Friday, March 18, 2011

வலைப்பதிவுகளுக்கு எதிர்காலம் இருக்கிறதா?

“ ஒரு காலத்தில் அச்சுப்பத்திரிகைகள் மட்டுமே எழுத்துத் துறையில் கோலோச்சிக்கொண் டிருந்தன.எதையேனும் வாசிக்கவேண்டுமெனில் அச்சுப் பத்திரிகைகளையே சார்ந்து இருக்கவேண்டிய சூழல் நிலவியது.இணையம் வந்தபின் அந்த நிலை மாறியது.இணையப் பக்கங்கள் தகவல்களைப் பரிமாற்றும் தளங்களாக உருவெடுக்கத்துவங்கின.பத்திரிகைகளும்,அதன் ஆசிரியர்களும் தரும் செய்திகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை மாறியது.’’

                              மலையாள மனோரமா இவ்வாண்டு வெளியிட்டுள்ள இயர் புக்கில் சேவியர் என்பவரால் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் உள்ள வரிகள்தான் நீங்கள் மேலே படித்த்து.கோட்டயத்திலிருந்து மலையாள மனோரமா பத்திரிகை குழும்ம் 21 ஆண்டுகளாக நல்ல தமிழில் பொது அறிவு தகவல்களை தாங்கி வரும் புத்தகத்தை வெளியிட்டு வருகிறது.தமிழில் பெரும் வரவேற்பு பெற்றதும்கூட.விலை-110 ரூபாய்.


                              வலைப்பதிவுகள் தோற்றம்,தற்போதைய நிலை,திரட்டிகள்,வகைகள் உள்ளிட்ட ஆழமான அலசலை தகவல் யுகம் என்ற தலைப்பில் வலைப்பதிவுகள் கட்டுரை இடம் பெற்றிருக்கிறது.தேடு பொறிகள்,சமூக வலைத்தளங்கள் பற்றிய கட்டுரைகளும் சிறப்பானவை.போட்டித்தேர்வு எழுதுபவர்கள் அவசியம் படிக்க வேண்டியது.

                                வலைப்பதிவுகளுக்கு எதிர்காலம் இருக்கிறதா?இல்லையா? என்பதெல்லாம் அதில் இல்லை.முதல் பத்தியை நினைவூட்டுகிறேன்.பத்திரிகைகளுக்கு எழுதுவது பிரசுரம் ஆவதென்பது எளிதல்ல.நன்றாக இருப்பதாக நீங்கள் கருதினாலும்(காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு)அவை பிரசுரம் ஆகாமல் போகலாம்.எனக்கு பத்திரிகைகளுக்கு எழுதி பழக்கமில்லை.அதிசயமாக தினமலரில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரை பிரசுரமானது.இதுநாள்வரை அதுவே என்னுடைய முதலும்,கடைசியுமான பிரசுரம்.  

                                ஒவ்வொரு பத்திரிகைக்கும் தனித்தனி கொள்கைகள் இருக்கின்றன.அதனோடு ஒத்துப்போகவேண்டும்.பல பிரபலங்களும் தங்களுடைய படைப்புகள் வெட்டப்பட்ட்தற்கு(edit) வேதனைப்பட்டவர்கள் உண்டு.சொல்ல வந்த கருத்துக்களே அடிபட்டு தொடர்பில்லாமல் ஏதாவது வெளியே வரும்.இதற்கு மாற்றாக சுதந்திர ஊடகமாக பார்க்கப்படுவது வலைப்பதிவுகள்.தேவையானபோது நாமே மாற்றிக்கொள்ளலாம்.


                            முதல் பத்தியில் உள்ளது மனோரமா இயர் புக்கில் உள்ள கட்டுரையின் ஆரம்ப வரிகள்.அதில் உள்ள இறுதிப்பத்தியையும் தருகிறேன்.

                            “வலைப்பதிவுகள் இப்போதெல்லாம் அச்சுப் பத்திரிகைகளாலும்,எழுத்தாளர்களாலும்,விமர்சகர்களாலும் கவனமாய் பார்க்கப்படுகின்றன.வலைப்பதிவில் வரும் நல்ல படைப்புகள் அச்சுப்பத்திரிகைகளுக்கு தாவி விடுகின்றன.இதனால் அச்சுப் பத்திரிகைகளை சிலர் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலை மாறிவருகிறது.


                              சி.பி.பற்றிய பதிவின் பின்னூட்ட்த்தில் குறிப்பிட்ட்துதான்.கணினி விற்பனைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்குன்செல்லும்போது பார்க்கிறேன்.டேட்டா கார்டுகள் வேகமாக விற்றுத்தீர்கின்றன.வீட்டுக்குவீடு கம்ப்யூட்டர்கள் வந்துவிடும்.கணினி மூலம் வாசிப்பவர்கள்,தகவல் தேடுபவர்கள் அதிகம் இருப்பார்கள்.

                              வலைப்பதிவுகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பது என்னுடைய கணிப்பு. Copy,paste  சமாச்சாரமெல்லாம் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடும்.அரசியலோ,சினிமா விமர்சனமோ,நகைச்சுவையோ,கவிதையோ எதுவாயினும் சுயமான,தரமான எழுத்துக்களுக்கு நல்ல வாழ்வு இருக்கிறது.
-

30 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நல்ல பதிவுகள் நிற்கும்.
நன்றி.

jothi said...

ந‌ல்ல‌ ப‌கிர்வு,..

ஒரு கால‌த்தில் நானும் க‌லெக்ட‌ர் ஆக‌ணும்னு ம‌னோர‌மா புக்கை வாங்கி வ‌ந்து வ‌ரிக்கு வ‌ரி ப‌டித்த‌துண்டு. நிறைய‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ள் கொட்டிக்கிட‌க்கின்ற‌ன‌. க‌ண்டிப்பாக‌ ஒவ்வொரு வீட்டிலும் இருக்க‌ வேண்டிய‌ அறிவுப்பெட்ட‌க‌ம் அது.
ம‌ற்ற‌ப‌டி 2008ல் இருந்து வ‌லைப்ப‌திவு ப‌டித்து வ‌ருகிறேன். 2009ல் இருந்த‌ முன்ன‌ணி ப‌திவ‌ர்க‌ள் 2009ல் இல்லை, 2009ல் இருந்த‌வ‌ர்க‌ள் 2010 ல் இல்லை. நேர‌மின்மையா, ப‌திவுல‌க‌ ச‌ண்டைக‌ளா, ப‌டைப்பாற்ற‌ல் குறைகிற‌தா இல்லை வ‌லைப்ப‌திவிற்கு அடுத்த க‌ட்ட‌ம் என்று ஒன்று உள்ள‌தா?? தெரிய‌லையே,..

shanmugavel said...

jothi said...

சலிப்பு தட்டிவிடுவதுதான் காரணம்.இதனால் என்ன பயன்?நம்முடைய பெயர் வந்து கொண்டே இருந்தால் சந்தோஷமாக இருக்கும்.சரியாக போகாவிட்டால் வெறுப்பாக இருக்கும்.எதற்காக எழுதுகிறோம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.சில பரபரப்பான பதிவுகளுக்கு ஆயுள் குறைவு.வாசகர்கள் யார் என்பது பற்றிய தெளிவு வேண்டும்.சிலர் புத்தகங்களை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்கிப்படிக்கிறார்கள்.ஏன்? சிலருக்கு அது வீண்வேலை.எதற்காக புத்தகம் படிக்க வேண்டும்.அந்த நேரத்தில் ஏதாவது வேலை செய்தால் சம்பாதிக்கலாம்.ஆனாலும் படிப்பவர்கள் இருக்கிறார்கள்.பணத்தை செலவு செய்து ஒரு நாவலை படித்து என்ன சம்பாதிக்கிறார்கள்?அவர்களை படிக்கத்தூண்டுவது எது?எழுதுவதும் அப்படி இருக்க வேண்டும்.நல்ல வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் தொடர்ந்து இருப்பார்கள்.அரசியல் செய்பவர்கள் தாங்குவது கடினம்.அவர்களது நோக்கம் வேறு.நோக்கம் தெளிவாக இருந்தால் கமெண்டோ,ஓட்டோ ஒரு பொருட்டில்லை.தங்கள் கருத்துரைக்கு நன்றி.

மதுரை சரவணன் said...

உண்மைதானுங்க....வாழ்த்துக்கள்.

shanmugavel said...

Rathnavel said...

நல்ல பதிவு.
எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நல்ல பதிவுகள் நிற்கும்.
நன்றி.

தங்கள் கருத்துரைக்கு நன்றி

Anonymous said...

என்னதான் வலைப்பதிவுகள் வந்தாலும், எண்ணற்ற தகவல்கள் தந்தாலும்.. நான் இன்னமும் புத்தகங்களை வாங்கிப் படிக்கிறேன். என்ன ஒரே மாற்றம் நான் வாங்கிப் படிக்கும் பெரும்பாலான புத்த்கங்கள் மின்-நூல்கள் ... அவற்றின் மதிப்பு குறைந்துவிடவில்லை என்பது உண்மை ...

shanmugavel said...

@மதுரை சரவணன் said...

உண்மைதானுங்க....வாழ்த்துக்கள்.

நன்றி,சரவணன்.

shanmugavel said...

@இக்பால் செல்வன் said...

என்னதான் வலைப்பதிவுகள் வந்தாலும், எண்ணற்ற தகவல்கள் தந்தாலும்.. நான் இன்னமும் புத்தகங்களை வாங்கிப் படிக்கிறேன். என்ன ஒரே மாற்றம் நான் வாங்கிப் படிக்கும் பெரும்பாலான புத்த்கங்கள் மின்-நூல்கள் ... அவற்றின் மதிப்பு குறைந்துவிடவில்லை என்பது உண்மை ...

அச்சுப்புத்தகங்களுக்கும் மதிப்பு குறையாது.இணையம் சுதந்திர ஊடகமாக அதிக அளவு வாசகர்களை உருவாக்கும்.நன்றி,இக்பால் செல்வன்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஆகா.. அருமையான கருத்துகள்...
வாழ்த்துக்கள்..

வசந்தா நடேசன் said...

நல்ல அலசல், வாழ்த்துக்கள்..

//2008ல் இருந்த‌ முன்ன‌ணி ப‌திவ‌ர்க‌ள் 2009ல் இல்லை, 2009ல் இருந்த‌வ‌ர்க‌ள் 2010 ல் இல்லை. நேர‌மின்மையா, ப‌திவுல‌க‌ ச‌ண்டைக‌ளா, ப‌டைப்பாற்ற‌ல் குறைகிற‌தா இல்லை வ‌லைப்ப‌திவிற்கு அடுத்த க‌ட்ட‌ம் என்று ஒன்று உள்ள‌தா?? // இது பற்றிய விவாதங்கள் தேவை.

பதிவுலகில் பாபு said...

நல்ல பகிர்வு.. கண்டிப்பாக வலைப்பதிவுகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு..

றமேஸ்-Ramesh said...

நல்லதொரு இடுகை. ஜோதிக்கு உங்கள் பின்னூட்டம் உண்மையே. தொடருங்கள் வாழ்த்துக்கள்.

ttpian said...

ஒப்பாரும் மிக்காரும் அல்லாத
உலக நவரச நாயகன்,

மோதல்வரு: கார்த்திக்க்க்கக் ...

நான்காவது அணி!
எவரும் எதிர்பார்க்காத தேர்தல் முடிவுகள்!:
எல்லா தொகுதிகளிலும் வென்று நவரசம் ஆட்சி அமைத்ததை காணச் சகிக்காமல்
பச்சை புடவையும்,மஞ்சள் துண்டும் வனவாசம் போன பிறகு நவரச நாயகன்
மேக்கப் போடாத நடிகன் உலக முதல்வரு கார்த்திக்க்க்க்...
தினப்புருடா நிருபன்-(மன்னிக்கவும்- நிருபர்ர்ர்ர்) கவுண்டர் பெல்லுக்கு அளித்த முதல் செவ்வி
மக்களை கொள்ளை கொண்ட இந்த ஆட்சி மக்களுக்கு மட்டும் அல்ல நாய் ,குருவி நலன் பெற பாடுபடும்!,
நாய்கள் குட்டி போட ஒவ்வொரு கிராமத்திலும் பிரசவ ஆசுபத்திரி கட்டி (அதற்கு நடிகை .......பெயர் சூட்டி ) நாய்கள் பிரசவம் முடிந்து ஊட்டுக்கு திரும்பும் வரை நாய் சோப்பு முதல் நண்டு சூப்பு வரை அரசாங்கமே செலவு செய்யும்!
குருவிகள் இனிமேல் பறந்து திரிந்து குச்சி
பொறுக்கி கூடு கட்ட சிரமப்படவேண்டாம்!

அரசாங்க செலவில் பிளாஸ்டிக் குச்சிகள் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தருவதோடு, குருவிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்!
கடன் வழங்குவதில் முறைகேடு நடந்தால்....
நடிகை நமீதாவுடன் சேர்ந்து பெண்டு நிமிர்த்தி விடுவேன்!

shanmugavel said...

வாழ்த்துக்கு நன்றி கருன்.

shanmugavel said...

@வசந்தா நடேசன் said...

நல்ல அலசல், வாழ்த்துக்கள்..

//2008ல் இருந்த‌ முன்ன‌ணி ப‌திவ‌ர்க‌ள் 2009ல் இல்லை, 2009ல் இருந்த‌வ‌ர்க‌ள் 2010 ல் இல்லை. நேர‌மின்மையா, ப‌திவுல‌க‌ ச‌ண்டைக‌ளா, ப‌டைப்பாற்ற‌ல் குறைகிற‌தா இல்லை வ‌லைப்ப‌திவிற்கு அடுத்த க‌ட்ட‌ம் என்று ஒன்று உள்ள‌தா?? // இது பற்றிய விவாதங்கள் தேவை.

உண்மைதான் தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@பதிவுலகில் பாபு said...

நல்ல பகிர்வு.. கண்டிப்பாக வலைப்பதிவுகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு..

வருக,பாபு தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@றமேஸ்-Ramesh said...

நல்லதொரு இடுகை. ஜோதிக்கு உங்கள் பின்னூட்டம் உண்மையே. தொடருங்கள் வாழ்த்துக்கள்.

வருக,றமேஸ் தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@ttpian said...

???????????

jothi said...

அச்சுப்புத்த‌க‌ங்க‌ள் எண்ணிக்கை இன்று ந‌ன்கு விற்ப‌னையாகிற‌து என்ப‌து உண்மையாக‌ இருக்கலாம். ஜ‌ன‌வ‌ரியில் ந‌ட‌க்கும் புத்த‌க‌ திருவிழாவில் புத்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ள் லாப‌ம் ஈட்டியும் இருக்க‌லாம்.

ஆனால் 1980 1990 களில் இருந்த‌ ம‌க்க‌ள் தொகை, அந்த‌ ச‌மய‌த்தில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை அப்போது ந‌ட‌ந்த‌ நூல்க‌ளின் விற்ப‌னை இவ‌ற்றுட‌ன் இன்றைய‌ ம‌க்க‌ள் தொகை, ப‌டித்த‌வ‌ர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது இந்த‌ விற்ப‌னை மிக‌ குறைவுதான்.

என‌வே அச்சு நூல்க‌ளுக்கான‌ ம‌திப்பு உய‌ர‌வில்லை என்ப‌துதான் என் எண்ண‌ம்.

jothi said...

மேலும் குறைய‌ நிறைய‌ வாய்ப்பிருக்கு. எல்லாவ‌ற்றையும் க‌ண் முன்னே கொண்டு வ‌ரும் இணைய‌ம் இருக்கும் போது இத‌ன் பாதிப்பு அதிக‌மாக‌ வாய்ப்பிருக்கிற‌து.கார‌ண‌ம் இன்றைய‌ மிக‌ இளைய‌ த‌லைகுறை (10 வ‌ய‌திற்குள்) கணிப்பொறியில்தான் அவ‌ர்க‌ளை இழுக்கிற‌து. அவ‌ர்க‌ள் இளைஞ‌ர்க‌ளாக‌ வ‌ருகையில் இத‌ன் விளைவுக‌ள் க‌ண் முன்னே தெரியும்.

jothi said...

////2008ல் இருந்த‌ முன்ன‌ணி ப‌திவ‌ர்க‌ள் 2009ல் இல்லை, 2009ல் இருந்த‌வ‌ர்க‌ள் 2010 ல் இல்லை. நேர‌மின்மையா, ப‌திவுல‌க‌ ச‌ண்டைக‌ளா, ப‌டைப்பாற்ற‌ல் குறைகிற‌தா இல்லை வ‌லைப்ப‌திவிற்கு அடுத்த க‌ட்ட‌ம் என்று ஒன்று உள்ள‌தா?? // இது பற்றிய விவாதங்கள் தேவை.//


ஹிட்டாவ‌தில் முன்னிலையில் இருப்ப‌து ந‌கைச்சுவை ப‌திவுக‌ள்தான். வ‌லைப்பூவில் முழுக்க‌ ந‌கைச்சுவை ப‌திவாக‌ தொட‌ர்ந்து எழுதுவ‌து க‌டின‌ம். முக்கிய‌மாக‌ கால‌விர‌ய‌ம். ப‌திவுக‌ள் எழுதுவ‌தால் ம‌ட்டும் நீங்க‌ள் முன்னிலைக்கு வ‌ர‌ முடியாது. நீங்க‌ள் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் இடுகைக்கு ம‌திப்ப‌ளித்து பின்னூட்ட‌மிட‌ணும், ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ந‌மக்கு ஓட்டு போட‌ணும் நாம் அவ‌ருக்கு ஓட்டு போட‌ணும்,..இப்ப‌டி மிக‌ப் பெரிய்ய்ய‌ கால‌விழுங்கி. இதையெல்லாம் தாண்டி உங்க‌ள் ப‌திவு ஹிட்டாக‌ வேண்டும். பொதுவாக‌ ஒவ்வொரு வார‌மும் சுழ‌ற்சி முறையில் ப‌திவர்க‌ளின் ப‌திவுக‌ள் ஹிட்டாக‌ புதிதாக‌ சிர‌த்தை எடுத்து எழுதும் ப‌திவ‌ர்க‌ள் வெறுத்துதான் போகிறார்க‌ள். சில‌ர் வெறுத்து ஒதுங்குகிறார்க‌ள், சில‌ர் கூட்ட‌ணி அமைத்து
ஹிட்டாகி அடுத்த‌ க‌ட்ட‌த்திற்கு முன்னேறி க‌வ‌னிக்க‌ப்ப‌டுகிறார்க‌ள்.

ஹிட்டாகிற‌ ப‌திவ‌ர்க‌ள் த‌ன் நிலைப்பாட்டை வைத்திருக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம்.மேலும் ப‌திவுல‌க‌ சூழ்னிலையில் வார‌த்திற்கு 3,4 ப‌திவுக‌ள் போட்டால்தான் ஓர‌ள‌வு தாக்குபிடிக்க‌ முடிகிற‌து. தொட‌ர்ந்து எழுதுகிறார்க‌ள். ஒரு க‌ட்ட‌த்திற்கு பின் இவ்வ‌ள‌வு நேர‌ம் ந‌ம‌க்கு விர‌ய‌மாகிற‌தே, இத‌னால் ந‌ம‌க்கு என்ன‌ ப‌ல‌ன், என‌ சுதாரித்து ப‌திவுக‌ளை குறைத்துக் கொள்கிறார்க‌ள். பின் ஹிட்டிற்கு ஆசைப்ப‌டாம‌ல் (த‌ன் விருப்ப‌ப‌டி க‌விதையோ, க‌ட்டுரையோ) நேர‌ம் கிடைக்கும் போது எழுதுகிறார்க‌ள்.

இணைய‌ம் நிறைய‌ கால‌த்தை விழுங்குவ‌தாலும், குடும்ப‌ பொறுப்புக‌ளாலும் எழுத்துக்க‌ளை குறைக்க‌ ஆர‌ம்பிக்கிறார்க‌ள்.இது என் அனுமான‌ம்.

சாகம்பரி said...

நல்ல பதிவு. வலைப்பதிவுகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வரவேற்புண்டு. அலைபேசியின் உதவியுடன் இன்னும் பரவலாக பயன்படுத்தப்படும். இன்னும் முப்பது வருடம் கழித்து கூட டிஜிட்டல் அலையாக உலகை சுற்றி வலம் வரும் அழியா நம் எழுத்துக்கள். அதை மட்டும் நாம் பதிவெழுதும் போது நினைவில் வைத்துக் கொள்ளவேபடும்.

shanmugavel said...

@jothi said...

அச்சுப்புத்த‌க‌ங்க‌ள் எண்ணிக்கை இன்று ந‌ன்கு விற்ப‌னையாகிற‌து என்ப‌து உண்மையாக‌ இருக்கலாம். ஜ‌ன‌வ‌ரியில் ந‌ட‌க்கும் புத்த‌க‌ திருவிழாவில் புத்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ள் லாப‌ம் ஈட்டியும் இருக்க‌லாம்.

ஆனால் 1980 1990 களில் இருந்த‌ ம‌க்க‌ள் தொகை, அந்த‌ ச‌மய‌த்தில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை அப்போது ந‌ட‌ந்த‌ நூல்க‌ளின் விற்ப‌னை இவ‌ற்றுட‌ன் இன்றைய‌ ம‌க்க‌ள் தொகை, ப‌டித்த‌வ‌ர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது இந்த‌ விற்ப‌னை மிக‌ குறைவுதான்.

என‌வே அச்சு நூல்க‌ளுக்கான‌ ம‌திப்பு உய‌ர‌வில்லை என்ப‌துதான் என் எண்ண‌ம்.

படிப்பவர்கள் குறைவுதான்.ஏற்றுமதி நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள்

shanmugavel said...

@jothi said...

அவ‌ர்க‌ள் இளைஞ‌ர்க‌ளாக‌ வ‌ருகையில் இத‌ன் விளைவுக‌ள் க‌ண் முன்னே தெரியும்.

ஆமாம்.கணினியுடன் செலவிடுவது அதிகரிக்கும்.

shanmugavel said...

@jothi said...

ஹிட்டாவ‌தில் முன்னிலையில் இருப்ப‌து ந‌கைச்சுவை ப‌திவுக‌ள்தான். வ‌லைப்பூவில் முழுக்க‌ ந‌கைச்சுவை ப‌திவாக‌ தொட‌ர்ந்து எழுதுவ‌து க‌டின‌ம்.............

jothi, அதிகம் சிந்தித்திருக்கிறீர்கள்.நன்றி .நகைச்சுவையாக தொடர்ந்து எழுதுவது கடினம் என்று தோன்றவில்லை.நிறைய நேரம் மட்டுமல்ல.இன்டர்நெட்டுக்கான பணமும்தான்.என்னால் எனக்கு வழக்கமாக பின்னூட்டமிடுபவர்களுக்கு சென்று பார்ப்பதே சிரமமாக இருக்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

>>அரசியலோ,சினிமா விமர்சனமோ,நகைச்சுவையோ,கவிதையோ எதுவாயினும் சுயமான,தரமான எழுத்துக்களுக்கு நல்ல வாழ்வு இருக்கிறது.

உண்மை தான் நண்பா

சி.பி.செந்தில்குமார் said...

முன்பெல்லாம் சினிமா டைட்டிலில் நன்றி - பத்திரிக்கை நண்பர்கள், மீடியாக்கள் என போடுவார்கள் , இப்போது இணைய தள நண்பர்கள் என போடுகிறார்கள்.. இது ஒரு முன்னேற்றம்.. அப்புறம் சினிமா பட ரிசல்ட் முன்பெல்லாம் படம் ரிலீஸ் ஆகி 10 நாட்கள் கழித்து விகடனிலோ, குமுதத்திலோ வந்தால் தான் தெரியும்.. இப்போ கேபிள் சங்கரின் விமர்சனம் கோடம்பாக்க இயக்குநர்களால் கவனிக்கப்படுகிறது

shanmugavel said...

@சி.பி.செந்தில்குமார் said...

>>அரசியலோ,சினிமா விமர்சனமோ,நகைச்சுவையோ,கவிதையோ எதுவாயினும் சுயமான,தரமான எழுத்துக்களுக்கு நல்ல வாழ்வு இருக்கிறது.

உண்மை தான் நண்பா

நன்றி நண்பரே

shanmugavel said...

@சி.பி.செந்தில்குமார் said...

முன்பெல்லாம் சினிமா டைட்டிலில் நன்றி - பத்திரிக்கை நண்பர்கள், மீடியாக்கள் என போடுவார்கள் , இப்போது இணைய தள நண்பர்கள் என போடுகிறார்கள்.. இது ஒரு முன்னேற்றம்.. அப்புறம் சினிமா பட ரிசல்ட் முன்பெல்லாம் படம் ரிலீஸ் ஆகி 10 நாட்கள் கழித்து விகடனிலோ, குமுதத்திலோ வந்தால் தான் தெரியும்.. இப்போ கேபிள் சங்கரின் விமர்சனம் கோடம்பாக்க இயக்குநர்களால் கவனிக்கப்படுகிறது.

உண்மை.சி.பி. அது ஒரு நல்ல மாற்றம் .ப்ரிவியுக்கு அழைக்கிறார்கள்.

அம்பாளடியாள் said...

அரசியலோ,சினிமா விமர்சனமோ,நகைச்சுவையோ,கவிதையோ எதுவாயினும் சுயமான,தரமான எழுத்துக்களுக்கு நல்ல வாழ்வு இருக்கிறது.

வணக்கம் சகோதரரே.நல்ல நல்ல தகவல்களைத் தந்தவண்ணம் உள்ளீர்கள்.புதிய பதிவர்கள் எமக்கு
உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதொன்றாக உள்ளது.
மிக்க நன்றி பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.....