பெண்மைக்குறைவு-ஆண்மைக்குறைவு- நரம்புத்தளர்ச்சி என்ற பதிவை திரட்டிகளில் இணைத்துவிட்டு வெளியில் சென்று விட்டேன்.இரண்டு மணி நேரம் கூட இருக்காது என்று நினைக்கிறேன் .தமிழ்மணத்தை பார்த்தபோது எனது இடுகை வேறொருவர் பதிவாக முதல் பக்கத்தில் இருந்தது.அந்த பதிவை சுட்டிப்போனால் சரவணன் எழுதி வெளியிட்டதாக ஓடிக்கொண்டிருக்கிறது.சுத்தமாக காபி.எனக்கு சிரிப்புதான் வந்தது.இவ்வளவு வேகமாகவா? அதுவும் இருப்பதை அப்படியே!
நெருக்கமில்லாத தம்பதிகள் அதிரும் மணவாழ்க்கை பதிவில் என்று குயபிட்டிருந்தால் அதுவும் அப்படியே இருக்கிறது.என் பதிவில் பெண்மைக்குறைவு பற்றி எழுதிவிட்டு ,ஆண்மைக்குறைவு ,நரம்புத்தளர்ச்சி பற்றிய செய்திகளுக்கு சுட்டி கொடுத்திருந்தேன்.அவர்கள் வெளியிட்டதில் பெண்மைக்குறைவுக்கான செய்தி மட்டும்தான் இருக்கிறது.
மேற்குறிப்பிட்டுள்ள பதிவே மருத்துவர் ஒருவர் இதைப்பற்றி நீங்கள் எழுதலாமே என்று கூறியதால் எழுதப்பட்டதுதான்.சொல்லிவிட்டு போய் விட்டாரே தவிர தகல்களை கேட்க போகும்போதெல்லாம் அவர் பயங்கர பிஸி.நான்கு முறை அவர் கிளினிக்குக்கு சென்று இரவு பத்து மணிக்கு அவருடன் பேச முடிந்தது.
ஆண்மைக்குறைவு ,நரம்புத்தளர்ச்சி இடுகை ஆரம்பத்தில் (சில மாதங்களுக்கு முன்பு)எழுதியது.ஆயிரக்கணக்கான ரூபாயை லாட்ஜ் வைத்தியர்களிடம் தொலைத்துவிட்டு வந்து ஒரு இளைஞன் என்னிடம் புலம்பிய பின் அதை எழுதினேன்.சிரமப்பட்டும் நேரம் ஒதுக்கியும் பதிவுகளை எழுதுகிறோம்.மின்னல் வேகத்தில் காபி பேஸ்ட் செய்துவிட்டு மார் தட்டிக் கொள்கிறார்கள்.
இதற்கு முன்பு பாண்டிச்சேரி வலைப்பூ ,tamillook ஆகிய வற்றில் என்னுடைய பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.ஆனால் அனுமதி கேட்டபின்பே வெளியிட்டார்கள்.அதுவும் என் பெயரில் இருக்கும்.அடுத்தவன் பதிவை காப்பியடித்து தன் பெயரில் வெளியிட்டு எதை சாதிக்க அலைகிறார்கள்? இவர்களையெல்லாம் என்ன செய்வது? தமிழ்மணம் நிர்வாகத்திற்கு இதைப் பற்றி தெரிவித்தேன்.we will look into it and let you know soon என்று மின்ன்ஞ்சலில் பதில் அளித்திருக்கிறார்கள்.தமிழ்மணம் நிர்வாகத்திற்கு நன்றி!
காபியடித்த பதிவின் சுட்டி கீழே

