Saturday, March 12, 2011

சீச்சீ.......பதிவர்களுக்கு ஏனிந்த பொறாமை?
                                டீனேஜில் அதிகமாக இருக்கும் உணர்வுகளில் ஒன்று பொறாமை.அந்த வயதில் மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வதும் அவனை மாதிரி அழகில்லையே,பணம் இல்லையே என்று மனம் பொறாமை கொள்வதும் இயல்பு..அடுத்தவன் வளர்ச்சி கண்டு,தன்னால் முடியவில்லை என்ற  எண்ணத்திலும் தோன்றுவது.

                              பொறாமை மனிதனிடம் இயல்பாக காணப்படும் உணர்வுதான்.சில விலங்குகளுக்கும் உண்டு.குழ்ந்தை முதல் மனிதனிடம் இயல்பாக காணப்பட்டாலும் ஏற்கனவே கூறியது போல டீனேஜில் அதிகமாக இருக்கும்.எதிர்பாலினரை கவரும் எண்ணம் அதிகமிருப்பது ஒரு காரணம்.

                              நமக்கு பொதுவான பிரச்சினைகள் சில இருக்கின்றன.அந்த இளமைப் பருவத்தை தாண்டியும் நாம் முதிர்ச்சியடையவதில்லை என்று தோன்றுகிறது.நல்ல நண்பர் வட்டமோ,வாசிக்கும் பழக்கமோ,குடும்ப சூழலோ இல்லாமல் மனம் அந்த வயதை தாண்டி பக்குவம் வராமல் தனக்கும் தான் சார்ந்தவர்களுக்கும் கேடு விளைவித்துக் கொள்பவர்கள்தான் அதிகம்.

                              அவனுக்கு ஓட்டு போடாதே.கமெண்ட் போடாதே என்பதும்,ஒருவருக்கு எதிராக தவறான பிரச்சாரம் மேற்கொள்வதும் நம்மை முந்திவிடுவார்களோ என்ற பொறாமை உணர்வால் வருவதுதான்.கூந்தல் இருப்பவர்கள் அள்ளி முடிகிறார்கள்,உனக்கென்ன? ஒருநாளைக்கு இரண்டு,மூன்று பதிவு போட்டால் அது அவர்களுடைய உழைப்புதான்.அதற்கான பலனை பெறுகிறார்கள் அவ்வளவே!

                              திருவள்ளுவர் அழுக்காறாமை என்ற அதிகாரம் படைத்தார்.பாரதி மரணத்துக்கு காரணமான அதிர்ச்சி தரும் என்றார்.பொறாமை நன்மை தரும் என்று யாரும் சொல்லவில்லை.முதிர்ச்சியில்லாத்தால் வருவதுதான்.வளர விடாமல் தடுக்க முயற்சி செய்து பார்த்துவிட்டு வளர்ந்த பின்னால் நண்பேண்டாசொல்வதும் இயல்பானது.

                              சோதிடர்களிடம் கேட்டால் அதெல்லாம் பன்னிரெண்டு கட்ட்த்துக்குள் இருக்கிறது.யார் தலையெழுத்தையும் யாரும் மாற்ற முடியாது என்கிறார்கள்.சில கெடுதல்களின் வலிமையை குறைக்க பரிகாரம் இருக்கிறது.இன்னொருவன் அழிந்து போக பில்லி,சூன்யம் எல்லாம் உண்மையல்ல!

                             உடல்நலம் சார்ந்து பொறாமை உணர்வு அதிகமாக இருக்கும்போது வயிற்றில் அமில சுரப்பு அதிகரிக்கும்.பசி குறையும்.சரியாக சாப்பிட முடியாத்தால் நுண் ஊட்டச்சத்துக்கள் உடலில் சேராது.தூக்கமின்மை ஏற்படலாம்.இயக்குநீர்கள் சுரப்பு தாறுமாறாக இருக்கும்.பொறாமையில் மனிதனுக்கு நல்லது இல்லையா? இருக்கிறது.அடுத்தவனை போல நாமும் வளரவேண்டுமென்று தகுதியை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்தால்,உழைக்கத்துவங்கினால் நல்லது.

-

21 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அருமையான கருத்துக்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கமெண்ட் போடுபவர்களை கூட..இவனுக்கெல்லாம் கமெண்ட் போடாதே என மெயில் அனுப்புகிறார்களாம்

Anonymous said...

மிகவும் அருமையான, பொறுமையான ஒரு பெரியண்ணனின் அறிவுரைப் போல தங்களின் இந்த ஆலோசனையும், அறிவுரையும் இருக்கின்றது. மிக்க நன்றிகள் ! பதிவுலகில் பலருக்கும், ஏன் எனக்குமே இது தேவைப்படும். மிக்க நன்றிகள் !

வசந்தா நடேசன் said...

பதிவுலகில் பொறாமை இருக்கிறதா என்ன?? நான் பார்த்தவரை இல்லை!

shanmugavel said...

@ஆர்.கே.சதீஷ்குமார் said...
அருமையான கருத்துக்கள்


ஆம்.சதீஷ்குமார், வாழ்க்கைக்கும்.தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@ஆர்.கே.சதீஷ்குமார் said...
கமெண்ட் போடுபவர்களை கூட..இவனுக்கெல்லாம் கமெண்ட் போடாதே என மெயில் அனுப்புகிறார்களாம்

ஆம்.சதீஷ் குமார் அவர்கள் புரிந்து கொள்ளட்டும்

shanmugavel said...

@இக்பால் செல்வன் said...
மிகவும் அருமையான, பொறுமையான ஒரு பெரியண்ணனின் அறிவுரைப் போல தங்களின் இந்த ஆலோசனையும், அறிவுரையும் இருக்கின்றது. மிக்க நன்றிகள் ! பதிவுலகில் பலருக்கும், ஏன் எனக்குமே இது தேவைப்படும். மிக்க நன்றிகள் !

இக்பால் செல்வன் அறிவுரையெல்லாம் இல்லை .படித்ததையும்,கேட்டதையும் எழுதியிருக்கிறேன்.நன்றி

shanmugavel said...

@வசந்தா நடேசன் said...
பதிவுலகில் பொறாமை இருக்கிறதா என்ன?? நான் பார்த்தவரை இல்லை!

அடப்பாவமே ! போங்க சார்! உங்களுக்கு நன்றி

மனம் திறந்து... (மதி) said...

கடற்கரைக்குச் சென்று, சுத்தமான காற்றைச் சுவாசித்து வந்தது போல் ஒரு சுகமான அனுபவம்! அருமையான பகிர்வு!! பாராட்டுக்கள்!!! :)))

shanmugavel said...

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மதி.

தமிழ்வாசி - Prakash said...

நல்ல கருத்தை சொல்லியிருக்கிங்க....இப்படிப்பட்டவங்க அவங்களாவே திருந்தனும்.... நாம ஒன்னும் செய்ய முடியாது..


எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

THOPPITHOPPI said...

//கமெண்ட் போடுபவர்களை கூட..இவனுக்கெல்லாம் கமெண்ட் போடாதே என மெயில் அனுப்புகிறார்களாம் //

இது எனக்கும் தெரியும்.

THOPPITHOPPI said...

@ ஆர்.கே.சதீஷ்குமார்

//கமெண்ட் போடுபவர்களை கூட..இவனுக்கெல்லாம் கமெண்ட் போடாதே என மெயில் அனுப்புகிறார்களாம்//

"அனுப்புகிறார்களாம்" என்று சொல்வதற்கு பதில் "அனுப்பினார்கள்" என்று நீங்கள் இந்த இடத்தில் சொல்லி இருக்கணும். சரிதானே?

பாரத்... பாரதி... said...

உங்க கருத்தை முதிர்ச்சியோடு சொல்லியிருக்கிறீர்கள்..
தகுதியும், திறமையும் மட்டுமே நீண்ட காலம் நிற்கமுடியும் என்பது தான் உண்மை.

பாரத்... பாரதி... said...

உங்கள் வலைப்பூவின் தலைப்பிற்கு கீழ் உள்ள பாரதியின் வரிகள் மனதை ஈர்க்கின்றன..
(தலைப்பை ஆங்கிலத்தில் வைத்திருப்பது ஏனோ?)

jothi said...

//"அனுப்புகிறார்களாம்" என்று சொல்வதற்கு பதில் "அனுப்பினார்கள்" என்று நீங்கள் இந்த இடத்தில் சொல்லி இருக்கணும். சரிதானே//

என்ன‌ ந‌ட‌க்கிற‌தென்றே தெரிய‌வில்லை. ந‌ட‌ப்ப‌வை ந‌ல்ல‌வையாக‌வே இருக்க‌ட்டும்.

shanmugavel said...

மிக்க நன்றி,நண்பர்களே!
@பிரகாஷ்

புரிந்து கொண்டு தங்களை மாற்றிக்கொள்வதற்காகவே எழுதியிருக்கிறேன்.

@THOPPITHOPPI
மெயில் அனுப்புவதும் தவறுதான்.நன்றி
@பாரத்... பாரதி... said...

ஆம்.பாரத்..பாரதி.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.துவக்கத்தில் தமிழ் எழுதி பற்றி தெரியாமல் வைத்த பெயரது.விரைவில் பாரதிக்கு பிடித்த பெயராக மாறும்.
@jothi said...

எனக்கு மட்டும் என்ன தெரியும்.ஹி..ஹி..

Arun Ambie said...

அருமையான கருத்துக்கள். அறவுரை போன்ற அறிவுரை.வாழ்க...

சி.பி.செந்தில்குமார் said...

>>> அவனுக்கு ஓட்டு போடாதே.கமெண்ட் போடாதே என்பதும்,ஒருவருக்கு எதிராக தவறான பிரச்சாரம் மேற்கொள்வதும் நம்மை முந்திவிடுவார்களோ என்ற பொறாமை உணர்வால் வருவதுதான்.

ஆஹா.. துணிச்சலான கருத்து

shanmugavel said...

மிக்க நன்றி அருண் அம்பி

shanmugavel said...

வாங்க சி.பி.சார்.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.