பதிவுலகில் ஒரு கருத்து
இருக்கிறது.பிரபலமாக இருப்பவர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.அவர்களுக்கு
வாசகர்கள் குறைந்து விடுகிறார்களா?சிலர் எழுதாமல் நிறுத்தி விடுகிறார்கள்.மதுரை
குணா ஒருமுறை சொன்னார்.திருத்தணி போய் வந்தேன்,வீட்டுக்கு வந்தவுடன் அந்த
அனுபவத்தை எழுதாமல் இருக்க முடியவில்லை.ஒரு பேப்பரை எடுத்து எழுத
ஆரம்பித்தேன்.அப்புறம் கிழித்துப் போட்டுவிட்டேன்.
எளிதாகவே
இருக்கிறது.சொல்வதற்கு ஏதாவது இருக்கும்போது எழுதாமல் இருக்க முடியாது.உள்ளே
இருப்பதை வெளியில் கொட்டித்தான் ஆக வேண்டும்.ஏதோ ஒரு ஊடகம்.அது வலைப்பதிவாக
இருக்கலாம்,பேப்பரில் இருக்கலாம்.பேஸ்புக்கிலும் இருக்கலாம்.மனிதன் வெளியே
கொட்டுவதற்கு வசதியாக இருப்பதால்தான் இவற்றுக்கு வரவேற்பு இருக்கிறது.
சில காலம் எழுதாமல்
போய்விட்டவர்கள் மீண்டும் பதிவிடுவது தவிர்க்க முடியாது.ஆனால் வெளிப்பாட்டுத்திறன்
என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.சிலர் போனில் நண்பர்களிடம் கதை,கதையாக பேசி
விடுவார்கள்.கொஞ்சமும் வாசிப்பு பழக்கம் இல்லாமல் மற்றவர்களை பார்த்து வலைப்பதிவு
ஆரம்பிப்பவர்கள் காணாமல் போனால் மீண்டும் வருவது சாத்தியமல்ல!இவை பெரும்பாலும்
வெட்டி ஒட்டுதலையும்,செய்தியையும் அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
புதிய பதிவர்களின்
வருகையும் பிரபலங்கள் மாறிக்கொண்டேயிருக்க காரணமாக சொல்ல முடியும்.தவிர
வலைப்பதிவுகளில் வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் பொருளும் இன்னொரு
காரணம்.அரசியல்,சினிமா,தனி மனிதனுக்கு பயன் தரும் செய்திகள் போன்றவைதான் அதிகம்
படிக்கப்படுகின்றன.இவற்றையெல்லாம் குறிப்பிட்ட ஒருவர் என்றில்லாமல் யார்
வேண்டுமானாலும் எழுத முடியும்.துறை சார்ந்த ஒருவர் எழுதும்போது கொஞ்சம் அழுத்தம்
இருக்கும்.
கதை,கவிதை உள்ளிட்ட
புனைவுகளுக்கு அதிக வரவேற்பில்லை.கதையில் சில விஷயங்களை அழுத்தமாக மனதில்
நிற்குமாறு சொல்ல முடியும்.சிலவற்றை கவிதையில் சொல்ல முடியும்.நிஜமான தனித்திறமை
என்பது புனைவுகளில் இருக்கிறது.ஒருவரது சிறுகதை,கவிதை போன்றவற்றை படிக்க நேரும்
வாசகர் பிடித்துப்போனால் அவரை எப்போதும் பின் தொடர்கிறார்.
இன்னொன்று
பதிவுகளைப்பொருத்தவரை ஒரு பதிவை வெற்றியடையச் செய்வது வாசகர்கள் அல்ல! சில
பதிவுகளைத்தவிர்த்து பெரும்பான்மையாக பதிவர்களை சார்ந்திருக்கிறது.வாக்கு,கருத்துரைகளில்
பங்கேற்பவர்கள் பதிவர்களே! இதில் பொறாமை,அரசியல் எல்லாம் பிரபலங்களை சுற்றியே
இருக்கின்றன.மெயில் அனுப்பி,சாட் செய்து அரசியல் செய்வதை ஒரு சிலர்தான்
விரும்புவார்கள்.
சினிமாவைத்தான்
சூதாட்டம் என்பார்கள்.வலைப்பதிவுகளும் அப்படித்தான் இருக்கின்றன.எந்த பதிவு
ஹிட்டாகும்,எது ஆகாது என்பது யாருக்கும் தெரியாது.நண்பர் ஒருவர் “பதிவு
போட்டிருக்கிறேன் ஹிட்டாகும்”
என்றார்.ஆனால் இருபது பேர் கூட படிக்கவில்லை.தவிர முப்பது வயதில் ஒருவர்
பார்த்த,கேட்ட சுவையான விஷயங்களை எத்தனை பதிவுகள் எழுத முடியும்?தினம் தினம்
நமக்கு ஏற்படும் அனுபவங்களை எழுதினாலும் ஒருவருடைய பார்வை ஒன்றுதான்.
அரசியல்
பதிவென்றால் சீரான கொள்கை வேண்டும்.இப்போது தி.மு.க வை விமர்சித்து எழுதினால்
அதிகம் படிக்கப்படும் என்று சொல்ல முடியாது.தேர்தல் நேரத்தில் அரசியல் தொடர்பான
இடுகைகளே அதிகம் படிக்கப்பட்ட்து.ஒருவரது பிரபலத்தை காலமும் தீர்மானிக்கலாம்.தவிர
இதில் என்ன இருக்கிறது என்ற சலிப்பும் நேரலாம்.விட்டுப்போனதை நண்பர்களும்
சொல்ல்லாம்
35 comments:
நீங்கள் சொல்வது அனைத்தும் 100% சரிதான்.நன்று.
த.ம.1
பிரபல பதிவர் ஆவது அவ்வளவு அவசியமா என்ன?
அருமையான அலசல்..
பிரபல பதிவரானால் என்ன லாபம்?
இனிய குழந்தைகள்
தின நல்வாழ்த்துக்கள்!
நல்ல அலசல்...
இனிய குழந்தைகள்
தின நல்வாழ்த்துகள்... நண்பரே...
புறச்சூழ்நிலையும் அதன் தாக்கமும்தான் ஒருவரை எழுத துாண்டுகின்றன.எதையும் துாண்டுவதற்கும் ஒரு நெம்புகோல் தேவைப்படுகிறதுபோல்தான்
@சென்னை பித்தன் said...
நீங்கள் சொல்வது அனைத்தும் 100% சரிதான்.நன்று.
த.ம.1
நன்றி அய்யா!
பிரபல பதிவர்ன்னு ஒன்னு இருக்கா என்ன?
உண்மையை சொல்வதானால் வலைப்பூக்கள் எனும் கடலில் தனது விருப்பத்திற்குரிய பதிவுகளை தேடிக் கண்டுகொள்வதில் வாசகர்கள் சிரமப்படுகிறார்கள். வலைப்பூக்களில் தேவையானதை தேடிக்கண்டுபிடிக்க சரியான இலகுவான பொறிமுறை ஒன்று இல்லாமையால் பல நல்ல பதிவுகளும் உரியமுறையில் வாசகர்களை சென்றடையாமல் போய்விடுகிறது.
அண்ணே, உங்க ஸ்டைலில் அழகாகவும், தெளிவாகவும் சொல்லிட்டீங்க! மாற்றம் என்ற ஒன்றே என்றுமே மாறாதது!
அன்பரே
எழுதுவது எதுவானாலும்
(கதை, கவிதை. கட்டுரை)அதில்
ஏதேனும் ஒரு அழுத்தம் இருக்குமானால் அது வெற்றிபெறும்
என்பது என் நம்பிக்கை!
புலவர் சா இராமாநுசம்
@rufina rajkumar said...
பிரபல பதிவர் ஆவது அவ்வளவு அவசியமா என்ன?
அப்படி எதுவும் இல்லை,நன்றி
@இராஜராஜேஸ்வரி said...
அருமையான அலசல்..
பிரபல பதிவரானால் என்ன லாபம்?
வாசகர்கள் அதிகம் இருக்க வாய்ப்புண்டு,நன்றி
@இராஜராஜேஸ்வரி said...
இனிய குழந்தைகள்
தின நல்வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கு நன்றி,தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
@ராஜா MVS said...
நல்ல அலசல்...
இனிய குழந்தைகள்
தின நல்வாழ்த்துகள்... நண்பரே...
நன்றி நண்பா!
@வலிபோக்கன் said...
புறச்சூழ்நிலையும் அதன் தாக்கமும்தான் ஒருவரை எழுத துாண்டுகின்றன.எதையும் துாண்டுவதற்கும் ஒரு நெம்புகோல் தேவைப்படுகிறதுபோல்தான்
உண்மைதான்,நன்றி
@தங்கம்பழனி said...
பிரபல பதிவர்ன்னு ஒன்னு இருக்கா என்ன?
அடப்பாவமே! பச்சை மண்ணா இருக்கியேப்பா! நன்றி
@அம்பலத்தார் said...
உண்மையை சொல்வதானால் வலைப்பூக்கள் எனும் கடலில் தனது விருப்பத்திற்குரிய பதிவுகளை தேடிக் கண்டுகொள்வதில் வாசகர்கள் சிரமப்படுகிறார்கள். வலைப்பூக்களில் தேவையானதை தேடிக்கண்டுபிடிக்க சரியான இலகுவான பொறிமுறை ஒன்று இல்லாமையால் பல நல்ல பதிவுகளும் உரியமுறையில் வாசகர்களை சென்றடையாமல் போய்விடுகிறது.
ஒரு வாசகர் எவ்வளவு நேரம் படித்துக்கொண்டிருப்பார்? முதல்பக்கத்தை தாண்டி உள்ளே போய் பார்ப்பது அரிது.தமிழ்மணம் சூடான இடுகைகளாக முப்பது இருந்தாலும் முதல் பக்கத்தில்தான் படிக்கிறார்கள்.நன்றி
@Powder Star - Dr. ஐடியாமணி said...
அண்ணே, உங்க ஸ்டைலில் அழகாகவும், தெளிவாகவும் சொல்லிட்டீங்க! மாற்றம் என்ற ஒன்றே என்றுமே மாறாதது!
ஆமாம் பிரதர் நன்றி
@புலவர் சா இராமாநுசம் said...
அன்பரே
எழுதுவது எதுவானாலும்
(கதை, கவிதை. கட்டுரை)அதில்
ஏதேனும் ஒரு அழுத்தம் இருக்குமானால் அது வெற்றிபெறும்
என்பது என் நம்பிக்கை!
ஆமாம் அய்யா! நன்றி
நல்ல அலசல்,புதியவர்கள் வருவது முக்கிய காரணம்.
குழந்தைகள் தினத்திற்கு பதிவை எதிர்பார்த்தேன்.
சரியா சொல்லி இருக்கீங்க நண்பா!
@RAVICHANDRAN said...
நல்ல அலசல்,புதியவர்கள் வருவது முக்கிய காரணம்.
நன்றி சார்
@RAVICHANDRAN said...
குழந்தைகள் தினத்திற்கு பதிவை எதிர்பார்த்தேன்.
எழுதிட்டா போச்சு சார்,நன்றி
@விக்கியுலகம் said...
சரியா சொல்லி இருக்கீங்க நண்பா!
நன்றி நண்பா!
தன்னை பிரபல பதிவர் என்று நினைக்கத்தொடங்கும் போதே வீழ்ச்சி தொடங்கி விடுகிறது.
வலைப்பதிவுகள் உள்ளக் கிடங்கை வெளியிடும் ஒரு ஊடகம். இதில் பிரபலம் பிரபலமில்லை என்பதெல்லாம் தாண்டி , எழுதுபவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தால் அதுவே சிறப்பானது..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
//பாலா said...
தன்னை பிரபல பதிவர் என்று நினைக்கத்தொடங்கும் போதே வீழ்ச்சி தொடங்கி விடுகிறது.//
இதையும் போட்டு இருக்கலாம் சார்...
மாற்றம் என்பது ஒன்றுதான்
மாற்றமில்லாதது
என்பதை இவர்கள் இப்படி புரிந்துகொண்டார்களோ????
பதிவுகளில் சுருத்தை வைக்காது
கருத்தை வைத்து எழுதினால் காலம் கடந்து நிற்கும் என்பதில்
எள்ளளவும் சந்தேகம் இல்லை..
சிரத்தையுடன் அருமையாய்
அலசியிருக்கிறீர்கள் நண்பரே.
எதுவும் நிரந்தரம் இல்லை
வணக்கம் அண்ணே, என் பார்வையில் பிரபல பதிவர், பிரபலமில்லாதோர் அப்படீன்னு ஒன்றுமே இல்லை!
ஹி...ஹி...
எல்லாரும் பதிவர்கள் என்று தான் நான் நோக்குவேன்! என்னால் முடிந்த வரை ஒரு சில நண்பர்களுடன் தான் சாட்டிங் தொடர்பினை வைத்திருக்கிறேன். அதிக நண்பர்களுடன் உரையாட எல்லோராலும் முடிவதில்லை! நேரப் பற்றாக் குறையும் இதற்கான பிரதான காரணம்!
இன்னோர் விடயம் பதிவுலகில் முன்பு எழுதியோர் இப்போது நன்றாக எழுதுவதற்கு நேரமும் கிடைப்பதில்லை!
ஏன் பதிவுலகை விட்டு விலகலாம் என்று முடிவு செய்த நானே உங்களைப் போன்ற நண்பர்களின் வேண்டுகோளுக்கமைவாக என்னால் முடிந்ததை இப்போது கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்!
சமுக மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பதிவர்கள் குறைவு. பேஸ்புக்-ல் கமென்ட் போடுவதுபோல்தான் பதிவுகளை எழுதுகிறார்கள். வருத்தமாய்தான் இருக்கிறது சகோ.
சரியாக சொன்னீர்கள் ஐயா சரியானதைச் சொல்லும் போது சேர்ந்து போகவேண்டிய நிலை இருப்பதும் ஒரு குறையே மற்றவர்கள் ஊக்கிவிப்பு ஒரு வரியில் இல்லாமல் காத்திரமான பின்னூட்டம் இட்டால் சிறப்பாக இருக்கும் நிரூபன் சொல்வது போல் நேரப்ப்ற்றக்குறையும் ஒரு காரணம்.
நல்ல அலசல் ஐயா!
என்னை போன்றவர்கள் எழுத்தை கூர் தீட்டிக் கொள்ளவே வருகிறோம்... எங்கள் இலக்கு பதிவுலகம் அல்ல,, அதையும் தாண்டி வெளி உலகில் உள்ளது...
ஆனால் இந்த பதிவுலகம் தான் உலகம் என்று இருப்பவர்கள் அரசியல், ரசிக்கும் படியாகவே உள்ளது... ஏனெனில் என் பதிவுலகம் செய்யும் தவறுகள், நல்ல நோக்கத்திற்காக கை கொடுக்கும் பொழுது அனைத்து பிரச்சினைகளும் பின் சென்று விடுகிறது...
Post a Comment