Thursday, March 17, 2011

நகைச்சுவை பதிவுகள் நாட்டுக்குத்தேவையா?

                              சிட்டுக்குருவி லேகியம்-சில குறிப்புகள் பதிவின் தொடர்ச்சியாகவும் கொள்ளலாம்.வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கும் நேரங்களே உலகில் உண்மையாக வாழ்ந்த காலங்கள் என்றேன்.மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் நகைச்சுவை இல்லாமல் எப்படி?

                               ஆனந்த விகடன் தமிழர்களோடு ஒன்றிப்போனதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது அதன் நகைச்சுவை உணர்வுதான்.விகடனின் குறும்பும்,களிப்புமே என்னை பள்ளிப் பருவத்திலிருந்து வாசகனாக தொடர வைத்திருக்கிறது

                              நகைச்சுவை உணர்வுள்ள மனிதர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பதை பார்க்க முடியும்.சவால்களை எளிதில் வெற்றியாக மாற்றுவதில் வல்லவர்கள் அவர்கள்.சிரிப்பு எல்லாவிதமான அழுக்குகளையும் போக்கிவிடுகிறது.நெருக்கத்தை அதிகமாக்கி விடுகிறது.

                                சிரிப்பைத் துணையாக கொண்டவர்களுக்கு மனநோய்கள் நெருங்காது.இறுக்கத்தைப் போக்கி விடுவதால் மன அழுத்தம் போன்ற நலக்குறைவுகள் ஏற்படுவதில்லை.மற்ற நோய்களும்தான்.ஆரோக்யத்தின் திறவுகோல் அது.உடனிருப்பவர்கள் உடல்நலனையும் கூட்டும் மந்திரம்.

                                  தவறு செய்து மாட்டிக்கொண்டவர்கள் சிரித்து வைப்பதை பார்த்திருக்கிறேன்.அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள்(அரசியல்வாதிங்கள சொல்ல்லப்பா!) அல்லது குறைந்த தண்டனையே பெறுகிறார்கள்.சிரிப்பின் சாகசம் அது.
                                  ஒன்றாக சிரிக்கத் தெரிந்த குடும்பங்களில் பிரச்சினைகள் இருப்பதில்லை.அந்த குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை.ஒரு குடும்பத்தில் தனி மனிதன் சந்தோஷமாக இருந்தால் அக்குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது.அது தொற்றிக் கொள்ளக் கூடியது என்பதால்! குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நாடும் வளமாக இருக்கும்.எனவே நகைச்சுவை பதிவுகள் நாட்டுக்குத்தேவைதான்.

                                 சிரிக்க வைப்பவர்கள் புண்ணியவான்கள்.உலகம் அவர்களுடயது.நகைச்சுவை பதிவர்கள் வாழ்க!

     இப்போதுதான் வீடு வந்தேன்.இந்தப்பதிவு வெகுநாட்களாக டிராஃப்டில் இருந்த்து.வழக்கமாக கமெண்டும்,ஓட்டும் போடும் ஓரிருவருக்குக்கூட அதைச் செய்ய முடியவில்லை.மன்னிக்கவும்.போகட்டும் நகைச்சுவைக்கு ஒரு சீரியஸ்பதிவா? என்று கேட்பவர்களுக்கு எப்போதோ படித்து நினைவில் இருக்கும் ஒன்று.

                            மகனுக்கு எந்த வேலை ஏற்றதாக இருக்கும் என்று கண்டறிய மனோத்த்துவ மருத்துவரிடம் அழைத்துப்போனார் ஒரு அம்மா.டாக்டர் நர்ஸை அழைத்து,ஒரு சுத்தி,ஒரு திருப்புளி,ஒரு குறடு மூன்றையும் மேசை மீது வை! பையன் சுத்தியலை எடுத்தால் தச்சன் ஆவான்.குறடை எடுத்தால் மெக்கானிக் ஆவான்,திருப்புளியை எடுத்தால் எலக்ட்ரீசியன் ஆவான்.’’ பையன் மூன்றையும் விட்டுவிட்டு நர்ஸை பிடித்து இழுத்தான்.

-

17 comments:

Mohamed Faaique said...

நல்ல கட்டுரை. நல்ல ஆய்வு..
இதையும் படியுங்கள். உங்கள் கருத்துடன் ஒத்துப் போனால் ஆதரவளியுங்கள்
http://faaique.blogspot.com/

Yoga.s.FR said...

///பையன் மூன்றையும் விட்டுவிட்டு நர்ஸை பிடித்து இழுத்தான்!!!!!!///அப்போ புடிச்சு இழுக்கிற?!வேலைக்குத் தான் பையன் லாயக்கோ?????

Anonymous said...

அப்போ அந்தப் பையன் சாமியார் ஆவானு சொல்லுங்க.. நகைச்சுவை மனிதனிடும் இருந்து பிரிக்க முடியாதது.. பதிவுக்கு மட்டும் என்ன விதிவிலக்கா.. வரம்பு மீறாமல், மற்றவர் மனதைக் காயப்படுத்தாமல் எழுதும் அனைத்து நகைச்சுவைப் பதிவுகளுக்கு ஈடு இணையாக வேறு ஒரு பதிவும் நிற்க முடியாது ...

டக்கால்டி said...

Arumai

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் னே! சூப்பரா சொல்லி இருக்கீங்க! இவ்வளவு நாளும் இத டிராப்ட் ல வச்சிருந்து பொருத்தமான நேரத்துலதான் எடுத்து விட்டிருக்கீங்க!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தவறு செய்து மாட்டிக்கொண்டவர்கள் சிரித்து வைப்பதை பார்த்திருக்கிறேன்.அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள்(அரசியல்வாதிங்கள சொல்ல்லப்பா!) அல்லது குறைந்த தண்டனையே பெறுகிறார்கள்.சிரிப்பின் சாகசம் அது.

அட இந்த விஷயத்த இவ்வளவு நாளும் கவனிக்காம விட்டுட்டோமே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சிரிக்க வைப்பவர்கள் புண்ணியவான்கள்.உலகம் அவர்களுடயது.நகைச்சுவை பதிவர்கள் வாழ்க!

நல்லதொரு கருத்து!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அந்த நர்ஸ் கதை சூப்பர்!

shanmugavel said...

Mohamed Faaique said...

தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.

shanmugavel said...

@Yoga.s.FR said...

தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி.

shanmugavel said...

@இக்பால் செல்வன் said...

நன்றி இக்பால் செல்வன்.

shanmugavel said...

@டக்கால்டி said...
Arumai

தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி .

shanmugavel said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் னே! சூப்பரா சொல்லி இருக்கீங்க! இவ்வளவு நாளும் இத டிராப்ட் ல வச்சிருந்து பொருத்தமான நேரத்துலதான் எடுத்து விட்டிருக்கீங்க!

ரஜீவா,உனக்கு நன்றி.

சாகம்பரி said...

நகைச்சுவையை ரசிக்க தனி மனநிலை தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் அந்த பதிவினை தொடர முடியும். நாமே சிலரை தவிர்ப்போமே " இப்போது அவரை பார்க்க வேண்டாம், நல்ல மூட் வீணாகிவிடும் " என்போமே.

shanmugavel said...

ஆமாம் ,சகோதரி உண்மைதான்.தங்கள் கருத்துரைக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

நல்லதொரு பதிவு தான்.. ஆனால் டைட்டிலில் நெகடிவ் தொனி இருக்கே... பாசிட்டிவ்வாக டைட்டில் வைத்து மீள் பதிவு போட்டுபாருங்கள்.. சூப்பர் ஹிட் ஆகும்.

shanmugavel said...

@சி.பி.செந்தில்குமார் said...
நல்லதொரு பதிவு தான்.. ஆனால் டைட்டிலில் நெகடிவ் தொனி இருக்கே... பாசிட்டிவ்வாக டைட்டில் வைத்து மீள் பதிவு போட்டுபாருங்கள்.. சூப்பர் ஹிட் ஆகும்.

நன்றி நண்பரே!கொஞ்ச நாள் போகட்டும் செய்வோம்.