எப்போதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கவே விரும்புகிறோம்.ஆனால்
ஏதேனும் தொல்லைகள் வந்து சேரத்தான் செய்கிறது.எப்படியாவது இந்த
சூழ்நிலையில் இருந்து விடுபட்டால் போதும் என்று மனம் தவிக்கும்.மனதிலும்
உடலிலும் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டு குழப்பம்
தோன்றிவிடும்.இப்படிப்பட்ட சங்கடங்களை சமாளிக்கும் விதம் ஒவ்வொருவருக்கும்
வேறுபடும்.அவரவர்களுடைய ஆளுமையை பொருத்து திறனும் இருக்கும்.சிலருக்கு மிக
எளிதாக இருக்கிறது.இது என்ன பெரிய விஷயம் பார்த்துக் கொள்ளலாம் என்று
அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள்.இவர்களுக்கு சில தகுதிகள்
அமைந்திருக்கின்றன.அல்லது அவற்றை வளர்த்துக் கொண்டார்கள்.அவை
எதிலும் நம்பிக்கை கொண்டிருப்பது.(confidence)
நம்மால் இதை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு
இருக்கிறது.என்னால் முடியக்கூடிய ஒன்றுதான் என்ற நம்பிக்கையை எப்போதும்
மனதில் தாங்கி இருக்கிறார்கள்.தனக்கு திறன் இருக்கிறது என்று
நம்புகிறார்கள்.
தன்னைப் பற்றி நல்லவிதமாக உணர்கிறார்கள்.
தன்னைப் பற்றி நல்லவிதமாக உணர்கிறார்கள்.
சுய மதிப்பு .(self esteem)
நம்மை நாமே மதிக்காவிட்டால் யார்தான் நம்மை மதிப்பார்கள்? தான் சரியானவன் என்ற எண்ணமும் ,யாருக்கும் சளைத்தவன் இல்லை என்ற எண்ணமும் இருக்கிறது.
கடுமையாக உணர்வதில்லை.(sense of control)
பெரிய தீர்க்க முடியாத பிரச்சினையாக எதையும் நினைப்பதில்லை.கடிவாளத்தை கையில் வைத்திருக்கிறார்.உணர்ச்சிகளில் சிக்கி அலைக்கழிக்கப் படுவதில்லை.
நல்லதே நடக்கும் (optimism)
தனது முயற்சிக்கு நல்ல விளைவுகளை எதிர்நோக்குகிறார்.இந்த நம்பிக்கை தடுமாற்றமில்லாமல் செயல்பட வைக்கிறது.
நேர்மறை எண்ணங்கள்.(positive thinking)
அவர் நேர்மறையாக சிந்திக்கிறார்.எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் இருக்கிறார்.
மேலே சொல்லப்பட்டவை நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள சொல்லப்பட்டவைதான்.இந்த தகுதிகள் நமக்கு இருக்கிறதா என்று பார்க்கவும்,இல்லாவிட்டால் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.
34 comments:
நல்ல கருத்து ............
நன்றி
பலர் மற்றவர்களை தான் சரிபார்க்கிறார்கள், தன்னை ஒருமுறை சரிபார்க்கத் தொடங்கினாலே பல பிரச்சனைகளே இல்லாமல் போகும்...
நல்ல அருமையான பகிர்வு... நண்பரே
பகிர்வுக்கு நன்றி...
தெளிவான சொற்கள், விளக்கமான
உரை!
நல்ல பதிவு!
புலவர் சா இராமாநுசம்
யப்பா சாமி, செம சமாச்சாரம் தலைவரே... ஒன்னொன்னும் செம குத்து
@stalin wesley said...
நல்ல கருத்து ............
நன்றி
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
@ராஜா MVS said...
பலர் மற்றவர்களை தான் சரிபார்க்கிறார்கள், தன்னை ஒருமுறை சரிபார்க்கத் தொடங்கினாலே பல பிரச்சனைகளே இல்லாமல் போகும்...
நல்ல அருமையான பகிர்வு... நண்பரே
பகிர்வுக்கு நன்றி...
நன்றி நண்பரே!
நீங்கள் சொல்லியுள்ள தகுதிகள் வளர்க்கப்படவேண்டும்.நல்ல பதிவு.
@புலவர் சா இராமாநுசம் said...
தெளிவான சொற்கள், விளக்கமான
உரை!
நல்ல பதிவு!
புலவர் சா இராமாநுசம்
நன்றி அய்யா!
@suryajeeva said...
யப்பா சாமி, செம சமாச்சாரம் தலைவரே... ஒன்னொன்னும் செம குத்து
சரிசரி நன்றி சார்
@RAVICHANDRAN said...
நீங்கள் சொல்லியுள்ள தகுதிகள் வளர்க்கப்படவேண்டும்.நல்ல பதிவு.
நன்றி நண்பரே!
நம்மை நாமே மதிக்காவிட்டால் யார்தான் நம்மை மதிப்பார்கள்? தான் சரியானவன் என்ற எண்ணமும் ,யாருக்கும் சளைத்தவன் இல்லை என்ற எண்ணமும் இருக்கிறது./
அருமையான பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்..
அருமையா அலசி இருக்கீங்க நண்பரே...
அதில் சுயமதிப்பும் தன்னம்பிக்கையும்
எனக்கு பிடித்த அலசல்கள்...
நாம் இந்த விஷயத்தில் இவ்வளவுதான் என்று சுயமதிப்பு
தெரிந்துவிட்டால் நாம் அதை விட்டு தாண்டி போக மாட்டோம் அல்லவா....
அருமையான பகிர்வு நண்பரே...
வணக்கம் சண்முகவேல் ஐயா .தங்களை மழலைகள்
உலகமே மகத்தானது என்னும் சிறப்புத் தொடரைத்
தொடர மிகவும் பணிவன்போடு அழைக்கின்றேன் .
உங்கள் ஆக்கத்தைக் காண ஆவலுடன் .மிக்க நன்றி
இன்றைய உங்கள் ஆக்கத்திற்கு என் பாராட்டுகள் .
http://rupika-rupika.blogspot.com/2011/11/blog-post_16.html#comment-form
@இராஜராஜேஸ்வரி said...
நம்மை நாமே மதிக்காவிட்டால் யார்தான் நம்மை மதிப்பார்கள்? தான் சரியானவன் என்ற எண்ணமும் ,யாருக்கும் சளைத்தவன் இல்லை என்ற எண்ணமும் இருக்கிறது./
அருமையான பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்..
தங்கள் பாராட்டுக்கு நன்றி
@மகேந்திரன் said...
அருமையா அலசி இருக்கீங்க நண்பரே...
அதில் சுயமதிப்பும் தன்னம்பிக்கையும்
எனக்கு பிடித்த அலசல்கள்...
நாம் இந்த விஷயத்தில் இவ்வளவுதான் என்று சுயமதிப்பு
தெரிந்துவிட்டால் நாம் அதை விட்டு தாண்டி போக மாட்டோம் அல்லவா....
அப்படியல்ல! சுயமதிப்பு என்பது எதற்கும் தகுதியற்றவன் போன்ற எண்ணம் இல்லாமல் இருப்பது,தாழ்வுமனப்பான்மை இல்லாமல் இருப்பது,நன்றி
@அம்பாளடியாள் said...
வணக்கம் சண்முகவேல் ஐயா .தங்களை மழலைகள்
உலகமே மகத்தானது என்னும் சிறப்புத் தொடரைத்
தொடர மிகவும் பணிவன்போடு அழைக்கின்றேன் .
உங்கள் ஆக்கத்தைக் காண ஆவலுடன் .மிக்க நன்றி
இன்றைய உங்கள் ஆக்கத்திற்கு என் பாராட்டுகள்
நன்றி,ஓரிரு தினங்களில் எழுதிவிடுகிறேன்
பலருக்கும் இது தெரிகிறது... ஆனால் செயல்படுத்தும்போது சொதப்பிவிடுகிறார்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
அத்தனையும் முத்துக்கள். நம்முடைய சதவிகிதம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டியதும் அவசியம். பகிர்விற்கு நன்றி.
மிகத்தேவையான தகுதிகள்தான் இவை.நன்று.
த.ம.7
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சார்... பதிவு மிக அருமை...
Nice.
TM 8.
கற்றுக்கொண்டால் குற்றமில்லை.
சுய மதிப்பு // நம்மை நாமே மதிக்கலைனா அடுத்தவன் எப்படி மதிப்பான் சரியாக சொன்னீர்கள்
மிக அருமையான கட்டுரை. நம் அனுமதி இல்லாமல் நம் நிம்மதியை யாராலும் கெடுக்க முடியாது.
@Sankar Gurusamy said...
பலருக்கும் இது தெரிகிறது... ஆனால் செயல்படுத்தும்போது சொதப்பிவிடுகிறார்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
உண்மைதான் சார்,நன்றி
@சாகம்பரி said...
அத்தனையும் முத்துக்கள். நம்முடைய சதவிகிதம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டியதும் அவசியம். பகிர்விற்கு நன்றி
தங்கள் பாராட்டுக்கு நன்றி
@சென்னை பித்தன் said...
மிகத்தேவையான தகுதிகள்தான் இவை.நன்று.
த.ம.7
நன்றி அய்யா!
@சசிகுமார் said...
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சார்... பதிவு மிக அருமை...
நன்றி சார்
@துரைடேனியல் said...
Nice.
நன்றி
@சத்ரியன் said...
கற்றுக்கொண்டால் குற்றமில்லை.
ஆமாம் சத்ரியன் நன்றி
@rufina rajkumar said...
சுய மதிப்பு // நம்மை நாமே மதிக்கலைனா அடுத்தவன் எப்படி மதிப்பான் சரியாக சொன்னீர்கள்
நன்றி
@பாலா said...
மிக அருமையான கட்டுரை. நம் அனுமதி இல்லாமல் நம் நிம்மதியை யாராலும் கெடுக்க முடியாது.
நன்றி பாலா!
this article copy pasted here
for your information
http://karuppurojakal.blogspot.com/2011/11/blog-post_8867.html
this article copy pasted here too for your information
http://alagukavithai.blogspot.com/2011/11/blog-post_27.html
Post a Comment