நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.ரொம்ப நாள் ஆகிவிட்டது போலவும்
தோன்றுகிறது.மகாராணி என்று சொல்லவேண்டும்.இன்னும் மேலாக ஏதாவது
சொல்லலாம்.எப்படித்திரும்பினாலும் ஆனந்தம்.அந்த நாட்களிலேயே ஒருவரால் வாழ
முடிந்தால் எப்படி இருக்கும்?
சின்னப் பையன் முதல் கிழங்கள் வரை அவளை பார்த்தால் அப்படி ஒரு இதம்.வீதியில் நடந்து போகும்போது பசங்கள் எதையாவது உளறுவார்கள்.சந்தோசமாக இருக்கும்.சில நேரங்களில் உடல் உதறும்.ஓடிப்போய் வீட்டில் அடைந்து கொள்ளத் தோன்றும்.
காதல் அது இது என்று என்னென்னவோ சொல்கிறார்கள்.அப்படித்தானா என்று நிச்சயமாக தெரியவில்லை.பிடித்திருந்தது.வீட்டைக் கடக்கும்போது சைக்கிளில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்.மனம் இருப்புக் கொள்ளாமல் துள்ளும்.ஆனால் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.
ஒருநாள் வெளியே வந்து பக்கத்து வீட்டு அண்ணியை அழைத்தாள்.அவரது குழந்தையை தூக்கி முத்தமிட்டாள்.அண்ணி முகத்தை சுளித்து சொன்னது ஒரே வார்த்தைதான்.அதெல்லாம் நமக்கு ஒத்துவராது! அதே நொடியில் மனம் விழுந்து விட்டது.அதற்குப்பிறகு சைக்கிள் மணியைக் கேட்டால் குறுகுறுவென்று இருக்கும்.சில சமயம் வெறுப்பாக இருக்கும்.
ஒருவேளை அவனை காதலித்திருந்தால் நாம் சந்தோசமாக இருந்திருப்பேனோ! என்று தோன்றுகிறது.எதிர் வீட்டில் ஒரு கிழவி இருப்பாள்.பெரிய மகராசன்தான் உனக்கு மாப்பிள்ளையாக வருவான் என்பாள்.புள்ளைக்கு சுத்திப்போடு என்று அம்மாவிடம் சொல்வாள்.அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
பல பேர் பார்த்துவிட்டு போய்விட்டார்கள்.எதிர்பார்த்த மாதிரி இல்லாவிட்டாலும் சுமார்தான்.ஒரு வழியாக கல்யாணம் ஆகிவிட்டது.மகிழ்ச்சியான நாட்கள் முடிந்து போய்விட்டது போல தோன்றுகிறது.இப்போதெல்லாம் அவருக்கு பிடிக்கவில்லையோ என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது.
நீ தனியாக எங்கும் போகவேண்டாம் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.காலையில் கடைக்கு போகவேண்டும் என்றால் "ஏன் உன்னால் தனியாக போக முடியாதா? என்று கேட்கிறார்.அம்மாவிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.திரும்ப திரும்ப குழந்தை பற்றியே கேட்கிறாள்.எரிச்சல்தான் மிச்சம்.
திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது.ஒருவேளை அப்படி இருக்குமோ? தொலைக்காட்சி தொடர்களும்,கேள்விப்பட்ட கதைகளும் நினைவுக்கு வந்தன.வேறு யாராவது?! உடல் வியர்த்துவிட்டது.இருதயத்துடிப்பு காதில் கேட்டது.அவனுடைய மேசையை திறந்து சோதிக்கத் தோன்றியது.உடலெங்கும் பரபரப்பு! சிறுநீர் கழிக்கவேண்டும் என்று தோன்றியது.
அப்படியே படுக்கையில் சாய்ந்தபோது " போன் செய்தால் என்ன என்று
தோன்றியது! அலுவலக நேரங்களில் போன் செய்து பழக்கமில்லை.உடனே
எடுத்துவிட்டான்.என்ன? " சாப்பிட்டீங்களா? நேத்து தலை வலின்னு சொன்னீங்க!
குட்டிப்பாப்பா உங்க போட்டோவ காட்டி வேணும்னு கேட்கறா!" மூச்சு விடாமல்
பேசி விட்டாள்.
-
சின்னப் பையன் முதல் கிழங்கள் வரை அவளை பார்த்தால் அப்படி ஒரு இதம்.வீதியில் நடந்து போகும்போது பசங்கள் எதையாவது உளறுவார்கள்.சந்தோசமாக இருக்கும்.சில நேரங்களில் உடல் உதறும்.ஓடிப்போய் வீட்டில் அடைந்து கொள்ளத் தோன்றும்.
காதல் அது இது என்று என்னென்னவோ சொல்கிறார்கள்.அப்படித்தானா என்று நிச்சயமாக தெரியவில்லை.பிடித்திருந்தது.வீட்டைக் கடக்கும்போது சைக்கிளில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்.மனம் இருப்புக் கொள்ளாமல் துள்ளும்.ஆனால் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.
ஒருநாள் வெளியே வந்து பக்கத்து வீட்டு அண்ணியை அழைத்தாள்.அவரது குழந்தையை தூக்கி முத்தமிட்டாள்.அண்ணி முகத்தை சுளித்து சொன்னது ஒரே வார்த்தைதான்.அதெல்லாம் நமக்கு ஒத்துவராது! அதே நொடியில் மனம் விழுந்து விட்டது.அதற்குப்பிறகு சைக்கிள் மணியைக் கேட்டால் குறுகுறுவென்று இருக்கும்.சில சமயம் வெறுப்பாக இருக்கும்.
ஒருவேளை அவனை காதலித்திருந்தால் நாம் சந்தோசமாக இருந்திருப்பேனோ! என்று தோன்றுகிறது.எதிர் வீட்டில் ஒரு கிழவி இருப்பாள்.பெரிய மகராசன்தான் உனக்கு மாப்பிள்ளையாக வருவான் என்பாள்.புள்ளைக்கு சுத்திப்போடு என்று அம்மாவிடம் சொல்வாள்.அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
பல பேர் பார்த்துவிட்டு போய்விட்டார்கள்.எதிர்பார்த்த மாதிரி இல்லாவிட்டாலும் சுமார்தான்.ஒரு வழியாக கல்யாணம் ஆகிவிட்டது.மகிழ்ச்சியான நாட்கள் முடிந்து போய்விட்டது போல தோன்றுகிறது.இப்போதெல்லாம் அவருக்கு பிடிக்கவில்லையோ என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது.
நீ தனியாக எங்கும் போகவேண்டாம் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.காலையில் கடைக்கு போகவேண்டும் என்றால் "ஏன் உன்னால் தனியாக போக முடியாதா? என்று கேட்கிறார்.அம்மாவிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.திரும்ப திரும்ப குழந்தை பற்றியே கேட்கிறாள்.எரிச்சல்தான் மிச்சம்.
திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது.ஒருவேளை அப்படி இருக்குமோ? தொலைக்காட்சி தொடர்களும்,கேள்விப்பட்ட கதைகளும் நினைவுக்கு வந்தன.வேறு யாராவது?! உடல் வியர்த்துவிட்டது.இருதயத்துடிப்பு காதில் கேட்டது.அவனுடைய மேசையை திறந்து சோதிக்கத் தோன்றியது.உடலெங்கும் பரபரப்பு! சிறுநீர் கழிக்கவேண்டும் என்று தோன்றியது.
ஹிஹி..கதை எழுதலாம் என்று
பார்த்தேன்.போகட்டும்,உண்மையை விடவும் அப்படி இருக்குமோ,இப்படி இருக்குமோ என்ற
எண்ணங்கள் மனதையும்,உடலையும் ரொம்ப கஷ்டப்படுத்திவிடுகிறது.
300 வது பதிவு.
வாசகர்களுக்கும்,சக பதிவர்களுக்கும்
நன்றி
27 comments:
முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..
பல்லாயிரம் படைப்புகள் கொடுத்திட
இறைவன் அருள்புரியட்டும்..
கணவன் மனைவிக்கிடையில் வரும் சந்தேகங்கள்
அதிகப்படியான அன்பினால் உருவாகிறது..
புரிதல் அவசியம்..
சிறு இடைவெளி கிடைத்தாலும் சமாதானமாகிவிடும்..
முன்னூறும் முத்துக்கள்
புரிந்துனர்தல் இருந்தாலே ஒரு வேளை அப்படி இருக்குமோ?ஒரு வேளை இப்படி இருக்குமோ?என்ற எண்ணங்கள் தவிர்க்கப்படும்!
அருமையா கோர்திருக்கீங்க!
முச்சதம் கண்டமைக்கு வாழ்த்துக்கள்!
தொடருங்கள்!
@மகேந்திரன் said...
முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..
பல்லாயிரம் படைப்புகள் கொடுத்திட
இறைவன் அருள்புரியட்டும்..
வாழ்த்துக்கு நன்றி மகேந்திரன்.
@மகேந்திரன் said...
கணவன் மனைவிக்கிடையில் வரும் சந்தேகங்கள்
அதிகப்படியான அன்பினால் உருவாகிறது..
புரிதல் அவசியம்..
சிறு இடைவெளி கிடைத்தாலும் சமாதானமாகிவிடும்..
சரிதான்,இடைவெளிதான் பிரச்சினை ஆகிவிடுகிறது.நன்றி
@curesure4u said...
முன்னூறும் முத்துக்கள்
நன்றி அய்யா!
@கோகுல் said...
புரிந்துனர்தல் இருந்தாலே ஒரு வேளை அப்படி இருக்குமோ?ஒரு வேளை இப்படி இருக்குமோ?என்ற எண்ணங்கள் தவிர்க்கப்படும்!
அருமையா கோர்திருக்கீங்க!
முச்சதம் கண்டமைக்கு வாழ்த்துக்கள்!
தொடருங்கள்!
நன்றி கோகுல்.
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
@RAVICHANDRAN said...
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.
நன்றி சார்.
வாழ்த்துக்கள். கதை எழுதும் முயற்சியும் நன்
முன்னூறில் பதிவோன்றிற்க்கு முன்னூறு நபர் படித்து, அதில் முன்னூறு வாசகர்கள் பயன்பெற்றிருந்தாலும்...
அது மிகப் பெரிய வெற்றியே..
வெற்றி தொடரட்டும்...
இனிய காலை வணக்கம் அண்ணே,
கலியாணக் கட்டம் வருவதற்கு முன்பதாக முதல் இரு பந்திகளிலும் புல்லரிக்க வைச்சிட்டீங்க.
உண்மையிலே இவற்றினை நினைத்துப் பார்த்தேன்...
அட போங்க பாஸ்...
வெட்கமாக இருக்கு,
சந்தேகம் எனும் கருவிற்கு ஏற்றாற் போல பதிவினை நகர்த்தியிருக்கிறீங்க.
முதல் முயற்சியும் அருமை பாஸ்..
வாழ்த்துக்கள்!
முயன்றால் முடியாதது எதுவும் இல்லைத் தானே..
ஹி....ஹி...
அப்புறம் முந்நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா,
தொடர்ந்தும் ஜமாயுங்க.
நம்பிக்கை அறவே இல்லாத உலகம் இது.. தன்னம்பிக்கையும் சேர்த்தே தான் சொல்கிறேன்
அருமை ...வாழ்த்துக்கள் அண்ணாச்சி !
முன்னூறுக்கு வாழ்த்துக்கள்...
எளிமையான வார்த்தைகளில், இதமாக எதையும் சொல்லிவிடும் உங்களுக்கு,எனது நன்றி!
உண்மையை விடவும் அப்படி இருக்குமோ,இப்படி இருக்குமோ என்ற எண்ணங்கள் மனதையும்,உடலையும் ரொம்ப கஷ்டப்படுத்திவிடுகிறது/
அருமையான் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
300 பதிவுக்குப் பாராட்டுக்கள்..
முதற்கண் முந்நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
சந்தேகம் தீராத வியாதி
அது இருவர் மாட்டும் எழாமல்
இருப்பதே நல்லது!
புலவர் சா இராமாநுசம்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பார்கள். இது அன்புக்கும் பொருந்தும் என்றுதான் தோன்றுகிறது...
அளவுக்கு மீறிய அன்பே நம்மை பல நேரங்களில் சஞ்சலப்படுத்துகிறது...
சஞ்சலத்தின் மூலம் சந்தேகம் பிறக்கிறது...
300க்கு வாழ்த்துகள்... நண்பரே...
மக்கள்ஸ் இன்னுமோர் அல்டிமேட் காமெடி, கவுன்சிலர் சண்முகலிங்கம் அவர்கள் ரெண்டு நாளைக்கு முன்னாடி எழுதி தமிழ்மணத்தில் ஹிட் அடித்த பதிவினை நகல் எடுத்து இந்தாளு இன்னைக்கு எழுதியிருக்கான். என்ன அவர் பேஸ்புக் பத்தி எழுதினத இந்த பாவி பய ப்ளாக் பத்தி மாற்றி அவரோட quotation உடன் இணைச்சு எழுதியிருக்கான்.
http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog.html
இது காப்பி பேஸ்ட் கதா நாயகனின் பதிவு
இது கவுன்சிலரின் பதிவு
http://counselforany.blogspot.com/2011/11/blog-post_04.html
கதை சிறப்பாக இருந்தது... தங்கள் 300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..
http://anubhudhi.blogspot.com/
யதார்த்தம்.
தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்.
புதிய புரட்சிக்காரனுக்கு நன்றி.கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.
Post a Comment