அந்தப்பெண்ணுக்கு இருபத்தைந்திலிருந்து
முப்பது வயதுக்குள் இருக்கலாம்.பேருந்தில் தனது அருகில் இருந்தவரிடம் பேசிக்கொண்டு
வந்தார்.கல்யாணமானதிலிருந்து எங்கேயும் வெளியே
கூட்டிட்டுப் போகவே இல்லையாம்! அவரது குரலில் ஆச்சர்யமும் பயமும் கலந்திருந்தன.திருமணகாத
பெண்ணுக்கு தனது எதிர்காலம் குறித்த கலக்கத்தை ஏற்படுத்திருக்கூடும்.
இது கொஞ்சம் அதிர்ச்சியான
விஷயம்தான்.நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைப்பதையே சிறை என்கிறோம்.பெண்களில் சிலருக்கு
வீடு அப்படி ஆகிவிடுகிறது.அவர்களின் மனதைப் பாழ்படுத்திவிடுகிறது.அதுவும் மணமான புதுப்பெண்ணிற்கு
இது அதிர்ச்சியை அளித்திருக்க வாய்ப்புண்டு.மணவாழ்வில் தொடர்ந்து ஒட்டாத அணுகுமுறை
வளர வளரக்கூடும்.
பெரியவர்கள் பார்த்து
ஏற்பாடு செய்த திருமணமாக இருக்கவேண்டும்.தோஷத்திற்கு தகுந்தது என்றோ,பணம்,வரதட்சணை
போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தந்திருக்கலாம்.ஆணுக்கு விருப்பமில்லாவிட்டாலும் சமாதானப்படுத்தியிருக்கலாம்.இன்னமும்
வீட்டுக்கு அடங்கிய பையன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அல்லது ஏதாவது மனக்குறை இருக்கலாம்.பேசியபடி
வரதட்சணை முழுமையாக கொடுக்காமலும் இருக்கலாம்.
தம்பதிகள் இரண்டு ஆண்டுகளாக
குழந்தை இல்லை என்று மருத்துவரிடம் வந்தார்கள்.அவர்களுக்கு உடல் அளவில் பாதிப்புகள்
எதுவும் இல்லை.மணவாழ்வில் இருவருக்கும் மனதளவில் நெருக்கம் இல்லாததே குழந்தையின்மைக்கு
காரணமாக இருந்தது.கல்யாண நாளில் ஏற்பட்ட சம்பவம் பெண்ணுக்கு மனதில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.உரிய
ஆலோசனைக்குப் பிறகு பிரச்சினை முடிவுக்கு வந்தது.
புதிதாக மணமானவர்கள்
என்றில்லை,மற்றவர்களுக்கும் அவசியம்தான்.எத்தனை காலம் நான்கு சுவர்களுக்குள் அடைந்து
கிடக்கமுடியும்? மனைவி குழந்தைகளை எங்காவது வெளியில் அழைத்துச்செல்லவேண்டும் என்று
சொல்பவ்ர்களும் இருக்கிறார்கள்.பலர் பணக்கஷ்டத்தைச் சொல்கிறார்கள்.உண்மையில் நடுத்தரவர்க்கத்தினர்
நிலை சிரமமானதுதான்.கோடை விடுமுறை என்றால் அடுத்து பள்ளித் திறப்பே பலருக்குக் கவலையைத்தந்துவிடுகிறது.
மலைவாசஸ்தலமான ஏலகிரிக்குப்
போயிருந்தேன்.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இரயில் சந்திப்புக்கு அருகில் இருக்கிறது.வேலூர்,திருப்பத்தூரிலிருந்து
பேருந்து மூலமும் செல்லலாம்.கோடையில் மலைவாசஸ்தலங்களில் ஏழை,நடுத்தரவர்க்கம் ஓய்வெடுக்க
முடியும் என்று தோன்றவில்லை.எல்லாவற்றிற்கும் இரட்டைவிலை கொடுக்கவேண்டி இருக்கும்.
சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள்தான்
அதிகமாக பார்த்தேன்.இன்றைய விலைவாசி அவர்களுக்குத்தான் சரிப்பட்டுவரும் என்று தோன்றுகிறது.
பூங்காவில் குழந்தைகள் விளையாடலாம்.ஏலகிரியில்,நிலாவூரிலுமாக இரண்டு படகு இல்லங்கள்
இருக்கின்றன.படகு சவாரி போகலாம்.நிலாவூரில் தண்ணீர் இல்லாததால் படகு இல்லம் வெறுமையாக
இருந்தது.
சிவன்,பெருமாள்,முருகன்,அம்மன்
கோயில்கள் இருக்கின்றன.நடந்து சுற்றுவதெல்லாம் சாத்தியம் இல்லை.வாகனம் இருப்பதுதான்
நல்லது.இரவு தங்கினால்தான் இயற்கையையும்,நல்ல குளுமையான காற்றையும் அனுபவிக்கமுடியும்.ஆனால்
பணம் கொஞ்சம் அதிகம் செலவாகும்.வெளியில் செல்லவேண்டுமென்றால் மலைவாசஸ்தலம்தான் போகவேண்டுமென்றில்லை.அருகில்
ஏதேனும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
1 comment:
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
Post a Comment