Tuesday, March 22, 2011

பாலியல்,பெண் மற்றும் சமூகம்


                               தமிழ் செய்தித்தாள்களில் பலவற்றுக்கு முன்னோடி தினமணி.நான் முதன் முதலில் பணம் கொடுத்து வாங்கிப் படித்த செய்தித்தாளும் அதுதான்.தந்தி,தினமலர் தேநீர் கடைகளில் படிப்பேன்.இப்போது பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளுக்கு மாதிரி வினா-விடைகள் பெரும்பாலான தினசரிகளில் வெளிவருகின்றன.நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தினமணியில் மட்டுமே வரும்.

                               மாதிரி வினா-விடைகளுக்காக வாங்க ஆரம்பித்து பிறகு தினமணி என்னோடு ஒன்றிப்போனது.தலையங்கமும்,அதே பக்கத்தில் வெளியிடப்படும் கட்டுரைகளும் என்னை ஈர்த்த்து.படிப்பதை விடமுடியாமலும் ஆகிவிட்ட்து.சமூகம் சார்ந்த மதிப்பீடுகளை என்னிடம் உருவாக்கியதில் தினமணிக்கு முக்கிய பங்குண்டு.சமூகப் பிரச்சினைகள் பலவற்றை நான் பகிர்ந்து கொண்டேன்.


                                அடுத்த்தாக பெண்.எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.போதையில் கத்தியை தூக்கிக் கொண்டு துரத்தும் கணவனுக்கு பயந்து எங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்த பெண் எனக்கு சிறுவயதில் அதிர்ச்சியையும்,அவர் மீது பரிதாபத்தையும் ஏற்படுத்தினார்.தொடர்ந்து நான் எந்திரம் போல வாழும் பெண்களையே அதிகம் பார்த்தும்,சிந்தித்தும் வந்திருக்கிறேன்.


                               நகரத்தில் எங்கோ சிகரெட் பிடிக்கும் ஒரு பெண்ணை பார்த்துவிட்டு இதுதான் பெண் என்று நினைப்பது அறியாமை.எல்லாவற்றிலும் விதிவிலக்கு உள்ளது போலத்தான் இவை.தினமணியை முன்னோடி என்று சொன்னேன்.எனக்கு தெரிந்து மகளிர் தினத்துக்காக முதன் முதலில் மகளிர் மலர் வெளியிட்ட்தும் தினமணியே!தற்போது தனது தளத்தில் வலைப்பூக்களுக்கு இடம் ஒதுக்கியதயும் குறிப்பிடலாம்.


                                கள்ளக்காதல்,பாலியல் தொல்லை,மூடநம்பிக்கைகள் என்று பாலியல் பற்றிய பதிவுகளை எழுதி வந்திருக்கிறேன்.தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் ஏராளமான மனிதர்களை சந்தித்தேன்.பாலியல் தொழிலாளர்கள் உள்பட.முக்கியமான தனி மனித பிரச்சினைகள் பாலியல் தொடர்பானவையே என்று நம்புகிறேன்.இதைப் பற்றி விரிவாக வரும் காலங்களில் பேசலாம்.

                                நான் பகிர்ந்து கொண்டவற்றில் பெரும்பாலானவை பெண்,சமூகம்,பாலியல் பற்றியவை என்பதால் அதற்கான காரணங்களை குறிப்பிட்டேன்.சென்ற ஆகஸ்ட் மாத்த்தில் வாரத்திற்கு ஒரு பதிவு எழுதலாம் என்று ஆரம்பித்து இன்று நூறு பதிவுகள் ஆகி விட்ட்து.


                                முதல் பதிவு சோதனை பதிவு.பாரதியின் வரி,தலைப்பின் கீழே இருக்கிறது.தொடர்ந்து எழுதலாம் என்று நினைத்து எழுதிய முதல் பதிவும் பாரதியார் கவிதைகள் பற்றியது.கருத்துரை இட்டவர் கேபிள் சங்கர்.சுமார் ஒரு வாரம் கழித்தே கவனித்தேன் என்று நினைக்கிறேன்.ஏற்கனவே வேறொரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.இப்போதும் எனக்கு ஆச்சரியம்தான்.அவர் வேறெங்கும் கமெண்ட் போட்ட்தை நான் அதிகம் பார்த்த்தில்லை.இது ஒரு நல்ல உதாரணமும்கூட.புதியவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பது முக்கியமானது.அவருக்கு நன்றி தெரிவிக்க இது ஒரு வாய்ப்பு.

                               ஜோதிஜி, உண்மைத்தமிழன்,ரஹீம் கஸாலி ஆகிய பிரபலங்கள் நான் அவர்களுடைய தளத்துக்கு செல்லும் முன்னரே தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள்.அங்கிதவர்மாவின்(பாண்டிச்சேரி வலைப்பூ,இப்போது தமிழ்ச்சரம்) விருது,ஜோதிஜியிடமிருந்து எப்போதாவது வரும் மின்ன்ஞ்சல் போன்றவை உற்சாக டானிக்.

                                வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியவர் ரஹீம்கஸாலி.அதற்கு சில தின்ங்கள் முன்புதான் வலைச்சரம் பற்றியேதெரியும்.தமிழ்மணம் இருபதுக்குள் வந்த்தற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு மெயில் வந்த்து.அந்த வார இருபதில் பார்த்துதான் வலைச்சரம் சென்று ஃபாலோயராக சேர்ந்தேன்.இது என்னுடைய பதிவுலக ஞானத்திற்கு ஒரு உதாரணம்.


                                இண்ட்லி,தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டி ஆகிய திரட்டிகளுக்கு நன்றி என் பயணத்தில் பங்கு கொண்டமேற்குறிப்பிட்ட அனைவருக்கும் நன்றி.தங்களது கருத்துரையாலும்,வாக்குகளாலும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் இக்பால்செல்வன்,மதுரை சரவணன்,ரஹீம்கஸாலி,கருன்,தம்பி றஜீவன்,துளசி கோபால்,தமிழரசி,ஜனா,சாகம்பரி,சீனா அய்யா,சங்கர் குருசாமி,சி.பி,சதீஷ்குமார்,பாரத்..பாரதி,மனோ,ஜோதி(jothi) மற்றும் விடுபட்ட அனைவருக்கும்,பின் தொடர்பவர்களுக்கும்,வாசகர்களுக்கும் என்னுடைய உள்ளம் கனிந்த நன்றி.

                                எழுதிவைத்த்தை இரண்டு நாளில் வரிசையாக வெளியிட்டுவிட்டேன்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான்.வலைப்பதிவு துவக்கினேன்.இன்று நூறாவது பதிவு எழுதவேண்டுமென்பதற்காக தினம் இரண்டு பதிவு.தேர்தல் முடியும்வரை தினமும் எழுத முடியுமாவென்று தெரியவில்லை.இருந்தாலும் முயற்சி செய்வேன்.மீண்டும் அனைவருக்கும் நன்றி.

-

4 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்னது நூறாவது பதிவா சொல்லவே இல்ல! வாழ்த்துக்கள் அண்ணே:! நீங்கள் இன்னும் நிறைய நிறைய சாதிக்கணும் னு வாழ்த்தறேன்!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நல்ல அலசல்..

shanmugavel said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்னது நூறாவது பதிவா சொல்லவே இல்ல! வாழ்த்துக்கள் அண்ணே:! நீங்கள் இன்னும் நிறைய நிறைய சாதிக்கணும் னு வாழ்த்தறேன்!

நன்றி,தம்பி

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நல்ல அலசல்..

நன்றி,கருன்