Thursday, December 15, 2011

உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா?

                               உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா? அவர்கள் ஏன் அப்படி ஆனார்கள்?அவர்களுக்கும் நமக்கும் என்ன பிரச்சினை? பெரும்பாலும் நம்முடைய எதிரிகள் யார் என்று கவனியுங்கள்.பக்கத்து வீட்டில் இருப்பவர்கள்,பங்காளிகள்,பக்கத்து வயலுக்கு உரிமையாளர்கள்,உடன் வேலை செய்பவர்கள்.இவர்கள் என்ன காரணத்திற்காக எதிரியானார்கள்?
                                எங்கள் பையன் அவர்களுடைய பையனை விட நன்றாக படிக்கிறான் சார்!அந்த வயித்தெரிச்சலில் காரணமில்லாமல் எங்கள் மீது பகை சார்!இப்படி பல இடங்களில் உண்டு.அற்ப காரணங்களுக்காக தம்மை விட வசதி வாய்ப்புகள்,வருமானம் அதிகம் என்று மனதில் எழும் உணர்வு வம்புக்கு இழுத்து பகையாக மாறுவதுண்டு.சில இடங்களில் நல்லது சொன்னால் கெட்டவனுக்கு எதிரியாக மாறுவது தவிர்க்கமுடியாது.
                                  வரப்பு தகராறு என்று சொல்வார்கள்.பக்கத்து நிலத்துக்காரன் அருகில் உள்ள நிலத்தையும் கொஞ்சமாக சேர்த்து கட்டிக்கொள்வான்.காவல்துறை,நீதிமன்றம் என்று ஆண்டுக்கணக்கில் அலைந்து கொண்டிருப்பார்கள்.பணத்தை செலவு செய்து கடனாளியாகி மீள முடியாமல் போனவர்கள் உண்டு.பத்து ரூபாய் சொத்துக்காக பல ஆயிரம் செலவு செய்வார்கள்.
                                  வன்முறை இல்லாத பகை சில நேரங்களில் நல்ல விளவுகளையும் தருகிறது. குடித்துவிட்டு வந்த மகனை பார்த்து தாய் கேட்கிறாள்,எதிரிகளுக்கு முன்னால் நாம் சிறப்பாக வாழவேண்டாமா?இந்த எண்ணம் மேலும் தன்னை சீர்படுத்தி வாழ்வில் முன்னேற ஒரு உந்துதலாக அமைவதுண்டு.
                                                                       நிஜமான அன்பும் கூட சில நேரங்களில் பகையாக மாறுவதுண்டு.தவறான புரிதல்கள் காரணமாக பிரிந்து விடுவார்கள்.எப்போது மீண்டும் இணைவோம் என்ற உள்ளப்போக்கே இருபக்கமும் இருந்து கொண்டிருக்கும்.ஒருவரை ஒருவர் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.துக்கம்,மகிழ்ச்சி ஏதேனும் ஒரு நிகழ்வில் ஒன்றிணைவார்கள்.
                                மறைமுகமான எதிரிகளைவிட ஆபத்தானவர்கள் இருக்க முடியாது.பலர் அந்த அதிர்ச்சியை சந்தித்து இருப்பார்கள்.எவ்வளவு நம்பினோம்.தாய் பிள்ளையாய் பழகினோமே என்று தோன்றும்.ஆனால் மனிதர்கள் அப்படியும் இருக்கவே செய்கிறார்கள்.போட்டுக்கொடுப்பது,நம்மைப் பற்றிய விஷயங்களை தெரிந்து கொண்டு மறைமுகமாக அனானியாக புகார் செய்வது என்று இருப்பார்கள்.
                                தங்கள் சுயநலத்திற்காக கீழ்த்தரமான தந்திரங்களை தொடர்ந்து கையாண்டு வருவார்கள்.ஒரு நாள் அவர்களைப்பற்றி உண்மை தெரிய வரும்.நம்மை கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் இருப்பார்கள்.ஆனால் வெகுகாலம் நல்லவர்களாகவே நடிக்க முடிவதில்லை.சாயம் வெளுத்து விட்ட பின்னால் வேறு ஏதாவது கதையை திசை திருப்புவார்கள்.
                                பகையையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையை சீரழித்துக் கொள்பவர்கள் உண்டு.மனம் முழுக்க அந்த உணர்வுகளே எப்போதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.பகைவர்கள் வாழும்போது வயிறு எரிவதும்,வீழும்போது கை கொட்டி சிரிப்பதும் நடக்கும்.அமிலத்தை நெஞ்சில் வைத்திருப்பது மாதிரித்தான் ஆகிவிடுகிறது.
                                   நாம் சரியாக இருந்தாலும் எதிரில் இருப்பவர் சரியாக இருப்பார் என்று சொல்ல முடியாது.ஆனால் பகை நம்முடைய மனத்தை கெடுக்காத அளவுக்கு செயல்படுவது நம் கையில் இருக்கிறது.நம்மை நேசிக்காதவர்கள் ஏன் நம்முடைய மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும்.
-

29 comments:

சென்னை பித்தன் said...

//நம்மை நேசிக்காதவர்கள் ஏன் நம்முடைய மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும்.//
சரியான கேள்வி!நன்று.

ராஜா MVS said...

~*~நம்மை நேசிக்காதவர்கள் ஏன் நம்முடைய மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும்.~*~

மிக அருமையான வார்த்தை நண்பரே...

பலர் இதை உணர்வதே இல்லை, அவர்களை நினைத்தே பல அறிய வாய்ப்புகளைக் கூட தவறவிட்டவர்களும் உண்டு...

பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

//நம்மை நேசிக்காதவர்கள் ஏன் நம்முடைய மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும்.//
சரியான கேள்வி!நன்று.

நன்றி அய்யா!

shanmugavel said...

@ராஜா MVS said...

~*~நம்மை நேசிக்காதவர்கள் ஏன் நம்முடைய மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும்.~*~

மிக அருமையான வார்த்தை நண்பரே...

பலர் இதை உணர்வதே இல்லை, அவர்களை நினைத்தே பல அறிய வாய்ப்புகளைக் கூட தவறவிட்டவர்களும் உண்டு...

பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

தங்கள் கருத்துரைக்கு நன்றி

Anonymous said...

இந்த மாதம் விகடன் யூத் விகடனில் உங்கள் பதிவு வந்துருகிறது வாழ்த்துகள்.............

shanmugavel said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

நன்றி அய்யா!

RAVICHANDRAN said...

//நம்மை நேசிக்காதவர்கள் ஏன் நம்முடைய மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும்.//

உண்மை.ஆகாதவர்களைப்பற்றி நினைத்துக்கொண்டிருப்பதால் என்ன பயன்?

RAVICHANDRAN said...

// நாம் சரியாக இருந்தாலும் எதிரில் இருப்பவர் சரியாக இருப்பார் என்று சொல்ல முடியாது.//

விபத்து மாதிரி வம்புக்கு இழுத்து சண்டை பிடிப்பவர்களும் இருக்கிறார்கள்.பகிர்வுக்கு நன்றி

மகேந்திரன் said...

சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்,
"நான் தூங்கி எழுந்துவிட்டால் நேற்று நடந்தது
எல்லாம் மறந்துடுவேன்" என்று..
ஆச்சர்யமாக இருக்கும்..
எப்படி முடிகிறது இவர்களால் என்று..

நமக்கு நடந்த தீயவைகளை நினைத்து என்ன பயன்
நடந்ததை நினைத்து நடப்பதை தொலைக்காமல் இருக்க
வேண்டும்.
அருமையான கட்டுரை நண்பரே.

சுதா SJ said...

நம்மை நேசிக்காதவர்கள் ஏன் நம்முடைய மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும்.<<<<<<<<<<<

கட்டுரையின் கடைசி வரிகள் என்றாலும் எனக்கு பிடித்த வரிகள்... இது எவ்வளவு நிஜமானது.

சுதா SJ said...

விகடனின் அங்கீகாரத்துக்கு வாழ்த்துக்கள் பாஸ்

shanmugavel said...

@RAVICHANDRAN said...

//நம்மை நேசிக்காதவர்கள் ஏன் நம்முடைய மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும்.//

உண்மை.ஆகாதவர்களைப்பற்றி நினைத்துக்கொண்டிருப்பதால் என்ன பயன்?

பாதிப்புதான் அதிகம் நன்றி சார்

shanmugavel said...

@RAVICHANDRAN said...

// நாம் சரியாக இருந்தாலும் எதிரில் இருப்பவர் சரியாக இருப்பார் என்று சொல்ல முடியாது.//

விபத்து மாதிரி வம்புக்கு இழுத்து சண்டை பிடிப்பவர்களும் இருக்கிறார்கள்.பகிர்வுக்கு நன்றி

ஆமாம்.நன்றி

shanmugavel said...

@மகேந்திரன் said...

சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்,
"நான் தூங்கி எழுந்துவிட்டால் நேற்று நடந்தது
எல்லாம் மறந்துடுவேன்" என்று..
ஆச்சர்யமாக இருக்கும்..
எப்படி முடிகிறது இவர்களால் என்று..

நமக்கு நடந்த தீயவைகளை நினைத்து என்ன பயன்
நடந்ததை நினைத்து நடப்பதை தொலைக்காமல் இருக்க
வேண்டும்.
அருமையான கட்டுரை நண்பரே.

மறந்துவிட முடிந்தால் வளர்ச்சியில் கவனம் செலுத்தலாம்.நன்றி

shanmugavel said...

@துஷ்யந்தன் said...

நம்மை நேசிக்காதவர்கள் ஏன் நம்முடைய மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும்.<<<<<<<<<<<

கட்டுரையின் கடைசி வரிகள் என்றாலும் எனக்கு பிடித்த வரிகள்... இது எவ்வளவு நிஜமானது.

நன்றி துஷ்யந்தன்.

shanmugavel said...

@துஷ்யந்தன் said...

விகடனின் அங்கீகாரத்துக்கு வாழ்த்துக்கள் பாஸ்

குட்பிளாக்ஸ் சொல்கிறீர்களா? ஏற்கனவே மூன்று இடுகைகள் வந்திருக்கின்றன.விகடனுக்கு நன்றி

shanmugavel said...

@எனக்கு பிடித்தவை said...

இந்த மாதம் விகடன் யூத் விகடனில் உங்கள் பதிவு வந்துருகிறது வாழ்த்துகள்.............

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

Sankar Gurusamy said...

பகைவனையும் நேசிக்க கற்றுக்கொள்ளலாம்.. அதுதான் ஒரே வழி..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

ஸ்ரீராம். said...

ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் ஒவ்வொரு நிகழ்வு நினைவுக்கு வருமளவு அனுபவங்கள். கடைசி வரியை நான் நிஜ வாழ்வில் கடைப்பிடிக்கிறேன்.

சசிகுமார் said...

//சுயநலத்திற்காக கீழ்த்தரமான தந்திரங்களை தொடர்ந்து கையாண்டு வருவார்கள்.ஒரு நாள் அவர்களைப்பற்றி உண்மை தெரிய வரும்.நம்மை கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் இருப்பார்கள்.ஆனால் வெகுகாலம் நல்லவர்களாகவே நடிக்க முடிவதில்லை.சாயம் வெளுத்து விட்ட பின்னால் வேறு ஏதாவது கதையை திசை திருப்புவார்கள்.//

என் வாழ்க்கையில் நிறைய இந்த சம்பவங்கள்....

M.R said...

ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையான கருத்து நண்பரே, பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே

த.ம 9

shanmugavel said...

@Sankar Gurusamy said...

பகைவனையும் நேசிக்க கற்றுக்கொள்ளலாம்.. அதுதான் ஒரே வழி..

பகிர்வுக்கு மிக்க நன்றி..
பெரிய மனம் வேண்டும்,நன்றி

shanmugavel said...

@ஸ்ரீராம். said...

ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் ஒவ்வொரு நிகழ்வு நினைவுக்கு வருமளவு அனுபவங்கள். கடைசி வரியை நான் நிஜ வாழ்வில் கடைப்பிடிக்கிறேன்.

நன்றி

shanmugavel said...

@சசிகுமார் said...

//சுயநலத்திற்காக கீழ்த்தரமான தந்திரங்களை தொடர்ந்து கையாண்டு வருவார்கள்.ஒரு நாள் அவர்களைப்பற்றி உண்மை தெரிய வரும்.நம்மை கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில் இருப்பார்கள்.ஆனால் வெகுகாலம் நல்லவர்களாகவே நடிக்க முடிவதில்லை.சாயம் வெளுத்து விட்ட பின்னால் வேறு ஏதாவது கதையை திசை திருப்புவார்கள்.//

என் வாழ்க்கையில் நிறைய இந்த சம்பவங்கள்....

பலருடைய வாழ்க்கையிலும்தான் நன்றி சார்

shanmugavel said...

@M.R said...

ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மையான கருத்து நண்பரே, பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே

நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லா மனிதனுக்கும் ஒரு பகைவன் உண்டு.
அவன் யார் என்று தெரிந்து கொண்டால் எந்த துன்பமும் இல்லை.
அந்த பகைவன் அவனே!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில் :
"நீங்க மரமாக போறீங்க..."

நிலாமகள் said...

நிஜமான அன்பும் கூட சில நேரங்களில் பகையாக மாறுவதுண்டு.தவறான புரிதல்கள் காரணமாக//

ச‌ரியான‌ கூற்று.
பிற‌ த‌ன்மையுள்ள‌ எதிரிக‌ளை ப‌திவின் இறுதி வ‌ரிக‌ள் துணைகொண்டே ச‌மாளிக்க‌ வேண்டும். எண்ண‌ப் பிசிற‌ல்க‌ளைச் சீராக்கிக்கொள்ள‌ உத‌வும் ப‌திவு...ந‌ன்றி!

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
எதிரிகளைத் தவிர்த்து எளிமையாக நாம் எப்படி வாழலாம் என்பதனை விளக்கிச் சொல்லியிருக்கிறீங்க.

நன்றி பாஸ்.

இராஜராஜேஸ்வரி said...

நாம் சரியாக இருந்தாலும் எதிரில் இருப்பவர் சரியாக இருப்பார் என்று சொல்ல முடியாது.ஆனால் பகை நம்முடைய மனத்தை கெடுக்காத அளவுக்கு செயல்படுவது நம் கையில் இருக்கிறது.நம்மை நேசிக்காதவர்கள் ஏன் நம்முடைய மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும்./

நிதர்சன வரிகள்..