புத்தகம்
படித்துக் கொண்டிருக்கும்போது சிலர் உணர்ச்சிவசப் படுகிறார்கள்.சினிமா பார்த்துக்
கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு காட்சியில் அழுகிறார்கள்.ஆனால் படம் பார்க்கும் அத்தனை
பேரும் அழுவதில்லை.நாவல் படித்து திருந்தியவர்கள் இருக்கிறார்கள்.கலை,இலக்கியமெல்லாம்
எல்லோரிடமும் ஒரே பாதிப்பை ஏற்படுத்துமா?
தோப்பில்
முஹம்மது மீரானின் கடலோர கிராமத்தின் கதை நாவலை பலர் படித்திருப்பார்கள்.வெளியாகி
அதிக விற்பனையான நாவல் என்று பேசிக்கொண்டார்கள்.ஒரு இரண்டாயிரம் இருக்குமா? தமிழ்
எழுத்தாளன் நிலை அப்படித்தான்.கையில் புத்தகத்துடன் தெருவில் நடந்து
கொண்டிருந்தேன்.50 வயதைக்கடந்த ஒருவர் பேச்சுக் கொடுத்தார்.
எனக்கு
தெரிந்தவர்தான்.கொஞ்சம் தனிமையில் சுற்றிக்கொண்டிருந்தார். ”என்ன
புத்தகம்?” என்று
கையை நீட்டினார்.” நான்
படித்துவிட்டு தருகிறேன்”
என்று கேட்டார்.நான் படித்த பின்பு
தருவதாக சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.சில தின்ங்களில் அவரைப் பார்த்து கொடுத்து
விட்டேன்.
அடுத்த நாளே
தேடி வந்தவர் “புத்தகம் நேற்றே படித்துவிட்டேன்,கடைசியில் நான் அழுதுவிட்டேன்.’’ என்றார்.எனக்கு
சங்கடமாக இருந்த்து.நாவலின் வெற்றி அது.ஆனால் எனக்கு அழுகை வரவில்லை.ஆனால்
சந்தோஷமெல்லாம் இல்லை.என்னவொரு ஆர்ப்பாட்டம்,கொடுங்கோன்மை.அனுபவிக்கட்டும்
என்றுதானே தோன்றவேண்டும்? ஏன் அழுகை வருகிறது?
அவரைப்பற்றியே
யோசித்துக்கொண்டிருந்தேன்.அரசுப் பணியில் இருந்து தற்காலிகமாக பணிநீக்கம்
செய்யப்பட்டிருந்தார்.கஷ்ட்த்தில் இருந்தார்.வெளியே தலைகாட்டவே ஒரு மாதிரியாக
இருக்க வேண்டும்.ஆமாம் வாழ்ந்து கெட்டவர்.நாவலை படித்து அவருக்கு ஏற்பட்ட உணர்ச்சி
அவருடைய சமகால வாழ்வை பிரதிபலிக்கிறது.
இன்னொரு
நிகழ்வு.பேருந்து நிலையத்தில் நண்பர் ஒருவரைப் பார்த்தேன்.உடனிருந்த நண்பரை
அறிமுகப்படுத்தினார்.தன்னுடன் பணிபுரிவதாகவும் வேறு ஊருக்கு மாற்றலாகி
செல்வதாகவும் சொன்னார்.இருவரும்
இறுக்கமான மனநிலையில் இருந்தார்கள்.நானும் அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.நண்பர்
ஒரு பாடலை முணுமுணுத்தார்,கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்
கனத்த
மனத்துடன் கிளம்பிப் போவதாக பட்ட்து.என்னுடைய நண்பர் சொன்னார்,” அவருக்கு
இங்கேயே இருக்க விருப்பம்தான்.வேலை செய்யுமிட்த்தில் தேவையில்லாத
பிரச்சினைகள்.அவராக மாற்றல் வாங்கிப் போகிறார்.மனசே சரியில்லை.எப்போதும்
ஒன்றாகத்தான் இருப்போம்”.
எனக்கு கருப்பு நிலா பாடலை முணுமுணுத்த
அர்த்தம் புரிந்துவிட்ட்து.விடைபெற்றுச் சென்றவர் கருப்பு நிறத்தில் இருந்தார்.
உன்னால்
முடியும் தம்பி படம் பார்த்துக்கொண்டிருந்தோம்.கமல் வீட்டை விட்டு
கிளம்புகிறார்.உடன் வந்த நண்பன் கண்ணை துடைத்துக் கொண்டான்.எனக்கு ஆச்சர்யமாக
இருந்த்து.பிறகு தெரிந்து கொண்ட விஷயம்,அவர் வீட்டில் காலையில் சண்டை.வீட்டில்
இருக்கவேண்டாம் எங்காவது போய்த்தொலை என்று அவனுடைய அப்பா திட்டியிருந்தார்.
சில
சூழல்களில் நாம் முணுமுணுக்கும் ஒரு பாடல் நம்முடைய மனநிலையை பிரதிபலிப்பதாக
இருக்கலாம்.புத்தகத்தில் திரைப்பட்த்தில் ஒரு காட்சி ஏற்படுத்தும் உணர்ச்சி நமது
வாழ்க்கை சம்பவங்களுடன் தொடர்பு கொண்டிருக்க வாய்ப்புண்டு.கொஞ்சம் கவனித்துப்
பார்த்தால் நம்மை உணர்ந்து கொள்ள இவற்றிலும் சாத்தியம்தான்.
28 comments:
ஆம் நண்பரே
சரியாச் சொன்னீங்க.
தருணங்கள் வெளிச்சமாக்கும் காட்சிகள்
நம் மனதில் கடந்தகால நினைவுகளை நம்மில்
ஓடவைக்கும். அதன் உணர்வுகளின் வெளிப்பாடு நாம்
எவ்வாறு அனுபவித்திருந்தோம் என்பதைப் பொறுத்து
அமைந்திருக்கும்.
அழகான கட்டுரை நண்பரே.
@மகேந்திரன் said...

நன்றி மகேந்திரன்.
நல்ல பதிவு.
மிகச் சரி
நம் வாழ்வு சம்பத்தப் பட்ட நிகழ்வோ
உணர்வோ படிக்கவோ பார்க்கவோ நேர்கையில்
இயல்பாகவே மனம் கொஞ்சம் கூடுதல் பில்டப்
கொடுத்து விடுவதைத் தவிர்க்க இயலவில்லை
யதார்த்தம் சொல்லு அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
@Rathnavel said...
நல்ல பதிவு.
நன்றி அய்யா!
@Ramani said...
மிகச் சரி
நம் வாழ்வு சம்பத்தப் பட்ட நிகழ்வோ
உணர்வோ படிக்கவோ பார்க்கவோ நேர்கையில்
இயல்பாகவே மனம் கொஞ்சம் கூடுதல் பில்டப்
கொடுத்து விடுவதைத் தவிர்க்க இயலவில்லை
யதார்த்தம் சொல்லு அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
ஆமாம் சார் நன்றி
உண்மை.பசியால் தவிப்பவன் உணவை பார்க்கும் பார்வைக்கும் வயிறு நிறைய தின்றவன் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
எல்லோருக்கும் இந்த மாதிரி அனுபவங்கள் இருக்கும்.நல்ல பதிவு.
எங்களின் சூழ்நிலையோடு கலை இலக்கியங்கள் இருக்கும் போது எம்மில் அந்த கலை இலக்கியங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன . மிக அருமையான படிப்பு பகிர்வுக்கு நன்றி
பாஸ் யாதார்த்தமான பதிவு...
பல திரைப்படங்கள் பாடல்கள் ஏன் புத்தகங்களில் கூட நான் ஏன் வாழ்க்கையில் சில பகுதிகளை பார்த்து உள்ளேன்... பார்த்துகொண்டு இருக்கிறேன்.
சில சூழல்களில் நாம் முணுமுணுக்கும் ஒரு பாடல் நம்முடைய மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்கலாம்.புத்தகத்தில் திரைப்பட்த்தில் ஒரு காட்சி ஏற்படுத்தும் உணர்ச்சி நமது வாழ்க்கை சம்பவங்களுடன் தொடர்பு கொண்டிருக்க வாய்ப்புண்டு.கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் நம்மை உணர்ந்து கொள்ள இவற்றிலும் சாத்தியம்தான்.//
ஆம். அப்போதைக்கப்போதைய மனோநிலை வெளிப்பாடு ஏதேனுமொரு புறவய நிகழ்வுகளால்.
கூறப்பட்ட நிகழ்வுகளின் விவரணைகள் அனைத்தும் மனதுக்கு நெருக்கமாய். பதிவின் படங்களின் தேர்வும் நன்று!
@RAVICHANDRAN said...
உண்மை.பசியால் தவிப்பவன் உணவை பார்க்கும் பார்வைக்கும் வயிறு நிறைய தின்றவன் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
ஆமாம் சார் நன்றி
@துஷ்யந்தன் said...
பாஸ் யாதார்த்தமான பதிவு...
பல திரைப்படங்கள் பாடல்கள் ஏன் புத்தகங்களில் கூட நான் ஏன் வாழ்க்கையில் சில பகுதிகளை பார்த்து உள்ளேன்... பார்த்துகொண்டு இருக்கிறேன்.
நன்றி துஷ்யந்தன்.
@நிலாமகள் said...
சில சூழல்களில் நாம் முணுமுணுக்கும் ஒரு பாடல் நம்முடைய மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்கலாம்.புத்தகத்தில் திரைப்பட்த்தில் ஒரு காட்சி ஏற்படுத்தும் உணர்ச்சி நமது வாழ்க்கை சம்பவங்களுடன் தொடர்பு கொண்டிருக்க வாய்ப்புண்டு.கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் நம்மை உணர்ந்து கொள்ள இவற்றிலும் சாத்தியம்தான்.//
ஆம். அப்போதைக்கப்போதைய மனோநிலை வெளிப்பாடு ஏதேனுமொரு புறவய நிகழ்வுகளால்.
கூறப்பட்ட நிகழ்வுகளின் விவரணைகள் அனைத்தும் மனதுக்கு நெருக்கமாய். பதிவின் படங்களின் தேர்வும் நன்று!
தங்கள் கருத்துரைக்கு நன்றி
உண்மைதான்....படிக்கும் புத்தகமோ பார்க்கும் காட்சியோ கேட்கும் பாடலோ ஏதோ ஒரு விதத்தில் எங்கோ ஒரு இடத்தில் நம் மனதைப்பாதிப்பதாக, நம் வாழ்வின் தொடர்புடைய சங்கதியைத் தொட்டதாக இருந்தால்தான் மனம் அதில் படர்ந்து விடுகிறது. அதையும் மீறி, இந்தக் காரணங்கள் இல்லாமலேயே எதாவது ஒன்று நமக்குப்பிடித்துப் போகுமானால் அது நிச்சயம் படைப்பாளியின் வெற்றிதான்!
பெரும்பாலோனோர் தம்மை அந்த பாத்திரங்களின் இடத்தில் வைத்து சிந்திக்கிறார்கள்.. சில சூழல்கள் தம் வாழ்வில நடந்ததுபோல் இருந்தால் அதனுடன் ஒன்றி விடுகிறார்கள்.. இதுதான் காரணம்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
சார் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் வித்தியாசமான பதிவுகள்...மிக்க நன்றி சார்.
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.
Nalla sinthanai.
TM 9.
வணக்கம் அண்ணே
மனித உணர்வுகள் வெளிப்படும் போது தான் நம்மை நாமே உணர்ந்து கொள்ளுகின்றோம் என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.
படைப்பாளியின் உணர்வுகள் எதன் மூலம் பரிபூரணத்துவம் அடைகின்றது என்பதனையும் அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.
எல்லாருக்கும் உண்டாகும் உணர்வை அழகாக சொல்லி உள்ளீர்கள். நன்றி நண்பரே!
@ஸ்ரீராம். said...
உண்மைதான்....படிக்கும் புத்தகமோ பார்க்கும் காட்சியோ கேட்கும் பாடலோ ஏதோ ஒரு விதத்தில் எங்கோ ஒரு இடத்தில் நம் மனதைப்பாதிப்பதாக, நம் வாழ்வின் தொடர்புடைய சங்கதியைத் தொட்டதாக இருந்தால்தான் மனம் அதில் படர்ந்து விடுகிறது. அதையும் மீறி, இந்தக் காரணங்கள் இல்லாமலேயே எதாவது ஒன்று நமக்குப்பிடித்துப் போகுமானால் அது நிச்சயம் படைப்பாளியின் வெற்றிதான்!
நன்றி சார்
@Sankar Gurusamy said...
பெரும்பாலோனோர் தம்மை அந்த பாத்திரங்களின் இடத்தில் வைத்து சிந்திக்கிறார்கள்.. சில சூழல்கள் தம் வாழ்வில நடந்ததுபோல் இருந்தால் அதனுடன் ஒன்றி விடுகிறார்கள்.. இதுதான் காரணம்..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
உண்மை சங்கர் நன்றி
@சசிகுமார் said...
சார் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் வித்தியாசமான பதிவுகள்...மிக்க நன்றி சார்.
தங்களுக்கும் நன்றி
@நண்டு @நொரண்டு -ஈரோடு said...
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.
நன்றி அய்யா!
@துரைடேனியல் said...
Nalla sinthanai.
நன்றி சகோ!
@நிரூபன் said...
வணக்கம் அண்ணே
மனித உணர்வுகள் வெளிப்படும் போது தான் நம்மை நாமே உணர்ந்து கொள்ளுகின்றோம் என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.
படைப்பாளியின் உணர்வுகள் எதன் மூலம் பரிபூரணத்துவம் அடைகின்றது என்பதனையும் அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.
நன்றி நிரூபன்.
@திண்டுக்கல் தனபாலன் said...
எல்லாருக்கும் உண்டாகும் உணர்வை அழகாக சொல்லி உள்ளீர்கள். நன்றி நண்பரே!
நன்றி சார்!
Post a Comment