Thursday, September 19, 2013

பெண்ணுக்குத் தோல்வியென்றால் என்ன நடக்கும்?



பதிவைப்படித்த பின்பு ஒருவர் தொடர்பு கொண்டிருக்கிறார்.பெண்களுக்குக் காதல் தோல்வியென்றால் பிரச்சினை இல்லை.உடனே யாரையாவது பிடித்துவிடுகிறார்கள்.தற்கொலையெல்லாம் செய்து கொள்ளமாட்டார்கள்.இது என்னுடைய அனுபவம். என்று குறிப்பிட்டிருக்கிறார்.மேலும் அவர் விளக்கம் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.ஒருவேளை மீண்டும் அவர் முயற்சி செய்து வெற்றிக்காதலாக மாற்றியுமிருக்கலாம்.


காதல் தோல்வியில் உணர்ச்சிப்பூர்வமான பாதிப்புகள் இருவருக்கும் இருக்கிறது.ஆனால் எதிர்கொள்ளும் விதம் இருவருக்கும் மாறுபடும்.காதல் தோல்வியென்பது பெண்ணுக்குக் குறைவுதான்.காதல் தோல்வியால் திருமணத்தை மறுத்து வாழும் பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன்.உண்மையில் ஆண் இன்னொரு காதலை உருவாக்குவது கொஞ்சம் கஷ்டம். பெண் உடனே இன்னொரு ஆணுடன் பழகுவது சாத்தியம்தான்.அதை உறுதியாக காதல் என்று சொல்லிவிடமுடியாது.

இன்னமும் நம் சமூகத்தில் அழகு ஒரு முக்கியமான விஷயம்.தோழிகளிடம் தன்னுடைய இமேஜ் குறையும்.சிலர் கேலியாகப் பார்க்கக்கூடும்.இன்னொரு ஆணுடன் நெருக்கமாக்க் காட்டிக்கொள்வதன் மூலம் பொறாமையை தூண்டலாம் என்பதும் ஒரு காரணம்.தான் ஒரு ஆணால் விரும்பப்படுகிறோம் என்ற எண்ணமே பெரும் ஆறுதலாகவும் இருக்கும்.இன்னும் காதலனுக்கு ஆகாதவனாக இருந்தால் சிறப்பு.

காதலன் சரியாக கவனிக்காத நிலையில் கூட இப்படி நடந்துகொள்வதுண்டு.அப்புறம் ஆண் அடித்துக்கொண்டு ஓடுவான்.பொறாமையால் உந்தப்பட்டு காதலை உறுதிப்படுத்துவான்.இம்மாதிரியான விஷயங்கள் கல்யாணத்துக்குப் பின்னர் பிரச்சினை ஆகிப்போனதும் உண்டு.இருவருக்கும் ஏதாவது பிரச்சினை என்றால் மனைவி அவனுக்கு போன் செய்து பேச ஆரம்பிப்பார்.அடிக்கடி தொடர்ந்து பிரச்சினையாக உருவெடுப்பதும் நடக்கும்.

நண்பர்களையே எதிரியாக்கவும் பெண்ணால் முடியும்.எதிரியாக இருப்பவர்களை நெருக்கமாக்கிக் கொள்ளலாம்.தோற்றுப்போகும் சூழ்நிலை வரும்போது அல்லது தோல்விக்குப்பிறகு இது நடக்கலாம்.மனதின் தற்காப்பு பற்றி முந்தைய பதிவொன்றில் சொல்லியிருந்தேன்.அவனுக்கு ஆகாதவனுடன் பழகுவதால்தான் தன்னைப்பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொள்ளலாம்.உடனிருப்பவர்களை நம்பவைத்து தனது சுயமதிப்பை அதிகரித்துக்கொள்ள இது ஒரு வழி.


அதிகாரி ஒருவர் அந்தப்பெண்ணிடம் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்.அவர் காதல் பற்றி எதுவும் பேசவில்லை.ஆனால் தோழிகளிடம் அது காதல்தான் என்று சொல்லிக்கொண்டார்.வேறு என்னத்துக்கு அடிக்கடி வந்து பேசவேண்டும்? ஆனால் காலங்கள் கழிந்த பிறகும் அவர் எதுவும் சொல்லவில்லை.அலுவலகத்தில் ஒருவருடன் சிரித்துசிரித்து பேச ஆரம்பித்தார். அவர் அடிக்கடி சரியாக பணிபுரியாமல் அதிகாரியால் நடவடிக்கை எடுக்கப்பட்டவர்.

அதிகாரி அவரை பாராட்டுவது எப்போதும் சாத்தியமில்லை.அவரைத்திட்டும்போது அந்தப்பெண் தனக்குள் சிரித்துக்கொள்வார்.அவரது தோழிகளில் சிலரும்தான்.உண்மையில்லாவிட்டாலும் தன்னுடன் பழகுவதால்தான் அதிகாரி திட்டுகிறார் என்று சொல்லிக்கொள்வார்.ஆமாம், மனம் அதிக துயரத்தால் பாதிப்புக்குள்ளாகும் சமயங்களில் தன்னிச்சையாக எண்ணங்களை உருவாக்குகிறது.
-

3 comments:

நிலாமகள் said...

இன்னும் காதலனுக்கு ஆகாதவனாக இருந்தால் சிறப்பு.//

மனதின் விந்தைதான் என்ன!

Anonymous said...

ஆணோ, பெண்ணோ, உறவுகளை வரையறை செய்வது மிகவும் கடினம். ஒவ்வொரு மனிதனும் பல பண்பியல்புகளையும், பல்வேறு குணக் கூறுகளையும் கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு சந்தர்ப்பமும், சூழலும், சிந்தனை வடிவமும் ஒவ்வொரு மனித உறவுகளைத் தீர்மானிக்கின்றன. பொது புத்தியில் ஆணோ, பெண்ணோ அப்படித் தான் என ஒரு முடிவுக்கு வருவது சாத்தியமே இல்லை. அதை உணர்ந்தாலே போதும்.

shanmugavel said...

//நிலாமகள் said...

இன்னும் காதலனுக்கு ஆகாதவனாக இருந்தால் சிறப்பு.//

மனதின் விந்தைதான் என்ன!//
ஆமாம்,அவனால் எளிதில் பின் தொடர(follow) முடியாது.நன்றி