Wednesday, December 28, 2011

ஹார்மோன்களின் விளையாட்டு


                                                                          உணர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவை ஹார்மோன்கள்.பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் இருபத்தாறு வயது நண்பருடன் சேர்ந்து மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை கொலை செய்து விட்டார்.மாணவர் 14 வயது காதலியுடன் பேசிக் கொண்டிருந்த்தை பையன் பார்த்துவிட்டான்.வெளியே சொல்லிவிடுவான் என்ற கலக்கத்தில் கொன்று விட்டார்கள்.
                                இம்மாதிரி பிரச்சினைகள் இன்று அதிகரித்து வருகிறது.சம்பவம் பற்றி பேசிக்கொண்டிருந்த இரண்டு ஆசிரியர்கள் சொன்னார்கள்,’’ இதெல்லாம் ஹார்மோன்களின் விளையாட்டு,அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்!”.ஹார்மோன்கள் என்றாலே பாலியல் தொடர்பான விஷயம் மட்டும்தானா? உடலில் பல்வேறு ஹார்மோன்கள் பலவித பணிகளை செய்கின்றன.

                                ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் ஈர்க்க ஹார்மோன் தான் காரணம்.பாலியல் ஹார்மோன்களின் வேலை இது.பாலியல் உணர்ச்சி மட்டுமல்லாது பயம்,கலக்கம் போன்ற உணர்ச்சிகளின் போது,சிக்கலான சூழ்நிலைகளில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரந்து உதவுகின்றது.குருதியில் கலந்து செய்தியை எடுத்துச் செல்பவை இவை.
                                உடல் இயக்கத்தில் ஹார்மோன்கள் முக்கிய செயல்பாட்டை கொண்டிருக்கின்றன.பிட்யூட்டரி சுரப்பியை தலைமை சுரப்பி என்பார்கள்.தலைமை என்று சொல்வதற்கு ஏற்றவாறு மூளையில் அமைந்திருக்கிறது.மற்ற சுரப்பிகளை கட்டுப்படுத்துகிறது.பலருக்கும் தெரிந்த இன்னொரு சுரப்பி தைராய்டு.இதன் மிகுதியும் குறைவும் பிரச்சினையை உண்டாக்கி தொடர் மருத்துவத்துக்கு இட்டுச்செல்கிறது.

                                பெண்ணின் கருப்பையில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் ஈஸ்ட்ரஜன்.பெண் தன்மையை இந்த ஹார்மோன் தான் முடிவு செய்கிறது.கர்ப்ப பை வளர்ச்சி,அழகு போன்றவை இதைச் சார்ந்து இருக்கின்றன.இளமை இதன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.இதெல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை என்று சொல்வார்கள்.
                                 ஆணுக்கும் பெண்ணுக்கு உற்பத்தி திறன் பாலியல் ஹார்மோன்களை சார்ந்து உள்ளது.இளமை தடுமாற்றத்தை சந்திப்பதற்கு இந்த ஹார்மோன்கள் அதிகரிப்பதே காரணம்.ஆணுக்கு டெஸ்ட்ரோஸ்ட்ரோன் உடல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.நிறைய குழப்பங்களையும்,பிரச்சினைகளையும் கூட கொண்டு வருகிறது.ஆணுக்கு ஏற்படும் குறைபாடுகளுக்கு இந்த ஹார்மோனும் காரணமாக இருக்க முடியும்.

                                   ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் பெண்ணுக்கு சுரக்கும் ஹார்மோன் என்று பார்த்தோம்.பசுக்களில் இந்த ஹார்மோன்களை ஊசி மூலம் செலுத்துவதாக சொல்லப்படுகிறது.அதிக பால் உற்பத்திக்காக விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் செய்யும் தரக்குறைவான செயல். இவ்வாறு பால் மூலம் உடலுக்கு செல்லும் ஈஸ்ட்ரஜன் ஆண்களிடம் ஆண்மைக்குறைவை உண்டாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
-

24 comments:

Unknown said...

ஹாய் அண்ணே சுகம்..நீங்க?
ஹோர்மோன் பற்றி அதிகம் பேசப்படுவது பதின்ம வயதுகளிலான பாலியல் சம்பந்தமான விடயங்களில் என்பதால் தான் அதிகம் பேசப்படுகிறது

Yaathoramani.blogspot.com said...

அதிகம் அறியாத தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க்ள்

துரைடேனியல் said...

Arumai Sago. Nalla alasal.

TM 3.

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

ஹாய் அண்ணே சுகம்..நீங்க?
ஹோர்மோன் பற்றி அதிகம் பேசப்படுவது பதின்ம வயதுகளிலான பாலியல் சம்பந்தமான விடயங்களில் என்பதால் தான் அதிகம் பேசப்படுகிறது

நலமே நன்றி சிவா!

Anonymous said...

நல்ல பதிவு ! ஹார்மோன் பற்றி தெரியாத சில விசயங்களை தெரிந்து கொண்டேன் !!!!!!!!!!



புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..

shanmugavel said...

@Ramani said...

அதிகம் அறியாத தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க்ள்

தங்களுக்கும் வாழ்த்துக்கள் அய்யா! நன்றி

shanmugavel said...

@துரைடேனியல் said...

Arumai Sago. Nalla alasal.

நன்றி சகோ!

shanmugavel said...

@எனக்கு பிடித்தவை said...

நல்ல பதிவு ! ஹார்மோன் பற்றி தெரியாத சில விசயங்களை தெரிந்து கொண்டேன் !!!!!!!!!!



புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

நன்றி,தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

RAVICHANDRAN said...

அப்போ பால் குடித்தாலும் பிரச்சினையா? என்னதான் வழி?

RAVICHANDRAN said...

ஹார்மோன் பற்றி பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறேன்.தகவல்களுக்கு நன்றி

மகேந்திரன் said...

அறிந்திராத பல தகவல்கள்
அள்ளித்தருகிறீர்கள் நண்பரே
நன்றிகள் பல.

shanmugavel said...

@RAVICHANDRAN said...

அப்போ பால் குடித்தாலும் பிரச்சினையா? என்னதான் வழி?

சொந்தமாக மாடு வளர்க்கலாமோ? நன்றி சார்

shanmugavel said...

@RAVICHANDRAN said...

ஹார்மோன் பற்றி பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறேன்.தகவல்களுக்கு நன்றி

எல்லாமும் நினைவிருக்கிறதா? நன்றி சார்!

shanmugavel said...

@மகேந்திரன் said...

அறிந்திராத பல தகவல்கள்
அள்ளித்தருகிறீர்கள் நண்பரே
நன்றிகள் பல.

நன்றி மகேந்திரன்.

Sankar Gurusamy said...

ஹார்மோன்கள் பற்றிய சிறப்பான பதிவு..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
ஹார்மோன்களின் தூண்டல்கள் பற்றியும், அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் விளக்கமாச் சொல்லும் பதிவினைத் தந்திருக்கிறீங்க. நன்றி.

அதிகமாக ஹார்மோன் சுரக்கையில் தண்ணீர் குடித்தால் எல்லாம் சரியாகி விடும் என்கிறார்களே! உண்மையா?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.

shanmugavel said...

@Sankar Gurusamy said...

ஹார்மோன்கள் பற்றிய சிறப்பான பதிவு..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

நன்றி சங்கர்.

shanmugavel said...

@நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
ஹார்மோன்களின் தூண்டல்கள் பற்றியும், அவற்றின் செயற்பாடுகள் பற்றியும் விளக்கமாச் சொல்லும் பதிவினைத் தந்திருக்கிறீங்க. நன்றி.

அதிகமாக ஹார்மோன் சுரக்கையில் தண்ணீர் குடித்தால் எல்லாம் சரியாகி விடும் என்கிறார்களே! உண்மையா?

என்னது தண்ணீர் குடிப்பதா? அதெல்லாம் உண்மையில்லை,நன்றி சகோ!

shanmugavel said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.

நன்றி அய்யா!

ஸ்ரீராம். said...

நல்ல தகவல்கள். பால்காரர்கள் கிட்ட கேட்டா 'வியாபாரத்துல இதெல்லாம் சகஜமப்பா' என்கிறார்கள்...!!!

2012 உங்களுக்கு எல்லா நலனும் பெற்றுத் தந்து சிறப்பான ஆண்டாக அமைய எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்.

சசிகுமார் said...

ஹார்மோன்களை பற்றி அறிய தகவல்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி...

shanmugavel said...

@ஸ்ரீராம். said...

நல்ல தகவல்கள். பால்காரர்கள் கிட்ட கேட்டா 'வியாபாரத்துல இதெல்லாம் சகஜமப்பா' என்கிறார்கள்...!!!

2012 உங்களுக்கு எல்லா நலனும் பெற்றுத் தந்து சிறப்பான ஆண்டாக அமைய எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்.

நன்றி அய்யா,தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

shanmugavel said...

@சசிகுமார் said...

ஹார்மோன்களை பற்றி அறிய தகவல்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி...

நன்றி சார்.