Showing posts with label adultery. Show all posts
Showing posts with label adultery. Show all posts

Monday, June 10, 2013

கள்ளக்காதல் பாலியல் குற்றங்களைத் தூண்டுகிறதா?



தில்லியில் நடந்த வன்புணர்ச்சியின் அதிர்ச்சி அலை இன்னும் ஓய்ந்தபாடில்லை.சமீபகாலமாக செய்திகளில் கவனம் கொண்டிருப்பவர்கள் இவற்றை அறிந்திருக்க முடியும்.பாலியல் குற்றங்களும் கள்ளக்காதலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.கொலைக்கான காரணங்களில் முதலிடம் வகிக்கும் அளவுக்கு கள்ளக்காதல் பெருகியிருக்கிறது.கள்ளக்காதலுக்கான காரணங்களைத்தாண்டி அதன் தாக்கத்தை கவனித்து வந்திருக்கிறேன்.

                               கள்ளக்காதல் போன்றதொரு நிகழ்வை உற்று நோக்கும் வாய்ப்பு கிட்டியது.அலுவலகம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள்.இருவரும் மணமாகி குழந்தைகள் இருந்தார்கள்.வேலையைக்காரணம் காட்டி மற்றவர்கள் வருவதற்கு முன்பே அலுவலகத்தில் இருந்தார்கள்.வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.வேலை நேரத்தை தாண்டியும் வெளியேறாமல் கிடந்தார்கள்.நிகழ்ச்சிகளில் புகைப்பட்த்துக்கு ஒன்றாக நின்று கொண்டார்கள்.பல நாட்களில் மதிய உணவு பெண் வீட்டிலிருந்து அவனுக்கு எடுத்துவருவார்.

                                அந்த ஆண் மனநலம் பெற்றவன் என்று சொல்லமுடியாது.அருவருப்பான குணங்களும்,கீழ்த்தரமான செயல்களும் அவனிடம் மிகுந்திருந்தன.கள்ளக்காதலில் அவனுக்கு அனுபவம் எதுவுமில்லை.அதிக உணர்ச்சிவசப்பட்டு சுற்ற ஆரம்பித்தான்.அந்தப்பெண்ணின் நோக்கம் இவனில்லை என்பது வேறு விஷயம்.ஆனால் உடனிருப்பவர்கள் அவர்கள் காதலிப்பதாக பேச ஆரம்பித்தார்கள்.மொத்த ஆண்களும் இறுக்கமாகிக் கிடந்தார்கள்.சிரிக்க மறந்து விட்டார்கள்.இந்தச் செய்தியை உணர்ச்சிப்பெருக்கோடு மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் இறுக்கத்தை தணித்துக்கொண்டார்கள்.அவர்களிடம் என்ன உணர்வை இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தியிருக்கும் என்பதை நம்மால் உணரமுடியும்.

                                  சோவியத் யூனியனில் இருந்து வெளியிடப்பட்ட கல்வி உளவியல் புத்தகம் ஒன்றில் படித்த விஷயம் இது. கல்லூரிகளில் ஒரு வகுப்பில் பெரும்பாலானவர்கள் காதலில் இருப்பவர்களாக இருக்கலாம்.இன்னொரு வகுப்பில் யாரும் காதலிக்காமல் இருக்கலாம்.தொற்றிக்கொள்ளும் விஷயம் இது.காதலை விடவும் கள்ளக்காதல் சிக்கலான பிரச்சினையை தோற்றுவிக்கிறது.சுயமதிப்பை உடைத்து அங்கீகாரத்தை வேண்டும் தீவிர உணர்வை வேண்டுகிறது.இருவரைப்பற்றிய கற்பனைகள் மன இறுக்கத்தையும் தொடர்ந்து பாலுணர்வையும் தூண்டக்கூடும்.இணையத்தின் பாலியல் படங்களைவிடவும் இது போன்ற நிகழ்வுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

                                    ஒரு வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய சண்டை.மனைவிக்கு அடி விழுந்து காயம் ஆகிவிட்ட்து.மனைவி திருப்பி கணவனை அடிக்கவில்லை.மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குவந்த மகனை ஓங்கி அறைந்தார்.கணவன் மீதான ஆத்திரத்தை குழந்தையை அடித்து தீர்த்துக்கொண்டார்.மனத்தில் ஏற்படும் தீவிர உணர்வை ஏதோவொரு இட்த்தில் இறக்கிவைத்துத்தான் ஆகவேண்டும்.வெளிப்ப்டையான கள்ளக்காதல் போன்ற நிகழ்வுகளால் தூண்டப்பட்டு பாலியல் குற்றவாளியாக மாறுவது சாத்தியம்தான்.மேற்குறிப்பிட்ட அலுவலகத்தில் இன்னொரு பணியாளர் மீது குற்றம் சாட்டினார்கள்.பெண் வாடிக்கையாளர்களிடம் தவறாக நடந்து கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள்.இது அலுவலகத்தில் ஏற்படுத்திய கள்ளக்காதல் நிகழ்வின் தாக்கமாக இருக்கமுடியும்.

                               ஒரு கிராமத்திற்கு ஓரிருவர் இப்படி இருப்பது சாத்தியம்தான்.மேலும் கள்ளக்காதல் எப்போதும் ரகசியமான ஒன்றல்ல! சுட்டியை அழுத்தி படிக்கவும்: கள்ளக்காதல் வெளியேவருவது எப்படி?.பெண் போகப்பொருளாக மட்டுமே கருதும் சமூகத்தில் மணம் தாண்டிய உறவுகள் ஆணிடம் மிக மோசமான பிம்பத்தை ஏற்படுத்துகிறது.அதிக ஆண்கள் பெண்ணின் மீது ஆத்திரத்தைக் கொண்டிருக்கிறார்கள்.சில நடிகர்கள் பெண்களை மோசமாக விமர்சிக்கும்போது திரையரங்கில் பலத்த கரவொலியை நீங்கள் கேட்க முடியும்.ஒரு பெண்ணின் மீதான ஆத்திரம் இன்னொரு பெண்ணின் மீது திரும்பும் சாத்தியம் உண்டு.

-

Saturday, April 16, 2011

சிரிப்பாய் சிரிக்கும் கள்ளக்காதல்கள்.


பெரும்பாலானோருக்கு தெரிந்தே நடக்கும் ஒரு விஷயம்தான்.தெர்ந்த இடங்களில்,பக்கத்து தெருவில் பணியிடங்களில்,பயிற்சி முகாம்களில் மணம் மீறிய உறவு ஏற்பட்டு வளர்வதை பார்த்திருப்போம்.இளம் வயது காதலர்கள் போலவே துடிப்புடன் காதல் செய்வார்கள்.

                                                                              கடைக்குச் சென்று கடலை மிட்டாய் வாங்கி வருவதிலிருந்து பேருந்தில் இடம் பிடித்து தருவது வரை ஆண்மகன் தீயாய் உதவி செய்து கொண்டிருப்பான்.வேறு ஆண்களுடன் அப்பெண் பேசிவிட்டால் மொத்த மனமும் கெட்டுப்போய் இரவு அவன் தூங்குவது கஷ்டமாகிவிடும்.

                              அது ஒன்றும் ரகசியம் கிடையாது.குற்றவாளி ஏதாவது ஒரு தடயத்தை விட்டு வைப்பான் என்று கோட்பாடு இருக்கிறது.கள்ளக்காதல்களில் நிறைய பேருக்கு அவர்கள் ரொம்ப நெருக்கம் என்று பலர் கருத ஆரம்பித்த பிறகுதான் அவர்களுக்குள் காதலே முழுமையடையும்.

                               சுற்றி இருக்கும் மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்ற கூச்ச நாச்சமெல்லாம் அவர்களுக்கு இருப்பதில்லை.அநேகமாக நம்மை வேடிக்கை பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் தெரிந்திருக்க மாட்டார்கள்.காதலில் ஆழ்ந்த ஈடுபாட்டோடு இருப்பதால் சுற்றி உள்ளவர்களை கவனிக்க தோன்றுவதில்லை.

                                  உடனடியாக இதை தெரிந்துகொள்வது காதல் நாயகியின் உடனிருக்கும் தோழிகள்தான்.புன் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துவிட்டு மற்ற பெண்களுக்கு,ஆண்களுக்கும் போட்டுக் கொடுப்பவர்கள் இவர்கள்தான்.ஒரு குழுவை சேர்த்துக் கொண்டு அவர்களை கமெண்ட் செய்துகொண்டு ஜாலியாக இருப்பார்கள்.

                                  நான் ஒரு பெண்ணைக் கேட்டேன்,நீங்கள் கொஞ்சம் புத்தி சொல்லக்கூடாதா? என்னை அப்பாவி போல பார்த்தார்.சொல்ல்லாம்தான் ஆனால் அதற்குப் பிறகு என் முன்னால் மட்டும் உஷாராக நடந்து கொள்வார்கள்.என்னை பார்க்கும்போது அவளுக்கும் ஒரு மாதிரி இருக்கும்.

                                  மூன்று குழந்தைகள் உள்ள ஒரு பெண் எழுதிய கடிதம் ஒன்றை எனக்கு காட்டினார்கள்.எப்படியோ எடுத்திருக்கிறார்கள்.அதில் இருந்த வாசகம் என் மனதை கவர்ந்துவிட்ட்து.எனக்கு உங்களைத் தவிர வேறு எண்ணமில்லை.குழந்தைகள் நினைவுகூட வருவதில்லை.

                                  மனிதர்கள் முழுமையான விலங்காக மாறி விடுவதை இப்படிப்பட்ட காதல்களில்தான் பார்க்க முடியும்.உணர்ச்சி தவிர எந்த சிந்தனையும் அவர்களிடம் பார்க்கமுடியாது.காதல்,காம்ம் மட்டுமல்ல! ஆத்திரம்,கோபம்,பொறாமை போன்ற உணர்ச்சிகளும் அவர்களுக்கு அதிகம்.அதனால் கொலைகளும்,தற்கொலைகளும் மலிந்து போகின்றன.குடும்பங்கள் சிதறிப் போகின்றன.சுற்றி உள்ளவர்கள் யாராவது கொஞ்சம் யோசிக்கவைத்தாலே சிலரை பிரச்சினைகளில் இருந்து வெளியே கொண்டு வந்து விடலாம்.
-

Friday, December 24, 2010

கள்ளக்காதல் இயற்கையானதா?


குற்றமாக தண்டனைக்குரியதாக கருதப்பட்ட சில செயல்கள் தற்போது இயல்பானதென்று புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.தனி மனித உரிமைகளாக விவாதிக்கப்பட்டு மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ள சமூகம் தயாராகிவிட்டது.எளிய உதாரணம்.-ஓரினச்சேர்க்கை.இதே போல பாலியல் தொடர்பான இன்னொரு பொருள் கள்ளக்காதல்.

சட்டப்பூர்வ திருமண உறவை தாண்டி ஆணோ,பெண்ணோ வேறொரு நபருடன் காதலில் ஈடுபடுவதை கள்ளக்காதல் என்கிறோம்.காமமே இதன் அடிப்படையாக கருதப்படுகிறது "கணவனுக்கு அல்லது மனைவிக்கு போதுமான பாலியல் திறன்கள் இல்லை என்று கருதுவோர் இருக்கிறார்கள்.நாட்டுப்புற நம்பிக்கைகளில் ஒன்றாக இவை இருந்தது.

வாத்ஸ்யாயனார் காம சூத்திரத்தில் கள்ளக்காதலை குறித்துள்ளார்.அவரது காலத்தை கவனியுங்கள்.வேலி தாண்டுவது காலந்தோறும் தொடர்ந்து வருவதை நாம் உணர முடியும்.தம்பதியர் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பும்,குழந்தைகள் மீது மிகுந்த பாசமுடையவர்கள் தவிர மற்றவர்கள் கள்ளக்காதலில் விழுபவர்கள்தான் என்கிறார்.மதிக்கப்படாத நிலை,சூழல் போன்றவற்றை முக்கிய காரணமாக கூறுகிறார்.

பரிணாமக்கொள்கையும் ,பிராய்டிசமும் உலகை மாற்றின.தற்போது கள்ளக்காதலுக்கு மரபணுக்களை காரணமாக கருதுவோர் இருக்கிறார்கள்.மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தவன்.ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது முன்னோர்களுக்கு ஏது?விலங்குகளுக்கு குடும்பம்,அவமானம்,கௌரவம் என்று ஏதேனும் உண்டா?மனிதன் கால்களால் நிமிர்ந்து நடந்து சிந்திக்க ஆரம்பித்து என்னென்னவோ கொண்டு வந்தான்.

ஒருவருக்கு மேற்பட்ட காதல் உணர்ச்சிகள் மரபணுக்கள் மூலம் பெறப்பட்டாலும் மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தாது.ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.சுய இன்பம்,ஓரினச்சேர்க்கை உள்பட மற்ற வக்கிரங்கள் விலங்குகளிடம் உண்டா என்று யாரும் கேட்கவேண்டாம்.ஒரு குறிப்பிட்ட நோய்க்கான மரபணுக்கள் எல்லோருக்கும் இருப்பதில்லை.கள்ளக்காதல் இன்னும் விலங்கு நிலையிலேயே இருப்பவர்களால் நிகழ்த்தப்படுவது என்றும் கொள்ளலாம்.

26.12.2010 அன்றுநடைபெற உள்ள ஈரோடு பதிவர் சங்கமம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்.பெரியார் மண்ணிலிருந்து நாம் சமூக மேம்பாட்டுக்கான கருவியைப் பெறுவோம். -

Friday, November 19, 2010

கள்ளக்காதல் வெளியே வருவது எப்படி?

கள்ளக்காதல் உள்ளூர் தினசரிகளின் அன்றாட செய்திகள்.ஒரு சமூகப்பிரச்சினையாக அணுகுவதை விட்டுவிட்டு பரபரப்பு செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டு மறந்து விடுகிறோம்.உறவுகளிலும்,குடும்பங்களிலும் விஷக்கிருமியைப்போல ஊடுருவி கொலை,தற்கொலை,குடும்பசிதைவு,என கோரமுகம் காட்டும் ஒன்றை நாம் கவனிக்காதது போல் இருக்கும் மாயம் என்ன?இது ஒரு சமூகப்பிரச்சினையாக ஏன்ஆய்வு செய்யப்படவில்லை?படிக்கப்படவில்லை?

சமூகப்பிரச்சினை என்பதற்கு உள்ள வரையறைகள் கள்ளக்காதலுக்கு பொருந்தும்.மரபு சார்ந்து நாம் காதல்,பாலியல் தொடர்பான விஷயங்களை திரும்பிப்பார்க்காமல் ஓரக்கண்ணால் படபடப்புடன் பார்த்து வந்திருக்கிறோம்.குற்றங்களை ஆய்வு செய்கிறோம்.மதுப்பழக்கம்,புகைபிடித்தல்,வறுமை,என்று சமூகப்பிரச்சினைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.படிக்கப்படுகின்றன.கள்ளக்காதல் போன்றவற்றை அவ்வப்போது சில பத்திரிக்கைகள்ஆய்வுக்கு உட்படுத்துகின்றனவே தவிர வேறு யாரும் கவனிப்பதில்லை.

கள்ளக்காதல் சமூகத்தில் நோய்க்கூறாக சிந்திக்கப்ப்படும்போது,அனுமானங்களும்,அதையொட்டி ஆய்வுகளும் உருவாக வாய்ப்புள்ளது.ஆய்வுகள் மூலம் கண்டடையப்படும் உண்மைகள் பிரச்சினைகளை தீர்க்க உதவும்.பல குழந்தைகள் அனாதையாவது,கொலை,தற்கொலைஎன்று நீளும் குற்றச்செயல்களை ஓரளவாவது நம்மால் குறைக்கமுடியும்.முயற்சி இருந்தால் முடியாதது இருக்கிறதா என்ன?

நாம் இனி தலைப்புக்கு வருவோம்.நாளிதழ்களில்வந்தால் எல்லோருக்கும் தெரியும்.வேறு எப்படி?கள்ளக்காதல் ஒரு குற்றம்.ரகசியமானது,யாருக்கும் தெரியாமல் நடக்கவேண்டும்.ஆனால்,எல்லா குற்றச்செயல்களைப்போலவே தடயமும் இருக்கும்.நான் அறிந்தவரை உடனிருப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் இத்தகைய உறவுகள் மலர்வதில்லை.காதலை போலவே இது தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது.தோழிகளுக்கு தெரியாத கள்ளக்காதல் விதிவிலக்கு!

பலருடன் விவாதித்த வரையிலும்,பார்த்து,கேட்டு அறிந்தவகையிலும் கள்ளக்காதல்கள்,முடிவு செய்வதற்கு முன்னர் பெண்ணால் தனது தோழிகளிடம் பேசப்பட்டுவிடுகிறது.அவர்களது கருத்துக்களை அறிவதும்,அவரைப்பற்றி அறிவதும் இதன் நோக்கமாகும்.வெற்றிக்கு பிறகு ஆண் தனது நண்பர்களிடம் அறிவிப்பான்.ஆண் தனது வெற்றியாக கொண்டாடுவான்.பின்னர்,அப்பெண் தனது மரியாதையை இழக்க துவங்கி எதிர்கொள்ளும் சிக்கல்களை பெண்ணிய நோக்கில் பார்க்கவேண்டும். -