Tuesday, November 15, 2011

பெண்களும் ரகசியமும்

திருமணமான சில நாட்களில் நண்பன் புலம்பினான்.எதுவுமே சொல்வதற்கில்லை.எப்படித்தான் நம்பி ஒரு விஷயத்தை சொல்வது? உடனே வெளியே போய்விடுகிறது.எனக்கு இப்படி இருந்தால்தான் பிடிக்கும் என்று சொல்ல,அந்த முழு வார்த்தையும் அதே ஏற்ற இறக்கங்களுடன் அக்காவிடம் போய் விட்ட்து.சில நேரங்களில் அம்மாவிடம் போய்விடுகிறது.புது மாப்பிள்ளை பற்றி தெரிந்துகொள்ள சுற்றத்தினர் ஆர்வமாக இருப்பார்கள்.
                                       ரகசியம் என்பதே நம்மிடம் மட்டும் இருப்பதுதான்.இரண்டாவது நபரிடம் அது தங்குமானால் அவர் மிகவும் நல்லவராக இருக்க வேண்டும்.இன்று நாளிதழில் போட்டிருப்பதாக நண்பர் கூறியதுஅரை மணி நேரத்துக்கு மேல் பெண்களிடம் ரகசியம் தங்காதாம்ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள்.இது நம்மிடம் ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைதான்.
                                 வழக்கமாகவே பெண்கள் உணர்வு சார்ந்து இயங்குபவர்கள் ஏன்ற கருத்து உண்டு.இப்போது மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பது வேறு விஷயம்.நீங்கள் ஒரு கருத்தை கூறும்போது அதைப்பற்றி சிந்திக்க முடியாதவர்கள் வெளியே சொல்வார்கள்.மற்றவர்கள் கருத்தை அறிவதும்,அது சரியானதா என்று பார்ப்பதே நோக்கம்.ஆண்களும் இப்படி உண்டு.
                                     புதிய ஒன்றை கேள்விப்படும்போதும் இப்படி நடக்கும்.உதாரணமாக ’’எனக்கு புரோட்டா பிடிக்காது,அது சர்க்கரை நோயைத்தரும் என்று சொல்கிறார்கள் என்று மனைவியிடம் சொல்கிறீர்கள்,உடனே அக்காவுக்கு போன் செய்து இப்படி சொல்கிறார் என்று விஷயம் போய்விடும். இதுவரை அவரது மனைவி இந்த விஷயத்தை கேள்விப்பட்ட்தில்லை.அதனால் அவர் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.
                                   ஒருவரிடம் பகிர்ந்து கொள்ள புதியதான, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் ஒன்று தேவை.நாம் பேசுவது நம் மீது மரியாதையை தூண்டி நம்மை முக்கியமானவராக கருதவேண்டும் என்று நினைக்கிறோம்.இதனாலேயே பல தகவல்கள் வெளியேறுகின்றன.தன்னை நேசிக்கவில்லை என்று கருதும் மனைவி கணவனின் எல்லா நடவடிக்கைகளையும் வெளியே சொல்ல வாய்ப்புண்டு.
                                   இன்னொரு வேடிக்கை உண்டு.யாரிடமும் வெளியே சொல்லாதே! என்றால் உடனே மற்றவர்களிடம் சொல்லிவிடுங்கள் என்று அர்த்தம் என்பார்கள்.உண்மையைச் சொன்னால் நம்மிடம் மட்டும் ஏன் சொல்லவேண்டும்? அவரே ரகசியமாக வைத்திருக்கலாமே? உன்னிடம் மட்டும் எதையும் மறைக்கமாட்டேன்,நீ எனக்கு அவ்வளவு முக்கியமான ஆள் என்ற விஷயம் இதில் ஒளிந்திருக்கிறது.
                                  ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ரகசியத்தை வெளியில் சொல்வது கொடூரமானது.அன்பு கொண்ட மனிதர்கள் அதைச் செய்வதில்லை.நம் மீதான நம்பிக்கையும் சிதறிவிடுகிறது.நம்பிக்கை போய்விட்டால் அப்புறம் உறவுகளில் என்ன வேண்டிக்கிடக்கிறது?
-

29 comments:

சென்னை பித்தன் said...

நம்பிக்கை போனால்,உறவும் அவ்வளவுதான்!
நன்று.

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

நம்பிக்கை போனால்,உறவும் அவ்வளவுதான்!
நன்று.

நன்றி அய்யா!

RAVICHANDRAN said...

பெண்கள் ரகசியம் காக்கமாட்டார்கள் என்பதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.விளக்கத்திற்கு நன்றி

RAVICHANDRAN said...

// ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ரகசியத்தை வெளியில் சொல்வது கொடூரமானது.அன்பு கொண்ட மனிதர்கள் அதைச் செய்வதில்லை//

சத்தியம் சார்!

shanmugavel said...

@RAVICHANDRAN said...

பெண்கள் ரகசியம் காக்கமாட்டார்கள் என்பதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.விளக்கத்திற்கு நன்றி

உங்களுக்கும் நன்றி

shanmugavel said...

@RAVICHANDRAN said...

// ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ரகசியத்தை வெளியில் சொல்வது கொடூரமானது.அன்பு கொண்ட மனிதர்கள் அதைச் செய்வதில்லை//

சத்தியம் சார்!

நன்றி சார்

திவ்யா said...

வெளி உலகம் பார்க்காத பெண்கள்தான் ரகசியம் காக்கமாட்டார்கள்.

shanmugavel said...

அப்படியா??? நன்றி

பாலா said...

நீங்கள் சொல்வது உண்மைதான். ரகசியம் என்பது ஒருவருக்கு மட்டும் தெரிந்திருக்கும் வரையே. இன்னொருவரிடம் சொல்லிவிட்டால் அது ரகசியம் ஆகாது. நன்றி நண்பரே.

Sankar Gurusamy said...

எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக ரகசியங்கள் வைத்திருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

சத்ரியன் said...

ரகசியம் என்பது உரியவரின் உதடுகள் தாண்டாத வரையில் தான்.

சிறந்ததொரு பகிர்வு.

ராஜா MVS said...

ரகசியம் என்று ஒன்றை வாழ்நாளில் வைத்திருப்பதே பெரிய விஷயம்... ஏதாவது ஒரு சூழ்நிலையில் உலரிவிடுவான் மனிதன்...

பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

மாய உலகம் said...

உண்மை கூட சில நேரம் ரகசியமாகத்தான் இருக்க வேண்டும் என பல சித்தர்களும் நினைத்தார்கள்.. ஆனால் இன்றோ சாதாரண ரகசிய விசயம் கூட பூசி மெழுக்கூட்டி வாய் ஜாலர்கள் அடிக்கும் கூத்துக்கள் கொடிக்கட்டி பறக்கிறதே... பகிர்வுக்கு நன்றி நண்பரே!

சசிகுமார் said...

உன் மனதில் இருக்கும் வரையே ரகசியம் ....

கூடல் குணா said...

உண்மைதான் ,ரகசியத்துக்கு மட்டும் ஆயிரம் காதுகள் காத்துக்கிடக்கிறது .கேட்பதற்கு !

சாகம்பரி said...

ஒருவரிடம் நேரிடையாக தெரிவிக்க முடியாத விசயத்தை, மற்றொருவர் மூலம் தெரிவிக்க இந்த ரகசியம் காத்தல் பயன்படுகிறது. முக்கியமாக அவரிடம் சொல்லாதே என்று சொல்லப்படும் விசயம் ஒரு வார்த்தைகூட குறையாமல் சென்று சேர்ந்துவிடும். இவர்களை நாங்கள் ஜெராக்ஸ் மிஷின் என்று சொல்லுவோம். ஒட்டை வாயர்களைவிட மோசம். நல்ல பகிர்விற்கு நன்றி.

shanmugavel said...

@பாலா said...

நீங்கள் சொல்வது உண்மைதான். ரகசியம் என்பது ஒருவருக்கு மட்டும் தெரிந்திருக்கும் வரையே. இன்னொருவரிடம் சொல்லிவிட்டால் அது ரகசியம் ஆகாது. நன்றி நண்பரே.

நன்றி சார்.

shanmugavel said...

@Sankar Gurusamy said...

எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக ரகசியங்கள் வைத்திருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது..

பகிர்வுக்கு மிக்க நன்றி..
ஆமாம் சார்,உங்கள் கருத்துரை அருமை.நன்றி.

shanmugavel said...

@சத்ரியன் said...

ரகசியம் என்பது உரியவரின் உதடுகள் தாண்டாத வரையில் தான்.

சிறந்ததொரு பகிர்வு.

thanks sathriyan.

shanmugavel said...

@ராஜா MVS said...

ரகசியம் என்று ஒன்றை வாழ்நாளில் வைத்திருப்பதே பெரிய விஷயம்... ஏதாவது ஒரு சூழ்நிலையில் உலரிவிடுவான் மனிதன்...

பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

நன்றி,நண்பா!

shanmugavel said...

@மாய உலகம் said...

உண்மை கூட சில நேரம் ரகசியமாகத்தான் இருக்க வேண்டும் என பல சித்தர்களும் நினைத்தார்கள்.. ஆனால் இன்றோ சாதாரண ரகசிய விசயம் கூட பூசி மெழுக்கூட்டி வாய் ஜாலர்கள் அடிக்கும் கூத்துக்கள் கொடிக்கட்டி பறக்கிறதே... பகிர்வுக்கு நன்றி நண்பரே!

உண்மைதான் நண்பா! நன்றி.

shanmugavel said...

@சசிகுமார் said...

உன் மனதில் இருக்கும் வரையே ரகசியம் ....

yes sir thank you

shanmugavel said...

@கூடல் குணா said...

உண்மைதான் ,ரகசியத்துக்கு மட்டும் ஆயிரம் காதுகள் காத்துக்கிடக்கிறது .கேட்பதற்கு !

உண்மை அய்யா! நன்றி

shanmugavel said...

@சாகம்பரி said...

ஒருவரிடம் நேரிடையாக தெரிவிக்க முடியாத விசயத்தை, மற்றொருவர் மூலம் தெரிவிக்க இந்த ரகசியம் காத்தல் பயன்படுகிறது. முக்கியமாக அவரிடம் சொல்லாதே என்று சொல்லப்படும் விசயம் ஒரு வார்த்தைகூட குறையாமல் சென்று சேர்ந்துவிடும். இவர்களை நாங்கள் ஜெராக்ஸ் மிஷின் என்று சொல்லுவோம். ஒட்டை வாயர்களைவிட மோசம். நல்ல பகிர்விற்கு நன்றி.

சுவாரஸ்யம்,நன்றி

shanmugavel said...

@suryajeeva said...

super

நன்றி சார்

துரைடேனியல் said...

Ragasiyam
ambalamaagum pothu
Uravu
Pagai agi vidukirathu.

Nalla Pathivu.
TM 8.

shanmugavel said...

@துரைடேனியல் said...

Ragasiyam
ambalamaagum pothu
Uravu
Pagai agi vidukirathu.

Nalla Pathivu.

thanks sir

அம்பலத்தார் said...

பெண்கள் மட்டுமன்றி ஆண்களிலும் ரகசியம் காக்கமாட்டாதவர்கள் உண்டு.

அம்பலத்தார் said...

ஆண்களின் உலகத்தில் பேசப்படும் விடயங்கள் அவர்கள் நட்பு வட்டங்கள் வேறு. பெண்கள் உலகத்தில் பேசப்படுவது வேறு. பெண்கள் பொதுவாக உறவினர்கள், அயலவர், தெரிந்தவர் என்ற வட்டத்திற்குள்ளேயே அதிகமாகப் பேசிக்கொள்வதுவும், அவர்கள் பேச்சில் இவ்வாறான தனிப்பட்ட விடயங்களே அதிகமாக அலசப்படுவதுவும் இதற்கு ஒரு காரணமாகும்.