Thursday, February 9, 2012

கொலஸ்ட்ரால் உணவுகள் உஷார்!


நண்பர் ஒருவர் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்.’’நெஞ்சில் ஏதோ அழுத்துவது போலிருக்கிறது, நல்ல மருத்துவராக சொல்லுங்கள்.’’ நான் எனக்கு தெரிந்த மருத்துவர் பெயரைச் சொன்னேன்.ரத்தப் பரிசோதனை முடிவு கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதை காட்டியது.இன்று இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன.இளம் வயதில் ஹார்ட் அட்டாக்,ஸ்ட்ரோக் என்பது சகஜம்.ஆனாலும் விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.வெளியே அலைந்து திரியும் பணி காரணமாக அதிகமும் ஹோட்டல் சாப்பாடுகளை சார்ந்திருப்பவர் அவர்.அதிக கெட்ட கொலஸ்ட்ராலுக்கு காரணம் இந்த பழக்கம்தான் என்பதை மருத்துவர் விளக்கினார்.

                                                                            இரத்தப் பரிசோதனையில் கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருப்பது இதயக்குழாய் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.அப்புறம் மாரடைப்பு,ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் .சைவ உணவகம் ஒன்றில் பணியாற்றுபவரை கேட்டேன்.டால்டா எந்தெந்த உணவு வகைகளுக்கு பயன்படுத்துகிறீர்கள்? வெஜிடபிள் பிரியாணியிலும்,குருமாவிலும் கொஞ்சம் சேர்ப்போம் என்றார் அசைவ உணவுகள்,இனிப்புகள் போன்றவற்றிலும் பயன்படுத்தவே செய்கிறார்கள்.வனஸ்பதி சேர்க்கப்பட்ட உணவுகள் மீண்டும் மீண்டும் சாப்பிட்த்தூண்டும்.இன்று குழந்தைகள் பெரியவர்கள் என்று பலரும் இவ்வகை உணவுகளுக்கு  அடிமையாகி இருக்கிறார்கள்.சிறு வயதிலேயே இதய நோயை ஏற்படுத்துவதில் முக்கியபங்கு வனஸ்பதிக்கு உண்டு.

                                 வனஸ்பதி நல்ல கொலஸ்ட்ராலை குறைத்து கெட்ட கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும்.இதில் உள்ள அதிக அளவான Trans fat முக்கிய காரணமாக இருக்கிறது.இவ்வகை கொழுப்புகள் அசைவ உணவுகள்,பால் பொருட்களிலும் சிறிதளவு உண்டு.கொலஸ்டரால் என்ற பிரச்சினை மட்டும் இல்லாமல் உடல் பருமன்,நீரிழிவு,புற்றுநோய் போன்றவற்றிற்கும் காரணமாக அமையலாம்.இவையன்றி நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களும் இதய நோயை வரவழைக்கின்றன.நெய்,வெண்ணெய்,அசைவ உணவுகள்,தேங்காய் எண்ணெய் போன்றவை இத்தகைய கொழுப்புகளுக்கு உதாரணங்கள்.இவற்றை குறைப்பது முக்கியமானது.

                                                                         வனஸ்பதி விலக்கப்படவேண்டியது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.ஆனால் அசைவம்,பால் பொருட்களில் நல்ல கொழுப்பும் சேர்ந்தே இருக்கும்.கொலஸ்ட்ரால் இயல்பான மதிப்பைவிட அதிகம் உள்ளவர்கள் குறைக்கவேண்டும்.பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் வாங்கும்போது தகவல்களை குறித்திருப்பார்கள்.Trans fat  0 என்று இருக்கும். ஆனாலும் மிக குறைந்த அளவு இருக்கும்.Saturated fat அதிகம் இருக்கும் பொருட்கள்,ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்டவை சேர்க்கப்பட்டிருப்பது போன்றவற்றை தவிர்க்கலாம்.மற்ற அசைவ உணவுகளோடு ஒப்பிடும்போது மீன் நல்ல கொழுப்பு அமிலங்களை கொண்டிருக்கிறது.கோழி இறைச்சி குறைந்த கொலஸ்ட்ராலை கொண்ட்து.

                                    மருத்துவத் துறையில் பணியாற்றும் ஒருவரை எனக்கு தெரியும்.கொலஸ்ட்ராலை குறைக்க எளிய வைத்தியம் ஒன்றை சொன்னார்.தனது அனுபவத்தில் குறைத்துக்காட்டியதாக அவருடைய நண்பர்களும் கூறினார்கள்.வெள்ளைப்பூண்டுதான் கொலஸ்ட்ராலை குறைக்கும் பக்க விளைவில்லாத மருந்து என்றார்.வெள்ளைப்பூண்டு தரமானதாக வாங்கி ஒரு முழுப்பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மிக விரைவிலேயே கொலஸ்ட்ரால் குறைந்து விடும் என்றார்.ஆபத்து எதுவும் இல்லை.விருப்பமுள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
-

13 comments:

Thava said...

நண்பரே அருமையான விளக்கம்..அதை பதிவாக வழங்கிய தங்களுக்கு என் நன்றிகள்.
சைக்கோ திரை விமர்சனம்

RAVICHANDRAN said...

அசைவ பிரியாணியிலும்,குருமாவிலும் கூட டால்டா சேர்ப்பார்கள்.நல்ல பதிவு

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,

நீண்ட இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறீங்க.

கொழுப்பு உணவுகளை உண்பதால் ஏற்படும் பிரதி கூலங்களையும்,
தவிர்க்க வேண்டிய கொழுப்பு உணவுகள் தொடர்பிலும் அருமையான விளக்கப் பகிர்வினை கொடுத்திருக்கிறீங்க.

வழமை போலவே பயனுள்ள பதிவு! நன்றி.

ஹேமா said...

கொலஸ்ட்ராலுக்கு பூண்டு நல்லதா...மிகச் சுலபமான
மருந்தாச்சே !

Srividhyamohan said...

Inji and lemon kooda romba nalladhu nu keLvi pattirukkiren.

மகேந்திரன் said...

கொலஸ்ட்ரால் பற்றிய தெளிவான கட்டுரை
நண்பரே.
தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றியும்
கூறி இருப்பது மிகவும் பயனுள்ளது.

Sankar Gurusamy said...

கொலஸ்ட்ரால் பற்றிய சிறப்பான விழிப்புணர்வு பதிவு. அது அதிகமானால் அல்லது நார்மலாக இல்லாத நிலையில் ஏற்படும் சில அறிகுறிகள் பற்றியும் விளக்கினால் நலம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

கூடல் பாலா said...

வணக்கம் அண்ணாச்சி...நீண்ட இடை வெளிக்குப் பிறகு வந்திருக்கீங்க ...நல்ல மருத்துவ- விழிப்புணர்வு பதிவு !

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பதிவு ! பாராட்டுக்கள் ! நன்றி நண்பரே !

சசிகுமார் said...

நன்றி......

சென்னை பித்தன் said...

உங்களுக்கு versatile blogger விருது வழங்குவதில் நான் பெருமை கொள்கிறேன்.பாருங்கள் என் இன்றைய பதிவு

Unknown said...

உடல் நலம் காக்கும் நல்லபதிவு
பூண்டை உணவோடு அதிகமாகச்
சேர்த்துக் கொண்டால் போதாத
பச்சையாக பாலொடு சாப்பிட
வேண்டுமா..? விளக்கவும்
புலவர் சா இராமாநுசம்