Monday, December 5, 2011

பப்பாளி குளிர்ச்சியா? சூடா?

பப்பாளிப்பழம் சூடு என்று வழக்கில் இருக்கிறது.பல காலமாக இருந்து வரும் நம்பிக்கை.கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள்.அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லும் மருத்துவர்களும் உண்டு.

உணவுப்பொருள் சார்ந்து தாவரங்கள் சார்ந்து எத்தனையோ நம்பிக்கைகள் இருக்கின்றன்.அத்தனையும் ஆய்வு செய்து சரி தவறு என்று நிரூபிக்கவில்லை.எனவே கர்ப்பிணிகள் தவிர்க்கலாம் என்பது எனது கருத்து.பப்பாளி முக அழகுக்காக பல இடங்களில் பயன்படுத்துகிறார்கள்.நானும் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்.

நன்கு பழுத்த பப்பாளியை பிசைத்து முகத்தில் பூசி கொஞ்ச நேரம் விட்டு முகம் கழுவினேன்.அத்தனை சுத்தம்.வேறெதுவும் தேவைப்படாது.செய்து பார்த்தால் தெரியும்.பள்ளி விட்டு வந்தால் கிராமத்தில் பப்பாளி போன்றவைதான் உடனே சாப்பிட கிடைக்கும். 

பயிருக்கு நீர் செல்லும் கால்வாய் பக்கத்தில் வரிசையாக நிற்கும்.மரம் ஏறி பிடுங்க முடியாது.நாமும் மரமும் சேர்ந்து விழவேண்டி இருக்கும்.உறுதியான மாறாமல்! ஒரு நீளமான குச்சியை எடுத்து அதிக நேரம் முயற்சி செய்து பறிக்கவேண்டும்.நன்கு பழுத்திருந்தால் எளிது.

மரங்கள் இருந்தால் கிராமத்து  வீட்டு சமையலில் பரங்கிக் காய் பொரியல் அடிக்கடி இருக்கும்.வயிற்றில் ஏற்படும் கோளாறுகளுக்கு பப்பாளியை சாப்பிட சொல்வார்கள்.ஆனால் பேதி இருந்தால் சாப்பிடக் கூடாது என்பார்கள்.

பச்சை நிறத்தில் வாந்தி எடுத்தால் பித்தம் என்பார்கள்.இதற்கும் இப்பழத்தை சாப்பிடச் சொல்பவர்கள் உண்டு.
ஏ வைட்டமின் நிறைய உள்ளது.சி,பி வைட்டமின்களும் உண்டு.கால்சியம் ,பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இருக்கின்றன்.

அதிக புரதம் உள்ள உணவுகளுடன் பப்பாளி சாப்பிடுமாறு உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.சரியான செரிமானத்தை உண்டாக்கி புரதத்தை உடலில் சேர்க்கிறது.பருப்பு வகைகள் ,அசைவம் போன்றவை புரதம் அதிகம் உள்ளவை.கலப்படம் செய்பவர்கள் பப்பாளி விதையை  மிளகுடன் சேர்க்கிறார்கள்.நேர்மையற்ற செயல்தானே தவிர உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்காது.பப்பாளி இன்று பேஷனாகி வருவதை பல இடங்களில் பார்க்கிறேன்.மதிய உணவுடன் பழத்துண்டுகள் எடுத்து வருகிறார்கள்.குழந்தைகளுக்கும் கொடுத்தனுப்பலாம்.ஆனால் அதிகம் சேர்க்கக் கூடாது.
-

36 comments:

K said...

me the first?

shanmugavel said...

yes,brother

K said...

useful details about papaw. Thanks for sharing, bro

சென்னை பித்தன் said...

ஜி.டி.நாயுடு அளிக்கும் விருந்தில் அவர் தோட்டத்துப் பப்பாளி கண்டிப்பாய் இடம் பெறுமாம்.
நல்ல பகிர்வு.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள கனிந்த
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

M.R said...

பயனுள்ள தகவல் ,பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோ

தமிழ்மணம் 4

மற்றவற்றிலும் வாக்களித்தேன்

ஸ்ரீராம். said...

நல்ல தகவல்கள். ஃபுரூட் சாலடில் முக்கியமான ஐட்டம்! :)

ஸ்ரீராம். said...

நல்ல தகவல்கள். ஃபுரூட் சாலடில் முக்கியமான ஐட்டம்! :)

shanmugavel said...

@Powder Star - Dr. ஐடியாமணி said...

useful details about papaw. Thanks for sharing, bro

THANKS BROTHER

ராஜா MVS said...

நல்ல தகவல்...

பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

ஜி.டி.நாயுடு அளிக்கும் விருந்தில் அவர் தோட்டத்துப் பப்பாளி கண்டிப்பாய் இடம் பெறுமாம்.
நல்ல பகிர்வு.

அவர் விஞ்ஞானியாயிற்றே? விஷயம் தெரிந்தவர்.நன்றி அய்யா!

மகேந்திரன் said...

பயன் அதிகமுள்ள பப்பாளி பற்றிய
அனைத்து செய்திகளும் அருமை நண்பரே...

shanmugavel said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சர்க்கரை வியாதிக்காரர்கள் சாப்பிடக் கூடிய சில பலன்களுள் ஒன்று பப்பாளி. அது இன்னொமொரு கூடுதல் சிறப்பு

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள கனிந்த
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

தங்கள் பாராட்டு கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@M.R said...

பயனுள்ள தகவல் ,பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோ
நன்றி

shanmugavel said...

@ஸ்ரீராம். said...

நல்ல தகவல்கள். ஃபுரூட் சாலடில் முக்கியமான ஐட்டம்! :)

நன்றி சார்

shanmugavel said...

@ராஜா MVS said...

நல்ல தகவல்...

பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

நன்றி நண்பரே!

shanmugavel said...

@மகேந்திரன் said...

பயன் அதிகமுள்ள பப்பாளி பற்றிய
அனைத்து செய்திகளும் அருமை நண்பரே...

நன்றி மகேந்திரன்.

shanmugavel said...

@rufina rajkumar said...

சர்க்கரை வியாதிக்காரர்கள் சாப்பிடக் கூடிய சில பலன்களுள் ஒன்று பப்பாளி. அது இன்னொமொரு கூடுதல் சிறப்பு
உண்மைதான்,சர்க்கரை ஒப்பிடும்போது மிகக் குறைவு.நன்றி

RAVICHANDRAN said...

எல்லா பழமும் ஒரே ருசியாக இருக்காது.லேசான மஞ்சள் நிறமாக இருப்பது சுவை அதிகம்.

RAVICHANDRAN said...

பயனுள்ள பகிர்வு.நன்றி நண்பரே!

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,

நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
ப்ப்பாளிப் பழத்தினை நம்ம ஊரில் நீங்கள் சொல்வது போல பொண்ணுங்க அதிகமாக முகத்திற்குப் பூசுவாங்க.

பப்பாளிப் பழம் பற்றிய ஓர் முக்கியமான விடயத்தினைத் தவற விட்டு விட்டீர்களே.
உடல் உறவின் பின் பப்பாளிப் பழம் உண்டால் கருப் பிடிக்காதாம்.

ஹி...ஹி..

shanmugavel said...

@RAVICHANDRAN said...

எல்லா பழமும் ஒரே ருசியாக இருக்காது.லேசான மஞ்சள் நிறமாக இருப்பது சுவை அதிகம்.

ஆமாம்,சுவையுள்ள பழம் என்றால் மண்ணைப்பறித்து விதை போட்டுவிட்டுத்தான் அடுத்தவேலை நன்றி

shanmugavel said...

@RAVICHANDRAN said...

பயனுள்ள பகிர்வு.நன்றி நண்பரே!

நன்றி

shanmugavel said...

@நிரூபன் said...

வணக்கம் அண்ணே,

நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
ப்ப்பாளிப் பழத்தினை நம்ம ஊரில் நீங்கள் சொல்வது போல பொண்ணுங்க அதிகமாக முகத்திற்குப் பூசுவாங்க.

பப்பாளிப் பழம் பற்றிய ஓர் முக்கியமான விடயத்தினைத் தவற விட்டு விட்டீர்களே.
உடல் உறவின் பின் பப்பாளிப் பழம் உண்டால் கருப் பிடிக்காதாம்.

ஹி...ஹி..

அதுதான் முதல் பத்தியில் இருக்கிறதே? சரி கல்யாணமாகாதவர்களுக்கு இது எதுக்கு? நன்றி

PUTHIYATHENRAL said...

* உச்சிதனை முகர்ந்தால்”.!
* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே!
* பெரியாரின் கனவு நினைவாகிறது
* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று!
* தமிழகத்தை தாக்கும் சுனாமி!
* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!
* இந்தியா உடையும்! ஆனா உடையாது .
* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?
* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!

Sankar Gurusamy said...

பப்பாளிப் பழம் பற்றி அற்புதமான தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

திண்டுக்கல் தனபாலன் said...

இரும்புச் சத்து நிறைய உள்ளது. சாப்பிட்டு விட்டு நிறைய தடவை தண்ணீர் குடிக்க வேண்டும்.
தகவலுக்கு நன்றி நண்பா!

சசிகுமார் said...

நிறைய தகவல்கள் நன்றி...

துரைடேனியல் said...

சகோ. பதிவுகளை அலுவலக கணினியை பயன்படுத்தியே இட்டு வருகிறேன். தங்களின் கடந்த மூன்று பதிவுகளுக்குமே ஒட்டு போட்டுவிட்டேன். ஆனால் என் மொபைல் மூலமாக தங்கள் தளத்தை அணுக முடியவில்லை. ஓட்டு உடனே போட்டு விடுவேன். ஆனால் கருத்துரை தாமதமாக இடுவேன். வரும் காலத்தில் சரி செய்ய அதாவது மடிகணினி வாங்கிய பிறகு இது சரியாகி விடும். அதுவரை இப்படித்தான். மன்னிக்கவும். இப்பதிவு மிக அருமை. தொடருங்கள்.

shanmugavel said...

@Sankar Gurusamy said...

பப்பாளிப் பழம் பற்றி அற்புதமான தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி..

thanks samkar

shanmugavel said...

@திண்டுக்கல் தனபாலன் said...

இரும்புச் சத்து நிறைய உள்ளது. சாப்பிட்டு விட்டு நிறைய தடவை தண்ணீர் குடிக்க வேண்டும்.
தகவலுக்கு நன்றி நண்பா!
நன்றி நண்பா!

shanmugavel said...

@சசிகுமார் said...

நிறைய தகவல்கள் நன்றி..

நன்றி சார்.

shanmugavel said...

@துரைடேனியல் said...

சகோ. பதிவுகளை அலுவலக கணினியை பயன்படுத்தியே இட்டு வருகிறேன். தங்களின் கடந்த மூன்று பதிவுகளுக்குமே ஒட்டு போட்டுவிட்டேன். ஆனால் என் மொபைல் மூலமாக தங்கள் தளத்தை அணுக முடியவில்லை. ஓட்டு உடனே போட்டு விடுவேன். ஆனால் கருத்துரை தாமதமாக இடுவேன். வரும் காலத்தில் சரி செய்ய அதாவது மடிகணினி வாங்கிய பிறகு இது சரியாகி விடும். அதுவரை இப்படித்தான். மன்னிக்கவும். இப்பதிவு மிக அருமை. தொடருங்கள்.

ஆதரவுக்கு நன்றி