Saturday, April 9, 2011

பாலியல் தொல்லையை எதிர்கொண்ட ஆண்-நேர்காணல்


                              பெண்களுக்கு பணியிடங்களில் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து ஒரு பதிவை நான் பதிவெழுத வந்த தொடக்கத்தில் எழுதினேன்.அதைப் படித்த நண்பன் ஒருவனிடம் இருந்து இ-மெயில் வந்திருந்த்து.அன்று முழுக்க என் போன் தூங்கிக் கொண்டிருந்த்து.மெயிலை பார்த்துவிட்டு போன் செய்தேன்.என்னுடைய விஷயத்தை எழுதுவதுதானேஎன்றான்.

                             பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா? என்ற பதிவு அடுத்து வந்த்து.பெண்களைப் போல் அல்ல! இது கொஞ்சம் அபூர்வமானது.அதை உணர்வதற்கும்,எதிர்கொள்வதற்கும் சிறப்பான ஆளுமை தேவைப்படும்.பதிவில் விளக்கமாகவே எழுதியிருக்கிறேன்.


                               நண்பன் நல்ல படிப்பாளி.எனக்கு சிறுவயதிலேயே கோமல் சுவாமிநாதனின் “சுபமங்களாஇதழை படிக்கச் சொன்னது அவன் தான்.எனக்கு இலக்கிய அறிமுகம் ஏற்பட காரணமாக அமைந்தவன் அவனே! இல்லாவிட்டால் இப்படியெல்லாம் எழுதி சிரமப்படுத்தமாட்டேன்.நல்ல வசதியான ஆள்.டீஸல் மட்டும் போட்டுக்கொண்டு அவனுடைய காரை எங்கு வேண்டுமானாலும் எடுத்துப்போவேன்.

                              படிப்பும்,வசதியும்,சமூக அந்தஸ்தும் யாருக்கும் அவனுடன் நெருக்கமாக இருத்திக் கொள்ள தோன்றும்.உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு வசதி இருந்தாலும் தான் படித்த படிப்புக்காக ஒரு வேலையில் ஒட்டிக் கொண்டிருந்தான்.வேலை செய்யுமிட்த்தில் அவனுக்கு தொல்லைகள்தான் அதிகம் இருந்தன.

                               பெரிதாக அவனை என்ன செய்துவிடமுடியும் என்றுதான் நான் நினைத்தேன்.ஆனால்,அவன் ஏராளமான சங்கடங்களை அனுபவித்தான்.வேறு கிளைக்கு மாற்றல் வாங்கி செல்லும் நிலை ஒரு பெண்ணால் ஏற்பட்ட்து என்பதை என்னால் உண்மையில் நம்ப முடியவில்லை.


                               பெண்களுக்கு நேரும் தொல்லைகளைப்பற்றியே நான் எப்போது சிந்தித்து வந்திருக்கிறேன்.விதிவிலக்காக இது என்னை வியப்பில் ஆழ்த்தியது.பல மாதங்கள் கழித்து வெகுநேரம் பேசும் வாய்ப்பு கிடைத்த்து.அவனுக்கு நேர்ந்த தொந்தரவு பற்றி விளக்கமாக பேசினோம்.

பாலியல் தொல்லைதான் என்பதை எப்படி உணர்ந்தீர்கள்?

                              ஆரம்பத்தில் அங்கே பணிக்கு வந்த போது தினமும் வணக்கம் வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.அடிக்கடி வந்து பேசிக் கொண்டிருப்பார்.மற்றவர்களை விட என்மீது அதிக மதிப்பு வைத்திருக்கிறார் என்று சக ஊழியர்கள் சொல்லிக்காட்டுவார்கள்.ஒரு நாள் என் கணவர் ஊரில் இல்லை,நான் தனியாக இருக்கிறேன் என்றார்.அன்று இரவு ஒன்பது மணிக்கு போன் வந்த்து.என்ன செய்கிறீர்கள்?என்றவர் பிறகு பேசவில்லை.போனையும் துண்டிக்கவில்லை.நான் அமைதியாக இருந்து விட்டேன்.அடுத்தநாள் காலையில் அலுவலகத்தில் பார்த்தபோது என்னுடன் பேசவில்லை.அப்போதிருந்து பிரச்சினை ஆரம்பித்துவிட்ட்து.


எந்த மாதிரி பிரச்சினைகள்?

                               என் மேலாளர் என்மீது மிகவும் மரியாதை வைத்திருந்தார்.நான் கொடுத்த பணியை ஒழுங்காக செய்து வந்திருக்கிறேன்.திடீரென்று என்மீது எரிந்துவிழ ஆரம்பித்தார்.வேலையை சரியாக செய்தால் மட்டும் போதாது,அனைவரிடமும் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டும்என்றார்.மேலாளர் அந்த பெண்ணை மிகவும் மதிக்க ஆரம்பித்து விட்டார்.எனக்கும் அவருக்கும் விரிசல் ஏற்பட்ட்து.அடுத்து நண்பர்கள்,

நண்பர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்?

                                                                           அடுத்த பதிவில் முடியும்.

                              

-

8 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சுவாரசியாமாக இருந்தாலும், மனசுக்கு கஷ்டமாகவும் இருக்கு அண்ணே! அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்!!

shanmugavel said...

ஆம்.தம்பி நன்றி

Jana said...

வித்தியாசமானதொரு பதிவு. தொடருங்கள். பல செய்திகள் வெளிவரட்டும்.

சக்தி கல்வி மையம் said...

விழிப்ர்ணர்வு பதிவு..
தொடருங்கள்...

shanmugavel said...

@Jana said...

வித்தியாசமானதொரு பதிவு. தொடருங்கள். பல செய்திகள் வெளிவரட்டும்.

நன்றி ஜனா

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

விழிப்ர்ணர்வு பதிவு..
தொடருங்கள்...

சரி கருன் உங்களுக்கு நன்றி

Unknown said...

வித்தியாசமான அனுபவந்தான்! தொடருங்கள்! காத்திருக்கிறோம்!

shanmugavel said...

@ஜீ... said...

வித்தியாசமான அனுபவந்தான்! தொடருங்கள்! காத்திருக்கிறோம்!

நன்றி ஜீ