Saturday, December 31, 2011

எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம்.


                              இன்னும் ஓராண்டு கழிகிறது.நாட்காட்டி மாற்றுகிறோம்.இங்கே எதற்காக பிறந்திருக்கிறோ என்று தெரியாது.மனிதனுக்கு ஆகச் சிறந்த வேலை நாட்களைக் கொல்வது என்று ஆகிவிட்ட்து.ஒவ்வொரு நாளும் முடியும்போது நம்மால் பலன் பெற்றவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்பதை சிந்திப்பதுண்டா? போகட்டும்.ஒரு வருட்த்தில் அப்படி ஏதாவது செய்திருக்கிறோமா?
                              இன்னொருவனை முந்துவது பற்றி,வீழ்த்துவது பற்றி மனிதன் யோசிக்கிறான்.ஏமாற்றி பணம் ஈட்டுவது பற்றி,பொய்,வஞ்சகம்,கீழ்த்தரமான தந்திரங்கள்,சக மனிதன் மீது வெறுப்பு இன்னும் இன்னும் மனதில் குப்பைகளை சேர்த்துக் கொண்டிருக்கிறான்.குப்பை அழுகி நாற்றமெடுக்க ஆரம்பிக்கிறது.தானும் அமைதி இழந்து அடுத்தவனையும் கெடுக்கிறான்.

                               பிறரை ஏமாற்றுவதன் மூலம் தன்னை புத்திசாலியாக நினைத்துக்கொள்கிறான்.தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறான்.பொய்யை வதந்தியை நம்ப வைக்கிறான்.தனக்குள்ளே சிரிப்பு.யாரோ செய்த்தை தான்செய்த செயலாக காட்டி புகழ்பெற முயற்சிக்கிறான்.சாயம் வெளுத்துவிட்டால் ஒரு இளிப்பு.முற்றிலும் பைத்தியம் அன்றி வேறில்லை.
                                ஊதியம் கொடுத்து சேவை செய்யச் சொல்கிறார்கள்.தந்திரமாக திருடுகிறான்.அப்பாவிகளை மிரட்டி பறிக்கிறான்.பத்து மணி வேலைக்கு பதினோரு மணிக்கு வருகிறான்.வேலை சொன்னால் எரிச்சல் வருகிறது.நாள் முழுக்க சிடுசிடுப்பு! பக்கத்தில் இருப்பவர்கள் மீது ஆத்திரம்.இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது தலைவலி,வயிற்றுவலி.

                                 மற்றவர்கள் பெருமையாக நினைக்கவேண்டும்.எந்த முயற்சியும்,உழைப்பும்,நல்ல காரியமும் இல்லாமலேயே மற்றவர்கள் பாராட்டினால் நல்லது.திறமையிருப்பவனை எப்படியாவது வீழ்த்திவிட்டால் நல்லது.நேர்மையாக இருப்பதா? மடையர்கள்! பிழைக்கத் தெரியாதவர்கள் பற்றி நமக்கென்ன பேச்சு! அவன் நேற்று கீழே விழுந்துவிட்டானாம் ஹாஹா! தெருவில் அழுக்குத்துணியுடன் ஆதரவற்று சிரித்துச் செல்பவன் இவர்களைவிட மேலானவன் என்று தோன்றுகிறது.
                                 குறுகிய மனப்பான்மையும் சுயநலமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.மனம் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.நிஜமான மகிழ்ச்சி என்பதை மனிதன் உணர்வது சாத்தியமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.குழந்தை போல இருக்க முடியவில்லை.சுய நினைவின்றி எதையெதையோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

                                 உயிரை அடுத்தடுத்த காலங்களுக்கு பிரச்சினையில்லாமல் நகர்த்தவேண்டும்.அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.இப்படியான மனிதர்கள் பெருகி வருகிறார்கள்.நான் சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கிறேன் என்று இன்று எத்தனை பேரால் கை உயர்த்தி சொல்ல முடியும்? ஆனால் மனம் மட்டும் மகிழ்ச்சிக்கே தவிக்கிறது.
                                  நல்ல எண்ணங்களே சந்தோஷத்தின் திறவுகோல்.சக மனிதனை நேசிப்பவனால் மட்டுமே நிறைவான மகிழ்ச்சியை காணமுடியும்.பூமியில் பிறந்த பலனை அடைபவர்களும் அவர்கள்தான்.எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் என்பது சுத்தமான இதயமே சாத்தியமாக்கும்.புத்தாண்டில் நிஜமான மகிழ்ச்சியே குறிக்கோளாக வைத்துக் கொள்ளலாம்.

 வாசகர்களுக்கும் சக நண்பர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
                                  
-

15 comments:

Yaathoramani.blogspot.com said...

நல்ல எண்ணங்களே சந்தோஷத்தின் திறவுகோல்.சக மனிதனை நேசிப்பவனால் மட்டுமே நிறைவான மகிழ்ச்சியை காணமுடியும்
அருமையான பதிவு
மனித நேயம் மிக்க மனிதர்களாக
புத்தாண்டில் வாழ முயல்வோமாக
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் த.ம1

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையா சொன்னீங்க.
வாழ்த்துக்கள்.

SURYAJEEVA said...

எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் இதயம் சுத்தமாக இருந்தால்...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

shanmugavel said...

@Ramani said...

நல்ல எண்ணங்களே சந்தோஷத்தின் திறவுகோல்.சக மனிதனை நேசிப்பவனால் மட்டுமே நிறைவான மகிழ்ச்சியை காணமுடியும்
அருமையான பதிவு
மனித நேயம் மிக்க மனிதர்களாக
புத்தாண்டில் வாழ முயல்வோமாக
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நன்றி அய்யா!

shanmugavel said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையா சொன்னீங்க.
வாழ்த்துக்கள்.

நன்றி சார்.

shanmugavel said...

@suryajeeva said...

எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் இதயம் சுத்தமாக இருந்தால்...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

நன்றி ஜீவா!

இராஜராஜேஸ்வரி said...

நல்ல எண்ணங்களே சந்தோஷத்தின் திறவுகோல்.சக மனிதனை நேசிப்பவனால் மட்டுமே நிறைவான மகிழ்ச்சியை காணமுடியும்.

இனிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

மகேந்திரன் said...

பூத்துவரும் பொன்னெழிலாய்
பூக்கட்டும் புத்தாண்டு!
ஏழுவண்ண வானவில்லாய்
வண்ண வண்ண இன்பங்கள்
நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Mahan.Thamesh said...

உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணாச்சி,

பிறரை வீழ்த்தி முன்னேறுவோருக்கு, முயற்சி ஏதுமின்றி இருப்போருக்குச் சாட்டையடியாக உங்களின் இப் பதிவு வந்திருக்கிறது.

புதிய ஆண்டிலாவது சமத்துவம் நிறைந்த மனதினை உருவாக்குங்கள் எனும் ஆதங்கத்தினைப் பதிவில் சொல்லியிருக்கிறீங்க.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

சுதா SJ said...

பாஸ் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சந்தோஷமாய் வாழ்வதற்கான வழியை விரல் பிடித்து அழைத்துபோய் சொல்லுகிறீர்கள். எல்லாமே அசத்தல்... பின்பற்றுவோம்.

Unknown said...

// நல்ல எண்ணங்களே சந்தோஷத்தின் திறவுகோல்.சக மனிதனை நேசிப்பவனால் மட்டுமே நிறைவான மகிழ்ச்சியை காணமுடியும்.பூமியில் பிறந்த பலனை அடைபவர்களும் அவர்கள்தான்.எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் என்பது சுத்தமான இதயமே சாத்தியமாக்கும்.புத்தாண்டில் நிஜமான மகிழ்ச்சியே குறிக்கோளாக வைத்துக் கொள்ளலாம்.//

மனப் பாடம் செய்து, மனதில்
என்றும் தினம் நினைவில் கொள்ள
வேண்டிய வரிகள்!
அருமை சகோ!!

புலவர் சா இராமாநுசம்

Sankar Gurusamy said...

நான் படித்ததிலியே மிகவும் சிறப்பான புத்தாண்டு வாழ்த்து.. நம் வாழ்வியல், சமூகவியல், அரசியல், குடும்பம், அலுவலகம் அனைத்து இடங்களிலும், நமக்கு ஏற்படும் பிரச்சினைகளின் ஆணி வேரைப் பற்றி அலசி இருக்கிறீர்கள். இந்த கனவு பலித்தால் உலகம் சொர்க்கமாகும்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..

http://anubhudhi.blogspot.com/

சென்னை பித்தன் said...

நன்று
நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

இராஜராஜேஸ்வரி said...

நல்ல எண்ணங்களே சந்தோஷத்தின் திறவுகோல்.சக மனிதனை நேசிப்பவனால் மட்டுமே நிறைவான மகிழ்ச்சியை காணமுடியும்.பூமியில் பிறந்த பலனை அடைபவர்களும் அவர்கள்தான்.எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் என்பது சுத்தமான இதயமே சாத்தியமாக்கும்.புத்தாண்டில் நிஜமான மகிழ்ச்சியே குறிக்கோளாக வைத்துக் கொள்ளலாம்.