Sunday, November 27, 2011

முடி கொட்டுகிறதா?

  எப்போதோ படித்த நகைச்சுவை."எங்கப்பாவுக்கு முடி வெட்ட நூறு ரூபா வாங்கினாங்கடா!"  " ஆமாம் ,ஒவ்வொரு முடியா தேடி வெட்டுறது கஷடமில்லையா? முடி கொட்டுவது அதிகரித்துவிட்டது என்பதை தோல் சிகிச்சை நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.முடி வெட்டுபவர் ஒருவர் சொன்னார்,''தலையில முடியே இருக்கமாட்டேங்குது சார்,கையில புடிச்சா நாலுமுடிதான் கிடைக்குது''. ஆனால் இது வழுக்கைத்தலை இல்லை.

வழுக்கை என்பது பெரும்பாலும்  பரம்பரையாக வரும் விஷயம்.முடியின் அடர்த்தி குறைந்து வருவதற்கான காரணங்களில் இன்றைய வாழ்க்கைமுறைக்கு பங்கு அதிகம்.தினமும் குறிப்பிட்ட அளவு முடி கொட்டி வளர்ந்து கொண்டிருப்பது அதன் இயல்பு.ஆனால் விளம்பரங்களில் வருவது போன்று சிலருக்கு சீப்பு முழுக்க ஒட்டிக்கொண்டு வரும்.முதல் காரணமாக மன நலத்தைச் சொல்லலாம்.

இன்று அதிகரித்து வரும் மன அழுத்தம் உடல் நலத்தை சிதைத்து வருகிறது.உடல் நலமும் மன நலமும் கெட்டால் தோலை அதிகம் பாதிப்பதால் முடி கொட்டுகிறது.அன்றாடம் நேரும் மனதுக்கு பிடிக்காத சூழ்நிலைகள் மனதிலும்,உடலிலும் பெரும் தாக்குதலை தொடுக்கிறது.ஹார்மோன்களில் பெரும் மாறுபாட்டை கொண்டு வருகிறது.ஏதேதோ நெருக்கடிகளால் சரியாகத் தூங்க முடியாத இரவுகளுக்கு அடுத்த நாள்களில் அதிகம் முடி கொட்டுவதை நீங்கள் பார்க்க முடியும்.

அடுத்ததாக அவரவர் முடிக்கு ஏற்ப ஷாம்புகளை உபயோகிப்பது.மருத்துவர் பரிந்துரையாக இருந்தால் நல்லது.அடிக்கடி ஷாம்புவை மாற்றுவதும்,நாம் பயன்படுத்துவது அப்போதைக்கு இல்லாவிட்டால் ஏதோவொன்றை வாங்கி பயன்படுத்துவதும் முடியின் ஆரோக்கியத்தை கெடுக்கும்.பொடுகுத்தொல்லை அதிகம் இருந்தாலும் முடி உதிரும்.இவற்றைப் போக்க நல்ல மருந்துகள் இருக்கின்றன.சில மருந்துகளும் முடியை பாதிக்கும்.

ஹார்மோன் கோளாறுகள் உள்ளவர்களுக்கு முடி கொட்டுவது இயல்பு.இதெல்லாம் மருத்துவக் காரணங்கள்.நம்முடைய தவறுகளால் முடியை இழப்பது என்பது போதுமான வைட்டமின்கள்,தாதுக்கள்,புரதங்கள் சேர்க்காத நிலையில் ஏற்படும்.உயிர்ச்சத்து அதிகமுடைய பழங்கள்,காய்கறிகளை சேர்ப்பது,போதுமான அளவு நீர் அருந்துவது,எட்டுமணி நேர தூக்கம் போன்றவை முடிக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை காக்கும்.

இரும்புச்சத்து பற்றாக்குறை முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லாவிட்டால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.பேரீச்சம்பழம்,அசைவ உணவுகள்,வெல்லம்,முருங்கைக்கீரை போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது.

இச்சத்து உடலில் சேர உணவு உண்ட ஒருமணி நேரத்திற்காவது காபி,தேநீர் தவிர்க்கலாம்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு போன்ற சி வைட்டமின் கொண்டவை இரும்புச்சத்து உடலில் கிரகிக்க அவசியம்.
-

27 comments:

SURYAJEEVA said...

biotin [vitamin b6] deficiency ஒரு காரணமாய் சொல்கிறார்கள்..

Jayadev Das said...

விவசாயத்தில் ஊருபட்ட உரம், பூச்சி மருந்தை போட்டு உணவை விஷத்துக்குச் சமமாக்கி விட்டு பின்னர் முடி கொட்டாம என்ன செய்யும்? இதை மட்டும் எந்த 'டாக்கு'டரும் ஒத்துக்கவே மாட்டான். ஏன்னா அவனுக்கு வருமானம் பெருக உதவுவதே இந்த உரமும் பூச்சி மருந்தும்தானே.... ஹா...ஹா... ஹா...

shanmugavel said...

@suryajeeva said...

biotin [vitamin b6] deficiency ஒரு காரணமாய் சொல்கிறார்கள்

ஆமாம்,தனிப்பட இல்லாமல் வைட்டமின்கள் தொகுப்பாகவே உண்கிறோம்.மற்ற உயிர்ச்சத்து,தாதுக்களுக்கும் பங்குண்டு.நன்றி

இராஜராஜேஸ்வரி said...

இரும்புச்சத்து உடலில் சேர உணவு உண்ட ஒருமணி நேரத்திற்காவது காபி,தேநீர் தவிர்க்கலாம்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு போன்ற சி வைட்டமின் கொண்டவை இரும்புச்சத்து உடலில் கிரகிக்க அவசியம்.

பயனுள்ள பகிர்வு..பாராட்டுக்கள்..

shanmugavel said...

@Jayadev Das said...

விவசாயத்தில் ஊருபட்ட உரம், பூச்சி மருந்தை போட்டு உணவை விஷத்துக்குச் சமமாக்கி விட்டு பின்னர் முடி கொட்டாம என்ன செய்யும்? இதை மட்டும் எந்த 'டாக்கு'டரும் ஒத்துக்கவே மாட்டான். ஏன்னா அவனுக்கு வருமானம் பெருக உதவுவதே இந்த உரமும் பூச்சி மருந்தும்தானே.... ஹா...ஹா... ஹா...

நீங்கள் சொல்வதும் சிந்தனைக்குரியது,நன்றி

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

இரும்புச்சத்து உடலில் சேர உணவு உண்ட ஒருமணி நேரத்திற்காவது காபி,தேநீர் தவிர்க்கலாம்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு போன்ற சி வைட்டமின் கொண்டவை இரும்புச்சத்து உடலில் கிரகிக்க அவசியம்.

பயனுள்ள பகிர்வு..பாராட்டுக்கள்..

தங்கள் கருத்துரைக்கு நன்றி

சுதா SJ said...

ரெம்ப நல்ல தகவல்கள் பாஸ்....
இன்றைக்கு பலருக்கு உதவியாய் இருக்கும் பதிவு...
எனக்கும்...... அவ்வ
அதித நித்திரை இன்மையால் இப்போ எனக்கும் முடிகொடுது பாஸ்....
உங்கள் பதிவை பார்த்து சுதாரித்துக்கொண்டேன்....
பயன் உள்ள பதிவு
தேங்க்ஸ் பாஸ்

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
நலமா?

மன அழுத்தத்தினால் எம் முடிக்கு ஏற்படும் பிரச்சினைகள்,
ஹார்மோனால் தலை முடிக்கு ஏற்படும் விளைவுகள்,
தலை முடி உதிர்வதை நிவர்த்தி செய்வதற்கான வழி முறைகள் என அசத்தலான தகவல்களை வழங்கியிருக்கிறீங்க.

நன்றி!

மகேந்திரன் said...

அன்பு நண்பரே,
இயல்பான நடையுடன் பயனுள்ள
பகிர்வு அளித்தமைக்கு நன்றிகள் பல.

shanmugavel said...

@துஷ்யந்தன் said...

ரெம்ப நல்ல தகவல்கள் பாஸ்....
இன்றைக்கு பலருக்கு உதவியாய் இருக்கும் பதிவு...
எனக்கும்...... அவ்வ
அதித நித்திரை இன்மையால் இப்போ எனக்கும் முடிகொடுது பாஸ்....
உங்கள் பதிவை பார்த்து சுதாரித்துக்கொண்டேன்....
பயன் உள்ள பதிவு
தேங்க்ஸ் பாஸ்

நன்றி நண்பரே!

shanmugavel said...

@நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
நலமா?

மன அழுத்தத்தினால் எம் முடிக்கு ஏற்படும் பிரச்சினைகள்,
ஹார்மோனால் தலை முடிக்கு ஏற்படும் விளைவுகள்,
தலை முடி உதிர்வதை நிவர்த்தி செய்வதற்கான வழி முறைகள் என அசத்தலான தகவல்களை வழங்கியிருக்கிறீங்க.

நன்றி!

நன்றி சகோ!

shanmugavel said...

@மகேந்திரன் said...

அன்பு நண்பரே,
இயல்பான நடையுடன் பயனுள்ள
பகிர்வு அளித்தமைக்கு நன்றிகள் பல.

தங்களுக்கும் நன்றி நண்பரே!

Mathuran said...

பயனுள்ள தகவல். முடிகொட்டுதலால் அவதிப்படும் பலருக்கு இது பயனுள்ளதாக இருக்கும். நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

மன நலம்...உடல் நலம்... இரு கண்களை போன்றது... அனைவருக்கும் அவசியமான பதிவு. நன்றி நண்பரே!

Sankar Gurusamy said...

மன அழுத்தத்தினாலும் , சத்துக் குறைபாடுகளாலும், ஹார்மோன் பிரச்சினைகளாலும் முடி கொட்டுவதைப் பற்றி அருமையாக விளக்கி இருக்கிறீர்கள். ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் இதை கண்டறிந்து செயல்படுத்தினால் நலம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

ஓசூர் ராஜன் said...

நுணுக்கமாக முடியைப் பற்றி ரொம்பவும் மெனக் கேட்டிருக்கிறீர்கள்! உங்க தலையில கை வைத்து சொல்லுங்க,நீங்க வழுக்கை இல்லையே?

ராஜா MVS said...

பயனுள்ள தகவல்...

சசிகுமார் said...

பயனுள்ள தகவல் சார்.. எல்லா திரட்டியிலும் ஓட்டு போட்டாச்சு...

ஸ்ரீராம். said...

நல்ல ஷாம்பூவாகப் போடுவது என்பதை விட, ஷாம்பூவையே நிறுத்தி விட்டு சிகைக்காய்ப் பொடி கூட உபயோகிக்கலாம். மன அழுத்தத்தால் முடி கொட்டும் என்பதும் உண்மைதான்.

மாலதி said...

சிந்தனைக்குரியதுபயனுள்ள தகவல்...,நன்றி

Unknown said...

முடியிழக்கும் மன்னர்களுக்கு
முன்னேற வழி சொன்னீர்
நல்ல பதிவு
நன்று நன்றி!

புலவர் சா இராமாநுசம்

சாகம்பரி said...

முடி பற்றிய பகிர்வு முக்கியமானது. இன்றைய இளைஞர்கள் நிறைய முடிசூடா மன்னராகிக் கொண்டு வருகின்றனர். முக்கியமாக ஹேர்லைன் எனப்படும் முன் நெற்றி வரிசை முடிகளை பறிகொடுப்பதுவும் காரணம். நன்றி.

shanmugavel said...

@ஓசூர் ராஜன் said...

நுணுக்கமாக முடியைப் பற்றி ரொம்பவும் மெனக் கேட்டிருக்கிறீர்கள்! உங்க தலையில கை வைத்து சொல்லுங்க,நீங்க வழுக்கை இல்லையே

ஹேஹே என் தலை வழுக்கை இல்லை சார்! பரம்பரையாகவும் இல்லை நன்றி

shanmugavel said...

@ஸ்ரீராம். said...

நல்ல ஷாம்பூவாகப் போடுவது என்பதை விட, ஷாம்பூவையே நிறுத்தி விட்டு சிகைக்காய்ப் பொடி கூட உபயோகிக்கலாம். மன அழுத்தத்தால் முடி கொட்டும் என்பதும் உண்மைதான்.

ஷாம்புக்களைவிட சிகைக்காய் நல்லது என்பதே என்னுடைய கருத்தும் நன்றி

shanmugavel said...

@சாகம்பரி said...

முடி பற்றிய பகிர்வு முக்கியமானது. இன்றைய இளைஞர்கள் நிறைய முடிசூடா மன்னராகிக் கொண்டு வருகின்றனர். முக்கியமாக ஹேர்லைன் எனப்படும் முன் நெற்றி வரிசை முடிகளை பறிகொடுப்பதுவும் காரணம். நன்றி.

ஆமாம்,பொதுவாக முடிபராமரிப்புக்கு அவ்வளவாக முக்கியம் தருவதாக தெரியவில்லை,நன்றி

shanmugavel said...

@மதுரன்
@திண்டுக்கல் தனபாலன்
@சங்கர் குருசாமி
@ராஜாMVS
@சசிகுமார்
@மாலதி
@புலவர் சா.ராமானுசம்

தங்கள் கருத்துரைகளுக்கு நன்றி

துரைடேனியல் said...

Arockiamana alosanaigal. Nanri.
TM 11.