Friday, November 18, 2011

வேலை செய்யும் இடமும் மன நலமும்

வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் இடம் நாம் வேலை பார்க்கும் இடம்தான்.சுவரை வைத்தே சித்திரம் என்பது போல வேலையை வைத்தே எல்லா நலமும். தொழில் செய்பவர்களை விடுத்து  அரசாங்கத்திலோ தனியார் நிறுவனத்திலோ பணியாற்றுகிறோம்.வேலைச் சூழல் வீட்டில் எதிரொலிக்கிறது.

அதிகாரியிடம் காட்ட முடியாத கோபத்தை வீட்டில் காட்டுவதும் உண்டு.மன நலத்தை நிர்வகிக்கும் காரணிகளில் வேலை செய்யும் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது.அதிலும் அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அதி முக்கியமானவர்.நல்லவராக இருந்து விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை.அவருடன் ஏற்படும் உரசல்களே பலருடைய மன நலத்தை குறி வைக்கிறது.


பெரும்பாலான அலுவலகங்களில் பொதுவான ஒரு விஷயம் அரசியல்.அரசியல் இருந்தால் கூடவே இருக்கும் குழுக்கள்.நான்கு பேர் வேலை செய்கிறவர்களாகவும்,நான்கு பேர் ஏமாற்றுப் பேர்வழிகளாகவும் இருப்பார்கள்."வேலை செய்கிறவனுக்கு வேலை கொடு! வேலை செய்யாதவனுக்கு சம்பளத்தைக் கொடு! என்று சொல்லப்பட்டது சுத்தமாக பொருந்தும்.

எமாற்றுகிறவனின் வேலையை அப்பாவி தலையில் கட்டுவார்கள்.சில நல்ல அதிகாரிகளும் இம்மாதிரி வேலையை செய்வதுண்டு.ஏமாற்ற நினைப்பவன் தலை வலிக்கிறது என்று உட்கார்ந்து கொள்வான்,இல்லாவிட்டால் வயிற்றை புரட்டுகிறது என்பான்.அப்புறம் வேலை நடக்காது! என்று காரணம் சொல்வார்கள்.


ஒழுங்காக இருப்பவர்களை குறை சொல்வதன் மூலம் தனது தவறை மறைக்கப் பார்ப்பார்கள்.இன்னொன்று ஏமாற்றுப் பேர்வழிகள் ,"டிபன் சாப்பிடுறீங்களா சார்?,காபி சாப்பிடுறீங்களா சார்? என்று அக்கறையாக இருப்பார்கள்.வீட்டில் மின் கட்டணம் கட்டுவது,குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவது போன்ற முக்கிய வேலைகளை தயங்காமல் செய்வார்கள்.அலுவலக வேலைதான் கஷ்டம்.போகட்டும்.

அலுவலக அரசியலில் சிக்காமல் புன்னகையுடன் வலம் வருபவர்களை பார்த்திருக்கிறேன்.பத்து மணி வேலைக்கு பத்து மணிக்கு சரியாக வந்து நிற்பார்கள்.அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலையை செய்வார்கள்.ஒய்வு கிடைத்தால் புத்தகம் படிப்பார்கள்.இல்லாவிட்டால் வீட்டுக்கு ,நண்பர்களுக்கு போன் செய்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் தினமும் புத்துணர்வுடன் வேலைக்கு வருகிறார்கள்.பிரச்சினையான ஆட்களைப் பார்த்தால் பையன் நன்றாக படிக்கிறானா? மனைவிக்கு உடல்நலம் எப்படி இருக்கிறது? என்று கேட்டு நகர்ந்து விடுவார்கள்.ஒழுங்கமைந்த ஆளுமை(personality) இது .இப்படிப்பட்டவர்கள் மன நலத்தை யாராலும் கெடுத்துவிட முடியாது.


-

22 comments:

SURYAJEEVA said...

பலர் அவர் அறியாமையில் செய்கிறார் என்று விட்டு விடுகிறார்கள்... அது தான் சிறப்பே

RAVICHANDRAN said...

நாம் நம்முடைய வேலையை பார்த்துக்கொண்டு போனால் எந்த பிரச்சினையும் வராது.மனதும் பாதிக்கப்படாது.

RAVICHANDRAN said...

//அதிகாரியிடம் காட்ட முடியாத கோபத்தை வீட்டில் காட்டுவதும் உண்டு.மன நலத்தை நிர்வகிக்கும் காரணிகளில் வேலை செய்யும் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது.//

உண்மை.

shanmugavel said...

@suryajeeva said...

பலர் அவர் அறியாமையில் செய்கிறார் என்று விட்டு விடுகிறார்கள்... அது தான் சிறப்பே

ஆமாம் சார்,நன்றி

shanmugavel said...

@RAVICHANDRAN said...

நாம் நம்முடைய வேலையை பார்த்துக்கொண்டு போனால் எந்த பிரச்சினையும் வராது.மனதும் பாதிக்கப்படாது.

சில நேரங்களில் ஒதுக்கிவிடுவார்கள்,அதையும் சமாளிக்கவேண்டும்,நன்றி

shanmugavel said...

@RAVICHANDRAN said...

//அதிகாரியிடம் காட்ட முடியாத கோபத்தை வீட்டில் காட்டுவதும் உண்டு.மன நலத்தை நிர்வகிக்கும் காரணிகளில் வேலை செய்யும் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது.//

உண்மை.

அதிகாரியிடம் காட்டினால் நடப்பது வேறு.நன்றி

பாலா said...

பணியிடங்களில் லாவகமாக நடந்து கொள்ளும் முறை பற்றி கூறி இருக்கிறீர்கள். அருமை.

Unknown said...

தானுண்டு தன் வேலையுண்டு
என்றுயிருந்தால் எந்த பிரச்சனையும்
வராது!



புலவர் சா இராமாநுசம்

ராஜா MVS said...

நல்லது...

பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

சசிகுமார் said...

சார் பதிவு எனக்குன்னு எழுதியது மாதிரி இருக்கு...

சென்னை பித்தன் said...

நீங்கள் சொல்வது சரிதான்.

shanmugavel said...

@பாலா said...

பணியிடங்களில் லாவகமாக நடந்து கொள்ளும் முறை பற்றி கூறி இருக்கிறீர்கள். அருமை.

நன்றி பாலா!

shanmugavel said...

@புலவர் சா இராமாநுசம் said...

தானுண்டு தன் வேலையுண்டு
என்றுயிருந்தால் எந்த பிரச்சனையும்
வராது!



புலவர் சா இராமாநுசம்

ஆமாம் அய்யா! நன்றி

shanmugavel said...

@ராஜா MVS said...

நல்லது...

பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

தங்களுக்கும் நன்றி

shanmugavel said...

@சசிகுமார் said...

சார் பதிவு எனக்குன்னு எழுதியது மாதிரி இருக்கு...

பலபேர் அப்படி நினைப்பார்கள்,நிறைய இடங்களில் நடக்கும் விஷயம்,நன்றி

shanmugavel said...

@சென்னை பித்தன் said...

நீங்கள் சொல்வது சரிதான்

நன்றி அய்யா!

Unknown said...

எனது வலைப்பூவில் தாங்கள் இணைந்தமைக்கு மிக்க நன்றி...

Sankar Gurusamy said...

பல நேரங்களில் இந்த அரசியலில் இருந்து தப்பிப்பது மிகவும் சிரமமே.. ஒதுங்கி இருப்பவர்களை ஓவராக தாக்குபர்களே அதிகம்..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

ராம்ஜி_யாஹூ said...

nice post

துரைடேனியல் said...

Arumai. En office lum intha arasiyal undu. Naan ani seraa kolgai udayaiyavanaaga iruppathal ivaikalil sikki kolvathillai. Enakku piditha pathivu.

TM 8.

மகேந்திரன் said...

பணியாளர்க் கல்வி பயின்றதுபோல இருந்தது நண்பரே..
பகிர்வுக்கு மிக்க நன்றி..

அம்பலத்தார் said...

நல்ல ஒரு விடயத்தை பதிவிட்டுள்ளீர்கள்.தனது வேலையில் போதிய திறமையும், எந்தவிதமான சூழலையும் சமாளிக்கும் வல்லமையும் இருக்கவேண்டியது முக்கியம் என எண்ணுகிறேன்.