தொடரின்
தாம்பத்யத்தில் நாட்டமில்லாத நிலை,சில காரணங்களுக்காக பாலியல் ஆர்வம் தடுக்கப்பட்டு மணவாழ்க்கையில் சிக்கல்,உடல் திறன் இருந்தும் ஈடுபாடில்லாமல் இருப்பதற்கான காரணங்களையும்,அதன் சில முகங்களையும்,எதிரொலிகளையும் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
Inhibited sexual desire என்று வரையறுக்கப்படும் தடுக்கப்பட்ட பாலியல் ஆர்வத்துக்கு தரப்படும் சிகிச்சை முறைகள் பெரும்பாலானவை மருந்துகள்,ஊசிகள் அல்ல.சென்ற பதிவில் குறிப்பிட்ட்துபோல உடல் சார்ந்த சில காரணங்களுக்கு மருந்துகள் தரப்படும்.
இம்மாதிரியான குறைபாடுகளுக்கு மனநல ஆலோசனைகள் மூலம் தீர்க்கப்படுகிறது.முதலில் யாருக்கு பிரச்சினை என்பது கண்டறிவார்கள்.சிக்கல் என்ன?எங்கே? என்பது தெரிந்துவிட்டால் அதை தீர்ப்பது எளிது.சில தம்பதிகளுக்கு உறவை இருவருக்குமுள்ள உறவை மேம்படுத்தும் வழிவகைகள் சொல்லித்தருவார்கள்.
திருமண ஆலோசனைகள் (counsellig)இருக்கின்றன.தம்பதிகளின் தகவல் தொடர்பு,ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது,கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இன்னொருவர் நடந்து கொள்ளும் விதம் போன்றவை கற்பிக்கப்படும்.
சிலரிடம் நேரடியாக பாலுறவு குறித்து விவாதிக்க வேண்டியிருக்கும்.சூழ்நிலை,அணுகும் விதம்,தூண்டல்கள்,முன் விளையாட்டுக்கள் பற்றி கற்பிக்க வேண்டியிருக்கும்.சிறப்பு மருத்துவர்கள் முன்னிலையில் செய்யப்படவேண்டிய விஷயம் இது.அரைகுறையாக எனக்கும் தெரியும் என்று ஆளாளுக்கு ஆலோசனை தருவது தவறு.
தம்பதிகளிடையே பாலுறவு வாழ்க்கை வாய்ந்த்து.அதில் பிரச்சினை இருந்தால் குடும்பம் நிலைப்பது சிரம்ம்.பாலியல் தொடர்பான பலவற்றை மூடிமறைப்பது நம் பண்பாட்டில் இருந்து வரும் ஒன்று.அது தவறானது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
கடந்த நான்கு பதிவுகளிலும் இப்போதும் பார்த்த பிரச்சினையை ஓரளவு நாமே தடுக்க முடியும்.தம்பதிகள் பாலுறவு நீங்கலாக ஒருவருக்கொருவர் நேசம் கொள்வதும்,நெருக்கமான உணர்வுகளை கொண்டிருப்பதும் அவற்றில் முக்கியமானவை.மனைவியை மனுஷியாக நட்த்தினாலே பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
இன்னும் சில இருக்கின்றன.அவற்றை தனித்தனியாக அவ்வப்போது பார்க்கலாம்.அடுத்த பதிவும் உங்களுக்கு சிலவற்றை சொல்லித்தரும்.மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment