Wednesday, March 16, 2011

சிட்டுக்குருவி லேகியம்-சில குறிப்புகள்.

                                லேகியங்கள் உடல் நலனுக்கு இந்திய மருத்துவம் தந்த கொடை.நெல்லிக்காய் லேகியத்தில் முக்கியமான உயிர்ச்சத்து ‘சிஇருப்பதால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.பூண்டு லேகியம்,தீபாவளி லேகியம்,அமுக்கரா லேகியம் என்று நிறைய உண்டு.
                                சிட்டுக்குருவி லேகியம் என்று சொல்வார்கள்.தெம்பாக இருக்கும் ஆளைப்பார்த்து சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடுகிறாயா?என்று கேட்பார்கள்.எப்போது சிற்றின்பத்தோடு தொடர்புடையாதகவே சிட்டுக்குருவி லேகியம் பேசப்பட்டு வந்த்தை கேட்டிருக்கிறேன்.

                                 கிராமத்தில் வைப்பாட்டி அதிகம் வைத்திருப்பவரை சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடுகிறான் என்பார்கள்.மண்ணெண்ணெய் விளக்கில் பல பொருட்களை பரப்பி வைத்துக்கொண்டு லேகியம் விற்பவர்களை பார்த்திருக்கிறேன்.உடல் விருத்திக்கு,தாது பலத்திற்கு என்று கூவிக்கூவி விற்பார்கள்.

                                கிராமந்தோறும் இரவு சுமார் ஏழு மணிக்குமேல் விற்பனையை ஆரம்பிப்பார்கள்.அப்போதுதான் வேலை முடித்து வந்து வீட்டில் இருப்பார்கள்.பல விற்பனையை கவனித்து பார்த்த போதிலும் சிட்டுக்குருவி லேகியம் விற்பதையோ,வாங்கித்தின்றதையோ பார்த்த்தில்லை.யாரிடமாவது அதைப்பற்றி கேட்கவேண்டுமென்று நினைத்து இதுவரை கேட்ட்தில்லை.
                                                                                    எனக்கான சிட்டுக்குருவி லேகியம் பாரதியிடமிருந்த்து.சிட்டுக்குருவியை பார்த்து பொறாமைப் பட்டவன் பாரதி.’’தெய்வமே, எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்கமாட்டாயா?என்று ஆதங்கப்பட்டவன்.ஏன்?அவரது வார்த்தைகளிலிருந்து சில வரிகள்.(சிட்டுக்குருவி பற்றிய பாரதி கட்டுரை)

                                 பாழ்பட்ட மனிதர் கூட்ட்த்தையும்,அதன் கட்டுகளையும்,நோய்களையும்,துன்பங்களையும்,பொய்களையும் உதறி எறிந்துவிட்டு,நான் இச்சைப்படி வானத்தில் பறந்து செல்ல மாட்டேனா?ஆஹா!

 
ஆமாம்.உங்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கும் நேரங்களே உண்மையில் நீங்கள் உலகில் வாழ்ந்த நேரங்கள் என்பது உண்மை.பேரறிஞர்கள் ஒப்புக்கொண்ட்து.மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளக்கூடியது.எல்லா துயரங்களிலிருந்தும் விடுபட்டு எளிதில் மகிழ்ச்சியான மன நிலைக்கு தாவத் தெரிந்தவரே வாழத்தெரிந்தவர்.வாழ்க்கை அவர்களுடையது.இதை எனக்கு முதலில் உணர்த்தியவர் பாரதி.

                                   அமிழ்தம் தேவர்கள் உணவு.’’களியே அமிழ்தம்  என்று பாரதி கூறியது இதைத்தான்.களி என்பதற்கு மகிழ்ச்சி என்று பொருள்.மேலும் பாரதி சொல்வது,

         இந்தக் குருவி என்ன சொல்கிறது? விடு” ”விடு” ”விடுஎன்று கத்துகிறது.இது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித்தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பது போலிருக்கிறது.விடு,விடு,விடு-தொழிலை விடாதே.உணவை விடாதே.உள்ளக்கட்டை அவிழ்த்து விடு.வீண் யோசனையை விடு.துன்பத்தை விடு.

விடுஎன்ற பகுதியிலிருந்து வீடு’’ என்ற சொல் வந்த்து.வீடு என்பது விடுதலை.இதை வடமொழியில் முக்தி என்கிறார்கள்.

சிட்டுக்குருவி –பாரதி கவிதை

         பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே
சரணங்கள்

எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு                                (விட்டு)

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு                                             (விட்டு)

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.                                              (விட்டு)

                          சந்தோஷமான,அன்பு நிறைந்த வாழ்க்கை சிட்டுக்குருவியினுடையது.முயற்சி செய்தால் உங்களுக்கும் அந்த வாழ்வு கிட்டாமல் போகாது.துன்பங்கள் நிரந்தரமானவை என்று சோர்ந்துவிடாமல் விரைவில் அவற்றிலிருந்து வெளிவர வேண்டும்.மகிழ்ச்சியை வாழ்வின் நோக்கமாக கொண்டால் வெகு சுலபமாக கடக்க முடியும்.
-

10 comments:

சுதர்ஷன் said...

சஈடுக்குருவீழ இவ்வளவு கருத்தா ... அந்த வீடு அர்த்தம் நன்றாக இருந்தது :)

shanmugavel said...

சஈடுக்குருவீழ? சிட்டுக்குருவியா? தங்கள் கருத்துக்கு நன்றி.

சக்தி கல்வி மையம் said...

சிட்டுக்குருவி பற்றி இவ்ளோ தகவல்களா..

சி.பி.செந்தில்குமார் said...

செல்ஃபோன்கள் வந்த பிறகு இந்த இனங்கள் அழிந்து விட்டன..

ரோஸ்விக் said...

சிட்டுக்குருவிகள் கலவி செய்வதை பார்த்திருக்கிறீர்களா?? மிகக் குறைந்த நேரத்தில் மீண்டும் மீண்டும் எழுச்சி பெற்று பலமுறை கலவி கொள்ளும். நான் பார்த்திருக்கிறேன். இதிலிருந்து எனது புரிதல் - அப்படியொரு லேகியம் உலகில் இல்லை. சிட்டுக்குருவி போல கலவி செய்ய என்ன லேகியம் சாப்பிடவேண்டுமோ எனும் கேலிப்பேச்சே சிட்டுக்குருவி லேகியம் என மருவி வந்திருக்க வேண்டும்.

shanmugavel said...

ஆமாம் கருன்.உங்களுக்கு நன்றி

shanmugavel said...

சி.பி.செந்தில்குமார் said...

செல்ஃபோன்கள் வந்த பிறகு இந்த இனங்கள் அழிந்து விட்டன..

கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.சி.பி.மனிதனின் சந்தோஷ காலங்களும் !.நன்றி

shanmugavel said...

@ரோஸ்விக் said...

சிட்டுக்குருவிகள் கலவி செய்வதை பார்த்திருக்கிறீர்களா?? மிகக் குறைந்த நேரத்தில் மீண்டும் மீண்டும் எழுச்சி பெற்று பலமுறை கலவி கொள்ளும். நான் பார்த்திருக்கிறேன். இதிலிருந்து எனது புரிதல் - அப்படியொரு லேகியம் உலகில் இல்லை. சிட்டுக்குருவி போல கலவி செய்ய என்ன லேகியம் சாப்பிடவேண்டுமோ எனும் கேலிப்பேச்சே சிட்டுக்குருவி லேகியம் என மருவி வந்திருக்க வேண்டும்.

இருக்கலாம் ரோச்விக் ,தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

அருண் காந்தி said...

Nice Xplanations!Great...

shanmugavel said...

thank you