Tuesday, November 22, 2011

கூரியர் சர்வீஸ்-இப்படியும் நடக்கலாம்.

                           கூரியர் சர்வீஸ் வந்து பெருவெற்றி பெற்றது எனக்கு ஆச்சர்யமாக இருந்த்து.ஒரு நாட்டின் அரசு நிறுவனத்தையே பின்னுக்கு தள்ளிவிட்ட்து.தபால் துறையை விட மக்கள் அதிகமாக இவற்றை நாடினார்கள்.குறைந்த பணியாட்களை வைத்துக்கொண்டு நாம் எதிர்பார்க்கிற மாதிரி சேவையை வழங்கியது.இப்படி கூரியர் சர்வீஸ் நட்த்தும் சிலரை எனக்குத் தெரியும்.
                           நண்பர் ஒருவர் உறவினருக்கு புதிய சட்டை ஒன்றை அனுப்பினார்.விலை உயர்ந்த பிரபல கம்பெனியின் சட்டை அது.ரகசியமாக இருக்கட்டும் என்று அவருக்கு சொல்லவில்லை.பிறந்தநாள் வாழ்த்து கவிதையும் உள்ளேயே வைத்து விட்டார்.அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை.பொறுக்காமல் போன் செய்து விசாரிக்க அப்படி எதுவும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.
                           கூரியர் சர்வீஸில் போய் விசாரித்தால் தொடர்புள்ள கிளையை விசாரித்திருக்கிறார்கள்.டெலிவரி செய்யும் பையன் இரண்டு நாள் போய்விட்டேன்.வீடு பூட்டியிருந்த்து.அங்கேயே ஒரு கடையில் வைத்திருக்கிறேன் என்று பதில் வந்திருக்கிறது.ஒரு வழியாக சட்டை போய் சேர்ந்துவிட்ட்து.ஆனால் அழுக்காக! தெரியாத விஷயம்: பையன் நான்கு நாட்கள் போட்டுக்கொண்டு சுற்றிவிட்டு பிறகு பொட்டலம் கட்டி கொண்டு போய் கொடுத்திருக்கிறார்.
                            இன்னொருவர் பத்து பனியன் அனுப்பினார்.போய் சேர்ந்த்து எட்டுதான்.டெலிவரி செய்பவர்கள் உள்ளே என்ன இருக்கிறது என்று சிலவற்றை பிரித்து பார்ப்பது அவர்களுடைய ஆர்வம்.பயனுள்ள சில காணாமல் போக வாய்ப்பிருக்கிறது.என்னுடைய சில கடிதங்கள் முகவரி மாறிப்போய் சரியான நேரத்துக்கு கிடைக்காமல் போயிருக்கிறது.
                            கூரியர் மூலம் தபாலோ,பொருளோ அனுப்பிவிட்டால் ஒருநாள் கழித்து போய் சேர்ந்து விட்ட்தா என்பதை உறுதி செய்வது எனக்கு பழக்கமாகிவிட்ட்து.யார் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்,என்பதையும் சரி பார்ப்பேன்.போன் மூலமும் உறுதி செய்வதுண்டு.அலுவலகம் என்றால் யாரிடமாவது கொடுத்துவிட்டு போய்விடுவார்கள்.மற்றவர்கள் பிரிப்பதும் நடக்கும்.எதுவும் தெரியாத மாதிரி மீண்டும் ஒட்டி கொடுத்துவிடுவார்கள்.
                              ஒரு நாள் வாசலில் ஒரு பெட்டி கிடந்த்து.எடுத்துப் பார்த்தால் உறவினர் அனுப்பிய பார்சல்.எங்களிடம் கையெழுத்து வாங்கவில்லை.உறவினரை அவரை அனுப்பிய கிளையில் விசாரிக்கச் சொன்னால் என் பெயரை கையெழுத்தாக அவர்களே போட்டு பி.ஓ.டி நகலை அனுப்பிவிட்டார்கள்.போன் நம்பர் குறித்திருந்தாலும் போன் செய்யவில்லை.
                               சில கூரியர் சர்வீஸ்களில் போனால் கிளை இல்லாத இடங்களுக்கும் வாங்கிக் கொள்வார்கள்.ஆனால் வேறு நிறுவனம் மூலம் அனுப்புவார்கள்.தபால்கள் இதனாலும் தாமதமாகும்.சரியாக கடிதங்களை சேர்க்க முடியாமல் வழக்கை சந்தித்த நிறுவன்ங்களும் உண்டு.நஷ்ட ஈடு வழங்கிய சம்பவமும் நடந்திருக்கிறது.
                               அரசு அதிகாரிகளுக்கு,நிறுவன்ங்களுக்கு தபால்துறை மூலம் அனுப்பவதே சரியானது.அதிகாரிகளிடம் கூரியர் சர்வீஸை சேர்ந்தவர்கள் நேரடியாக தர உள்ளே விடமாட்டார்கள்.வேலைக்கான விண்ணப்பங்களை பல ஆணையங்கள் கூரியர் சர்வீஸ் ஆட்களிடம் நேரடியாக வாங்குவதில்லை.பெட்டியில் போட்டுவிட்டு போகச் சொல்வார்கள்.
                               பெரும்பாலும் சரியாகவே சேர்ந்துவிடுகிறது என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் நாம் உறுதி செய்யவேண்டும்.பொருளை உரியவரிடம் சேர்க்கப்பட்டு விட்ட்தா என்பதை கிளையில் அணுகி உறுதி செய்து கொள்ளலாம்.உறவினர்களாக இருந்தால் போன் மூலமும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
-

28 comments:

சென்னை பித்தன் said...

கூரியர் சர்விஸில் என்ன நடக்கிறது என்பதைநன்கு சொல்லியிருக்கிறீர்கள்.
நன்று.

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

கூரியர் சர்விஸில் என்ன நடக்கிறது என்பதைநன்கு சொல்லியிருக்கிறீர்கள்.
நன்று.

நன்றி அய்யா!

RAVICHANDRAN said...

// பெரும்பாலும் சரியாகவே சேர்ந்துவிடுகிறது என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் நாம் உறுதி செய்யவேண்டும்//

உஷார் செய்யும் பதிவு,நன்றி

RAVICHANDRAN said...

கூரியரில் TNPSC க்கு அப்ளிகேஷன் அனுப்பினால் வெளியே பெட்டியில் போடச்சொல்வார்கள்.சேர்ந்தது உறுதி இல்லை.சில தபால்களை ரிஜிஸ்டர் செய்து அனுப்பினால் சிறந்தது.

shanmugavel said...

@RAVICHANDRAN said...

// பெரும்பாலும் சரியாகவே சேர்ந்துவிடுகிறது என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் நாம் உறுதி செய்யவேண்டும்//

உஷார் செய்யும் பதிவு,நன்றி

THANKS SIR

shanmugavel said...

@RAVICHANDRAN said...

கூரியரில் TNPSC க்கு அப்ளிகேஷன் அனுப்பினால் வெளியே பெட்டியில் போடச்சொல்வார்கள்.சேர்ந்தது உறுதி இல்லை.சில தபால்களை ரிஜிஸ்டர் செய்து அனுப்பினால் சிறந்தது.

ஆமாம் சார்,பல கொரியர்காரர்கள் பல நேரத்துக்கு வருவார்கள்,பெட்டியில்தான் போடவேண்டியிருக்கும்,நன்றி

ADMIN said...

பயனுள்ள தகவல்.. பகிர்வுக்கு நன்றி..!!

இந்தப் பதிவு பிடித்திருந்தால் நீங்களும் ஓட்டு போடலாமே..

Unknown said...

பயனுள்ள தகவல்.. பகிர்வுக்கு நன்றி..!

அம்பலத்தார் said...

இவ்வளவு தில்லுமுல்லுக்கள் இதில் நடக்கிறதா? நம்பமுடியவில்லை.

ஸ்ரீராம். said...

கூரியர் சர்வீசில் எனக்கும் இது மாதிரி அனுபவங்கள் நிறைய உண்டு. எவ்வளவு ஒட்டி அனுப்பினாலும் பிரிக்கப் பட்டிருக்கும். மிகவும் தாமதமாகக் கிடைக்கும். ஆனால் சில சமயங்களில் வேறு வழியும் இல்லை!!

shanmugavel said...

@தங்கம்பழனி said...

பயனுள்ள தகவல்.. பகிர்வுக்கு நன்றி..!!

இந்தப் பதிவு பிடித்திருந்தால் நீங்களும் ஓட்டு போடலாமே..

நன்றி சார்!

shanmugavel said...

@சிநேகிதி said...

பயனுள்ள தகவல்.. பகிர்வுக்கு நன்றி..!

தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@அம்பலத்தார் said...

இவ்வளவு தில்லுமுல்லுக்கள் இதில் நடக்கிறதா? நம்பமுடியவில்லை.

தில்லுமுல்லுகளும் மனித வாழ்க்கையின் ஒரு பக்கம்தானே! நன்றி

shanmugavel said...

@ஸ்ரீராம். said...

கூரியர் சர்வீசில் எனக்கும் இது மாதிரி அனுபவங்கள் நிறைய உண்டு. எவ்வளவு ஒட்டி அனுப்பினாலும் பிரிக்கப் பட்டிருக்கும். மிகவும் தாமதமாகக் கிடைக்கும். ஆனால் சில சமயங்களில் வேறு வழியும் இல்லை!!

டெலிவரி பையன்கள் செய்யும் வேலைதான் நன்றி சார்.

ராஜா MVS said...

உஷாராக இருப்பது நல்லதுதான்...

நாம் கேட்டாலும் அலட்சியமாக தான் அவர்களிடமிருந்து பதில் வரும்...

மகேந்திரன் said...

இதேபோல நிறைய சம்பவங்கள் நண்பரே...
முகவரி தேடி அலைந்து டெலிவரி செயவதற்கு
மாச்சப்பட்டுபோயி ... வந்த பார்சலை அப்படியே திருப்பி அனுப்பும்
கூரியர் சர்விசும் இருக்கிறது...
இன்னும் தொழில்நுட்பம் அதில் முன்னேற வேண்டும்...
அருமையான விழிப்புணர்வு பதிவுகளுக்கு மிக்க நன்றி நண்பரே...

சசிகுமார் said...

நல்ல பதிவு சார்....

நிலாமகள் said...

கிடைத்த‌தா என‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ரை உறுதி செய்து கொள்வ‌தும், ம‌திப்புடைய‌ பொருட்க‌ளை அனுப்புவ‌தை கூடிய‌வ‌ரை த‌விர்ப்ப‌தும் அவ‌சிய‌மாகிற‌து. ப‌ய‌னுள்ள‌ எச்ச‌ரிக்கைப் ப‌திவு.

சாகம்பரி said...

இதுவரை ஒரே ஒரு முறைதான் எனக்கு இப்படி நிகழ்ந்திருக்கிறது. அதுவும் பெரிய அளவில் சர்வீஸ் இல்லாது கூரியர் அது. அதன் பிறகு நிரந்தரமாக ஒரே ஒரு கம்பெனி மூலம்தான் அனுப்புகிறேன். அனைவரும் கவனிக்க வேண்டிய பகிர்வு. நன்றி.

Sankar Gurusamy said...

தாங்கள் அனுப்ப வேண்டிய இடத்தில் அந்த கூரியர் சர்வீஸ் இருக்கிறதா என விசாரித்து அனுப்புவது சால சிறந்தது. இல்லாவிட்டால் பிரச்சினைதான்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

shanmugavel said...

@ராஜா MVS said...

உஷாராக இருப்பது நல்லதுதான்...

நாம் கேட்டாலும் அலட்சியமாக தான் அவர்களிடமிருந்து பதில் வரும்...

yes,thank you sir

shanmugavel said...

@மகேந்திரன் said...

இதேபோல நிறைய சம்பவங்கள் நண்பரே...
முகவரி தேடி அலைந்து டெலிவரி செயவதற்கு
மாச்சப்பட்டுபோயி ... வந்த பார்சலை அப்படியே திருப்பி அனுப்பும்
கூரியர் சர்விசும் இருக்கிறது...
இன்னும் தொழில்நுட்பம் அதில் முன்னேற வேண்டும்...
அருமையான விழிப்புணர்வு பதிவுகளுக்கு மிக்க நன்றி நண்பரே...

போகாமலே முகவரி சரியாக இல்லை என்று சொல்பவர்களும் உண்டு! நன்றி நண்பரே!

shanmugavel said...

@சசிகுமார் said...

நல்ல பதிவு சார்....

thanks sir

shanmugavel said...

@நிலாமகள் said...

கிடைத்த‌தா என‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ரை உறுதி செய்து கொள்வ‌தும், ம‌திப்புடைய‌ பொருட்க‌ளை அனுப்புவ‌தை கூடிய‌வ‌ரை த‌விர்ப்ப‌தும் அவ‌சிய‌மாகிற‌து. ப‌ய‌னுள்ள‌ எச்ச‌ரிக்கைப் ப‌திவு.

கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@சாகம்பரி said...

இதுவரை ஒரே ஒரு முறைதான் எனக்கு இப்படி நிகழ்ந்திருக்கிறது. அதுவும் பெரிய அளவில் சர்வீஸ் இல்லாது கூரியர் அது. அதன் பிறகு நிரந்தரமாக ஒரே ஒரு கம்பெனி மூலம்தான் அனுப்புகிறேன். அனைவரும் கவனிக்க வேண்டிய பகிர்வு. நன்றி.

அந்த ஊரில் சர்வீஸ் இருக்கிறதா என்று கேட்டு அனுப்புவதே சரி,நன்றி

shanmugavel said...

@Sankar Gurusamy said...

தாங்கள் அனுப்ப வேண்டிய இடத்தில் அந்த கூரியர் சர்வீஸ் இருக்கிறதா என விசாரித்து அனுப்புவது சால சிறந்தது. இல்லாவிட்டால் பிரச்சினைதான்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

ஆமாம் சார்,நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

உபயோகமான பதிவு.. போஸ்டல் டிபார்ட்மெண்ட் கூட போட்டி போட்டு முன்னேறியது ஆச்சரியமே

manimohan said...

hi
my sons AVIVA insurance cheque through BLUEDART courier. the courierman given to another place . afterthat i have received dublicate cheque one month back. it is horriable