நகரின் பிரபலமான
பகுதியில் நல்ல தொழில்.ஒரே பையன்.கல்லூரிப் படிப்பு வரை படித்திருந்தான்.கௌரவமான
குடும்பம் என்று சொல்வார்களே அப்படி! கல்யாண வயது ஆகிவிட்ட்து என்று அப்போதுதான்
அவர்களுடைய பெற்றோருக்கு தெரிய வந்த்து.அதே தெருவில் இருக்கும் உறவுப் பெண் ஒருவர்
வந்து பேசினார்.” அந்தப்
பெண்ணை உங்கள் பையனுக்கு செய்து கொள்ளுங்கள்,இத்தனை பவுன் போடுவதாக சொல்கிறார்கள்’’
எடுத்த எடுப்பிலேயே அந்த வரனை நிராகரித்துவிட்டார்கள்.காதலுடன் ஓடிப்போனவரை
பிரித்து வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.அவனுடைய பெற்றோர்கள் போட்ட
சத்த்த்தில் உறவுப்பெண் ஆத்திரத்தோடு கிளம்பிப் போனதோடு சரி! அப்புறம் பேச்சு
வார்த்தையில்லை.இவனுக்கு பெண் தேட ஆரம்பித்தார்கள்.
இரண்டு மூன்று பெண்ணைப்பார்த்து இரு வீட்டார் சம்மதம் இருந்த பிறகும்
பெண்வீட்டார் தரப்பில் தட்டிக் கழித்தார்கள்.இது தொடர்கதை ஆகிக்
கொண்டிருந்த்து.ஜாதகத்தை தூக்கிக் கொண்டு சோதிடர்களிடம் ஓடினார்கள்.கோயில்கள்,பரிகாரம்,குளத்தில்
நீராடுதல் என்று நாட்கள் கடந்த்தே தவிர கல்யாணம் ஆசை மட்டும் கனவாகவே இருந்த்து.
எந்தக் குறையுமில்லாத பையனுக்கு இது அசாதாரண விஷயம்.சம்மதம் தெரிவித்து
வீட்டுக்கு வந்து போனவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை.மனசுக்குப் பிடித்துப் போன
நல்ல இடம்.பின்னர் புரோக்கர் வந்து சொன்னார்,’’பையனைப் பற்றி யாரோ தவறான தகவலை
சொல்லியிருக்கிறார்கள்’’.உறவுக்காரப்
பெண்ணின் வேலைதான் என்பது தெரிய வந்த்து.அவர் சொன்ன பெண்ணைக் கல்யாணம் செய்து
கொள்ளாத்தால் இப்படி செய்கிறார் என்று விளக்கிய பிறகும் அவர்கள் பெண் கொடுக்க
முன்வரவில்லை.
ஒரு நாள் இரண்டு
குடும்பத்துக்கும் பெரிய சண்டை.தெரு முழுக்க வேடிக்கை பார்த்தார்கள்.அதற்குப்பிறகு
கொஞ்ச நாளில் தெருவில் பெரும்பாலான வீடுகள் இவர்களுக்கு எதிராக மாறியது.ஓடிப்போய்
உதவுதல்,இனிக்க இனிக்க பேசுதல் என்று மற்ற
வீடுகளுடன் நல்லுறவை வளர்க்க ஆரம்பித்தார் உறவுப் பெண்.லாபியிங்கில்
நேர்மையானவர்களை விடவும் நேர்மையற்றவர்கள் உணர்ச்சிபூர்வமாக செயல்பட்டு வெற்றி
பெற்று விடுகிறார்கள்.
நல்லவர்கள் நாம்தான் நல்லவர்கள் ஆயிற்றே
என்று தற்பெருமையில் இருக்கிறார்கள்.அவர்களுக்கு எதிரானவர்கள் அப்படி
இருப்பதில்லை.வேறு தெருவுக்கு குடி போகிற நிலை.ஆனாலும் கல்யாண முயற்சி மட்டும்
வெற்றி பெறவில்லை.சில நேரங்களில் இப்படிப்பட்ட சம்பவங்களை கேள்விப்படுகிறேன்.அக்கம்பக்கத்தில்
விசாரித்தால் நல்ல மாதிரி சொல்வதில்லை என்பார்கள்.
கல்யாண
விசாரிப்புகளை பொருத்தவரை பத்து பேர் நல்லவன் என்று சொன்னாலும்,ஒருவர் வேறு மாதிரி
சொன்னால் யாருக்கும் மனம் வருவதில்லை.சிலர் துப்பறியும் நிறுவன்ங்களை நாடுகிறார்கள்.நல்லவர்களைப்
போல பொல்லாதவர்கள் அதிகமாகி விட்ட்தால் யாரைத்தான் நம்புவது? சிலருடைய வாழ்க்கை
இப்படியும் ஆகிவிடுகிறது.
எதிலும் வெற்றிபெற நல்லவராக இருப்பது மட்டுமல்ல வேறு சில விஷயங்களும்
தேவைப்படுகிறது.பூக்கடைக்கும் விளம்பரம் தேவை என்று சொல்கிறார்களே அப்படி!
27 comments:
சமூக மாற்றம் மட்டுமே மாற்றம் தரும், வேறு எதுவும் பலன் தராது என்பது என் எண்ணம்
//எதிலும் வெற்றிபெற நல்லவராக இருப்பது மட்டுமல்ல வேறு சில விஷயங்களும் தேவைப்படுகிறது.பூக்கடைக்கும் விளம்பரம் தேவை என்று சொல்கிறார்களே அப்படி! //
100% sari.
சாரி,தமிழில் சரி!
நல்லவராக இருப்பதல்ல! அப்படி மற்றவர்களை சொல்ல வைப்பதில் இருக்கிறது வெற்றி,நல்ல பதிவு.
ஆமை,முயல் கதை போலத்தான்,நான் கரெக்ட் என்று தூங்கிக் கொண்டிருந்தால் மற்றவர்கள் வீழ்த்த நினைப்பவர்கள் முந்திவிடுகிறார்கள்.
@suryajeeva said...
சமூக மாற்றம் மட்டுமே மாற்றம் தரும், வேறு எதுவும் பலன் தராது என்பது என் எண்ணம்
நன்றி சார்
@சென்னை பித்தன் said...
//எதிலும் வெற்றிபெற நல்லவராக இருப்பது மட்டுமல்ல வேறு சில விஷயங்களும் தேவைப்படுகிறது.பூக்கடைக்கும் விளம்பரம் தேவை என்று சொல்கிறார்களே அப்படி! //
100% sari.
சரிதான் அய்யா! நன்றி
@சென்னை பித்தன் said...
சாரி,தமிழில் சரி!
sarithaan sir
உண்மைதான். இந்த மாதிரி சில விசயங்களினால் காதல் திருமணம் நல்லது என்று தோன்றுகிறது.
@RAVICHANDRAN said...
நல்லவராக இருப்பதல்ல! அப்படி மற்றவர்களை சொல்ல வைப்பதில் இருக்கிறது வெற்றி,நல்ல பதிவு.
உங்கள் கருத்துரையும் அருமை.
@RAVICHANDRAN said...
ஆமை,முயல் கதை போலத்தான்,நான் கரெக்ட் என்று தூங்கிக் கொண்டிருந்தால் மற்றவர்கள் வீழ்த்த நினைப்பவர்கள் முந்திவிடுகிறார்கள்.
உண்மை சார்,நன்றி
@சாகம்பரி said...
உண்மைதான். இந்த மாதிரி சில விசயங்களினால் காதல் திருமணம் நல்லது என்று தோன்றுகிறது.
ஆமாம்,அதிலும் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது,நன்றி
அருமை...
அந்த உறவுகார பெண்ணை நாசுக்காக கையாண்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைக்கிறேன்...
பலபேரின் பிரச்சனையும் இதுதான்...
நிகழ்காலத்தில் ஒரு சம்பவத்தை சரியான முறையில் எதிர்கொள்ள தெரியாததால் அதுவழி விளையும் விளைவே எதிர்காலத்தில் பிரச்சனையாக நம்மை வந்தடைகிறது...
சரிதான்!
நல்லவராக இருப்பதல்ல! அப்படி மற்றவர்களை சொல்ல வைப்பதில் இருக்கிறது வெற்றி//
இதில் தான் அதிகம் பேர் தோற்றுப் போகிறோம்
@Online Works For All said...
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
தங்கள் வருகைக்கு நன்றி
@சசிகுமார் said...
அருமை...
நன்றி சார்
@ராஜா MVS said...
அந்த உறவுகார பெண்ணை நாசுக்காக கையாண்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைக்கிறேன்...
பலபேரின் பிரச்சனையும் இதுதான்...
நிகழ்காலத்தில் ஒரு சம்பவத்தை சரியான முறையில் எதிர்கொள்ள தெரியாததால் அதுவழி விளையும் விளைவே எதிர்காலத்தில் பிரச்சனையாக நம்மை வந்தடைகிறது...
ஆமாம்,இதுவே நிஜம்,கருத்துரைக்கு நன்றி
@koodal bala said...
சரிதான்!
நன்றி சார்
@rufina rajkumar said...
நல்லவராக இருப்பதல்ல! அப்படி மற்றவர்களை சொல்ல வைப்பதில் இருக்கிறது வெற்றி//
இதில் தான் அதிகம் பேர் தோற்றுப் போகிறோம்
ஆமாம்,தங்கள் கருத்துரைக்கு நன்றி
இன்றைய உலகில் நல்லவனாக இருந்தால்மட்டும் போதாது வல்லவனாகவும் இருந்தால்தான் ஜெயிக்கமுடியும்.
நாசூக்காக மறுக்கத் தெரியாததோடு, இன்னும் பகையை வளர்த்துவது நல்லதல்ல...
நல்ல பகிர்வு நண்பரே
"லாபியிங்கில் நேர்மையானவர்களை விடவும் நேர்மையற்றவர்கள் உணர்ச்சிபூர்வமாக செயல்பட்டு வெற்றி பெற்று விடுகிறார்கள்". நல்ல எடுத்துகாட்டு! வாழ்த்துக்கள்.
ஒருவன் நல்லவனாக இருப்பதைவிட, நைச்சியமானவனாக இருப்பதே உத்தமம்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
எண்ணம்போலவே வாழ்க்கை அமையும். அடுத்தவர் வாழ்க்கையை அழித்து அதில் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது?
வணக்கம் அண்ணே,
நல்லதோர் கட்டுரைப் பகிர்வு,
இன்றும் பழமையைக் கட்டிக் காக்கும் சமூகத்தின் இன்னோர் பக்கத்தினை பதிவில் சொல்லியிருக்கிறீங்க.
இதனால் பாதிக்கப்படும் அப்பாவி உள்ளங்களின் நிலையினையும் அழகாக விளக்கியிருக்கிறீங்க.
Post a Comment