த ஜாதகம் இருக்கிறது.தசா,புக்தி இருக்கிறது.இதையெல்லாம் ஆராய்ந்துதான் முடிவு செய்ய வேண்டும்.மனதுக்கும்,உடலுக்கும் பார்க்க வேண்டியவை.

                               வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் பிறந்த கால ஜாதகத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பதே ஜோதிடம்.காலண்டர்களில் கூட சந்திராஷ்டம்ம் என்று போட்டிருப்பார்கள்.சந்திரன் எட்டாம் இட்த்தில் உள்ள போது நல்ல,முக்கியமான காரியங்களை செய்யவேண்டாம் என்றும் வீண் விவாதங்கள் செய்யக்கூடாது என்றும் பலன் உண்டு.

                                என் நண்பன் ஒருவன் இன்று என் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம்ம் என்று போட்டிருந்த்து.நானும் ஆனால் ஆகட்டும் என்று இந்த வேலையை ஆரம்பித்தேன்.ஆனால் சிறப்பாக முடிந்த்து.ரொம்ப மகிழ்ச்சி என்றான்.இதற்கு ஜோதிட்த்தின் பதில்,சந்திரன் எட்டாமிட்த்தில் இருந்தாலும் அந்த வீட்டுக்கு அதிபதி ஆட்சி,உச்சம் பெற்றிருந்தால் அன்றைய தினம் சிறப்பாக இருக்கவே வாய்ப்புண்டு.

                               என் கிராமத்தில் மிக வறுமையில் இருந்து பெரும் தொழிலதிபராக வளர்ந்து நிற்கும் ஒருவர்.என்னை விட இளையவன்.நல்ல உழைப்பாளி.தவறாகவே ஜாதகம் கணிக்கப்பட்டு அதையே வைத்து பரிகாரம் முதல் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தான்.

                         சரியான நேரம் மிக முக்கியம்.உதாரணமாக பத்தாம் தேதி இரவு ஒரு மணிக்கு என்றே பலரும் சொல்வார்கள்.கம்பியூட்டரில் உள்ள மென்பொருட்களில் அது 11 ஆம் தேதிக்கு கணக்கிட வேண்டும்.தவிர பஞ்சாங்கங்களில் வேறுபாடு உண்டு.வாக்கியம்,திருக்கணிதம் என்று இரண்டுக்கும் கிரக பெயர்ச்சிகளும் மாறுபடும்.

                                வேத காலங்களில் இருந்து மக்களின் பெருவாரியான நம்பிக்கையை பெற்ற ஒன்று ஜோதிடம்.முந்தைய வாழ்க்கை நிகழ்வுகளை அலசிப்பார்த்து,அதிகம் உழைத்தும் சரியான பலன்களை கண்டறிவது சிரம்மான ஒன்று. பிறந்த நேரத்தில் சில நிமிடங்களை மாற்றி சொன்னால் கூட முற்றிலும் மாறிப்போய் விடும்.

                                குறிப்பிட்ட ராசிக்கு கெடுதல் உண்டாகும் என்று இருந்தால் உங்களுக்கு கெடுதல் உண்டாகும் என்ற நிச்சயம் எதுவும் இல்லை.பயப்படவும் தேவையில்லை.நம்பிக்கை இருப்பவர்கள் பரிகாரங்களை செய்யலாம்.

-

6 comments:

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

நடு நிலையா எழுதியிருந்தாலும் ஜோசியத்துக்கு ஓவரா வக்காலத்து வாங்கினாப்ல இருக்கு.

சோதிட தகவல் திலகம் என்ற பட்டத்தை வழங்குகிறேன்

shanmugavel said...

@சித்தூர்.எஸ்.முருகேசன் said...

நடு நிலையா எழுதியிருந்தாலும் ஜோசியத்துக்கு ஓவரா வக்காலத்து வாங்கினாப்ல இருக்கு.

சோதிட தகவல் திலகம் என்ற பட்டத்தை வழங்குகிறேன்

ஹாஹா நன்றி சார்

Sankar Gurusamy said...

பத்திரிக்கைகளில் வரும் பலன்கள் பொதுவானவையே. அவரவர் ஜாதகம் வைத்துதான் உண்மையான நிலையை கணிக்க முடியும்.

உண்மையில் இங்கு இருப்பவர்களில் பெரும்பாலோனோர் அரைகுறை ஜோதிடர்கள்தான். அவர்களின் கணிப்பு எப்போதுமே ஒரேமாதிரி இருப்பதில்லை. மேலும் தாங்கள் கூறியபடி வாக்கியம், திருக்கணிதம் என்றும் சில வேறுபாடுகள்.

இதுவும் ஜோதிடத்தின் மீது இருக்கும் நம்பகத்தன்மையை குறைத்து விட்டது.

இருந்தாலும் நம் ஜனத்துக்கு எதிர்காலம் பற்றி அறியும் ஆவல் அதிகம் இருப்பதால் இப்படிப்பட்ட பகுதிகளை விரும்பிப் படிக்கிறார்கள்.

நல்ல அலசல் பதிவு. பகிர்வுக்கு நன்றி.

http://anubhudhi.blogspot.com/

shanmugavel said...

தங்கள் கருத்துக்கள் உண்மையே சங்கர் நன்றி

சாகம்பரி said...

இது போன்ற பலங்களை பார்த்து நாம் கவனமாக இருக்க முடியும். பரிகாரங்கள் செய்வது நல்லது. பொதுவாக யாருக்கும் கெடுதி செய்யாமல் இருந்தாலே கெடுபலன்கள் ஏற்படாது.

shanmugavel said...

@சாகம்பரி said...

இது போன்ற பலங்களை பார்த்து நாம் கவனமாக இருக்க முடியும். பரிகாரங்கள் செய்வது நல்லது. பொதுவாக யாருக்கும் கெடுதி செய்யாமல் இருந்தாலே கெடுபலன்கள் ஏற்படாது.

நன்றி சகோதரி