Showing posts with label aggregators. Show all posts
Showing posts with label aggregators. Show all posts

Saturday, October 1, 2011

தமிழில் பதிவர்கள் அதிகரிக்க காரணம் தமிழ்மணமா?

தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் சில விஷயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறது.வாழ்த்து சொல்லி வழி அனுப்புவோம்.தமிழில் புதிது புதிதாக நிறைய பதிவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.இதைப் பற்றி பதிவுலக நண்பர் ஒருவர் சாட்டில் சொன்னது, காரணம் தமிழ்மணம்தான் என்பது அவருடைய வாதமாக இருந்த்து.இது பற்றி பதிவர்கள் கருத்து சொல்ல்லாம்.அவரது கருத்து கீழே!
                                                                   மற்ற திரட்டிகளில் பிரபலமானால்தான் வாசகர்களைப் பெற முடியும்.தமிழ்மணத்தில் இணைத்துவிட்டாலே ஓரளவு வாசகர்கள் வருவார்கள்.பதிவர்களுக்கு ஒரு பதிவு எழுதினோம்,நான்கு பேராவது படித்தார்கள் என்ற நிலையே தொடர்ந்து எழுதும் எண்ணத்தை உருவாக்கும்.தொடர்ந்து பதிவுலகில் இருப்பதும்,அவரைப்பார்த்து நண்பர்கள் உள்ளே வருவதும்தான் அதிக பதிவர்களுக்கு காரணம்.
                              இந்த ரேங்க் சிஸ்டம் ஒருவரது தகுதியை சொல்லிவிடாது என்பதே நிஜம்.அதிகம் எழுதினால் கொஞ்சம் கூடும் அவ்வளவே.அப்படி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்,அதை பிளாக்கில் வைப்போம் என்று வைத்திருக்கிறேன்.இதனாலேயே சிலர் எழுதவில்லை என்று சொல்கிறார்கள்.இருபது இட்த்துக்குள் வந்தால்தான் மதிப்பார்கள் என்பது உண்மையல்ல!
                                ஜனநாயகம் என்று வந்து விட்டாலே அத்தனை பிரச்சினைகளும் வந்து விடுகிறது.அரசியலை சொல்கிறேன்.அவரவர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் போலீஸ்,விசாரணை இதெல்லாம் தேவைப்படாது என்பது நிஜம்.திரட்டிகள் பத்திரிகை ஆசிரியர் போல செயல்பட வேண்டுமா,வேண்டாமா என்பது நாம் நடந்து கொள்ளும் வித்த்தில் இருக்கிறது.எடிட் செய்யும் வேலையை திரட்டிகளுக்கு கொடுப்பது நல்லதாக தெரியவில்லை.
                              பதிவர்களுக்கு வெண்மை நிறத்தின் மேல் அப்படி என்ன மோகம் என்று தெரியவில்லை.மாறுகிற அத்தனை பேரும் உஜாலாவுக்கு(கொஞ்சம் பழைய உதாரணம்தான்) மாறிக்கொண்டிருக்கிறார்கள்.டெம்ப்ளேட்கள் வெள்ளையாகிக் கொண்டிருக்கின்றன.நான் ஆரம்பத்தில் பச்சை நிறம் (ராமராஜனை போற்றுவதற்காக ஹிஹி) வைத்திருந்தேன்.அப்புறம் வெகுகாலம் வாட்டர்மார்க் இருந்த்து.மாற்றலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
                               இக்பால் செல்வன் ஒரு நாள் கமெண்டில் சொல்லிவிட்டார்.இந்த டெம்ப்ளேட்டுக்கு மாறினேன்.என்ன ஆச்சர்யம் என் தளத்தின் time on site அதிகரித்த்தை அனுபவத்தில் பார்க்க முடிந்த்து.அதுசரி அப்புறம் எதுக்கு இத்தனை வகை டெம்ப்ளேட்கள்.எப்போதும் வெண்மை விரும்பத்தக்கதாக இருக்கிறது.வெள்ளை நிறத்தைப் பார்த்துதான் அரசியல்வாதிகளிடம் ஏமாந்து விடுகிறார்களா?
-

Friday, March 18, 2011

வலைப்பதிவுகளுக்கு எதிர்காலம் இருக்கிறதா?

“ ஒரு காலத்தில் அச்சுப்பத்திரிகைகள் மட்டுமே எழுத்துத் துறையில் கோலோச்சிக்கொண் டிருந்தன.எதையேனும் வாசிக்கவேண்டுமெனில் அச்சுப் பத்திரிகைகளையே சார்ந்து இருக்கவேண்டிய சூழல் நிலவியது.இணையம் வந்தபின் அந்த நிலை மாறியது.இணையப் பக்கங்கள் தகவல்களைப் பரிமாற்றும் தளங்களாக உருவெடுக்கத்துவங்கின.பத்திரிகைகளும்,அதன் ஆசிரியர்களும் தரும் செய்திகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை மாறியது.’’

                              மலையாள மனோரமா இவ்வாண்டு வெளியிட்டுள்ள இயர் புக்கில் சேவியர் என்பவரால் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் உள்ள வரிகள்தான் நீங்கள் மேலே படித்த்து.கோட்டயத்திலிருந்து மலையாள மனோரமா பத்திரிகை குழும்ம் 21 ஆண்டுகளாக நல்ல தமிழில் பொது அறிவு தகவல்களை தாங்கி வரும் புத்தகத்தை வெளியிட்டு வருகிறது.தமிழில் பெரும் வரவேற்பு பெற்றதும்கூட.விலை-110 ரூபாய்.


                              வலைப்பதிவுகள் தோற்றம்,தற்போதைய நிலை,திரட்டிகள்,வகைகள் உள்ளிட்ட ஆழமான அலசலை தகவல் யுகம் என்ற தலைப்பில் வலைப்பதிவுகள் கட்டுரை இடம் பெற்றிருக்கிறது.தேடு பொறிகள்,சமூக வலைத்தளங்கள் பற்றிய கட்டுரைகளும் சிறப்பானவை.போட்டித்தேர்வு எழுதுபவர்கள் அவசியம் படிக்க வேண்டியது.

                                வலைப்பதிவுகளுக்கு எதிர்காலம் இருக்கிறதா?இல்லையா? என்பதெல்லாம் அதில் இல்லை.முதல் பத்தியை நினைவூட்டுகிறேன்.பத்திரிகைகளுக்கு எழுதுவது பிரசுரம் ஆவதென்பது எளிதல்ல.நன்றாக இருப்பதாக நீங்கள் கருதினாலும்(காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு)அவை பிரசுரம் ஆகாமல் போகலாம்.எனக்கு பத்திரிகைகளுக்கு எழுதி பழக்கமில்லை.அதிசயமாக தினமலரில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரை பிரசுரமானது.இதுநாள்வரை அதுவே என்னுடைய முதலும்,கடைசியுமான பிரசுரம்.  

                                ஒவ்வொரு பத்திரிகைக்கும் தனித்தனி கொள்கைகள் இருக்கின்றன.அதனோடு ஒத்துப்போகவேண்டும்.பல பிரபலங்களும் தங்களுடைய படைப்புகள் வெட்டப்பட்ட்தற்கு(edit) வேதனைப்பட்டவர்கள் உண்டு.சொல்ல வந்த கருத்துக்களே அடிபட்டு தொடர்பில்லாமல் ஏதாவது வெளியே வரும்.இதற்கு மாற்றாக சுதந்திர ஊடகமாக பார்க்கப்படுவது வலைப்பதிவுகள்.தேவையானபோது நாமே மாற்றிக்கொள்ளலாம்.


                            முதல் பத்தியில் உள்ளது மனோரமா இயர் புக்கில் உள்ள கட்டுரையின் ஆரம்ப வரிகள்.அதில் உள்ள இறுதிப்பத்தியையும் தருகிறேன்.

                            “வலைப்பதிவுகள் இப்போதெல்லாம் அச்சுப் பத்திரிகைகளாலும்,எழுத்தாளர்களாலும்,விமர்சகர்களாலும் கவனமாய் பார்க்கப்படுகின்றன.வலைப்பதிவில் வரும் நல்ல படைப்புகள் அச்சுப்பத்திரிகைகளுக்கு தாவி விடுகின்றன.இதனால் அச்சுப் பத்திரிகைகளை சிலர் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலை மாறிவருகிறது.


                              சி.பி.பற்றிய பதிவின் பின்னூட்ட்த்தில் குறிப்பிட்ட்துதான்.கணினி விற்பனைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்குன்செல்லும்போது பார்க்கிறேன்.டேட்டா கார்டுகள் வேகமாக விற்றுத்தீர்கின்றன.வீட்டுக்குவீடு கம்ப்யூட்டர்கள் வந்துவிடும்.கணினி மூலம் வாசிப்பவர்கள்,தகவல் தேடுபவர்கள் அதிகம் இருப்பார்கள்.

                              வலைப்பதிவுகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பது என்னுடைய கணிப்பு. Copy,paste  சமாச்சாரமெல்லாம் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடும்.அரசியலோ,சினிமா விமர்சனமோ,நகைச்சுவையோ,கவிதையோ எதுவாயினும் சுயமான,தரமான எழுத்துக்களுக்கு நல்ல வாழ்வு இருக்கிறது.
-