Thursday, December 29, 2011

உடற்பயிற்சி செய்தாலும் தொப்பை குறையாதாமே?!


                              உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும்.ஆனால் தொப்பை குறையுமா? இதைப்பற்றி ஒருவர் புத்தகம் எழுதியதாக படித்தேன்.ஆனால் அப்போது எனக்கு சரியாக புரியவில்லை.ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.நாணயத்தின் இருபக்கம் போலத்தான்! இரண்டு வித கருத்துக்களும் இருக்கும்.பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
                              மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு பெரும் வயிற்றை பார்த்தேன்.வியாதியெல்லாம் இல்லை.சந்தேகமில்லாமல் பெரும் தொப்பைதான்.உடல்  உழைப்பு உள்ள பலருக்கும் தொப்பை இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அந்த தொப்பை கொஞ்சம் உறுதியானது.அலுத்துக் கொள்ளும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.நானும் காலையில் நடக்கிறேன்,என்னென்னவோ பயிற்சி செய்கிறேன்,ஆனால் தொப்பை அப்படி ஒன்றும் குறையவில்லை என்பார்கள்.
                               உடற்பயிற்சி செய்தால் நன்றாக பசியெடுக்கும்,அதனால் அதிகம் சாப்பிடுவார்கள்.எனவே எடை குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல என்று படித்தேன்.உண்மையென்றுதான் தோன்றுகிறது.உடற்பயிற்சி ஜீரண மண்டலத்தை தூண்டி விடுகிறது.இதனால் நன்கு பசித்தால் ஆரோக்கியம் கூடுவதாகவே பொருள்.சந்தேகமில்லாமல் உடற்பயிற்சி நல்ல விளைவுகளை தருகிறது.அரைமணி நேர உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் நல்லதுதான்.
                                தொப்பை இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன? உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா? வாக்கிங்,உடற்பயிற்சி இதையெல்லாம் பலர் கடனுக்கு செய்கிறார்கள் என்றார் ஜிம் வைத்திருக்கும் ஒரு நண்பர்.இன்று மருத்துவர் சொன்னார் என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள்.
                                 வாயைக்கட்டினால் வயிற்றைக் கட்டலாம் என்று சொல்வார்கள்.பெரும்பாலானவர்களுக்கு இது முடியாமல் போய்விடுகிறது.உணவை உள்ளே தள்ளுவதில் விழிப்புணர்வு இல்லை என்பதே சரி.நாக்கை அடக்கினால் மட்டுமே தொப்பையையும்,பருமனையும் கட்டுப்படுத்த முடியும்.ஆனால் நாக்குக்கு அடிமையானவர்களே அதிகம்.
                                                                             சில உணவுகள் மீண்டும் மீண்டும் சாப்பிட்த் தூண்டுவதை கவனித்திருக்கிறீர்களா? எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளுக்கு இந்த பண்பு உண்டு.இப்படிப்பட்ட நொறுக்குத்தீனிகள் தொப்பையை வளர்க்கின்றன்.முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்ட்து போல அரிசி உணவுகளை அதிகம் உண்கிறோம்.நமது மதிய உணவுக்கும் தொப்பைக்கும் அதிக தொடர்பு உள்ளது.
                                  காய்கறிகள்,பழங்கள் போன்றவை திரும்ப திரும்ப சாப்பிடும் ஆர்வத்தை தூண்டுவதில்லை.மிதமான அளவு உண்போம்.வயிறும் நிறைந்திருக்கும்.உடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும் போதுமான அளவு சேர்ந்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.இன்றைய குழந்தைகளும் அதிக பருமனாகி வருகிறார்கள்.அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம்.
                                  உடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.மிக அவசியமானதும் கூட! ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல! உணவு முறையில் மாற்றம் கொண்டுவருவதே ஒரே வழி.

-

30 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனக்கில்லை.
பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.

ஊரான் said...

நல்ல பல தகவல்கள்.

தொப்பையைக் குறைப்பதும் உடல் எடையைக் குறைப்பதும் கடினமான ஒன்றல்ல. ஒரே மாதத்தில் எனது எடையை 84 கிலோவிலிருந்து 75 கிலோவாக குறைத்துள்ளேன். தொப்பையின் அளவு 2 அங்குலம் குறைந்துவிட்டது.

எண்ணெயில் பொறித்ததை தொடாதீர்கள். எடுத்தக் கொள்ளும் உணவின் அளவில் 25% குறைத்துக் கொள்ளுங்கள். உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பின் அளவை 75% குறைத்துக் கொள்ளுங்கள்.

தொடக்கத்தில் சற்றுக் கடினமாக இருந்தாலும் பிறகு பழகி விடும். நலமாக இருக்க வேண்டுமானால் கொஞ்சம் தியாகம் தேவைதான்.

SURYAJEEVA said...

தொப்பையை குறைக்க முதலில் மன உறுதி வேண்டும்.. நீங்கள் சொல்லியது போல் பசி உயிரை எடுக்கும்..

shanmugavel said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனக்கில்லை.
பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.

நன்றி அய்யா!

shanmugavel said...

@ஊரான் said...

நல்ல பல தகவல்கள்.

தொப்பையைக் குறைப்பதும் உடல் எடையைக் குறைப்பதும் கடினமான ஒன்றல்ல. ஒரே மாதத்தில் எனது எடையை 84 கிலோவிலிருந்து 75 கிலோவாக குறைத்துள்ளேன். தொப்பையின் அளவு 2 அங்குலம் குறைந்துவிட்டது.

வருக அய்யா,தங்கள் அனுபவம் முக்கியமானது,நன்றி

shanmugavel said...

@suryajeeva said...

தொப்பையை குறைக்க முதலில் மன உறுதி வேண்டும்.. நீங்கள் சொல்லியது போல் பசி உயிரை எடுக்கும்..

ஆமாம் ஜீவா,நன்றி

RAVICHANDRAN said...

நீங்கள் சொல்கிறமாதிரி வாயைக்கட்டுவது கஷ்டமாக இருக்கிறது.பயனுள்ள தகவல்களுக்கு நன்றி

RAVICHANDRAN said...

//இன்றைய குழந்தைகளும் அதிக பருமனாகி வருகிறார்கள்.அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம்.//

குழந்தையிலிருந்தே பழக்கினால்தான் முடியும் போல!

shanmugavel said...

@RAVICHANDRAN said...

நீங்கள் சொல்கிறமாதிரி வாயைக்கட்டுவது கஷ்டமாக இருக்கிறது.பயனுள்ள தகவல்களுக்கு நன்றி

நொறுக்குத்தீனி சாப்பிடும் நண்பர்களை தவிர்க்கலாம்,வீட்டில் மெனுவை மாற்றலாம்.முயற்சித்தால் கைகூடும்.நன்றி

shanmugavel said...

@RAVICHANDRAN said...

//இன்றைய குழந்தைகளும் அதிக பருமனாகி வருகிறார்கள்.அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம்.//

குழந்தையிலிருந்தே பழக்கினால்தான் முடியும் போல

ஆமாம் சார் நன்றி

மகேந்திரன் said...

///உணவு முறையில் மாற்றம் கொண்டுவருவதே ஒரே வழி.///

சரியான அறிவுரை நண்பரே.

shanmugavel said...

@மகேந்திரன் said...

///உணவு முறையில் மாற்றம் கொண்டுவருவதே ஒரே வழி.///

சரியான அறிவுரை நண்பரே.

தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பரே!

K said...

அண்ணன், அருமையான ஆய்வு! உடற்பயிற்சி தொப்பையக் குறைக்கும் என்று நானும் நம்பியிருந்தேன்!

அது சரி அண்ணனுக்குத் தொப்பையுண்டோ?

shanmugavel said...

@Powder Star - Dr. ஐடியாமணி said...

அண்ணன், அருமையான ஆய்வு! உடற்பயிற்சி தொப்பையக் குறைக்கும் என்று நானும் நம்பியிருந்தேன்!

அது சரி அண்ணனுக்குத் தொப்பையுண்டோ?

ஹேஹே எனக்கு இல்லை! நன்றி

துரைடேனியல் said...

Thoppai patriya alasal arumai. Payanulla Pathivu. Pakirvukku Nanri.

TM 6.

சுதா SJ said...

அண்ணே எனக்கு தொப்பை இல்லையே...... அவ்வ்

shanmugavel said...

@துரைடேனியல் said...

Thoppai patriya alasal arumai. Payanulla Pathivu. Pakirvukku Nanri.

நன்றி சார்

shanmugavel said...

@துஷ்யந்தன் said...

அண்ணே எனக்கு தொப்பை இல்லையே...... அவ்வ்

எனக்குகூட இல்லை!அதுக்காக அழறேனா? நன்றி.

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,

வாயைக் கட்டினால் தான் உடல் எடையினைக் குறைக்கலாம் என்பதனை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

முன்பெல்லாம் "நாற்பது வயது வரை சாப்பிடுவதற்காக வாழு!. நாற்பது வயதிற்குப் பின்னால் வாழ்வதற்காக சாப்பிடு!" என்று சொல்வார்கள். ஆனால் இந்த நவீன உலகில் நாற்பது இருபதாகி விட்டது. என்னைப் பொறுத்தவரை சாப்பிடுவது பிரச்சினை இல்லை. அதற்கு ஏற்றவாறு வேர்வை சிந்த உடல் உழைப்பு இருந்தால் போதும்.

உடல் எடையை குறைக்க பல சென்டர்கள் இப்போது ஆரம்பம் ஆகி விட்டன. ஒரே ஒரு பவுடர் டப்பா கொடுக்கிறார்கள். அது தான் இரண்டு வேளை சாப்பாடே! நிறைய ரூல்ஸ்! அதில் சேர்ந்து பல நண்பர்கள் உடலை கெடுத்துக் கொண்டது தான் மிச்சம்! அங்கே என்னிடம் தான் சேர வேண்டும்! என் மூலம் தான் நாங்கள் கொடுக்கும் பொருள்களை வாங்க வேண்டும் என்ற கட்டளை வேறு! அது ஒரு தனி பிசினெஸ்! அதைப் பற்றியும் விவரமாக ஒரு பதிவு எழுதுங்கள் சார்! நன்றி!

தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

சத்ரியன் said...

வணக்கம் சண்முகம் அண்ணே,

சிறந்த பதிவு(பகிர்வு)களின் பட்டியலில் இதுவும் ஒன்று.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சசிகுமார் said...

மிக அவசியமான பதிவு....புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்...

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

shanmugavel said...

@நிரூபன் said...

வணக்கம் அண்ணே,

வாயைக் கட்டினால் தான் உடல் எடையினைக் குறைக்கலாம் என்பதனை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீங்க.

நன்றி நிரூபன்.

shanmugavel said...

@திண்டுக்கல் தனபாலன் said...

தாங்கள் கூறியது போலவே ஒருபதிவு போட்டுவிடலாம் சார்,நன்றி

shanmugavel said...

@சத்ரியன் said...

வணக்கம் சண்முகம் அண்ணே,

சிறந்த பதிவு(பகிர்வு)களின் பட்டியலில் இதுவும் ஒன்று.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நன்றி சத்ரியன்.

shanmugavel said...

@சசிகுமார் said...

மிக அவசியமான பதிவு....புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்..
நன்றி சார்.

shanmugavel said...

@என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

நன்றி அய்யா!

shanmugavel said...

@RMY பாட்சா said...

இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்தஆண்டு இனிமையாகஅமைய வாழ்த்துகள்.

நன்றி நண்பரே!

Sankar Gurusamy said...

சரியாக சொன்னீர்கள்.. தொப்பைக்கும் உணவுப் பழக்கத்துக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை அழகாக கூறி இருக்கிறீர்கள்..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/