இந்திய மருத்துவத்தில் பத்திய முறை
என்று உண்டு.மருந்து தரும்போது இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று சிலவற்றை
சொல்வார்கள்.ஆங்கில மருத்துவத்தில் அப்படியொன்றும் சொல்லமாட்டார்கள்.இப்போது சில
மருத்துவர்கள் தலைப்பில் சொல்லப்பட்ட பொருட்களை சாப்பிட வேண்டாம் என்று சொல்வதை
கேட்டிருக்கிறேன்.
தொண்ணூறு வயதையும்
தாண்டி ஏர் உழுது கொண்டிருந்த ஒருவரைக் காட்டி சொன்னார்கள்.”அவர்
உணவு விஷயத்தில் ரொம்ப கறார் பேர்வழி! கத்திரிக்காய்,மீன்,முட்டை,கருவாடு என்றால்
தொடவே மாட்டார்” நீண்ட
ஆயுளுக்கு இவையெல்லாம் தவிர்க்க வேண்டுமா? சாப்பிடவே கூடாதா?
மரபணு மாற்றப்பட்ட
கத்திரியை சென்ற ஆண்டுதான் இந்தியாவில் அனுமதித்த்தாக நினைவு.இந்தியாவில்
சாம்பார்களில் முதலிடம் பிடிப்பது கத்திரிக்காயாகத்தான் இருக்கும்.என் பெரியம்மா
கத்திரிக்காய்களை சுட்டு சட்னி செய்வார்.அவ்வளவு அருமையாக இருக்கும்.பல நேரங்களில்
விலை மலிவாகவும் கிடைக்கும்.ஏழைகளுக்கு மிக வசதியானது.
ஏழை இந்தியப்பெண்கள்
உணவுத்தேவையை சமாளிக்கும் விதம் அலாதியானது.உடனே தயாரிக்க வேண்டும் என்ற சூழலில்
கை கொடுப்பது கருவாடு.குடிகார கணவனாக் இருந்தால் அவனுடைய நன்மதிப்பையும் பெற்று
விடும்.கிராமங்களில்,கள்,சாராயக்கடை அருகில் கருவாடு விற்பனை சக்கைப்போடு
போடும்.ஆனால் நெடுஞ்சாலையில் கருவாடு லாரி போனால் நாற்றம் குடலைப் பிடுங்கும்.
முட்டை
நல்லது.மீன் இதயத்துக்கு நன்மையைத் தரும்.இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம்.பெரும்பாலானவர்கள்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இவற்றை ஏன் தவிர்க்குமாறு சொல்கிறார்கள்? கத்திரிக்காய்
சிலருக்கு அலர்ஜியைத் தருகிறது என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.கடல் உணவுகளும்
சிலருக்கு அலர்ஜியைத் தருகின்றன.
அலர்ஜியைத்
தரும் ஹிஸ்டமின் கத்திரிக்காயில் உள்ளது.அலர்ஜி,ஜலதோஷம் போன்றவற்றிற்கு
பரிந்துரைக்கப்படும் மருந்துகளை ஆண்டி ஹிஸ்டமின் என்று
சொல்வார்கள்.சிட்ரிசின்,குளோர்ஃபெனிரமின் ஆகிய மருந்துகள் இந்த வகை.இவை
தூக்கத்தையும் தரும்.ஆனால் இவை மட்டும்தான் அலர்ஜியைத் தருமா?
என்னிடம் கேட்பவர்களுக்கு
நான் சொல்வது,’’ உங்களுக்கு
எந்த உணவுப்பொருள் ஒத்துக்கொள்ளவில்லையோ அதை சாப்பிடவேண்டாம்”.ஒவ்வொருவருக்கும்
இதில் மாறுபடும்.சிலருக்கு தக்காளி,வேறு சிலருக்கு எலுமிச்சை என்று பட்டியல்
நீளும்.தவிர்த்துவிடுவதே நல்ல வைத்தியம்.
நோய்வாய்ப்
பட்டிருக்கும்போது உடலில் உடலில் நோய் எதிர்ப்புத்திறனும்
குறைந்திருக்கும்.ஹிஸ்டமின் மருந்தின் செயல்பாட்டையும்,தூக்கத்தையும் கூட
குறைக்கலாம்.அதனால் நோயுற்ற சமயங்களில் அலர்ஜி உண்டாக்கும் பொருட்களை தவிர்த்து
விடுவதே சரி.
28 comments:
போதம் பொதுவாக இதை சாப்பிடக்கூடாது,அதை சாப்பிடக்கூடாது என்பதைவிட நமக்கு எது ஒத்துக்கொள்ளவில்லையோ அதை மட்டும் ஒதுக்கி வைப்பது நல்லதே!
சரியா சொன்னீர்கள் .நல்ல பகிர்வு!
இதற்காகவே உடல் நலமில்லாமல் புது மருந்தை எடுத்துக் கொள்ள விழையும்போது மருத்துவர் குறிப்பிட்டதில் சிறிய அளவை மட்டுமே எடுப்பேன். அலர்ஜி எனில் சட்டென மருத்துவம் செய்து கொள்ளலாமே. என் பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும்போதே இதுபோல் செய்ததில் அவர்களுக்கு சல்ஃபா அலர்ஜி இருப்பது தெரிய வந்தது. எப்போது மருத்துவரிடம் சென்றாலும் அலர்ஜி மருந்தை முதலில் குறீப்பிட்டுவிட வேண்டும். ஒரு குறிப்பு அட்டையை சட்டைபையில் வைத்திருந்தாலும் நல்லது. மிக மிக நல்ல பகிர்வு. நன்றி
@suryajeeva said...
அருமையான பதிவு
நன்றி சார்.
எது நமக்கு ஒத்துக்கொள்ள வில்லை
என்பதை உணர்ந்து உண்பதே சரு
யானது!
புலவர் சா இராமாநுசம்
நல்ல பதிவு.எங்கள் வீட்டில்கூட யாருக்காவது உடல் நலம் இல்லாவிட்டால் சாப்பிடமாட்டோம்.
தங்கள் இரண்டு பதிவுகள் விகடன் குட் பிளாக்ஸ் ல் இருக்கிறது,வாழ்த்துக்கள்.
@கோகுல் said...
போதம் பொதுவாக இதை சாப்பிடக்கூடாது,அதை சாப்பிடக்கூடாது என்பதைவிட நமக்கு எது ஒத்துக்கொள்ளவில்லையோ அதை மட்டும் ஒதுக்கி வைப்பது நல்லதே!
சரியா சொன்னீர்கள் .நல்ல பகிர்வு!
நன்றி கோகுல்.
@சாகம்பரி said...
இதற்காகவே உடல் நலமில்லாமல் புது மருந்தை எடுத்துக் கொள்ள விழையும்போது மருத்துவர் குறிப்பிட்டதில் சிறிய அளவை மட்டுமே எடுப்பேன். அலர்ஜி எனில் சட்டென மருத்துவம் செய்து கொள்ளலாமே. என் பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும்போதே இதுபோல் செய்ததில் அவர்களுக்கு சல்ஃபா அலர்ஜி இருப்பது தெரிய வந்தது. எப்போது மருத்துவரிடம் சென்றாலும் அலர்ஜி மருந்தை முதலில் குறீப்பிட்டுவிட வேண்டும். ஒரு குறிப்பு அட்டையை சட்டைபையில் வைத்திருந்தாலும் நல்லது. மிக மிக நல்ல பகிர்வு. நன்றி
தங்கள் அனுபவமும் கருத்தும் நன்று.நன்றி
@புலவர் சா இராமாநுசம் said...
எது நமக்கு ஒத்துக்கொள்ள வில்லை
என்பதை உணர்ந்து உண்பதே சரு
யானது!
நன்றி அய்யா!
@Online Works For All said...
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
தங்கள் வருகைக்கு நன்றி
அவர் சொன்னார் இவர் சொன்னாரென
நல்ல சத்துள்ள உணவுகளை ஒதுக்கி வைப்பது சரியன்று...
உண்ணும் பொருட்களின் தன்மையறிந்து
உட்கொள்ளுதலே சிறப்பு...
நல்ல பதிவுக்கு நன்றி நண்பரே.
உங்களுக்கு என்ன என்ன புடிக்குதோ அதையெல்லாம் சாப்புடுங்கோ இதுதான் என் கருத்து... ஹீ ஹீ....
அப்புறம் எனக்கு மிக பிடித்தது கத்தரிக்காய் பொரித்த குழம்புதான் பாஸ்...
நல்ல பதிவு
@RAVICHANDRAN said...
நல்ல பதிவு.எங்கள் வீட்டில்கூட யாருக்காவது உடல் நலம் இல்லாவிட்டால் சாப்பிடமாட்டோம்.
நன்றி சார்!
@RAVICHANDRAN said...
தங்கள் இரண்டு பதிவுகள் விகடன் குட் பிளாக்ஸ் ல் இருக்கிறது,வாழ்த்துக்கள்.
ஆமாம் அய்யா! தங்களுக்கு நன்றி
@மகேந்திரன் said...
அவர் சொன்னார் இவர் சொன்னாரென
நல்ல சத்துள்ள உணவுகளை ஒதுக்கி வைப்பது சரியன்று...
உண்ணும் பொருட்களின் தன்மையறிந்து
உட்கொள்ளுதலே சிறப்பு...
நல்ல பதிவுக்கு நன்றி நண்பரே.
ஒவ்வாமை இருந்தால் ஒதுக்கவேண்டும்,நன்றி
@துஷ்யந்தன் said...
உங்களுக்கு என்ன என்ன புடிக்குதோ அதையெல்லாம் சாப்புடுங்கோ இதுதான் என் கருத்து... ஹீ ஹீ....
அப்புறம் எனக்கு மிக பிடித்தது கத்தரிக்காய் பொரித்த குழம்புதான் பாஸ்...
நல்ல பதிவு
நான் கூட கத்திரிக்காய் ருசித்து சாப்பிடுவேன்,சிலருக்கு ஒத்துக்கொள்ளாது.நன்றி
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு குணம் உள்ளது. எனவே எல்லாவற்றையும் வெறுக்காமல் அலர்சியை எற்படுத்துபவை மட்டும் தவிர்க்கலாம்
நல்லதொரு கட்டுரை
வாழ்த்துக்கள் சகோ
இனிய காலை வணக்கம் அண்ணா,
அலர்ஜி உண்டாக்கும் உணவுகளை உண்பதால் ஏற்படும் விளைவுகளையும் ஹிஸ்டமின் பற்றியும் அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.
கத்தரிக்காயில் உள்ள அலர்ஜியை விளக்கும் நோக்கில் எம்மை ஒரு கிராமத்திற்கே அழைத்துச் சென்றிருக்கிறீங்க.
நல்லதொரு அலர்ஜி அலசல் பகிர்வு.
அவரவர் தமக்கு ஒவ்வாமை உள்ள பொருட்களை அறிந்து அவற்றை ஒதுக்குவதே நல்லது. நல்ல விடயங்களை பகிர்ந்திருக்கிறீர்கள்.
நல்ல தகவல்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
நல்ல ஒரு ஆலோசனை தந்துள்ளீர்கள்...
நன்றி நண்பரே....
ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்..
கத்திரிக்காய் கருவாடு போன்றவை பெரும்பாலனவர்களுக்கு அலர்ஜியை ஏற்ப்படுத்தும்..
இன்றைய காலக்கட்டத்தில் உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..
அருமையா எழுதி இருக்கீங்க... அவசியமான பதிவு சார்...
எனக்கு இந்த மூனும் பிடிக்காது
நல்ல பகிர்வு.நன்றி.
அலர்ஜியை உருவாக்கும் உணவுகள் பற்றி மிக எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள்..நன்றி ..
கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.
Post a Comment