உலகம் முழுதும்
பெருவளர்ச்சி கண்ட சமூக வலைத்தளம் ஃபேஸ்புக்.கணினி பயன்படுத்துபவர்கள் தினமும்
பார்க்காதவர்கள் குறைவு. பல குழுக்கள் இருக்கின்றன.குருதிக் கொடையாளர்களுக்கு
குழுக்கள் உள்ளன.சமூகப் பிரச்சினைகளை பேச,வாசகர் வட்ட்த்திற்கு,சினிமா
ரசிகர்களுக்கென்று பல குழுக்கள்.ஏராளமான நல்ல விஷயங்கள் இதில் உண்டு.பதிவுகள்
உள்பட பல தகவல்கள் ஏராளமானவர்களை சென்றடைகின்றன.
இன்று பேஸ்புக்
இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும்,அடிமையாக மாறிவருவதாக பலர் சுட்டிக் காட்டி
வருகிறார்கள்.நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட விஷயம் இது.அலுவலகத்தில் வேலை
செய்யாமல் பேஸ்புக்கில் இருந்திருக்கிறார் ஒரு ஊழியர்.வேலை செய்யுமாறு அலுவலர்
சத்தம் போட்ட்தும் பாத்ரூம் சென்று வருவதாக சென்றுவிட்டார்.
பாத்ரூம் சென்றவர்
இரண்டு அறை தாண்டி இருக்கும் இன்னொரு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் முன்பு போய்
உட்கார்ந்து விட்டார்.அலுவலகப் பணிகளுக்கு இது ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது.பொது
மக்கள் போய் ஏதாவது கேட்டாலும் எரிந்து விழுகிறார்கள்.கிட்ட்த்தட்ட கட்டிப்போட்டு
விட்ட்து.
பிரௌசிங் செண்டரில் அதிகம்
பார்க்கப்படுவது பேஸ்புக் என்கிறார் ஒரு உரிமையாளர்.” சோறு,தண்ணிகூட
வேண்டாம் சார்,சிலருக்கு பேஸ்புக் இருந்தால் போதும்.” என்றார்.சர்வர்
பிரச்சினை போன்ற காரணங்களால் இணைய இணைப்பு கிடைக்காத போது பலர் எரிந்து
விழுகிறார்கள்.வரும்போதே உடலும்,மனமும் பரபரக்கத்தான் வருவார்கள்.
ஒரு பழக்கத்தை விட முடியாமல்’’’’”’
“இல்லாவிட்டால் உடலும் மனமும் பாதிக்கப்படும் நிலை அடிமையாகி விட்ட்தைக்
குறிக்கும்.பேஸ்புக்தான் என்றில்லை,வலைப்பதிவுக்கு கூட ஒருவர் அடிமையாக முடியும்.நாம்
கற்றுக்கொண்ட பழக்கம் நம்மை ஆளும் நிலைதான் அடிமைத்தனம்.மதுவுக்கு,போதைப்பழக்கத்துக்கு,புகைப்பழக்கத்துக்கு
அடிமையானவர்கள் இருக்கிறார்கள்.
மதுவுக்கு
அடிமையானவர்கள் தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு குடிக்காவிட்டால் முடியாது.மனம்
அமைதி இழக்கும்.விளைவாக உடலில் மாற்றங்கள் உருவாகும்.எரிந்து
விழுவார்கள்.எப்படியாவது,எப்படியாவது என்று மனம் தேடும்.பேஸ்புக் போன்றவையும்
இப்படி அடிமையாக்க முடியும்.மேற்கண்டவாறு மனதிலும்,உடலிலும் மாற்றங்கள் உருவானால்
அடிமையாகி விட்டார் என்பதே பொருள்.
சமூகத்தில்
பேஸ்புக் பயன்படுத்துவதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.ஆனல் ஒருவர் அடிமையாகி
விட்டாரா என்பதை கிடைக்காத்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்.சொந்தமாக
கம்ப்யூட்டர்,இல்லாவிட்டால் செல்போன் இருக்கிறது.அதனால் எளிதில் நமக்கு
தெரியாது.எப்போதும் கிடைப்பதால் பிரச்சினை சீக்கிரம் வெளியில் தெரியாது.
பேஸ்புக்கின் அரட்டைகளுக்கு
அடிமையாகிப் போனால் பெண்ணுக்கு திருமணத்திற்கு பின்னால் பிரச்சினையாக
முடியலாம்.எந்த பழக்கமும் நம்மை ஆளாமல் நாம் அதனை ஆள வேண்டும்.முடியாத நிலையில்
தயங்காமல் ஆலோசனை பெறலாம்.கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளலாம்.எந்த சமூக
வலைத்தளங்களையும் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்கள் அடிமையாக வாய்ப்பில்லை.
34 comments:
ஆமாம்ப்பா ஆமாம் .
மிக உபயோகமான பதிவு என்பதால் இன்ட்லி யில் வோட் பண்ண போனேன், நானே இணைக்கும் படி ஆகிவிட்டது
பீதியை கிளப்பிவிட்டு பேதியை வர வைக்குறாங்கப்பா!
அண்ணே, கரெக்டா சொல்லியிருக்கீங்க! ஒருநாளைக்கு ஃபேஸ்புக் பார்க்கலைன்னா, என்னவோ பண்ணுது!
எனக்கும் முகநூல் கணக்கு இருக்கு. ஆனால் தூங்கிக்கிட்டிருக்கு !அதான் வலைப்பூ அடிமையாகியாச்சே!
சூப்பர் தலைவரே, ஊடால வலை பதிவர்களையும் இழுத்து விட்டுட்டீங்க
பேஸ்புக்ல பிளாக்கர்ஸ் நிறைய பேர் இருக்காங்க. அதுலயும் நட்புக்கள் தொடருதே. நல்ல விஷயம் தானே...
நம்ம தளத்தில்:
இந்த அதிசியத்தை நம்ப முடியுதா? படங்கள் பார்க்க...
@rufina rajkumar said...
ஆமாம்ப்பா ஆமாம் .
நன்றி.
@ilavarasan said...
பீதியை கிளப்பிவிட்டு பேதியை வர வைக்குறாங்கப்பா!
ஹாஹா எச்சரிக்கையா இருங்க சார்!நன்றி
@பிரெஞ்சுக்காரன் said...
அண்ணே, கரெக்டா சொல்லியிருக்கீங்க! ஒருநாளைக்கு ஃபேஸ்புக் பார்க்கலைன்னா, என்னவோ பண்ணுது!
எதுக்கும் உஷாரா இருப்பா! நன்றி
@சென்னை பித்தன் said...
எனக்கும் முகநூல் கணக்கு இருக்கு. ஆனால் தூங்கிக்கிட்டிருக்கு !அதான் வலைப்பூ அடிமையாகியாச்சே!
நானும் உங்களைப்போலத்தான்,என் கணக்கும் தூங்குகிறது.நன்றி
@suryajeeva said...
சூப்பர் தலைவரே, ஊடால வலை பதிவர்களையும் இழுத்து விட்டுட்டீங்க
இப்படியான பதிவர்களையும் எனக்குத் தெரியும்,நன்றி
எந்த சமூக வலைத்தலமானாலும்
நல்ல வழியில் பயன்படுத்தினால் சரியே....
@தமிழ்வாசி - Prakash said...
பேஸ்புக்ல பிளாக்கர்ஸ் நிறைய பேர் இருக்காங்க. அதுலயும் நட்புக்கள் தொடருதே. நல்ல விஷயம் தானே...
நல்ல விஷயம் நிறையவே இருக்கு! அடிமையாகிவிடக்கூடாது,அவ்வளவே! நன்றி
@மகேந்திரன் said...
எந்த சமூக வலைத்தலமானாலும்
நல்ல வழியில் பயன்படுத்தினால் சரியே....
ஆமாம் மகேந்திரன்,நன்றி
@rufina rajkumar said...
மிக உபயோகமான பதிவு என்பதால் இன்ட்லி யில் வோட் பண்ண போனேன், நானே இணைக்கும் படி ஆகிவிட்டது
பரவாயில்லை விடுங்கள்,நன்றி
பாஸ் உண்மையே சொன்னீங்க.... என் வேலைத்தளத்தில் இப்போது நான் யாருடனும் கலகலப்பாய் பேசுறது இல்லை.. கிடைக்கும் சிறு இடைவேளையில் கூட பேஸ்புக் இல் இருந்து விடுகிறேன்..... ஏன் வேலை நேரத்தில் கூட யாருக்கும் தெரியாமல் பேஸ்புக் பாக்கிறேன்..... அவ்வ்வ்வ்
நிஜ நிலவரம் சொல்லும் பதிவு :(
//மனதிலும்,உடலிலும் மாற்றங்கள் உருவானால் அடிமையாகி விட்டார் என்பதே பொருள்.//
சரிதான்.நல்ல பதிவு.
@துஷ்யந்தன் said...
பாஸ் உண்மையே சொன்னீங்க.... என் வேலைத்தளத்தில் இப்போது நான் யாருடனும் கலகலப்பாய் பேசுறது இல்லை.. கிடைக்கும் சிறு இடைவேளையில் கூட பேஸ்புக் இல் இருந்து விடுகிறேன்..... ஏன் வேலை நேரத்தில் கூட யாருக்கும் தெரியாமல் பேஸ்புக் பாக்கிறேன்..... அவ்வ்வ்வ்
நிஜ நிலவரம் சொல்லும் பதிவு :(
குறைக்க முயற்சி பண்ணுங்க பாஸ்,நன்றி
@RAVICHANDRAN said...
//மனதிலும்,உடலிலும் மாற்றங்கள் உருவானால் அடிமையாகி விட்டார் என்பதே பொருள்.//
சரிதான்.நல்ல பதிவு.
நன்றி அய்யா!
//கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளலாம்.எந்த சமூக வலைத்தளங்களையும் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்கள் அடிமையாக வாய்ப்பில்லை.//
சமூக ஆர்வலர்களுக்கும் பொருந்தும் படி உள்ளது !
//கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளலாம்.எந்த சமூக வலைத்தளங்களையும் நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துபவர்கள் அடிமையாக வாய்ப்பில்லை.//
சமூக ஆர்வலர்களுக்கும் பொருந்தும் படி உள்ளது !
இனிய காலை வணக்கம் அண்ணா
நிதர்சனமான விடயத்தினைப் பிரதிபலிக்கும் ஓர் கட்டுரையினைத் தந்திருக்கிறீங்க..
நான் கூட கண்டிருக்கிறேன். இந்தப் பேஸ்புக்கிற்கு அடிமையானோரைப் பற்றி.
பெற்றோர்கள் விழிப்பாக இருக்கவேண்டும் ...
உண்மைதான். அதைவிட முக்கியமான விசயம் ஃபேஸ் புக்கில் சொந்த விசயங்களை உளறி வைப்பது. இவை டிஜிட்டல் செய்திகளாக இணையத்தில் என்றும் அழியாமல் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்கும். நம் பேரக் குழந்தைகள்கூட படிக்க முடியும் என்ற உண்மை தெரிவது இல்லை. அளவோடு பயன்படுத்துவது நல்லது. இளைய சமுதாயத்தின் மீது அக்கரை காட்டும் இந்த பதிவிற்கு நன்றி சகோ.
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு தானே!
தேவையான தகவல்கள்..
மிக எதார்த்தம். இதை ஒட்டி இப்போதுதான் நானு ஒரு பதிவெழுதினேன்.
உண்மைதான்..
வலைப்பதிவுகளுக் கூட நம்மை அடிமைப் படுத்துகின்றன..
விருப்பப்பட்டு செய்யும் தொழில் முறைகள் யாவுமே அடிமைப்படுத்துகின்றது என்பதை ஒத்துக்கொள்ள முடியாது..
விருப்பம் வேறு / ஈர்ப்பு வேறு...
//எந்த பழக்கமும் நம்மை ஆளாமல் நாம் அதனை ஆள வேண்டும்.//
உண்மையான வரிகள்....
இன்று மனைவி மக்களைவிட செல்போனும்,Facebook ' இரண்டும் முக்கியமாகிவிட்டது, இவைகள் இல்லாமல் இனி வாழ்வது கடினம்!
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை....
மக்கள்ஸ் இன்னுமோர் அல்டிமேட் காமெடி, கவுன்சிலர் சண்முகலிங்கம் அவர்கள் ரெண்டு நாளைக்கு முன்னாடி எழுதி தமிழ்மணத்தில் ஹிட் அடித்த பதிவினை நகல் எடுத்து இந்தாளு இன்னைக்கு எழுதியிருக்கான். என்ன அவர் பேஸ்புக் பத்தி எழுதினத இந்த பாவி பய ப்ளாக் பத்தி மாற்றி அவரோட quotation உடன் இணைச்சு எழுதியிருக்கான்.
http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog.html
இது காப்பி பேஸ்ட் கதா நாயகனின் பதிவு
இது கவுன்சிலரின் பதிவு
http://counselforany.blogspot.com/2011/11/blog-post_04.html
இப்படியும் அடிக்சன் வருமா?? பயமாகத்தான் இருக்கிறது.. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
Post a Comment