Monday, January 30, 2012

சப்பாத்தியா? சாதமா?


                           நீரிழிவு அதிகரித்து வரும் நிலையில் கோதுமைக்கு வரவேற்பு கூடி வருகிறது.எண்ணெய் இல்லாத சப்பாத்தி இரண்டு மட்டும் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.சப்பாத்திக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சக்தி எதுவும் இல்லை.ஆனாலும் சாதம் வேண்டாம்,சப்பாத்தி போதும் என்கிறார்கள்.பிரதான உணவு வகைகளை பொருத்தவரை கோதுமையும் அரிசியும்தான்.தென் தமிழ்நாட்டில் அரிசிதான் பிரதான உணவு.வட நாட்டுக்காரன் கோதுமை தின்கிறான்,பலசாலியாக இருக்கிறான்.நாம் அரிசி சாப்பிட்டு புத்திசாலியாக இருக்கிறோம் என்பதை யாரோ சொன்னார்கள்.

                            உடல் பலத்திற்கும் மூளைக்கும் கூட இவற்றில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.அரிசி உணவே கிராமங்களுக்கு பசுமைப்புரட்சிக்குப்பின் அறிமுகம் ஆனதென்று சொல்பவர்கள் உண்டு.சில பகுதிகள் தவிர நெல் விளைச்சல் அபூர்வம்.ராகி,வரகு,கம்பு போன்றவைகளே முக்கிய உணவாக இருந்து வந்திருக்கிறது.ராகி பற்றி  ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.இட்லி,தோசை எல்லாம் பண்டிகை காலங்களுக்கு செய்வார்கள் என்று ஒரு முதியவர் சொன்னார்.
                                   முதியவர் சொன்னது உண்மைதான்.நெல் விளைச்சலுக்கு நிறைய தண்ணீர் வேண்டும்.தமிழ்நாட்டில் அதிகமும் புன்செய் நிலங்கள்.ராகி போன்றவை அப்படி பயிரிடுவார்கள்.நெல்லுக்கு தராத முக்கியத்துவத்தை ராகிக்கு தருவதை நான் பார்த்திருக்கிறேன்.அறுவடைக்குப்பின் களத்தில் இருந்து எடுக்கும்போது பூஜை செய்த பிறகே வீட்டுக்கு எடுப்பார்கள்.இப்போது அரிசி உணவுகளே முக்கிய உணவுகளாகிவிட்டன.பள்ளிகளின் மதிய உணவில் கோதுமை இடம் பெற்றிருந்த காலம் உண்டு.பிறகு காணாமல் போய்விட்ட்து.

                                 சாதம் தவிர்த்து சப்பாத்தி சாப்பிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்த முடியுமா என்ன? எனக்கு ரவிச்சந்திரன் என்றொரு நண்பர்.ஏதாவது ஒரு பத்திரிகையை நட்த்திக்கொண்டிருப்பார்.சிறிய அளவில் சில ஆயிரம் பிரதிகள் போடுவார்.வலைப்பதிவையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார். பதிவெழுதலாம் என்றிருக்கிறேன் என்று சொன்னதும் நான் வேண்டாம் சொன்னேன்.ஆளுங்கட்சியை சார்ந்தவர் என்பதால் நடுநிலையோடு செயல்படுவது சாத்தியமாக இருக்காது.நீரிழிவு அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அப்போது போய் பார்க்கமுடியவில்லை.
                                  சில வாரங்கள் கழித்து அவருடைய வீட்டுக்குப்போனேன்.எனக்கு சம்மாக சோற்றை உள்ளே தள்ளுவதை பார்த்து எனக்கு ஆச்சர்யம்.மட்டன்,கூடவே ஆம்லெட்.இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதாக சொன்னார்.நிறைய பேர் சப்பாத்தி தான் பெஸ்ட் என்கிறார்களே? உனக்கு அதில் உடன்பாடு இல்லையா? என்று கேட்டேன்.” ”அதெல்லாம் சும்மா! அடிப்படையில் கோதுமைக்கும் அரிசிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.சாதம் என்றால் அதிகம் சாப்பிடுவார்கள்,சப்பாத்தி என்றால் குறைவாக சாப்பிடுவார்கள் அவ்வளவுதான்”.அவர் சொன்னது நிஜம்தான்.

                                 கோதுமை,அரிசி இரண்டில் உள்ள சத்துக்களிலும் பெரிய வித்தியாசம் இல்லை.ஓரிரு சதவீத கார்போஹைட்ரேட் மட்டுமே வித்தியாசம்.பெரும்பான்மையாக சோற்றை சரியாக மெல்லாமல் உள்ளே தள்ளுகிறோம்.அளவும் அதிகமாக இருக்கும்.அதிக கலோரிகளை எரிக்க வேண்டி இருக்கும்.சப்பாத்தி இரண்டு சாப்பிட்டாலே அதிக நேரம் சாப்பிட்டுக்கொண்டிருப்பது போலத்தோன்றும்.நீரிழிவு நோயாளிகளை சப்பாத்தி சாப்பிட சொல்வதன் காரணம் இவ்வளவுதான்.
-

37 comments:

சென்னை பித்தன் said...

உண்மை.அரிச்க்கும் கோதுமைக்கும் பெரிய வேறுபாடு இல்லைதான்.
நல்ல பகிர்வு.

அமர பாரதி said...

உண்மைதான். அரிசிக்கும் கோதுமைக்கும் கார்போஹைட்ரேட் வித்தியாசம் அதிகமில்லை. ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. அரிசி இரத்த சர்க்கரை அளவை வேகமாக ஏற்றும், கோதுமை அப்படியல்ல. கோதுமையில் இருக்கும் நார்ச்சத்து உடனடியக ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பை தடுக்கிறது. இதுதான் நீரிழிவு நோயாளிகளுக்கு பயன் படும் ஒரு விஷயம். மற்ற படி இன்சுலின் ஊசி போட்டால் சர்க்கரை அளவு இன்னும் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும். (இதை சொல்லும் நான் கடந்த 25 வருடமாக இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டிருக்கும் ஒரு நீரிழிவு நோயாளி)

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

உண்மை.அரிச்க்கும் கோதுமைக்கும் பெரிய வேறுபாடு இல்லைதான்.
நல்ல பகிர்வு.

நன்றி அய்யா!

shanmugavel said...

@அமர பாரதி said...

உண்மைதான். அரிசிக்கும் கோதுமைக்கும் கார்போஹைட்ரேட் வித்தியாசம் அதிகமில்லை. ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. அரிசி இரத்த சர்க்கரை அளவை வேகமாக ஏற்றும், கோதுமை அப்படியல்ல. கோதுமையில் இருக்கும் நார்ச்சத்து உடனடியக ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பை தடுக்கிறது. இதுதான் நீரிழிவு நோயாளிகளுக்கு பயன் படும் ஒரு விஷயம். மற்ற படி இன்சுலின் ஊசி போட்டால் சர்க்கரை அளவு இன்னும் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும். (இதை சொல்லும் நான் கடந்த 25 வருடமாக இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டிருக்கும் ஒரு நீரிழிவு நோயாளி)

ஆமாம்,இந்த ஃபைபர் விஷயம் விடுபட்டுவிட்டது.தங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி..

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி..

தங்கள் கருத்துரைக்கு நன்றி

Jayadev Das said...

\\அரிசிக்கும் கோதுமைக்கும் கார்போஹைட்ரேட் வித்தியாசம் அதிகமில்லை.\\ இருந்த போதிலும் கோதுமை முழு தானியமாக [whole grain] சப்பாத்தியில் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் அரிசி பாலிஷ் செய்யப் பட்டது. ஆகையால் நிச்சயம் சப்பாத்தி அரிசி சாதத்தை விட சிறந்ததுதான். கைக்குத்தல் அரிசி [அல்லது பிரவுன் நிற அரிசி] பாலிஷ் செய்யப் பட்ட அரிசியை விடச் சிறந்தது. இக்காலத்தில் நீரிழிவு நோய்க்கு மூல காரணம் வெறும் அரிசி கோதுமை மட்டுமல்ல. இயற்க்கை முறை விவசாயத்தை விட்டு விட்டு செயற்கை உரங்களையும், பூச்சிமருந்துகளையும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை அளவை விட பலமடங்கு அதிகமாகப் பயன்படுத்துவதுதான். இதனால் தாய்ப்பாலே 80 % விஷமாகிப் போய்விட்டது. முதன்மைக் காரணமான இதை எல்லோரும் மூடி மறைத்து டென்ஷன், மன அழுத்தம், பரம்பரை என்று மூன்றம் பட்சமான காரணங்களையே கூறுகின்றனர். ஏனெனில் ஒரு அறிவியல் காரன் இன்னொரு அறிவியல் காரனைக் காட்டிக் கொடுக்க மாட்டான். [அதாவது டாக்டர் , உரம் தயாரிப்பவனை குற்றம் சொல்ல மாட்டான், ஏன்னா, அதனால் தானே டாக்டர் பிழைப்பே நடக்குது!!].

shanmugavel said...

@Jayadev Das said...

கைக்குத்தல் அரிசி வைட்டமினுக்காக முக்கியமாகிறது.இயற்கை வேளாண்மை முக்கியவிஷயம்தான்.அதைப்பற்றி தனி பதிவு எழுதவேண்டும்.இயற்கையான் சுவையும் போய் நோய்களையும் கொண்டுவருகிறது.தங்கள் கருத்துரைக்கு நன்றி

துரைடேனியல் said...

சப்பாத்தியும் அரிசியும் கிட்டத்தட்ட ஒன்றுதான். நல்ல பதிவு. அருமையான விளக்கம் சார்.

துரைடேனியல் said...

தமஓ 3.

ஹேமா said...

அரிசியும் கோதுமையும் ஒன்றா.நல்ல விஷயம் !

Thava said...

நல்ல விளக்கமா பயனுள்ளதை நல்ல பதிவா கொடுத்த தங்களுக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

shanmugavel said...

@துரைடேனியல் said...

சப்பாத்தியும் அரிசியும் கிட்டத்தட்ட ஒன்றுதான். நல்ல பதிவு. அருமையான விளக்கம் சார்.

கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@ஹேமா said...

அரிசியும் கோதுமையும் ஒன்றா.நல்ல விஷயம் !

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

shanmugavel said...

@Kumaran said...

நல்ல விளக்கமா பயனுள்ளதை நல்ல பதிவா கொடுத்த தங்களுக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

தங்கள் கருத்துரைக்கு நன்றி

நிலாமகள் said...

ப‌ல‌ ஆண்டுக‌ளுக்கு முன் என் மாம‌னார் சென்னை எம்.வி. ம‌ருத்துவ‌ம‌னையில் (ட‌ய‌ப‌டிக் ரிச‌ர்ச் சென்ட‌ர்) த‌ங்கி நீரிழிவுக்கு வைத்திய‌ம் பார்த்துக் கொண்ட போதே நீங்க‌ள் சொன்ன‌ க‌ருத்தை வ‌லியுறுத்தினார்க‌ள். உண‌வின் அள‌வுதான் முக்கிய‌ம் என்றும் அரிசி ப‌ண்ட‌ங்க‌ள் சுவை மிகுதியாய் ப‌ல‌ இருப்ப‌தால் அள‌வுக்க‌திக‌மாக‌ உண்டுவிடுவோமென்றும், அத‌ற்காக‌ ச‌ப்பாத்தியை வ‌யிறு புடைக்க‌ சாப்பிட்டால் ச‌ர்க்க‌ரை அள‌வு க‌ட்டுப் ப‌டாது என்றும்!

சாகம்பரி said...

நல்ல பகிர்வு. உணவின் அளவும் முக்கியம். நார் சத்து அதிகம் உள்ள உணவு சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்ற விதத்தில் சப்பாத்தி நல்லது. இப்போது சோளம் போன்ற நார்சத்து மிக்க பொருட்களையும் சேர்த்து ரெடிமேடாக கிடைக்கிறது.

Unknown said...

சரியா சொன்னீங்க...ஓட்ஸ் பற்றி முடிந்தால் விளக்கவும்!

Sankar Gurusamy said...

//அடிப்படையில் கோதுமைக்கும் அரிசிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.சாதம் என்றால் அதிகம் சாப்பிடுவார்கள்,சப்பாத்தி என்றால் குறைவாக சாப்பிடுவார்கள்//

சரியா சொன்னீங்க.. எல்லாமே சாப்பிடுற அளவுலதான் இருக்கு..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

kiliyooraan said...

sappathiyil alavu theriyum, sottril alavu threiyaathu, ithuvum oru karanam

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமான பதிவு ! நன்றி நண்பரே !

தனிமரம் said...

சப்பாத்தியைய் காட்டி மீண்டும் சரவணபகவானுக்கு போக வைக்கின்றீர்கள் ஐயா.
உண்மையில் சாதம் சாப்பிடுவோர் அதிகம் மாற்றீடு மிகவும் கடினம் எனலாம்.

பாலா said...

என்னை பொறுத்தவரை தேவையான உடலுழைப்பு இருந்தால், எந்த வகை உணவும் நல்லதுதான்.

ஸ்ரீராம். said...

நல்லதொரு ஒப்பீடும் அலசலும்!

வருண் said...

நீங்க சொல்ற விசயம் அவ்வளவு சரியில்லைங்க..


Carbohydrate Content

Both rice flour and wheat flour derive most of their calories from carbohydrates. Rice flour is higher in carbohydrates, as one cup provides 127g, compared to wheat flour's 84g. However, wheat flour is higher in fiber, with 12g per cup, compared to 4g per cup in rice flour. Fiber helps you feel full and promotes regular bowel movements; Colorado State University recommends that women consume 25g of fiber daily, and that men consume 38g daily.
Fat Content

Wheat flour and rice flour are both low in fat, as each provides 2g of fat per cup. Although fat is calorie-dense, it does perform many important functions, such as aiding in growth and development.
Protein Content

Wheat flour contains slightly more protein than rice flour, with 16g per cup, compared to 9g per cup in rice flour. Wheat flour contains a protein called gluten, which is not tolerated by those with Celiac disease. However, rice flour does not contain gluten and is appropriate for those with Celiac disease.
Vitamin and Mineral Content

Wheat flour provides more vitamins and minerals than rice flour. One cup of wheat flour offers 8 percent of the recommended daily intake of iron and riboflavin, 16 percent of the recommended daily intake of niacin and 40 percent of the recommended daily intake of thiamin. One cup of rice flour provides only 2 percent of the daily recommended intake of calcium and 3 percent of the recommended daily intake of iron.

Read more: http://www.livestrong.com/article/356371-comparison-of-nutrition-in-rice-flour-vs-wheat-flour/#ixzz1l2ZN7100


கோதுமை, நிச்சயம் அரிசியைவிட நல்லதுதான்

shanmugavel said...

@வருண் said...

நீங்க சொல்ற விசயம் அவ்வளவு சரியில்லைங்க.

நீங்கள் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட வார்த்தைகளே உங்களுக்கு முக்கியமானது.உணவியல் நிபுணர்கள் எனக்கு நடத்திய பாடங்களில் இருந்து நான் தகவல்களை தருகிறேன்.நிலாமகள் கருத்துரையில் சொல்லியுள்ளதை கவனிக்கவும்.நீங்கள் குறிப்பிட்டுள்ள இணையதளம் தரும் தகவல்களே முழுமையானது என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா? அதில் குறிப்பிட்டுள்ள celiac disease என்பதை குறிப்பிட்டு கோதுமை வேண்டாம் என்று சொல்வோரும் உண்டு.அதனால் அரிசியைவிட நல்லது என்று உறுதியாக சொல்ல முடியாது.மேலும் யாரும் அரிசியை மட்டும் தின்பதில்லை.நார்ச்சத்துக்களையும் அரிசி உணவோடு சேர்க்கிறோம்.கோதுமை சிறந்ததா அரிசி சிறந்ததா என்பது என்னுடைய அலசல் அல்ல! அரிசிக்கு வீணாக அஞ்சவேண்டாம் என்பதே! என் குறிப்புகளில் உள்ள கார்போஹைட்ரேட் வேறுபாடு 10 முதல் பதினைந்து சதவீதம்தான்.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

Mr. Shanmugavel!

நான் அந்த வாக்கியத்தை ஒழுங்கா எழுதலை என்பது என் தவறுதான்! :)

***ஓரிரு சதவீத கார்போஹைட்ரேட் மட்டுமே வித்தியாசம்.***

இதற்கான ஆதாரம் தரமுடியுமா? I mean any scientific article?

***நீங்கள் குறிப்பிட்டுள்ள இணையதளம் தரும் தகவல்களே முழுமையானது என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா? ***

நீங்க சொன்னது சரினு ஒரு அறிவியல் கட்டுரை கொடுத்து நான் சொன்னது தவறுனு நீங்க காட்டலாம்! காட்டுங்க!

http://en.wikipedia.org/wiki/Wheat

இதையும் பாருங்க, 1-2% என்பது தவறுங்க. 10% மேலே அதிகமாயிருக்குனுதான் எல்லா இடத்திலும் போட்டிருக்கு! You are discussing science. There is going to be criticisms if you dont give proper evidence for your claim (like the difference is only 1-2%)!

If you show me the reference (scientific, of course reliable), I would be happy to agree with you with an apology for my mistake!

Take care!

வருண் said...

***என் குறிப்புகளில் உள்ள கார்போஹைட்ரேட் வேறுபாடு 10 முதல் பதினைந்து சதவீதம்தான்.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி***

***ஓரிரு சதவீத கார்போஹைட்ரேட் மட்டுமே வித்தியாசம்.***

இந்த ரெண்டுமே நீங்க சொன்னதுதான். பதிவில் தவறுதலான விழுக்காடு கொடுத்து இருக்கீங்கனு ஒத்துக்கொண்டதுக்கு நன்றி! 1-2% க்கும் 10%க்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு சார்!

Marc said...

அருமையான சமையல் வாழ்த்துகள்

நிரூபன் said...

வணக்கம் அண்ணர்,

ஆரோக்கியமான வாழ்வினை மேம்படுத்தும் வண்ணம் நல்லதோர் விளக்கப் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

உணவுக் கட்டுப்பாட்டில் சோற்றுக்கும், சப்பாத்திக்கும் இடையிலான வேறுபாடு பற்றிய எளிமையான விளக்கத்தினைக் கொடுத்திருக்கிறீங்க.

ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

இரண்டிலுமே மாவுச்சத்து இருக்கறதுன்னாலும் கோதுமையில் அதிகமா நார்ச்சத்து இருக்கறதால் அது உடலுக்கு ரொம்பவே நல்லது. உடல் எடையைக் குறைக்கணும்ன்னு நினைக்கிறவங்க அரிசியை குறைச்சுக்கிட்டு ராகி, சோளம், போன்ற நம்ம முன்னோர்கள் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு மாறுதலும் நல்லது.

வலையுகம் said...

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே

காட்டான் said...

அட நானும் சோறுதான் சாப்பிடுறேன் ஆனா அறிவாளியா இல்லையே அண்ண?

Unknown said...

அன்பரே!
நானும் சக்கரை நோய் உள்ளவன்தான் உங்கள் கருத்தை சில மருத்துவர்கள் சொல்வதுண்டு.

மொத்தத்தில் குறைந்த அளவே
எதையும் உண்பதே மிகவும் நலம்.

புலவர் சா இராமாநுசம்

passerby said...

The temptation to eat more for rice eaters, less for wheat eaters. It helps intake of only adequate cal for the latter - an important point of help for diabetics.

Wheat or rice, it shd be whole. In Wheat, whole wheat - i.e. like bran based, dalia (half cut wheat grains) based food products help diabetics maintain glu level.

Rice, brown rice, if not purpoiled (pulungalaris) s prefereable.

Today Times Of India reports that raw rice (patcharisi) increases the risk of diabetes. In Chennai, ppl eat raw rice and therefore, it is a diabetic capital.

Whatever u eat, let it b fibre rich and w/in cal level marked for u. Wheat flour shd not b sieved. Use as it came from atta chakki (flour mill). But Tamilians sieve not once, but twice ! idiots !!

In wheat, all maida based, in rice, all raw rice based SHOULD BE AVOIDED.

Good living is possible only then.

microkarthi said...

Here we are missing one important issue during eating. that is the duration of eating. If we can extend our eating time to 15 min or more, we cannot eat. since rince is soft and delicious for us, in 15 minutes we tend to eat 2 people's food by single person. at the same time wheat foods like roti or chapati is dry and hard to chew and resulting in long time. and by the time we feel satiated and stop eating. North indian dinner would take atleast 10-15 min minimum and south indian eating takes hardly 5-10 min (exclude the regular and seasoned eaters who take proper time). in such a short time before feeling satiated we tend to eat more since our stomach is an elastic bag and it can accomodate more with little ease.
so proper eating habits are required and we need to add items that require lot of chewing.
I had tried the brown rice (no polishing), even though it was basmati rice, i could not eat fast and it was not tasting good.
so teach ourselves and our kids proper eating habit and eating right. if such is the case fibre, wheat,or rice doesn't matter at all.