Thursday, January 5, 2012

எமன் அலையும் சாலைகள்.

 சாலை விபத்துக்களுக்கு தனிக் குணம் உண்டு.அநியாய மரணம் என்பார்கள்.கேள்விப்படும் அனைவரிடமும் அதிர்ச்சியை உருவாக்கும்.பலர் கேள்விப்பட்டிருப்பார்கள்.சில விபத்துக்களை நேரில் பார்த்திருப்பார்கள்.நான் பார்த்த விபத்துக்கள் எத்தனை இருக்கும் என்று நினைவில் இல்லை.இந்தியாவின் நீண்ட தேசிய நெடுஞ்சாலையின் அருகே அமர்ந்திருக்கிறது எங்கள் கிராமம்.நாளிதழ் படிக்க தினமும் நெடுஞ்சாலை அருகில் உள்ள டீக்கடைக்கு வரவேண்டும்.
ஒரு நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கும் சாலை.பல மாநிலத்து வாகனங்களும் இருக்கும்.விபத்துகளும் பலவகைப் பட்டதாக இருக்கும்.சின்னஞ்சிறு குழந்தை முதல் ஒரே நேரத்தில் குடும்பமாக இருபது பேர் பலியான விபத்து வரை நேரில் பார்த்திருக்கிறேன்.என்னுடைய நெருங்கிய நண்பர்களை விபத்தில் பறி கொடுத்த கொடூர சம்பவங்களை  சந்தித்ததுண்டு.கால் மட்டும் தனியாக,முகம் சிதைந்து தலை நசுங்கி,சதைத்துண்டுகளாக என்று இப்போது நினைத்தாலும் கஷ்டமாக இருக்கிறது.
ஏராளமான விபத்துகளை நேரில் கண்ட அனுபவத்திலிருந்து அதற்கான காரணங்களையும் விவாதிப்பார்கள்.வேகமாக செல்லும் ஒரு லாரியிலிருந்து தம்ளர் ஒன்று கீழே விழுந்து விட்டது.கிளீனர் ஏதாவது சாப்பிட்டுவிட்டு கையை கழுவியிருக்க வேண்டும்.தம்ளர் விழுந்துவிட்டது என்று பிரேக் போட,அடுத்து வந்து கொண்டிருந்த லாரி வேகமாக மோதியது.நசுங்கிப்போயிருந்த உடல்களை சிரமப்பட்டு வெளியே எடுத்தார்கள்.
நண்பர் ஒருவர் நகரப் பேருந்தில் இருந்து இறங்கி எதிர்புறம் போனார்.வேகமாக வந்த லாரியை கவனிக்கவில்லை.அவரது முகத்தை பார்க்க முடியவில்லை.எதுவும் மிஞ்சவில்லை.சாலையிலேயே போஸ்ட்மார்ட்டம் செய்தார்கள்.கவனக்குறைவால் நேர்ந்த விபத்து.புத்தாண்டு நள்ளிரவு கேக் வெட்ட தயாராக இருந்தோம்.திடீர் சத்தம் ஒன்று உலுக்கியது.அருகே போய் பார்த்தால் உடலில் காயங்களுடன் விழுந்து கிடந்தார்.குடித்திருந்தார்.பேச்சு குளறிக் கொண்டிருந்தது.

சென்ற மாதம் நகரில் திடீரென்று மாடு குறுக்கே வந்து விட்டது.மாட்டின் மீது மோதாமல் இருக்க முயன்று கீழே விழுந்தார்.திருப்பத்தில் நல்ல வாகன ஓட்டிகள் சிலர் ஹாரன் கொடுப்பார்கள்.மாடுகளுக்கு அப்படி சத்தம் எழுப்ப ஏதாவது வழியிருக்கிறதா தெரியவில்லை.செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஒட்டுவதால் விபத்து ஏற்படும் என்பதையும் நேரில் பார்த்தேன்.இரண்டு நண்பர்கள் ஒரே இடத்தில் பலியானார்கள்.இன்னமும் சாலைகளில் செல்போனை காதில் வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
த்ரில்லிங் என்று வேகம் கூட்டி விளையாடுபவர்களை பார்க்கிறேன்.விதிகளை காற்றில் பறக்கவிட்டு அலைபவர்களை பார்க்கிறேன்.நேருக்கு நேராக வாகனங்கள் மோதிக் கொள்வதை பார்த்துவிட்டு சிலர் சொன்னார்கள்.''நான்கு வழி சாலை வந்தால் விபத்துக்கள் குறைந்துவிடும்.'' அப்படியொன்றும் குறையவில்லை.அகன்ற சாலைகள் எமனுக்கும்  பிடித்திருக்கிறது.
-

29 comments:

சென்னை பித்தன் said...

சரியாகச் சொன்னீர்கள்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உண்மை தான்

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

சரியாகச் சொன்னீர்கள்!

நன்றி அய்யா!

shanmugavel said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உண்மை தான்

நன்றி அய்யா!

RAVICHANDRAN said...

அனைவரும் விழிப்புணர்வு பெறவேண்டும்.சாலை விதிகளை கடைபிடிக்கவேண்டும்.நல்ல பதிவு.

RAVICHANDRAN said...

ரோட்டில் மாடுகள் அலைவது நம்ம ஊர்தான்.செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுவோர் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.எப்போது திருந்துவார்கள்?

senthil velayuthan said...

அகன்ற சாலைகள் பிரச்சனை இல்லை.வாகன ஓட்டிகளுக்கு விதிமுறைகள் தெரிவதில்லை,தெரிந்தவர்களும் பின்பற்றுவதில்லை,அது தான் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம்.

சுதா SJ said...

சாலை விபத்து அதிகம் இந்தியாவில்தான் பயங்கரமாக நடக்குது :(

shanmugavel said...

@RAVICHANDRAN said...

அனைவரும் விழிப்புணர்வு பெறவேண்டும்.சாலை விதிகளை கடைபிடிக்கவேண்டும்.நல்ல பதிவு.

நன்றி சார்!

shanmugavel said...

@RAVICHANDRAN said...

ரோட்டில் மாடுகள் அலைவது நம்ம ஊர்தான்.செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுவோர் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.எப்போது திருந்துவார்கள்?

திருடனாய் பார்த்து....

நன்றி

shanmugavel said...

@senthil velayuthan said...

அகன்ற சாலைகள் பிரச்சனை இல்லை.வாகன ஓட்டிகளுக்கு விதிமுறைகள் தெரிவதில்லை,தெரிந்தவர்களும் பின்பற்றுவதில்லை,அது தான் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம்.

உண்மை,விதிகளுக்கும் நமக்கும் ரொம்பதூரம்.நன்றி

shanmugavel said...

@துஷ்யந்தன் said...

சாலை விபத்து அதிகம் இந்தியாவில்தான் பயங்கரமாக நடக்குது :(

ஆமாம் சார்! நன்றி

சத்ரியன் said...

மனிதர்களின் பொறுப்பற்ற மனப்போக்கு தான் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாயிருக்கிறது.

நன்கு படித்தவர்களும் கூட சாலை விதிகளை பின்பற்றுவதே இல்லை.

Sankar Gurusamy said...

விபத்துகள் பெரும்பாலும் கவனக் குறைவாலும், சிலரின் பொறுப்பற்ற செயல்களாலுமே ஏற்படுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

மகேந்திரன் said...

சாலைகள் அகன்றாலும் குறுகினாலும்
நம்ம பாதுகாப்பு நம்ம தான் பார்த்துக்கணும்.
என்னய்யா அவசரம்..
எமன் கிட்டே போறதுக்கு இவ்வளவு அவசரமா....
கொஞ்சம் நிதானமா போனா
நாம என்ன குறைஞ்சா போயிருவோம்...

நல்ல விழிப்புணர்வு கட்டுரை நண்பரே.

ஓசூர் ராஜன் said...

சாலைகள் பலருக்கும் சாவு காலமாக ஆவதற்கு காரணமே கவன குறைவுதான்!

துரைடேனியல் said...

Arumaiyana Vizhippunarvu Pathivu Sago. Naanum sila vipathukkalai paarthu kanneer vittu irukkiren. Cell pesik kondu vaganam ottuvathu perum aapathu thaan.

TM 9.

அம்பலத்தார் said...

நல்ல விழிப்புணர்வுப்பதிவு. பெரும்பாலான விபத்துக்களிற்கு சாரதிகளின் கவனக்குறைவே காரணம்

Jana said...

இப்போதெல்லாம் வாகனத்தை வெளியில் எடுக்கும்போதே நாம் தசாவதானியாக கண்டிப்பாக மாறவேண்டியே உள்ளது தவிர்க்கமுடியாத ஒன்றே. தேவையில்லாத வேகம், தேவையில்லாத பார்க்கிங், முறையற்ற சிக்னல் என்பவை முக்கியமாக தவிர்க்கபடவேண்டியவை. ஒரு செக்கனில் ஏற்படும் கவலையீனத்தால் ......... அனைத்துமே முடிந்துவிடும் இல்லையா? கிண்டியில் நெருக்க நேராக நான் பார்த்த ஒரு கொரவிபத்து இன்றும் என்னை திடுக்கிடவைக்கும்...
அவதானம் .... மிகத்தேவையான பதிவு.. நன்றி

வடுவூர் குமார் said...

இன்னும் கொஞ்ச ஆண்டுகளில்(சென்னையில்) காதுக்கு வைத்தியம் செய்பவர்க்கு செல்வாக்கு அதிகமாகும்...சாலைகளில் அவ்வளவு ஹாரன் சத்தம்.பலர் செவிடாவது நிச்சயம்.

shanmugavel said...

@சத்ரியன் said...

மனிதர்களின் பொறுப்பற்ற மனப்போக்கு தான் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாயிருக்கிறது.

நன்கு படித்தவர்களும் கூட சாலை விதிகளை பின்பற்றுவதே இல்லை.

விதிகள் மனிதர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது,நன்றி

shanmugavel said...

@Sankar Gurusamy said...

விபத்துகள் பெரும்பாலும் கவனக் குறைவாலும், சிலரின் பொறுப்பற்ற செயல்களாலுமே ஏற்படுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி..

ஆமாம் சங்கர் நன்றி

shanmugavel said...

@மகேந்திரன் said...

சாலைகள் அகன்றாலும் குறுகினாலும்
நம்ம பாதுகாப்பு நம்ம தான் பார்த்துக்கணும்.
என்னய்யா அவசரம்..
எமன் கிட்டே போறதுக்கு இவ்வளவு அவசரமா....
கொஞ்சம் நிதானமா போனா
நாம என்ன குறைஞ்சா போயிருவோம்...

நல்ல விழிப்புணர்வு கட்டுரை நண்பரே.

நன்றி மகேந்திரன்.

shanmugavel said...

@ஓசூர் ராஜன் said...

சாலைகள் பலருக்கும் சாவு காலமாக ஆவதற்கு காரணமே கவன குறைவுதான்!

முக்கிய காரணம்தான் நன்றி

shanmugavel said...

@துரைடேனியல் said...

Arumaiyana Vizhippunarvu Pathivu Sago. Naanum sila vipathukkalai paarthu kanneer vittu irukkiren. Cell pesik kondu vaganam ottuvathu perum aapathu thaan.

நன்றி சகோ!

shanmugavel said...

@அம்பலத்தார் said...

நல்ல விழிப்புணர்வுப்பதிவு. பெரும்பாலான விபத்துக்களிற்கு சாரதிகளின் கவனக்குறைவே காரணம்

நன்றி அய்யா!

shanmugavel said...

@Jana said...

இப்போதெல்லாம் வாகனத்தை வெளியில் எடுக்கும்போதே நாம் தசாவதானியாக கண்டிப்பாக மாறவேண்டியே உள்ளது தவிர்க்கமுடியாத ஒன்றே. தேவையில்லாத வேகம், தேவையில்லாத பார்க்கிங், முறையற்ற சிக்னல் என்பவை முக்கியமாக தவிர்க்கபடவேண்டியவை. ஒரு செக்கனில் ஏற்படும் கவலையீனத்தால் ......... அனைத்துமே முடிந்துவிடும் இல்லையா? கிண்டியில் நெருக்க நேராக நான் பார்த்த ஒரு கொரவிபத்து இன்றும் என்னை திடுக்கிடவைக்கும்...
அவதானம் .... மிகத்தேவையான பதிவு.. நன்றி

நன்றி ஜனா!

shanmugavel said...

@வடுவூர் குமார் said...

இன்னும் கொஞ்ச ஆண்டுகளில்(சென்னையில்) காதுக்கு வைத்தியம் செய்பவர்க்கு செல்வாக்கு அதிகமாகும்...சாலைகளில் அவ்வளவு ஹாரன் சத்தம்.பலர் செவிடாவது நிச்சயம்.

ஆமாம் அய்யா! பெருகி வருகிறது,தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
இன்றளவில் விபத்துக்களுக்கு மொபைல் போனும் ஓர் காரணம், சாலைகளின் அகலத்தினை விட, எம் மன அகலத்தினை ஒருமைப்படுத்தி வீதியில் கவனத்தினைச் செலுத்தி வண்டி ஓட்டினால் இயமனுக்கு பை பை சொல்லலாம்.

பிற் குறிப்பு: இப் பதிவில் எழுதியிருப்பது போன்று ஏனைய பதிவுகளிலும் நேர்த்தியான பந்தி அமைப்பினை நீங்கள் கையாண்டால் நன்றாக இருக்கும். ஒரு வாசகனின் வேண்டுகோள்.