Wednesday, August 31, 2011

கொத்தமல்லி உயிரைக் காப்பாற்றும்.


                                இரவு பன்னிரண்டு மணி இருக்கும்.அத்தை வீட்டில் இருக்கிறேன்(தந்தைக்கு மூத்தவர்).வயிற்றை புரட்டியது போல உணர்வு.பேதியாகி விட்ட்து.கொஞ்ச நேரத்தில் வாந்தி.சிறுவயதில் எங்கெங்கோ விற்பதை வாங்கித்தின்பதுதான்.அடிக்கடி பாத்ரூம் போவது தவிர்க்கமுடியாமல் ஆகிவிட்ட்து.

                               தூக்கத்தில் இருந்து அத்தை எழுந்துவிட்டார்.சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.கையில் ஒரு தம்ளரை கொடுத்து குடிக்கச்சொன்னார்.கொத்தமல்லி வாசனை தூக்கலாக இருந்த்து.பிறகு அவரே விளக்கினார்.அந்த பானத்தில் கொஞ்சம் சுக்கும்,பனை வெல்லமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

                               மிக இனிப்பான பானம் அது.அதிக அளவில் தனியா(காய்ந்த கொத்தமல்லி விதைகள்) சேர்க்கப்பட்டிருந்த்து.வயிற்றில் ஏற்பட்ட பிரச்சினை சரியாகப் போய்விடும் என்றார்.அரை மணி நேரத்தில் எல்லாமும் சரியாகப்போய் விட்ட்து.வயிற்றுப்போக்கு என்பது சில நேரங்களில் அபாயமான விஷயம்.நீரிழப்பு ஏற்பட்டு விட்டால் உயிர்கூட போய்விடும்.

                                காலையில் மீண்டும் இன்னொரு முறை அதே பானத்தை கொடுத்தார்.அப்புறம் நல்ல பசி.சோர்வோ,இரவின் பாதிப்போ இல்லை.முழுமையாக குணமாகி விட்டிருந்த்து.இதையெல்லாம் பாட்டி வைத்தியம் என்கிறார்கள்.இப்போது அவ்வளவு மதிப்பும் கிடையாது.உடனடியாக மருத்துவமனையை எட்ட முடியாத நள்ளிரவில்,இது போன்ற பிரச்சினைகளை சமாளிக்க தெரிந்து வைத்திருந்தார்கள்.

                                   நாளிதழ்களில் படித்த செய்தி ஒன்று ஆச்சர்யத்தை தந்த்து.எனக்கு ஏற்பட்ட் ஃபுட் பாய்சனை கொத்தமல்லி விதை குணப்படுத்தும் என்பதை போர்ச்சுக்கல் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.தனியா எண்ணெய்யை கொண்டு செய்த பரிசோதனையில் இந்த முடிவை எட்டியிருக்கிறார்கள்.

                                   ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாமல் வளரும் கிருமிகளை(பாக்டீரியாக்கள்) அழிப்பதும் தெரிய வந்திருக்கிறது.உலக விஞ்ஞானிகள் திணறிக்கொண்டிருக்கும் முக்கியமான விஷயம் இது.மாத்திரைகள் சாப்பிடுவீங்களா? உஷார் என்ற பதிவில் இதைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.பாக்டீரியாவுக்கு எதிராக இப்போது இருப்பது ஆண்டிபயாடிக்தான்.இதுவும் வேலை செய்யாவிட்டால் சிக்கல்.ஆனால் தனியா எண்ணெய் உதவும் என்கிறது ஆராய்ச்சி.

                                  பாரம்பரிய உணவு முறையில் ஆரோக்கியத்துக்கான அத்தனை அம்சங்களும் இருந்த்து.உதாரணமாக மிளகாய்ப்பொடி தயாரித்தால் தனியா உள்பட ஏராளமான பொருட்கள் அதில் சேர்க்கப்பட்டிருக்கும்.இப்போது நாம் நிறைய இழந்து விட்டோம்.ஆனால் நாம் இழந்து விட்ட்தை வெளிநாட்டினர் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நமக்கே வேறு வடிவில் அதை தரப்போகிறார்கள்.

                                பலருக்கும் தெரிந்த பாட்டி வைத்தியங்களை பகிர்ந்து கொண்டால் எதிர்காலத்துக்கு உதவும்.நம்மால் முடியாவிட்டால் வெளிநாட்டினரை ஆராய்ச்சி செய்ய கேட்டுக்கொள்ளலாம்.நம்மிடம் இருந்தும் இல்லாமல் இருக்கிறோம்.முயற்சி செய்தால் இந்தியா பல நல்ல விஷயங்களை உலகிற்கு அளிக்கும் என்று தோன்றுகிறது.
-

Tuesday, August 30, 2011

கண்களில் தெரியும் உணர்ச்சிகள்


                              யாரைப்பார்த்தாலும் கண்களைக் கவனிப்பது எனக்கு பழகிப்போய் விட்ட்து.கடவுளைப் பார்த்தால் கூடவா? ஆமாம்.இணையத்தில் சாமி பட்த்தை பார்த்தால் கூட!சகோதரி ராஜராஜேஸ்வரி வலைப்பதிவில் விநாயகரைப்பார்த்தேன்.எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.கடவுள் கண்ணை அசைத்து அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார்.வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

                              கும்பாபிஷேகம் செய்யும்போது கண் திறப்பது என்பார்கள்.புதியதாக சிலைஅமைத்தாலும் கண் திறப்பதே இறுதி செயல்.கண்களைக்கொண்டுதானே அருளாசி வழங்க முடியும்?கண்களைக் கவனிக்க பழகி விட்டால் உடல் மொழியில்(body language) ஒருவர் தேறிவிட்டார் என்று அர்த்தம்.எதிரில் இருப்பவர் ஒரு வார்த்தை கூட நம்மிடம் பேசத்தேவையில்லை.

                              கண் சிவக்கும் கோபத்திலிருந்து ஆயிரம் வாட்ஸ் விளக்காக மின்னும் காம்ம் வரை கண்களில் காண முடியும்.வெறுப்பு,ஆத்திரம்,பயம்,துக்கம் என்று அனைத்து உணர்வுகளையும் எதிரில் இருப்பவருக்கு அறிவிப்பது கண்கள்தான்.காதல் கண்களிலிருந்தே துவங்குகிறது.கண்ணோடு கண் நோக்குவதுதான் முதல் படி.

                       ஒருவர் மற்றவரை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறோம்.சீரான உறவுகளைப் பேண முக்கியமான வழி அது.புரிந்து கொள்வது என்பதில் ஒருவரது உணர்ச்சிகளை தெரிந்து கொள்வதுதான்.அதனால் என்ன பிரயோஜனம்? கண்களில் பயம் தெரிந்தால் எதனால் அந்த பயம் என்று கேளுங்கள்.அவரை நீங்கள் சரியாக புரிந்து கொண்ட்தாக நினைப்பார்.அதற்கான காரணத்தையும் சொல்ல முன்வருவார்.அவருடைய பயத்தை குறைக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள்.இது இயல்பாக நடக்கும்.

                             தாங்க முடியாத துக்கம் சில நேரம் கண்ணீராக வெளிப்படுகிறது.அழும்போது சமாதானப் படுத்த முயற்சிப்பது பரவலாக இருக்கும் ஒன்று.ஆனால் ஆலோசனை (counselling) பயிற்சி பெற்றவர்கள் அப்படி செய்வதில்லை.அழுது முடிக்கும் வரை காத்திருப்பார்கள்.அப்புறம் அவரை அழத்தூண்டிய விஷயத்தை விசாரிப்பார்கள்.பதிலை வைத்து உணர்வுகளை சமாளிக்க ,முடிவெடுக்க உதவுவார்கள்.

                             கண்களால் காண்பதும் பொய் என்று சொல்கிறார்கள்.ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் துரைசாமி அவர்கள்.அவருடைய கையில் பக்திப் புத்தகத்தை பார்த்துவிட்டு உடன் வந்தவர் சொன்னார்பெரிய பக்திமான் போலிருக்கிறதுஎன்று.ஆனால் அவருக்கு பெரியார் மீதுதான் பக்தி  அதிகம்.பெரியாரும் ராமாயணம் படித்த்துண்டு.

                             நீங்கள்எதிரில் இருப்பவர் கண்களில் காண்பது எப்போதும் பொய்யல்ல! பொய் பேசுபவர்கள் நேருக்கு நேராக கண்களைப் பார்த்து பேசமாட்டார்கள் என்பது பலருக்கும் தெரியும்.அவர்கள் நல்லவர்கள் இல்லை என்பதுடன் மனிதர்களும் அல்ல.அவர்களால் நமக்கு ஆகப்போவது எதுவும் இல்லை.

                             வேலைக்கான நேர்காணல்களின் போது கண்களைப் பார்த்து பதில் சொல்லாதவர் தோல்வி அடைவது நிச்சயம்.கணினி,டி,வி போன்றவை இன்று கண்ணுக்கு பெரும் பிரச்சினைகளை கொண்டு வருகின்றன.அடிக்கடி கண்களை அகற்றி மூடித் திறந்து பயிற்சி செய்ய வேண்டும்.கண்களைப் பார்த்து பேசுங்கள்; நீங்கள் கேட்ட்து கிடைக்கும்.
             நண்பர்களுக்கு ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
-

Monday, August 29, 2011

பணியிடங்களில் பாலியல் தொல்லைகள்

சமீபத்தில் தமிழக அரசு பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் தொடர்பாக உத்தரவிட்டது.உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி அரசு,பொதுத்துறை ,தனியார் துறை உள்ளிட்ட இடங்களில் விசாரணை அமைப்புகள் அமைக்கப்படவேண்டும்.பணியாளர் தரும் புகார்களை பெற்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.உயர் அதிகாரி என்றால் நேரடியாக அரசுக்கு அனுப்பவேண்டும்.எனது ஆரம்ப கால பதிவொன்றில் இருந்து சில பத்திகளை  தருகிறேன்.


பெண்கள் பணிபுரியும் இடங்களில் உடன் இருப்பவர்களால்,அலுவலர்களால் தரப்படும் பாலியல் தொல்லைகள் அமிலம் போல அவர்களது உள்ளத்தை சிதைக்கிறது.இரண்டு நிகழ்வுகளையும் அதன் எதிர்வினையையும் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரி.அந்நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தான் .அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த பெண்ணிடம் தொடர்ந்து தனது முறையற்ற பாலியல் வேட்கையை வெளிப்படுத்தியவாறு இருந்தான்.அந்தப்பெண் திருமணமானவர்.முடியாமல் போகவேஅந்த பெண்ணைப்பற்றி தலைமை அலுவலகத்துக்கு ஒரு மொட்டைக்கடிதம் எழுதினான் ."ஒழுங்காக பணிபுரிவதில்லை.நேரத்துக்கு வேலையில்இருப்பதில்லை.அலுவலகத்தில் ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார்."

மத்திய அரசு திட்டமொன்றின் மேலாளராக சமூக சேவை செய்ய  வந்தவன் அவன்.திருமணமாகாத ஒரு பணியாளர் மீது வெறி கொண்டான்.அவனுக்கு மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.அவனிடம் பணிபுரியும் பணியாளன் ஒருவனும் சேர்ந்து அந்தப்பெண் உடன் பணிபுரியும் பணியாளருடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து செல்வதை செல்போன் கேமராவில் படம்பிடிக்ககளப்பணியாளர் ஒருவரை பணித்தார்கள்.களப்பணியாளர் மறுத்து விட்டார்.(எதற்காக என்று புரியவில்லை)தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த பெண்ணை தொடர்ந்து சுற்றி சுற்றி கழுகுகளை போல கவனிக்கத்துவங்கினார்கள்.அந்த அயோக்கியர்களின் தொல்லைகளுக்கு பயந்து ஐந்து மணிநேரம் பயணம் செய்து தினமும் பணிக்கு வர ஆரம்பித்தார் .அவர்களது கீழ்த்தரமான் நடவடிக்கைகள் வெளியே தெரியவரவே அந்தப்பெண்ணை பற்றி தரமற்ற செய்திகளை பரப்ப ஆரம்பித்தார்கள்.


பணியிடங்களில் பாலியல் வன்முறைகள் குறித்துநிவாரணம் பெற சட்டம் தொடர்பாக இப்போது இருப்பது 1997-ல் விசாகா எதிர் ராஜஸ்தான் அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மட்டுமே. சட்டம் வருவது இழுத்துக்கொண்டிருக்கிறது.இத் தொல்லைகள் குறித்து அவர்களுடன் பணிபுரியும் பெண்களிடம் பேசினேன்.ஆனால் சிலர் பட்டதாரிகளாக இருந்தும் அவர்களுக்கு இத்தகைய சம்பவத்தை எதிர்கொள்வது பற்றி  எதுவும் தெரிந்திருக்கவில்லை. சாதாரணமாக இப்படிப்பட்ட நிகழ்வுகள் பெண்ணின் வாழ்க்கை முறையாக இருப்பதாக கருதினார்கள்.அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
என்ன செய்யலாம்...........................?
பள்ளி,கல்லூரிகளில் தற்போது நுகர்வோர்சங்கங்கள்,செஞ்சுருள் சங்கங்கள்,போன்றவை உள்ளன.அதேபோல பெண்ணுரிமை சங்கங்களை ஏற்படுத்தலாம்.அடிப்படை உரிமைகள்,தீர்வு காண்பது,பாதிக்கப்படும்போது சரியாக இயங்குதல் குறித்து பயிற்சி தரலாம்.அடுத்ததாக,மகளிர் சங்கங்களுக்கும் விழிப்புணர்வும் பயிற்சியும் தரலாம். -


                                                         ஈரோடு பெண் காவலர் தனது அதிகாரிகள் மீது பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு தொடர்ந்தார்.அவ்வழக்கில் உயர்நீதிமன்றம் ,தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் குழு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டுமென்றும்,அதற்கு தமிழக அரசு உதவ வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.உண்மையில் பட்டம் பெற்றவர்களுக்குக்கூட விழிப்புணர்வு இல்லை என்பதை என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.உயர்நீதி மன்ற உத்தரவு அந்தக் குறையை போக்கும் வண்ணம் உள்ளது.
-

Saturday, August 27, 2011

பெண்கள் ஆண்களைப் புரிந்துகொள்வது எப்படி?


                              உணவகம் ஒன்றில் நான்கு பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.நண்பர் ஒருவர் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொன்னார். தங்கையின் தோழியுடன் நன்றாகப் பேசுவது வழக்கம்.சில நேரங்களில் கேட்ட உதவியும் செய்வதுண்டு.போன் செய்து சந்தேகம் கேட்டாலும் இயல்பாக பேசுவார்.அடிக்கடி வீட்டுக்கு வருவதுண்டு என்பதால் காமெடியாக பேசிக்கொள்ளும் அளவுக்கு பழக்கம்.

                              திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்து பெண் பார்க்கப்போனார்கள்.வீட்டுக்கு வரும் வழியில் தங்கையின் இன்னொரு தோழியைப்பார்த்து எதேச்சையாக பேசப்போக அவர் முகத்தை திருப்பிக்கொண்டு போய்விட்டார்.நன்கு பழகிய தங்கையின் தோழிக்கு போன் செய்தால் பேசவில்லை.தங்கையை கேட்டாலும் அவரும் ஆச்சர்யமாக கேட்கிறார்.பின்னர் தெரிய வந்த விஷயம் தங்கையின் தோழிக்கு இவர் மீது ஒருதலைக் காதல்.

                              இவருக்கு மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லை.பெண் தானாகவே ஆசையை வளர்த்துக்கொண்டிருக்கிறது.தங்கையின் தோழி இன்னொருவரிடம் சொல்லியிருக்கிறார்நான் எவ்வளவோ நம்பியிருந்தேன்”.அவராக ஏன் நம்பிக் கொள்ள வேண்டும்.தன்னை காதலிப்பதாக அவராக ஏன் நினைத்துக்கொள்ள வேண்டும்? நன்றாக பேசினால்,உதவி செய்தால் மனம் எதையெதையோ கற்பித்துக்கொள்கிறதா?

                               எங்களுடன் அமர்ந்திருந்த இன்னொரு நண்பன் கூறினான்பெண்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்’’.உன் மனதிலும் அப்படி ஏதாவது எண்ணம் இருந்திருக்கும்”.சத்தியமாக இல்லை என்று மறுக்க பத்திரிகை நண்பர் சொன்னார்பெண்கள் ஒருவன் தன்னை எவ்வாறு பார்க்கிறான் என்றுதான் ஆண்களைப் புரிந்து கொள்வார்கள்.அவர்களைப்பொறுத்தவரை ஆண்கள் இரண்டு வகைதான்,ஒருவன் ஜொள் விடுபவன்,இன்னொருவன் அப்படி இல்லாதவன்

                                  அவன் விளையாட்டாக சொன்னாலும் எனக்கு சிந்தனையைத் தூண்டியது.எளிதில் புரிந்துகொள்ளும் பெண்களை விட எளிதில் ஏமாந்து போகும் பெண்கள் அதிகமாக இருப்பதை பார்த்திருக்கிறோம்.செண்டிமெண்டுக்கு பலியாவது ஒரு பிரச்சினை என்றால் இன்னொன்று சாதாரணமாகவே மனிதமனம் பொருள் சார்ந்த்து.வழியில் ஒருவர் கோபமாக பேசிக்கொண்டிருந்தார்.அவனுக்கு தினமும் குடிக்க வாங்கிக் கொடுத்தால் நல்லவன் இல்லாவிட்டால் கெட்டவன்,அவன் சகவாசமே வேணாம்

                                  குழந்தையாக இருக்கும்போதே தின்பதற்கு ஏதாவது வாங்கி வரும் மாமாவை விட கையை வீசிக்கொண்டு வரும் மாமாவை நமக்கு பிடிப்பதில்லை.அன்பு பொருளில் இருப்பதாக நினைப்பது நமக்கு பழகிப் போய்விட்ட்து.பரிசுப்பொருள் வாங்கிக் கொடுத்தால் மிகுந்த அன்புடையவன் என்று நினைத்துக்கொள்வது அப்படித்தான்.ஆண் பெண் அனைவரிடமும் டீ வாங்கிக் கொடுத்து ஹோட்டலுக்கு கூட்டிப்போய் நல்லவன் ஆகி விடுபவர்கள் உண்டு.

                                  ஆண் திட்டமிட்டு ஏமாற்றுவதை பெண்களால் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடிவதில்லை.ஆனால் யாரைத்தான் நம்புவது? அதிலும் காதல்,காம்ம் போன்றவற்றில் உணர்ச்சிப் பெருக்கோடு இருப்பதால் யோசிக்க முடிவதில்லை.மனம் உணர்ச்சிவசப் படும்போது சிந்திக்கும் திறனை இழந்து விடுகிறது.நல்லவர்களின் துணை இருந்தால் மீள முடியும்.

                                  பொதுவாகவே ஆண்களைவிட பெண்கள் புரிந்து கொள்ளும் திறன் அதிகம்தான்.ஆணுக்கு வெளிவிவகாரங்கள்,புகை,குடி,போட்டிகள்,அங்கீகாரம் என்று மனம் ஒரு நிலைப்படுவதில் பிரச்சினைகள் உண்டு.பெண்ணுக்கு அப்படி எதுவும் இல்லாத்தால் மனதை ஒருமுகப்படுத்துவது எளிது.இதனால்தான் படிப்பிலும் கூட பெண்கள் ஆண்களைவிட அதிக அளவில் தேர்ச்சி பெறுவது சாத்தியமாகிறது.
-