Friday, January 6, 2012

நாலு பேர் முன்னால் பேச ஏனிந்த பயம்?

போபியா(phobia) என்று சொல்கிறோம்.சரியான காரணமின்றி அச்சப்படுவதை குறிப்பிடலாம்.இதில் பல வகை உண்டு.நாம் ஒவ்வொருவரும் கவனித்திருப்போம்.சிலர் மட்டும் ஒதுங்கியே இருப்பார்கள்.நான்கு பேர் கூடி நின்று பேசிக்கொண்டிருக்கும் போது எதுவும் பேச மாட்டார்கள்.திருமணங்களை,விழாக்களை தவிர்ப்பார்கள்.எதிரில் இருப்பவர் கண்களை நேருக்கு நேராக பார்த்து பேசுவது இவர்களுக்கு ஆகாத காரியம்.மற்றவர் முன்னால் செல்போனில் கூட பேச மாட்டார்கள்.
                               வளரிளம் பருவத்தில்தான் இந்த பிரச்சினைகள் ஆரம்பிக்கிறது.குழந்தையிலிருந்து வெளியில் வந்து எல்லாவற்றையும் ஒப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்.ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான தருணம்.மற்றவர்கள் போல நாம் இல்லை என்று மனம் விழ,நண்பர்களின் கேலியும்,கிண்டலும் நிலையை இன்னும் மோசமாக்கும்.கல்லூரியில் இருந்தாலும் விவாதங்களில் பங்கு கொள்ள மாட்டார்கள்.
                               சிலருக்கு இந்த பிரச்சினை விலகுவதேயில்லை.இம்மாதிரி உள்ள பெரும்பாலானோருக்கு வேறு சில மனநல பாதிப்புகளும் இருக்கும் என்கிறார்கள்.பள்ளி,கல்லூரிகளில் விஷயம் தெரிந்த ஆசிரியர் அமைந்தால் இத்தகைய மாணவர்களுக்கு ஓரளவு உதவ முடியும்.கலந்து பழகும் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம்,உணர்வு ரீதியாக உதவி செய்து இக்குறையை போக்க முயற்சி செய்வார்.
                               சுற்றி உள்ளவ்ர்கள் புரிந்து கொண்டால் உதவ முடியும்.இது அவருக்கு நல்ல அறிகுறி அல்ல! மேலும் மனம் சார்ந்த பாதிப்புகளுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்பும் இருக்கிறது.தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது,டென்ஷன்,கவலை,பாதுகாப்பில்லாமல் உணர்வது,நடுக்கம்,முடிவெடுப்பதில் தாமதம் போன்ற அறிகுறிகளை இவர்களிடம் பார்க்க முடியும்.
                                 மனம் சீரற்று இருப்பதால் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும்.எளிதில் சோர்வடைதல்,நாடித்துடிப்பு அதிகரிப்பது,உடலில் சில இடங்களில் வலி,முழுமையானகவனமின்றி இருப்பது,ரத்த அழுத்தம் கூடுவது,நினைவாற்றல் குறைவு ஆகிய உடல் நல பாதிப்புகளும்ம் இருக்கும்.மேலே சொல்லப்பட்டவை பொதுவான விஷயங்கள்.வயதிற்கேற்ப,ஒவ்வொருவருடைய சூழல் பொறுத்து அறிகுறிகளில் மாற்றம் இருக்கலாம்.
                                  இப்படி நாலு பேர் முன்னால் முகத்தை காட்ட அஞ்சுவதை சோஷியல் போபியா(social phobia) என்பார்கள்.கேலி ,கிண்டல் போன்றவை இவர்களுக்கு பெரும் சங்கட்த்தை உருவாக்கும்.அதிக கஷ்டமாக உணர்வார்கள்.நண்பர்கள் மேலும் இதை சிக்கலாக்குவதால் இன்னும் ஒதுங்கியே போவார்கள்.சிலருக்கு இது தொடர்ந்து பிரச்சினையாகவே இருந்து கொண்டிருக்கும்.
                                  இப்பிரச்சினைக்கான காரணங்கள் என்ன? இவற்றை எதிர்கொள்வது எப்படி? குடும்ப உறுப்பினர்களாக,நண்பர்களாக நாம் எப்படி உதவ முடியும்? இன்னுமொரு பதிவில் அலசுவோம்.
-

27 comments:

சென்னை பித்தன் said...

அலசுங்கள்.காத்திருக்கிறேன்.
எனக்கும் சென்னைக்குப் படிக்க வரும் வரை இந்த ஃபோபியா ஓரளவுக்கு இருந்தது.

துரைடேனியல் said...

Arumai. Naanum ithai kurithu oru virivaana pathivai ittirukkiren Sago.

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

அலசுங்கள்.காத்திருக்கிறேன்.
எனக்கும் சென்னைக்குப் படிக்க வரும் வரை இந்த ஃபோபியா ஓரளவுக்கு இருந்தது.

நன்றி அய்யா!

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

அலசுங்கள்.காத்திருக்கிறேன்.
எனக்கும் சென்னைக்குப் படிக்க வரும் வரை இந்த ஃபோபியா ஓரளவுக்கு இருந்தது.

நன்றி அய்யா!

shanmugavel said...

@துரைடேனியல் said...

Arumai. Naanum ithai kurithu oru virivaana pathivai ittirukkiren Sago.

நான் படித்தேனா நினைவில்லை.ஒன்று போல இருக்கிறதா சொல்லவில்லையே? நன்றி சகோ!

Gobinath said...

எனக்கும் போபியா(phobia) பிரச்சினை ஓரளவு உள்ளது.அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

shanmugavel said...

@Loganathan Gobinath said...

எனக்கும் போபியா(phobia) பிரச்சினை ஓரளவு உள்ளது.அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

உங்கள் சந்தேகம் தீர சொல்லிவிடலாம்,நன்றி

தனிமரம் said...

வணக்கம் ஐயா!
நலம்தானே??
புத்தாண்டு வாழ்த்துக்கள் பிந்திவிட்டேன் கொஞ்சம் தேடல் என்பதால்!
நல்ல அலசல் இந்த போபிய நோய் பற்றி தொடருங்கள் பின் வருகின்றேன்!

சுதா SJ said...

பாஸ் எனக்கு இந்த பிரச்சனை இல்லை பாஸ் :)))))

ஆனால் இப்படியான பல பேரை படிக்கும் காலத்தில் பாத்திருக்கேன்.... மிகுதிக்காய் அறிய ஆவலாய் காத்திருக்கேன்

shanmugavel said...

@தனிமரம் said...

வணக்கம் ஐயா!
நலம்தானே??
புத்தாண்டு வாழ்த்துக்கள் பிந்திவிட்டேன் கொஞ்சம் தேடல் என்பதால்!
நல்ல அலசல் இந்த போபிய நோய் பற்றி தொடருங்கள் பின் வருகின்றேன்!

வருக அய்யா! நலம்,நன்றி

shanmugavel said...

@துஷ்யந்தன் said...

பாஸ் எனக்கு இந்த பிரச்சனை இல்லை பாஸ் :)))))

ஆனால் இப்படியான பல பேரை படிக்கும் காலத்தில் பாத்திருக்கேன்.... மிகுதிக்காய் அறிய ஆவலாய் காத்திருக்கேன்

நன்றி துஷ்யந்தன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அவசிய பதிவு.

shanmugavel said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அவசிய பதிவு.

நன்றி சார்.

Mathuran said...

இப்படி சோசியல் போபியா உள்ள பலரை அவதானித்திருக்கிறேன். சமூகத்திற்கும் தங்களுக்கும் சம்மந்தமே இல்லாததுபோல ஒதுங்கியே இருப்பார்கள்...

அடுத்த பகுதியை எதிர்பார்த்திருக்கிறேன்..

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,

பேச்சுத் தடை பற்றிய காரணங்களை விளக்கும் அருமையான பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

சசிகுமார் said...

வழக்கம் போல நல்ல பதிவு சார்...

பாலா said...

இது மனதில் இருக்கும் ஒரு விட தாழ்வு மனப்பான்மையால் வருவது. சிறிது சிறிதாகத்தான் போக்க முடியும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான அலசல், பலருக்கும் உபயோகமாக இருக்கும். தனக்கு அந்தப் பிரச்சனை இல்லை என்றாலும், நண்பர்களுக்கு இருந்தால் அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள்லாம் என்று தெரிந்து கொள்ளலாம், அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறோம்!

shanmugavel said...

@மதுரன் said...

இப்படி சோசியல் போபியா உள்ள பலரை அவதானித்திருக்கிறேன். சமூகத்திற்கும் தங்களுக்கும் சம்மந்தமே இல்லாததுபோல ஒதுங்கியே இருப்பார்கள்...

அடுத்த பகுதியை எதிர்பார்த்திருக்கிறேன்..

நன்றி மதுரன்.

shanmugavel said...

@நிரூபன் said...

வணக்கம் அண்ணா,

பேச்சுத் தடை பற்றிய காரணங்களை விளக்கும் அருமையான பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

நன்றி நிரூ!

shanmugavel said...

@சசிகுமார் said...

வழக்கம் போல நல்ல பதிவு சார்...

நன்றி சார்.

shanmugavel said...

@பாலா said...

இது மனதில் இருக்கும் ஒரு விட தாழ்வு மனப்பான்மையால் வருவது. சிறிது சிறிதாகத்தான் போக்க முடியும்.

நன்றி பாலா!

shanmugavel said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான அலசல், பலருக்கும் உபயோகமாக இருக்கும். தனக்கு அந்தப் பிரச்சனை இல்லை என்றாலும், நண்பர்களுக்கு இருந்தால் அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள்லாம் என்று தெரிந்து கொள்ளலாம், அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறோம்!

நன்றி சார்,திங்களன்று பதிவிடுகிறேன்.

ஹேமா said...

வணக்கம் ஐயா.இப்போதான் உங்கள் பதிவுகளைப் பார்க்கிறேன்.சில அதிசயமாகவும்,சில பிரயோசனமாகவும் இருக்கு.தொடர்ந்தும் அலசுங்கள்.தேடுதலோடு வருவேன்.நன்றி !

Jana said...

இந்த குணங்களுடன் எங்களுக்கும் ஒரு நண்பன் இருந்தான், நாம் அவனை முன்னுக்கு கொண்டுவர பல முயற்சிகள் எடுத்தோம் அனால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. அனால் அவனின் மரணம் தற்கொலையில் முடிந்ததுதான் எனக்கு வியப்பாக இருக்கின்றது இப்போதும். இந்த பதிவை வாசிக்க வாசிக்க எனக்கு அவன் நினைவகளே கண்ணில் வரகின்ற||து

Unknown said...

படித்துத்துப் பலரும் பயனடையும்
பதிவு தொடருங்ஙள்!

புலவல் சா இராமாநுசம்

Sankar Gurusamy said...

நீங்கள் சொல்லி இருக்கும் பல விஷயங்களை சிறு வயதில் அனுபவித்திருக்கிறேன். தொடருங்கள். காத்திருக்கிறேன்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/