நல்ல பசியாக
உணர்ந்தேன்.நண்பர் ஒருவருடன் அருகில் உள்ள மெஸ் நோக்கி போய்விட்டோம்..நண்பர்
காளான் தோசை சாப்பிடலாம் என்றார்.கோழிக்கறி,ஆட்டுக்கறி,மீன்,காளான் நான்கையும்
தட்டில் வைத்து ஒன்று தேர்வு செய்யச்சொன்னால்,நான் காளானை தேர்ந்தெடுப்பேன்.காளான்
தோசை வந்த பிறகு “இதில் காளானே இல்லை’’ என்று நண்பன் சண்டை
பிடிக்க ஆரம்பித்தான்.தோசையில் காளான் மசால் வைத்துக்கொடுத்தால் அது காளான் தோசை.’’சிறுசிறு
துண்டுகளாக இருக்கும் சார்”
என்று சமாளித்தவாறே சில துண்டுகளை வைத்தார்கள்.சண்டை
பிடித்து கேட்டு வாங்காதவர்கள் துர்பாக்கியசாலிகள்.அவர்களுக்கு அதிக காளான்
துண்டுகள் கிடைக்காது.
இருவரும் சாப்பிட
ஆரம்பித்தோம்.நண்பன் ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்க நான் பால்யகால நினைவுகளை
சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.நான் மட்டுமில்லாமல் இன்று பலர் அப்ப்டித்தான்.உணவை
பொறுமையாக ருசித்து சாப்பிடுபவர்கள் குறைவு.மனசு எங்கோ இருக்க கடனுக்கு விழுங்கிக்
கொண்டிருப்போம்.சில நேரங்களில் அதிகமாகவோ,மிக குறைவாகவோ சாப்பிட்டு
விடுவார்கள்.சாப்பிடுவது தியானம் போல இருக்கவேண்டும்.உள்ளம் உணவில் முழுமையாக
குவிந்திருக்க வேண்டும்.நான் எப்போதும் அப்படி இல்லை.ஆனால் காளான் தோசை
சாப்பிடும்போது மனசு கிராமத்துக்குப் போய்விட்ட்து.
பூமியிலிருந்து
காளானை வெளிக்கொண்டு வருவது வான்மழை.நல்ல மழை பொழிந்து நிலம் குளிர்ந்திருக்கும்.சில
நேரத்து மழை மனசையும் குளிர்வித்து நல்ல மனநிலையைத் தரும்.மழை இரவின் அடுத்த நாள்
காலையில் காளானைத் தேடி வயல்வெளிகளில் சுற்றுவோம்.
எங்காவது
மறைந்திருக்கும்.மண்ணில் வெள்ளையாக தெரிந்தால் மனம் பரபரக்க ஓடுவோம்.காளான்
அப்போதுதான் மலர்ந்திருக்கும்.சில இடங்களில் கொத்தாகவும்,வேறு இட்த்தில்
தனியாகவும் இருக்கும்.காளான் இதழ்களின் அடியில் குனிந்து பார்ப்போம்.மிக வெண்மையாக
இருந்தால் அது நல்ல காளான் உண்பதற்கு ஏற்றது.
காளானை சுற்றி
மண்ணை பறிக்க ஆரம்பிப்போம். தண்டு வரை முழுமையாக எடுப்பது சவால்.வீட்டுக்கு கொண்டு
வந்தவுடன் அன்றைய மெனு மாறிப்போகும்.மிக அதிகமாக கிடைத்தால் பக்கத்துவீட்டுக்கும்
உண்டு.கிட்ட்த்தட்ட கறிக்குழம்பு சமையல்தான்.மசாலா தயாராகும்.தயாராகும் வரை மனசு
காளானையே சுற்றிக்கொண்டிருக்கும்.எப்போதும் கிடைக்காத அபூர்வமான விஷயம்.குறிப்பிட்ட
காலத்தில் இயற்கை தரும் அற்புதம்.அப்படி ஒரு சுவை.இப்போது செயற்கையாக தயாரித்து
பாலிதீன் பாக்கெட்டில் வருகிறது.அரசு வேளாண்மை நிறுவன்ங்களில் பயிற்சி
தருகிறார்கள்.உறவினர் ஒருவருடன் நானும் ஒரு நாள் பயிற்சிக்கு போனேன்.
காளான்
நல்ல உண்வென்று சொன்னார்கள்.உடலுக்குத் தேவையான நல்ல பல சத்துக்கள்
அடங்கியிருக்கின்றன.நாம் சாப்பிடும் குளுக்கோஸில் சேர்க்கப்படும் வைட்டமின் டி
இதில் உள்ளது.பி வைட்டமின்களும் இருக்கிறது.உடல் வளர்ச்சிக்கு தேவையான தாது
உப்புக்களும் நிறைந்திருக்கிறது.அதிகமாக புகழ்ந்து பேசினார்கள்.ஆனால் உண்மையான
விஷயம்தான்.சிலருக்கு ஒத்துக்கொள்ளாது.அப்படிப்பட்டவர்கள் சாப்பிடாமல் இருப்பதே
நல்லது.எனக்கு கொடுத்த பயிற்சி வீணாக போய்விட்ட்து.நான் குடிசைத்தொழிலாக
செய்யவேயில்லை.நன்மை பயக்கும் உணவுப்பொருளை உணவில் சேர்ப்போம்.குடிசைத்தொழில்
வளர்ச்சிக்கு உதவியது போலவும் இருக்கும்.
32 comments:
காளானில் இவ்வளவு விஷயம் இருக்கா?நான் சாப்பிடுவதில்லை!
@சென்னை பித்தன் said...
காளானில் இவ்வளவு விஷயம் இருக்கா?நான் சாப்பிடுவதில்லை!
நன்றி அய்யா!
அருமையான தகவல்.
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
@நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமையான தகவல்.
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
நன்றி சார்!
காளான் பற்றிய தெரியாத நிறைய தகவல்கள்
தெரிந்துகொண்டேன் நண்பரே.
நன்றிகள் பல.
@மகேந்திரன் said...
காளான் பற்றிய தெரியாத நிறைய தகவல்கள்
தெரிந்துகொண்டேன் நண்பரே.
நன்றிகள் பல.
நன்றி மகேந்திரன்.
மிகவும் உபயோகமான தகவல் நன்றி சகோதரம்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு
இயற்கையாக மண்ணில் இருந்து கிடைக்கும் காளானில் இருக்கும் சுவையைவிட பாக்கெட்டில் கிடைப்பது சுவை குறைவாக இருப்பது போல தோன்றுகிறது.
சிறுவயது நினைவுகளை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்.நல்ல பதிவு.
பாஸ்.... எனக்கு காளன் கறி ரெம்ப புடிக்கும்... விரும்பி சாப்புடுவேன்.
பிரான்ஸ் மக்கள் அதிகம் காளான் சாப்புடுவாங்க. அவங்களுக்கு காளான் போட்ட பீஸா ரெம்ப புடிக்கும் (எனக்கும்)
காளான் தோசை இப்போதுதான் கேள்விப்படுறேன். :(
ஆனால் காளானில் இவ்ளோ மேட்டர் இருப்பது இப்போதுதான் தெரிந்தது. ரியலி சூப்பர்.
@♔ம.தி.சுதா♔ said...
மிகவும் உபயோகமான தகவல் நன்றி சகோதரம்...
நன்றி சகோ!
@RAVICHANDRAN said...
இயற்கையாக மண்ணில் இருந்து கிடைக்கும் காளானில் இருக்கும் சுவையைவிட பாக்கெட்டில் கிடைப்பது சுவை குறைவாக இருப்பது போல தோன்றுகிறது.
ஆனால் குணம் மாறாது சார்,நன்றி
@RAVICHANDRAN said...
சிறுவயது நினைவுகளை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்.நல்ல பதிவு.
நன்றி சார்
@துஷ்யந்தன் said...
பாஸ்.... எனக்கு காளன் கறி ரெம்ப புடிக்கும்... விரும்பி சாப்புடுவேன்.
பிரான்ஸ் மக்கள் அதிகம் காளான் சாப்புடுவாங்க. அவங்களுக்கு காளான் போட்ட பீஸா ரெம்ப புடிக்கும் (எனக்கும்)
காளான் தோசை இப்போதுதான் கேள்விப்படுறேன். :(
ஆனால் காளானில் இவ்ளோ மேட்டர் இருப்பது இப்போதுதான் தெரிந்தது. ரியலி சூப்பர்.
நீங்கள் சொல்வதை பார்த்தால் இங்கே சாப்பிடுபவர்கள் குறைவுதான்.நன்றி
இதுவரை நான் காளான் சாப்பிட்டதே
இல்லை! இனிமேலா....?
நன்றி! நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
காளான் பற்றி நிறைய சொல்லி இருக்கிறீர்கள். நான் சாப்பிடுவதில்லை.. இருந்தாலும் பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
நானும் வழக்கமாக சாப்பிடுகிறேன். நன்றாக சொன்னீர்கள் சகோ.
தஓ 10.
பாக்கெட்டில் வரும் காளானைதான் சாப்பிட்டிருக்கிறேன்.இப்போ குளிர் என்பதால் 20 ரூபாய்க்கும கிடைக்கிறது.சில நேரம் மேற்புற வெள்ளைப்பகுதியின் அடிப்பகுதியில் லேயராக இருக்கும் பிரவுன் பகுதியோடு சேர்த்தும் சமைத்து சாப்பிட்டுள்ளோம்.பாதிப்பு தெரியவில்லை.பிரவுன் பகுதியை நீக்கிவிட்டுத்தான் பயன்படுத்தனுமா?
வணக்கம் அண்ணே,
நல்லா இருக்கிறீங்களா?
காளான் சிறப்புக்களை, காளானின் மூலம் கிடைக்கும் பயன்களைச் சொல்லியிருப்பதோடு,
காளானுக்கு அடிபட்டு உணவினை ஆடர் செய்யும் உங்கள் நண்பர் பற்றியும் சொல்லியிருக்கிறீங்க.
நல்ல பதிவு.
//காளான் இதழ்களின் அடியில் குனிந்து பார்ப்போம்.மிக வெண்மையாக இருந்தால் அது நல்ல காளான் உண்பதற்கு ஏற்றது.//
ஓஹோ இதான் ரகசியமா இதுவரைக்கும் எனக்கு தெரியாது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நீங்க சுலபமா சொல்லிடீங்க...
தகவலுக்கு நன்றி.
காளான் பிரியாணி நன்றாக இருக்கும்! நன்றி!
தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@புலவர் சா இராமாநுசம் said...
இதுவரை நான் காளான் சாப்பிட்டதே
இல்லை! இனிமேலா....?
நன்றி! நண்பரே!
ஏன் அய்யா! தாராளமாக சாப்பிடலாம்,நன்றி
@Sankar Gurusamy said...
காளான் பற்றி நிறைய சொல்லி இருக்கிறீர்கள். நான் சாப்பிடுவதில்லை.. இருந்தாலும் பகிர்வுக்கு மிக்க நன்றி..
சாப்பிடுங்கள் சங்கர்,நல்லது .நன்றி
@துரைடேனியல் said...
நானும் வழக்கமாக சாப்பிடுகிறேன். நன்றாக சொன்னீர்கள் சகோ.
நன்றி சகோ!
@thirumathi bs sridhar said...
பாக்கெட்டில் வரும் காளானைதான் சாப்பிட்டிருக்கிறேன்.இப்போ குளிர் என்பதால் 20 ரூபாய்க்கும கிடைக்கிறது.சில நேரம் மேற்புற வெள்ளைப்பகுதியின் அடிப்பகுதியில் லேயராக இருக்கும் பிரவுன் பகுதியோடு சேர்த்தும் சமைத்து சாப்பிட்டுள்ளோம்.பாதிப்பு தெரியவில்லை.பிரவுன் பகுதியை நீக்கிவிட்டுத்தான் பயன்படுத்தனுமா?
பிரவுன் பகுதியை நீக்கத்தேவையில்லை.நன்றி
@நிரூபன் said...
வணக்கம் அண்ணே,
நல்லா இருக்கிறீங்களா?
காளான் சிறப்புக்களை, காளானின் மூலம் கிடைக்கும் பயன்களைச் சொல்லியிருப்பதோடு,
காளானுக்கு அடிபட்டு உணவினை ஆடர் செய்யும் உங்கள் நண்பர் பற்றியும் சொல்லியிருக்கிறீங்க.
நலமே நிரூபன்,கருத்துரைக்கு நன்றி
@சசிகுமார் said...
//காளான் இதழ்களின் அடியில் குனிந்து பார்ப்போம்.மிக வெண்மையாக இருந்தால் அது நல்ல காளான் உண்பதற்கு ஏற்றது.//
ஓஹோ இதான் ரகசியமா இதுவரைக்கும் எனக்கு தெரியாது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நீங்க சுலபமா சொல்லிடீங்க...
ஆமாம் சார்,இயற்கை காளானை பறிக்கும்போது பார்க்கவேண்டியது.நன்றி
@Kanchana Radhakrishnan said...
தகவலுக்கு நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
@திண்டுக்கல் தனபாலன் said...
காளான் பிரியாணி நன்றாக இருக்கும்! நன்றி!
தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றி
மதுரையில் காளான் எங்கு கிடைக்கும்? முழு முகவரி தேவை ப்ளீஸ்.,
சி.சின்னக்கருப்பன்
சிரங்காட்டுப்பட்டி.
மதுரையில் காளான் எங்கு கிடைக்கும்? முழு முகவரி தேவை ப்ளீஸ்.,
சி.சின்னக்கருப்பன்
சிரங்காட்டுப்பட்டி.
Post a Comment