Friday, November 26, 2010

ஐயோ! செல்போன் கம்பெனிகள்!

பஸ் ஸ்டாண்டில் காய்கறி விற்கும் பெண் அவர்.ஒரு செல்போன் வைத்திருக்கிறார்.அவருடைய நம்பர் அவருக்கு தெரியாது.யாராவது போன் செய்தால் எடுத்து பேசுவார்.அவர் போன்லிருந்து பேசவேண்டுமானால் யாருடைய உதவியாவது தேவை.ஒரு நாள் ரீசார்ஜ் செய்யும் கடைக்காரரிடம் பெரிய சண்டை.ரீசார்ஜ் செய்தால் பணமே இருப்பதில்லை.கடைக்காரர் ரீசார்ஜ் செய்து பரிசோதித்து பார்த்தபோது உடனடியாக பணம் கழிக்கப்பட்டிருந்தது.

செல்போன் கம்பெனிகளுக்கு டெலிமார்கடிங் என்றொரு அமுதசுரபி இருக்கிறது.அவர்கள் போன் செய்து ஒன்றை அழுத்து,இரண்டை அழுத்து என்பார்கள்.மேற்கண்ட காய்கறி விற்கும் பெண்ணைப்போல எத்தனை பேர் இருக்கிறார்கள்?படிக்காத ஏழை இந்தியர்களுக்கு இந்த எழவெல்லாம் என்னத்தை தெரியும்?யாரோ போன் செய்கிறார்கள் என்று நினைத்து எடுத்து பேச ஒன்றும் புரியாமல் ஏதோஒன்றை அழுத்துவார்கள்.அல்லது எதையும் செய்யாமல் அவர்களாகவே பணம் பிடித்துக்கொள்வார்கள்.

எனது நண்பன் ஒருவன் பிரபல பன்னாட்டு நிறுவனமொன்றின் இணைப்பை வாங்கினான்.பேசிய பின்னால் பணம் கட்டும் திட்டமது.அடிக்கடி ரீசார்ஜ் செய்ய கடைக்கு ஓடாமல் எளிதாக இருப்பதாக கூறிக்கொண்டிருந்தான்.நான்கு மாதங்கள் கழித்து வீட்டுக்கு வந்த பில் தொகையைபார்த்து மிரண்டுபோனான்.நண்பர்களிடமெல்லாம் போன் செய்து புலம்ப ஆரம்பித்தான்.நான் அவ்வளவெல்லாம் பேசவில்லைஎன்று கம்பெனியில் விசாரித்தான்.

கம்பெனியில் நீங்கள் ஒரு மாதத்துக்கு முன் திட்டத்தை மாற்றியிருக்கிறீர்கள் என்றார்கள்.அப்படி எதுவும் நான் மாற்றவில்லை,நீங்கலாக எப்படி மாற்றலாம்?என்று கேட்டபின் டெலி மார்கெட்டிங் ஆட்கள் சொல்லி மாற்றியிருக்கிறார்கள்.உங்களுக்கு போன் செய்து கேட்டிருப்பார்களே?உண்மையில் அப்படி எதுவும் இல்லை.கம்பனிக்காரர்கள் சொன்னார்கள்!"சரி,பணத்தை கட்டிவிடுங்கள்,அடுத்த பில்லில் இருந்து பழைய திட்டத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.ஆக,நஷ்டம் நஷ்டம்தான்.அந்த நம்பரே வேண்டாம் என்று தலை முழுகிவிட்டான்.

இது போன்ற பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை நாடமுடியும்.ஆனால்,அவன் செய்யவில்லை.படிப்பறிவில்லா ஏழைகள் இந்த மாதிரி சட்டம் எத்தனை பேருக்கு தெரியும் ?தெரிந்தாலும் ஏழைகளுக்கும் நீதிக்கும் என்ன தொடர்பு?உழைத்து,உழைத்து வறுமையில் வாடும் இந்தியனை எத்தனை பேர்தான் சுரண்டுவது? -

3 comments:

PG said...

நல்ல பதிவு. அவங்க பண்ற அட்டகாசத்தை கேக்க ஆளு இல்லே தான். எங்க அப்பாவுக்கும் இந்த மாதிரி தான் நடந்துது.அனாவசியமா எஸ்.எம்.எஸ். அனுப்புவது. அதுக்கு காசையும் அவங்களே கழிச்சிக்க வேண்டியது-ன்னு ரொம்ப அக்கிரமம். கிடைசீயா சென்னை ஸ்பென்சர்ஸ்-ல இருக்கற அந்த கஸ்டமர் கேர் (?)-க்கு பீக் ஹவர்-ல போய் அவங்கள அசிங்க அசிங்கமா திட்டிட்டாரு. கூட்டமா இருக்கவே அவங்களும் என்ன பண்றதுன்னு தெரியாம கழிச்ச பணத்த கைல குடுத்து அனுப்பிட்டாங்க.

பட் நீங்க சொல்றது சரி. எவ்வளவு பேரால இந்த மாதிரி எல்லாம் போய் கத்த முடியும்? அனானிமஸ் ட்ரேஸ் அண்ட் கம்ப்ளைன்ட் பண்ற மாதிரி போலீஸ்ல இருந்தா உபயோகமா இருக்கும்.

KANA VARO said...

வித்தியாசமான பதிவு

mobile 4n பிரச்சினை தான்

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

மிகச் சரியான அக்கறையான பதிவும் கூட. ஒரு பிரபலமான நிறுவணம் நிறைய ஆஃபர்கள் கொடுப்பார்கள். நிறைய ரீசார்ஜ் செய்யும் நம்பர்களையும், அதிகமாக பேசும் நம்பர்களையும் குறித்து வைத்து திடீரென்று காசை எடுத்து விடுவார்கள். அதிகமாக பேசும் நபர்களாலும், பிஸினஸ் பண்ணும் மக்களாலும், ரீசார்ஜ் அதிகாமக செய்யும் மக்களாலும் இது கவனிக்கபடுவதில்லை. நாம் பேசி இருக்கிறோம், அதனால் தான் பணம் குறைகிறது என்று நினைத்துக் கொள்வார்கள்.

இதனை சமீப காலமாக மக்கள் கண்டுபிடித்து கஸ்டமர் கேரூகு போன் பண்ணி பல தடவை பைசாவை திரும்ப பெற்றிருக்கிறார்கள். கஸ்டமர் கேருக்கு போன் செய்வது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது, அவர்கள் ப்ளானை பற்றி கேட்டால் அதற்கும் பதில் சொல்வது என்பது எல்லா சாதரண மக்களாலும் முடியாத காரியம். என் வீட்டில் என் அண்ணன் மகனே பல தடவை போன் செய்து பணத்தை திரும்ப பெற்றிருக்கிறான்.