Thursday, November 3, 2011

அழகுப் பெண்ணுக்கு அமைந்த வக்கிர தோழி

ஒவ்வொரு முறை கிராமத்துக்குப் போகும்போதும் புதியதாக ஏதேனும் சொல்வார்கள்.சில சுவையாகவும் இருக்கும்.தீபாவளிக்கு போன போது "உனக்கு தெரியுமா? அந்தப் பெண்ணின் கல்யாணம் நின்று போய் விட்டது!" எந்தப் பெண் என்று எனக்கு தெரியாது.அப்புறம் விளக்கமாக சொல்ல ஆரம்பித்தார்கள்.

கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த பெண் அவர்.அதே கிராமத்தில் உள்ள சுயமாகத் தொழில் செய்து கொண்டிருக்கும் பையனுக்கு காதல் வந்து விட்டது.பெண் இருக்கும் திசையிலேயே சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறார்.பெண்ணுக்கும் ஆர்வம் என்றாலும் பேச ஆரம்பிக்கவில்லை.

ஒரு நாள் பக்கத்து தெருவில் இருக்கும் அக்கா அழகுப் பெண்ணிடம் வந்து பேச ஆரம்பித்தார்." உனக்கு விருப்பமா? " என்று கேட்டு விஷயத்துக்கு வர இவருக்கு அக்காவை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது.இருவரும் நெருக்கமாகி தோழமை கொண்டு விட்டார்கள்.அடிக்கடி வீட்டிலிருந்து சிக்கன்,மட்டன்,பலகாரம் என்று விஷேசமான சமையல் அனைத்தும் கொண்டு வந்து கொடுத்து விடுவார்.

அழகுப் பெண்ணும் அக்காவின் அன்பை நினைத்து உருகிப் போய்விட்டார்.காதலும் அவர் மூலமாகவே வளர்ந்து கொண்டிருந்தது.காதலனிடம் பேசும் ஆசை இருந்தாலும் அக்கா அறிவுரை சொன்னார்."நீ பேசாதே! அப்புறம் மதிக்க மாட்டார்கள்.ஆண்களிடம் அவ்வளவு சீக்கிரம் பிடி கொடுத்து விடக் கூடாது!" அக்காவே அவருக்கு போன் செய்து கொடுப்பார்.ஓரிரு வார்த்தைகள் பேசியதும் போதும் என்று கையாட்டி விடுவார்.

பையன் நண்பர்கள் யாருடனோ சொல்ல அவர்கள் மூலமாக அவனது பெற்றோருக்கு விஷயம் போய் விட்டது.ஓரளவுக்கு சம அந்தஸ்துள்ள குடும்பங்கள்தான்.ஒரு வழியாக இரண்டு வீட்டிலும் பேசி நான்கு மாதம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவாகி விட்டது.

ஒரு நாள் அழகுப் பெண்ணின் அண்ணன் வீட்டுக்கு வந்து ஒரே சத்தம்."அவன் யோக்கியன் இல்லை.அவளுடன் சினிமா தியேட்டரில் பார்த்தேன்" அவள் என்று குறிப்பிடப்பட்டவர்,அழகுப் பெண்ணிடம் தோழமை கொண்ட அக்காதான்.அந்த திருமணம் நின்று போய்விட்டது என்று சொன்னார்கள்.இரண்டு பேருக்கு காதல் மலர்வதை எப்படியோ கவனித்த அக்கா அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.தன் மீது அபாண்டமாக பழி போடுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் நம் மீது அன்பைக் காட்டுகிறார்கள் என்பதை எப்படி கண்டு பிடிப்பது.உயர் அதிகாரி ஒருவருடன் பேசிகொண்டிருந்தோம்.உடன் வந்தவர் எதையோ பேச ஆரம்பிக்க சில வார்த்தைகளிலேயே அவர் கேட்டார்! " இதை எதற்காக என்னிடம் சொல்கிறீர்கள்? பேச ஆரம்பித்தவர் திணறினார்.

ஒருவர் பேசும் வார்த்தைகளை பிரித்துப் போட்டு பார்த்தால் நோக்கம் தெரிந்துவிட வாய்ப்புண்டு." சார் அவன் சரியில்லை சார் ! " என்று சொல்பவரை கவனித்து பாருங்கள்.இன்னொருவரை மட்டம் தட்டி தன்னை உயர்த்திக்காட்டவா? நம்மை எச்சரிக்கவா என்பது புரியும்.ஆதாயத்திற்காக உறவாடுபவர்களே அதிகம்.கொஞ்சம் யோசிக்க முடிந்தால் சிக்கல்கள் நேராமல் தடுத்துக் கொள்ளலாம்.
-

31 comments:

சென்னை பித்தன் said...

நடந்ததைச் சொல்லி நாம் எப்படி நடப்பது என்பதையும் நன்கு சொல்லியிருக்கிறீர்கள்.

SURYAJEEVA said...

அருமையான கருத்துக்கள்... உறவுகளையும் பகுத்துணர் என்கிறீர்கள்... கண்டிப்பாக செய்யலாம்,, ஆனால் கடினமான செயல்

கூடல் குணா said...

காதல் மென்மை ,காமம் வன்மை காதலும் காமமும் கலந்துவிட்டால் அங்கே பொய்மை புகுந்து நிற்பது உண்மை

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நீங்கள் சொல்வது சரிதான், இருந்தாலும் நான் யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன்.மனதின் ஒரு ஓரத்தில் போட்டு வைக்கப்படும். பிறர் சொல்வதை வைத்து ஒருவர் மேல் அபிப்பிராயம் நிச்சயமாக ஏற்படுத்திக் கொள்ள மாட்டேன். ஆனால் ஏதேனும் ஒரு சந்தர்ப்பம் உறுத்தலாக நடந்தால் மனதின் ஓரத்தில் போடப்பட்ட விஷயம் மறு பரிசீலனைக்கு உட்படும். அதனால் பிறர் வலிய வந்து தரும் தகவல்கள் எதையும் புறக்கணிக்காதீர்கள்.

shanmugavel said...

@suryajeeva said...

அருமையான கருத்துக்கள்... உறவுகளையும் பகுத்துணர் என்கிறீர்கள்... கண்டிப்பாக செய்யலாம்,, ஆனால் கடினமான செயல்

தொடர்பில்லாமல் உறவு கொண்டாட வருபவர்களை கொஞ்சம் சந்தேகத்துடன் பார்க்கலாம்.குறிப்பாக பெண்கள்.நன்றி

கூடல் பாலா said...

சிந்தித்து செயல்படவேண்டும் ...நல்ல பதிவு !

மகேந்திரன் said...

எதையுமே பகுத்தறிந்து செயர்புரிவது நன்று...
இங்கே புதுமையாக உறவுகளையும்
பகுத்தாராய சொல்லும் உங்கள் கருத்து மிக நன்று...
சுயநலத்தால் செயல்படும் உறவுகளே நிறைந்திருக்கும்
இவ்வுலகில், பகுத்தாரைதல் மிக அவசியம்தான்.
பதிவு நன்று நண்பரே.

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

நடந்ததைச் சொல்லி நாம் எப்படி நடப்பது என்பதையும் நன்கு சொல்லியிருக்கிறீர்கள்.

ஆம் அய்யா,நன்றி

shanmugavel said...

@கூடல் குணா said...

காதல் மென்மை ,காமம் வன்மை காதலும் காமமும் கலந்துவிட்டால் அங்கே பொய்மை புகுந்து நிற்பது உண்மை

ஆஹா அருமை அய்யா! நன்றி

shanmugavel said...

@rufina rajkumar said...

நீங்கள் சொல்வது சரிதான், இருந்தாலும் நான் யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன்.மனதின் ஒரு ஓரத்தில் போட்டு வைக்கப்படும். பிறர் சொல்வதை வைத்து ஒருவர் மேல் அபிப்பிராயம் நிச்சயமாக ஏற்படுத்திக் கொள்ள மாட்டேன். ஆனால் ஏதேனும் ஒரு சந்தர்ப்பம் உறுத்தலாக நடந்தால் மனதின் ஓரத்தில் போடப்பட்ட விஷயம் மறு பரிசீலனைக்கு உட்படும். அதனால் பிறர் வலிய வந்து தரும் தகவல்கள் எதையும் புறக்கணிக்காதீர்கள்.

இதுவும் யோசிக்க வேண்டிய விஷயம்தான்,நன்றி

shanmugavel said...

@koodal bala said...

சிந்தித்து செயல்படவேண்டும் ...நல்ல பதிவு !

நன்றி அய்யா!

shanmugavel said...

@மகேந்திரன் said...

எதையுமே பகுத்தறிந்து செயர்புரிவது நன்று...
இங்கே புதுமையாக உறவுகளையும்
பகுத்தாராய சொல்லும் உங்கள் கருத்து மிக நன்று...
சுயநலத்தால் செயல்படும் உறவுகளே நிறைந்திருக்கும்
இவ்வுலகில், பகுத்தாரைதல் மிக அவசியம்தான்.
பதிவு நன்று நண்பரே.

உறவுகள் என்றால் ரத்தவழி உறவுகள் அல்ல!திடீரென்று உருவாகும் அதீத பாசம் யோசிக்க வேண்டியது,நன்றி

RAVICHANDRAN said...

அழகில்லை என்ற தாழ்வு மனப்பான்மை இருப்பவர்கள் இப்படி இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.நல்ல பதிவு.

RAVICHANDRAN said...

//ஒருவர் பேசும் வார்த்தைகளை பிரித்துப் போட்டு பார்த்தால் நோக்கம் தெரிந்துவிட வாய்ப்புண்டு.//

சரியானது.

shanmugavel said...

@RAVICHANDRAN said...

அழகில்லை என்ற தாழ்வு மனப்பான்மை இருப்பவர்கள் இப்படி இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.நல்ல பதிவு.

இப்படியும் சில இடங்களில் இருக்க வாய்ப்புண்டுதான் நன்றி

சாகம்பரி said...

பொதுவாக நமக்கு முன் மற்றவரை எப்படி நடத்துகிறார்கள் என்று கவனித்தாலே புரிந்துவிடும். நல்ல பகிர்வு. நன்றி.

ரைட்டர் நட்சத்திரா said...

இப்படியும் நடக்குமா ?

shanmugavel said...

@RAVICHANDRAN said...

//ஒருவர் பேசும் வார்த்தைகளை பிரித்துப் போட்டு பார்த்தால் நோக்கம் தெரிந்துவிட வாய்ப்புண்டு.//

சரியானது.

ஆம் அய்யா,நன்றி

shanmugavel said...

@சாகம்பரி said...

பொதுவாக நமக்கு முன் மற்றவரை எப்படி நடத்துகிறார்கள் என்று கவனித்தாலே புரிந்துவிடும். நல்ல பகிர்வு. நன்றி.

பலரும் கவனிப்பதில்லை,போலித்தனமான அன்பில் நெகிழ்ந்து விடுகிறார்கள்,நன்றி

shanmugavel said...

@கார்த்தி கேயனி said...

இப்படியும் நடக்குமா ?

நிறைய! நன்றி

Sankar Gurusamy said...

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு..

இது வள்ளுவப் பெருந்தகையின் கூற்று.. இவங்களுக்காகவே சொன்னதுபோல இருக்கிறது..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,,

தமது சுயநலத்திற்காக பிறர் மீது சேறு பூச முயல்வோர் தம் தவறுகளை மறைக்கின்றார்கள் என்பதனை அருமையான குட்டிச் சம்பவம் ஒன்றினூடாக விளக்கிச் சொல்லியிருக்கிறீங்க.

இராஜராஜேஸ்வரி said...

சிந்தித்துப் பார்த்து
சீர்தூக்கி வாழ்வின்
சிறப்பை அறியும் அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..

ஓசூர் ராஜன் said...

பேசும் விஷயத்தை எதிர்மறையாக சிந்தித்தால் பலவிசயங்கள் தெரியவரும்!

சக்தி கல்வி மையம் said...

உஷாரா இருக்கணும் அப்பு..

ராஜா MVS said...

உரவில் எச்சரிக்கையாக இருக்க முயற்சிக்கலாம்...

அம்பாளடியாள் said...

இந்தக் காலம் யாரையும் நம்ப முடியாது .இருந்தாலும் துரோகம் இளைக்க நினைக்கும் உறவுகள் அவர்களின் பேச்சில் உள்ள விசமித்தனத்தை தன்னையும் அறியாமல்க் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் .
மிக அழகாகவும் அருமையாகவும் உண்மையை வெளிக்கட்டியுள்ளீர்கள்
ஐயா .வாழ்த்துக்கள் மிகக் நன்றி பகிர்வுக்கு .

ம.தி.சுதா said...

உண்மையும் நேர்மையானதுமான காதல் அடிக்கொன்றாக அரிதாகவே காணக்கிடைக்கிறது...

ஸ்ரீராம். said...

உதடுகளுக்கும் மனதுக்கும் சம்பந்தமில்லாமல் பேசுபவர்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேர்கள். எனது அனுபவங்களை யோசிக்க வைத்த பதிவு.

shanmugavel said...

அனைவருக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

ஆதாயத்திற்காக உறவாடுபவர்களே அதிகம்.கொஞ்சம் யோசிக்க முடிந்தால் சிக்கல்கள் நேராமல் தடுத்துக் கொள்ளலாம்.