Tuesday, November 1, 2011

காதல் மனைவி புத்தி சொன்னால் கேட்பதில்லையே ஏன்?

அவர் வருத்த்த்துடன் சொல்லிக் கொண்டிருக்கிறார்.எத்தனையோ முறை அறிவுரை சொல்லி பார்த்தாகிவிட்ட்து சார்! கொஞ்சம் கூட மண்டையில் ஏறுவதேயில்லை! திரும்பத் திரும்ப அதையேதான் செய்து கொண்டிருக்கிறாள்!’’ மனைவியால் மனசுக்கு கஷ்டம்தான் பாவம்.வீட்டை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்து கொண்டவர்.பின்னர் அவரது பெற்றோர் ஆனது ஆகிவிட்ட்து என்று வரவேற்பு வைத்தார்கள்.
                            இன்றைய மனைவி காதலியாக இருந்தபோது அவரது உதட்டசைவுக்காக தெருமுனையில் படபடப்பாக நின்றவர் அவர்.அப்போது காதலியைத் தவிர யாரும் முக்கியமில்லை.இப்போது மற்றவர்களும் முக்கியமாக தெரிகிறார்கள்.அதனால் புத்தி மேல் புத்தியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.பலன் மட்டும் இல்லை.
                            உலகத்தில் மிக எளிதாக கிடைக்கும் பொருள் அறிவுரை.யாரோ சலிப்புடன் கூறியது நினைவுக்கு வருகிறதுமூணு வயசு புள்ள கூட புத்தி சொல்லும்,அப்படி நடப்பதுதான் கஷ்டம்உண்மையான விஷயம்.யார் வேண்டுமானாலும் புத்தி சொல்லிவிடலாம்தான்.ஆனால் உலகத்தில் யாரும் விரும்பாத ஒன்றும் அறிவுரைதான்.எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப் பட்டுவிடும்.
                            அறிவுரை என்பது சொல்பவரை உயர்ந்தவராகவும்,கேட்பவரை தாழ்ந்தவராகவும் இருக்கச் செய்கிறது.இது மனித மனத்தின் அடிப்படைக்கே எதிரானது.உற்வினர்,அப்பா,அம்மா என்று தவிர்க்க முடியாதவர்கள் ஆனாலும் எரிச்சலுடன்  வாதிடுவார்கள்.இல்லாவிட்டால் அமைதியாக கேட்டுக்கொள்வார்கள்.சொல்வதைக் கேட்டு நடப்பது கஷ்டம்தான்.
                            அறிவுரை சொல்லும்போதே உனக்கு மூளை இல்லை என்பதையும் சேர்த்தே சொல்கிறோம்.அடுத்த்து இது பெரும்பாலும் உத்தரவாக இருக்கும்.அதைசெய்!  இதைச்செய்!!இன்னொரு விஷயம் உத்தரவுகளும் யாருக்கும் பிடிக்காது.பலர் புத்தி சொல்லும்போது எரிச்சலான குரலிலும்,முகத்தை சுளித்துக்கொண்டே பேசுவார்கள்.இதெல்லாம் ஒருவர் மீதான அன்பைக்காட்டுவதில்லை.வேறுபடுத்தியே உணரத் தோன்றும்.
                               எதிரில் இருப்பவர் பேசுவதற்கு வாய்ப்பளிக்கவே மாட்டார்கள்.ஒருவரை புரிந்து கொள்ளூம் நோக்கம் அறிவுரை சொல்வதில் இருப்பதில்லை.தன்னைப் பற்றி விளக்கி பேச ஆரம்பித்தாலும் அதற்கு வாய்ப்பு கிடைக்காது.நீ வாயை மூடு,உனக்கு ஒன்றும் தெரியாது என்பதாக இருக்கும்.ஒருவரே காட்சியை நட்த்திக் கொண்டிருப்பார்.
                               அறிவுரை கேட்பவரின் கருத்து என்னை யாரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதாக இருக்கும்.உண்மையான பிரச்சினையும் இதுதான்.ஒவ்வொருவரும் வேண்டுவது என்ன?நமக்கு ஏற்றவாறு நாம் விரும்பியவாறு நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.ஆனால் இன்னொரு மனிதன் எந்திரம் அல்ல!கணவன்,மனைவி,பிள்ளைகள் யாரும் வெறும் உடல் அல்ல!
                                மனைவியின் செயல் அல்லது கணவனின் செயல் பற்றி அதன் நன்மை,தீமைகளை பொறுமையாக விளக்குவது ஒரு வழிமுறை.அன்பான வார்த்தைகளில் கூறப்படும் எதுவும் புரிதலை உருவாக்கும் வாய்ப்புண்டு.முடிவை நாமாக திணிப்பது அறிவுரை.அவர்களாக முடிவெடுக்கத் தூண்டுவது ஆலோசனை.பல நேரங்களில் இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியாமல் போய் விடுகிறது.
                                பேசும் ஆட்களைப் பொருத்தும்,தொனியிலும் கூட நல்ல ஆலோசனை அறிவுரையாக மாறும் ஆபத்து இருக்கிறது.மிக எளிமையான விஷயம்.அதிகம் பேசுபவர்கள் அவர்களாக இருக்க வேண்டும்.பொறுமையாக கேட்டு பிரச்சினையை அலச முடிந்தால் விளைவு நன்றாகவே இருக்கும்.
-

29 comments:

சென்னை பித்தன் said...

த.ம.2

சென்னை பித்தன் said...

//முடிவை நாமாக திணிப்பது அறிவுரை.அவர்களாக முடிவெடுக்கத் தூண்டுவது ஆலோசனை.//
வேறுபாட்டை அருமையாகச் சொல்லி விட்டீர்கள்.நன்று.

Shanmugam Rajamanickam said...

ஆகா இப்பதான் அறிவுரை பத்தி நானும் நண்பனும் பேசிகிட்டு இருந்தோம். நீங்க சொல்டரதும் சரிதான்.....

SURYAJEEVA said...

காதலர்களாக இருப்பவர்கள் கல்யாணம் முடிந்த உடன் காணாமல் போய் விடுகிறார்கள்... செக்யூரிட்டி தேடும் பெண்கள், அன்பை தேடும் ஆண்கள்... எங்கு பிரச்சினை என்று கேள்வி கேட்டால் இருவர் கைகளும் எதிரில் உள்ளவரை காட்டும்..

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

//முடிவை நாமாக திணிப்பது அறிவுரை.அவர்களாக முடிவெடுக்கத் தூண்டுவது ஆலோசனை.//
வேறுபாட்டை அருமையாகச் சொல்லி விட்டீர்கள்.நன்று.

நன்றி அய்யா!

ராஜா MVS said...

~*~முடிவை நாமாக திணிப்பது அறிவுரை.அவர்களாக முடிவெடுக்கத் தூண்டுவது ஆலோசனை.~*~

மிக அழகான விளக்கம்... நண்பரே

பல பேருக்கு இதன் தெளிவு தெரியாததால் தான் மனஸ்தாபத்துக்கு உள்ளாகிறார்கள்... நண்பா...

ராஜா MVS said...

மிக அருமையான, அனைவருக்கும் தேவையான பதிவு...

பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

shanmugavel said...

@சண்முகம் said...

ஆகா இப்பதான் அறிவுரை பத்தி நானும் நண்பனும் பேசிகிட்டு இருந்தோம். நீங்க சொல்டரதும் சரிதான்.....

கருத்துரைக்கு நன்றி நண்பா!

shanmugavel said...

@suryajeeva said...

காதலர்களாக இருப்பவர்கள் கல்யாணம் முடிந்த உடன் காணாமல் போய் விடுகிறார்கள்... செக்யூரிட்டி தேடும் பெண்கள், அன்பை தேடும் ஆண்கள்... எங்கு பிரச்சினை என்று கேள்வி கேட்டால் இருவர் கைகளும் எதிரில் உள்ளவரைகாட்டும்..

நச்சுன்னு சொல்லிட்டீங்க! நன்றி

மகேந்திரன் said...

அறிவுரைக்கும் ஆலோசனைக்கும் உள்ள சிறிய
இடைவெளியை மிக அழகாக தாத்பரியமாக
சொல்லியிருக்கிறீர்கள்.
சிலரைப் பொறுத்தவரையில் ஆலோசனையுடன்
நிறுத்திக்கொள்வது நல்லது.

அருமையான கட்டுரை நண்பரே.

shanmugavel said...

@ராஜா MVS said...

~*~முடிவை நாமாக திணிப்பது அறிவுரை.அவர்களாக முடிவெடுக்கத் தூண்டுவது ஆலோசனை.~*~

மிக அழகான விளக்கம்... நண்பரே

பல பேருக்கு இதன் தெளிவு தெரியாததால் தான் மனஸ்தாபத்துக்கு உள்ளாகிறார்கள்... நண்பா...

உண்மை நண்பா! நன்றி

shanmugavel said...

@ராஜா MVS said...

மிக அருமையான, அனைவருக்கும் தேவையான பதிவு...

பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

பாராட்டுக்கு நன்றி நண்பரே!

shanmugavel said...

@மகேந்திரன் said...

அறிவுரைக்கும் ஆலோசனைக்கும் உள்ள சிறிய
இடைவெளியை மிக அழகாக தாத்பரியமாக
சொல்லியிருக்கிறீர்கள்.
சிலரைப் பொறுத்தவரையில் ஆலோசனையுடன்
நிறுத்திக்கொள்வது நல்லது.

அருமையான கட்டுரை நண்பரே.

நன்றி நண்பரே!

RAVICHANDRAN said...

புத்திமதி சொல்ற பல பேருக்கு தகுதியே இருக்காது.அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.நல்ல பதிவு.

RAVICHANDRAN said...

//அதிகம் பேசுபவர்கள் அவர்களாக இருக்க வேண்டும்.பொறுமையாக கேட்டு பிரச்சினையை அலச முடிந்தால் விளைவு நன்றாகவே இருக்கும்//

சரியான பார்வை.

shanmugavel said...

@RAVICHANDRAN said...

புத்திமதி சொல்ற பல பேருக்கு தகுதியே இருக்காது.அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.நல்ல பதிவு.

ஆமாம் அய்யா,நன்றி

shanmugavel said...

@RAVICHANDRAN said...

//அதிகம் பேசுபவர்கள் அவர்களாக இருக்க வேண்டும்.பொறுமையாக கேட்டு பிரச்சினையை அலச முடிந்தால் விளைவு நன்றாகவே இருக்கும்//

சரியான பார்வை.

நன்றி சார்.

Unknown said...

மாப்ள நன்றி!

சத்ரியன் said...

//பேசும் ஆட்களைப் பொருத்தும், தொனியிலும் கூட நல்ல ஆலோசனை அறிவுரையாக மாறும் ஆபத்து இருக்கிறது.//

உண்மை தான். சொற்களை உபயோகப் படுத்தும் லாவகம் ஒன்று இருக்கிறது.

கூடல் பாலா said...

அறிவுரை சொல்வதற்கான நல்ல அறிவுரை ...நன்றி!

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
நல்லா இருக்கிறீங்களா?
எனக்கும் தீபாவளியோடு காய்ச்சல் ஆகிட்டுச்சு,.
அதான் வர முடியலை...

தீபாவளி கொண்டாட்டங்கள் எப்பூடி?

நிரூபன் said...

கணவன் மனைவிற்கிடையேயான ஈகோ என்ற ஒன்று களையப்பட்டு,
அவர்கள் அன்பால் கட்டுப்பட்டு இருப்பார்கள் என்றால் நிச்சயமாக ஒருவர் புத்தி சொல்லுகையில் மற்றவர் கேட்டு நடப்பார் என்று நினைக்கிறேன்.
பதிவில் பொறுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு பற்றியும் அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.

சசிகுமார் said...

இனிமையான இல்லற வாழ்விற்கு ஏற்ற அறிவுரைகள் நன்றி சார்.... தமிழ்மணம் 7

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள தகவல்கள்..

சாகம்பரி said...

காதல் மனைவி சொல்வதை நாம் கேட்பதில்லையே என்று தவறாக புரிந்து கொண்டேன். காதல் மனைவி நாம் சொல்வதை கேட்பதில்லை என்பது சரிதான். பதிலும் இதற்குள்ளேயே அடங்கிவிட்டது. நாம் - யார் சொன்னாலும் கேட்பதில்லை. நல்ல பகிர்வு.

Sankar Gurusamy said...

ஆலோசனை, அறிவுரை இரண்டும் நெருங்கியவர்கள் சொல்லும்போது யாரும் அதை சட்டை செய்வதில்லை. இவர்கள் நமக்கு சொல்வதா எனவே எண்ணுகிறார்கள்.. யார் சொன்னாலும் கேட்காத பிரகஸ்பதிகளும் இங்கு சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

ஓசூர் ராஜன் said...

உளவியல் தொடர்பான பதிவு! இதையும் அட்வைசாக எடுத்துகொள்ளும் அபாயம் உள்ளது!

ஸ்ரீராம். said...

விரும்பும் நேரத்தில் கிடைக்காது உதவி. விரும்பாத நேரத்திலும் கிடைக்கும் அறிவுரை!

கூடல் குணா said...

உண்மை ,நம்பினால் நன்மை