கணவன்
மனைவி இருவரும் வேலைக்குப் போவது அதிகரித்து வருகிறது.இரண்டு பேரும்
சம்பாதித்தால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை.சில நாட்களில் சமைப்பதை விடவும்
ஹோட்டலில் வாங்கிக் கொள்ளலாம் என்றே நினைக்கிறார்கள்.சும்மா ஒரு சேஞ்சுக்காக சாப்பிடலாம்
என்று வருபவர்களும் உண்டு.இப்படி முடிவு செய்யும்போது பெரும்பாலானவர்கள்
அசைவத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஹோட்டலில்
கிடைக்கும் அசைவம் சுத்தமானதாக ,ஆரோக்கியமானதாக இருக்குமா? நான் பெரும்பாலும்
அசைவத்தை தவிர்த்துவிடுவேன்.மற்ற உணவுகளை விட வெகு சீக்கிரம் கெட்டுப்போகும் தன்மை
அசைவ உணவுகளுக்கு உண்டு.விலை அதிகம் என்பதால் ஹோட்டல் வைத்திருப்போரும் விற்பனை
ஆகாவிட்டாலும் வீணாக்க விரும்ப மாட்டார்கள்.மிளகு நஞ்சை எடுத்துவிடும்
என்பார்கள்.கொஞ்சம் அதிகம் சேர்த்து சூடாக்கி பணமாக்கி விடுகிறார்கள்.
போட்டி என்பது
நம்மவர்களுக்கு மிக பிடித்தமான விஷயம்.என் நண்பர் ஒருவர் போட்டி வாங்கி வந்து அவரே
சமைத்து சாப்பிடுவார்.அசைவம் என்றால் மட்டும் தானே சமைத்து உண்ணும் பலரை எனக்கு
தெரியும்.ஆட்டுக்குடல்தான் போட்டி.களி,பரோட்டாவுடன் போட்டி விற்பனை பறக்கும்.இந்த
ஆட்டுக்குடலை ஒரு லாரியில் மடக்கி பிடித்தார்கள்.வெளி மாநிலத்திலிருந்து
விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள்.அங்கே இதற்கு அவ்வளவு வரவேற்பு இல்லை.
மொத்த
ஆட்டுக்குடலும் சுகாதாரமற்றது.பிடிபட்ட குடல்கள் அழிக்கப்பட்டு
விட்ட்து.இல்லாவிட்டால் பலருடைய சுகாதாரத்தை அழித்திருக்கும்.மதுவுடன் எளிதில்
விற்பனையாகி விடுகிறது.காலையில் வாந்தி வந்தால் மது ஒத்துக்கொள்ள வில்லை என்று
நினைப்பார்களே தவிர உடன் சாப்பிட்ட அசைவம் பற்றிய எண்ணம் வராது.சுயநலமும்
பேராசையும் வளர்ந்துவிட்ட நாளில் யார் எக்கேடு கெட்டால் என்ன? அவர்களுக்கு கல்லா
நிரம்பினால் போதும்.
விருந்து
சாப்பிடும் முன்பாக காக்கைகளுக்கு உணவு வைப்பது நமது கலாச்சாரம். இறுதி நாள்
காரியத்தில் வெளியாட்களுக்கு விருந்து தருவார்கள்.சமீபத்தில் அப்படி ஒரு
காரியத்திற்கு போயிருந்தேன்.காக்கைக்கு உணவு கொண்டு போய் வைத்துவிட்டு
காத்திருந்தார்கள்.வெகு நேரம் மொத்த கூட்டமும் காத்துக்கொண்டிருந்தார்கள்.காக்கை
சாப்பிடாவிட்டால் கை நனைக்க மாட்டார்கள்.சிட்டுக்குருவி மட்டும் அல்ல காக்கையும்
காணாமல் போய்க் கொண்டிருக்கிறதா?
கிணற்றில்
போட்டு விடலாம் என்று சிலர் சொன்னார்கள்.மீன் சாப்பிட்டால் போதும்.சீக்கிரம்
கிளம்ப வேண்டுமே? காக்கையை பிதுர் என்பார்கள்.முன்னோர் சாப்பிட்ட பின்புதான்
மற்றவர்கள் சாப்பிடவேண்டும்.ஆனால் உண்மையான நோக்கம் விருந்தில் விஷம் இருந்தால்
உடனே தெரிந்துவிடும் என்பதே! ஒரு வழியாக காக்கை இரக்கப்பட்டு எங்கிருந்தோ வந்து
எங்களை காப்பாற்றியது.நவகிரகங்களில் சனியை மந்தன் என்பார்கள்.சனியின் வாகனம்
மெதுவாகத்தான் வரும் என்றார் ஒருவர்.
தானியங்களை காய
வைத்து காக்கை குருவிக்காக காவல் காக்கும் காலங்கள் இனி இருக்காதா? காக்கை தலைமீது
எச்சமிட்டால் தோஷம் என்ற நம்பிக்கை உண்டு.காகம் கரைவதற்கு பலன் சொல்வார்கள்.இன்று
ஆபத்தில் சிக்கியிருப்பது போல தோன்றுகிறது.காக்கை பிரியாணி சாப்பிட்ட விவேக்
நினைவுக்கு வருகிறார்.அப்போது அது நகைச்சுவை.கற்பனையை விட உண்மை பயங்கரமானது என்று
யாரோ சொன்னார்கள்.பொதுமக்கள் புகார் கொடுத்த பிறகு சிலரை பிடித்து
விசாரித்தார்கள்.
கோணிப்பை நிறைய
காக்கைகளை வைத்திருந்தார்கள்.நூறுக்கும் மேற்பட்டவை.அத்தனையும் இறந்த காகங்கள்.உணவுக்காக
விஷம் வைத்து வேட்டையாடியதாக சொன்னார்கள்.ஒரு குடும்பம் நூறுக்கும் அதிகமான
காக்கைகளை எத்தனை நாள் உண்பது? அவர்கள் சொல்வது உண்மையல்ல! அவை ஹோட்டல்களுக்கு
விற்பனை செய்யப்படுகிறது.பலரும் காடைஃபிரை,கவுதாரி ஃபிரை என்று மணக்க மணக்க
சாப்பிடிகிறார்கள்.
22 comments:
ஐயோ, அண்ணே, ரொம்ப பயமா இருக்கு நீங்க சொல்றது! இனிமே கடைச்சாப்பாடு சாப்பிட கொஞ்சம் யோசிக்கணும்!
//உண்மையான நோக்கம் விருந்தில் விஷம் இருந்தால் உடனே தெரிந்துவிடும் என்பதே!//
இது தான் உண்மை.
எங்க ஊரில சிட்டுக்குருவினு
50 பைசா சிக்கனை சுவைத்த காலமும் உண்டு ஜி ஓயின்சில்.
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
ஐயோ, அண்ணே, ரொம்ப பயமா இருக்கு நீங்க சொல்றது! இனிமே கடைச்சாப்பாடு சாப்பிட கொஞ்சம் யோசிக்கணும்!
ஆமா,யோசிக்கறதே நல்லது,நன்றி
@நண்டு @நொரண்டு -ஈரோடு said...
//உண்மையான நோக்கம் விருந்தில் விஷம் இருந்தால் உடனே தெரிந்துவிடும் என்பதே!//
இது தான் உண்மை.
எங்க ஊரில சிட்டுக்குருவினு
50 பைசா சிக்கனை சுவைத்த காலமும் உண்டு ஜி ஓயின்சில்.
தங்கள் கருத்துரைக்கு நன்றி அய்யா!
வணக்கம் அண்ணா,
நல்லா இருக்கிறீங்களா?
மிகவும் பயனுள்ள ஆலோசனையைக் கொடுத்திருக்கிறீங்க.
ஓட்டல்களில் சாப்பிடும் போது இனிமே வலு ஜாக்கிரதையாக இருக்கனும்,
நான் எத்தனை காகத்தினை உண்டிருபேனோ தெரியலை!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அப்புறமா,
தமிழ்மணத்தில் ஆறாமிடத்திற்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்தும் எழுதுங்கள்.
வணக்கமையா!
அண்மையில்தான் கடைகளில் இருக்கும் எலிகளை ஓட்டல்களில் சமைப்பதாக கேள்விப்பட்டேன் இப்போ காக்கையா..? விளங்கிடும்..!
@நிரூபன் said...
வணக்கம் அண்ணா,
நல்லா இருக்கிறீங்களா?
மிகவும் பயனுள்ள ஆலோசனையைக் கொடுத்திருக்கிறீங்க.
ஓட்டல்களில் சாப்பிடும் போது இனிமே வலு ஜாக்கிரதையாக இருக்கனும்,
நான் எத்தனை காகத்தினை உண்டிருபேனோ தெரியலை!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அப்புறமா,
தமிழ்மணத்தில் ஆறாமிடத்திற்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்தும் எழுதுங்கள்.
நன்றி நிரூ!
@காட்டான் said...
வணக்கமையா!
அண்மையில்தான் கடைகளில் இருக்கும் எலிகளை ஓட்டல்களில் சமைப்பதாக கேள்விப்பட்டேன் இப்போ காக்கையா..? விளங்கிடும்..!
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
அடப்பாவிங்களா.....
மொத்தத்தில அசைவம் சாப்பிடாமல் இருப்பதே சிறந்ததுன்னு நினைக்கிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
சூதனமா இருந்துக்கனும்ணே.
எனக்குப் பிரச்சினையே இல்லை!
நல்ல பகிர்வு.
@சசிகுமார் said...
அடப்பாவிங்களா.....
நன்றி சார்
@Sankar Gurusamy said...
மொத்தத்தில அசைவம் சாப்பிடாமல் இருப்பதே சிறந்ததுன்னு நினைக்கிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
ஆமாம்,ஹோட்டலில் சாப்பிடாமல் தவிர்ப்பதே நல்லது,நன்றி
@சத்ரியன் said...
சூதனமா இருந்துக்கனும்ணே.
ஆமாம்,சத்ரியன் நன்றி
pakirvukku mikka nandri. moththaththil HOTEL~kalil asaivathi thavirppathe nallathu.
neer koli endra paravaiyai chicken endru solli virkum manitharkalum undu.
@சென்னை பித்தன் said...
எனக்குப் பிரச்சினையே இல்லை!
நல்ல பகிர்வு.
உங்களுக்கு தொல்லை இல்லை அய்யா! நன்றி
@ABUBAKKAR K M said...
pakirvukku mikka nandri. moththaththil HOTEL~kalil asaivathi thavirppathe nallathu.
neer koli endra paravaiyai chicken endru solli virkum manitharkalum undu.
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
அய்யய்யோ நினைத்தாலே வாந்தி வருது.அசைவம் சாப்பிடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.
நானும் நாளிதழ்களில் படித்தேன்.போகிற போக்கை பார்த்தால் காக்கை இனமே காணாமல் போய்விடும்போல் தெரிகிறது.
Arputhamaana Vizhippunarvu Pathivu. Naanum kadaikalil asaivam saappiduvathillai.
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Post a Comment